Sunday, June 17, 2007

மேலுமொரு விருந்தாளி

வாருங்கள்

கைதுசெய்யப்படுவோனின் வரவேற்பில்

ஒரு ருஷியுண்டு

முழுப்பணிவுடைய வரவேற்பல்லவா இது

கைதி குற்றவாளியா இல்லையா என்பது

யாருக்கும் முக்கியமல்ல

அவன் கைதியென்பதே போதுமானது



கைது செய்யப்படுவோனின்

நிழல்கூடச்சந்;தேகிக்கப்படுகிறது.

யாராலும் அனுமதிக்கப்படாத

அவனுடைய கனவு

அவனைக்கொண்டுபோகிறது

அவனுடைய வெளிகளுக்கு





கைதி

கண்காணிக்கப்படும் வலயங்களில்

நிழலுக்கும் அனுமதியில்லை

தனிமைப்படுத்தப்படுதலில் தொடங்குகிறது

அவனுக்கான தண்டனை

இருள்

அவனுடைய நிழலையும்துண்டித்து விட்டது

அல்லது சிறைப்பிடித்து விட்டது.



இப்போதவன் கலவரங்களிலிருந்து விடுபட்;ட

அமைதிப்பிராந்தியத்தின் பிரதிநிதி

திரளும் எண்ண அலைகளில்

உருவாகிறது அவனுடைய

ஒளிவெளி



தளமாற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது

அவனுடைய இன்னொரு மண்டலம்



நெல்சன் மண்டேலாவுக்கு வாழ்த்துகள்;

இருளிலும் தனிமையிலும் வாழும் ரகசியத்தின்

விதையைத்தந்தவரல்லவா நீர்.

No comments: