Sunday, June 17, 2007

கறுப்பு நாய்


கறுப்பு நாய்
அதன் நிழலை விடக் கறுப்பாயிருக்கிறது

அதன் குரைப் பொலியை விடவும்
நிழலின் மௌனம்
வலியது, பெரியது

கறுப்பு நாயின்
கோபத்துக்கும் பாய்ச்சலுக்கும்
ஈடு கொடுத்தபடி நிழலும்

நாய் தூங்கும் போதும்
உறங்குகிறது நிழலும்

நிழல் நாய்க்கிருக்குமா
மோப்ப வாசனையும்
பழகிய திசைகளின் ஞாபகமும்


கறுப்பு நாய் சார்ந்திருக்கிறது
எப்போதும் நிழல் நாயில்

No comments: