அடுத்த உலகக் கிண்ண ஆட்டம் தொடங்கப் போகிறது. கிறிக்கெற் ரசிகர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஒன்றாகக் குவித்துக் காத்திருக்கப் போகிறார்கள். அநேக தொலைக்காட்சிகள் உலகக் கிண்ண ஆட்டத்தை நேரடி ஒளிபரப்புச் செய்ய ஆயத்தமாகிவிட்டன. றேடியோக்கள் சும்மா இருக்குமா? அவையும் நேரடி வர்ணனைக்கு தயாராகிவிட்டன. ஏறக்குறைய ஒரு திருவிழா மாதிரி, கிறிக்கேற் - உலகக்கிண்ண ஆட்டம் நடத்தப்போகிறது. திருவிழா வென்றால் சாதாரண திருவிழாவல்ல மெகா திருவிழா.
இந்த உலகக்கிண்ணப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதிலேயே ஏகப்பட்ட போட்டிகள். எந்த அணி வெல்லும் என்பதிலேயே போட்டிகளும் எதிர்வுகூறுதல்களும் கூட தொடங்கிவிட்டன. ஒவ்வொரு அணிக்கென்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு அதிலும் ஒவ்வொரு ஆட்டக்காரர்களுக்கும் என்று ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ரசிகர்கள் வேறு இருக்கிறார்கள் அவர்களுடைய கனவுகளில் இந்த ஆட்ட கதாநாயகன்எவனோ அவனே கனவுலகின் பிதா.
உலகக்கிண்ண ஆட்டத்தைப் பார்ப்பதற்கென்றே தங்களின் நாளாந்த நடவடிக்கைகளை மாற்றி அமைக்கத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். விளம்பரநிறுவனங்கள் இந்த மெகா திருவிழாவிற்கு அனுசரணைப் பணிகளை ஆரம்பித்துவிட்டன. அவை றாலைப் போட்டு சுறாவைப் பிடிக்கின்றன என சுதேசிய பண்பாட்டை ஆதரிக்கின்றதொரு நண்பர் விமர்சிக்கிறார். அதில் உண்மை உண்டு. உண்மை உண்டு என்று சொல்வதைவிட அதுதான் உண்மை. இந்தக் கிறிக்கெற் இப்படிக்கோடிக்கணக்கான ரசிகர்களின் மண்டைக்குள் புகுந்து ஆட்சிநடத்தத் தொடங்கியது எப்படி?
இதைப்பற்றி இப்போது பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. பல்வேறு வகையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. யாரோ விளையாடுகிறார்கள் அதைப் பார்த்துவிட்டுப் போவதுதானே. அதைவிட்டுவிட்டு அதைப்பற்றி ஆயிரம் கேள்விகள் எதற்கு. ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் ஏன்? என்று சிலர் கேட்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கவேண்டியதுதானே என்பது அவர்களின் வாதம்.
அவர்கள் சொல்வதைப் போல கிறிக்கெட் ஒரு விளையாட்டு என்ற அளவில் அதனை நோக்கலாம.; அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது தனியொரு விளையாட்டாக இருந்தால் அப்படி நோக்கலாம. ஆதனை ஒரு விளையாட்டாக வைத்திருந்தால் இப்படிக் கேள்விகளும் விமர்சனங்களும் எழ வாய்ப்பில்லை.
ஆனால் இன்று கிறிக்கெற் அப்படியில்லையே. அதுமிகப்பெரிய சுறாவாக அல்லவா இருக்கின்றது. மிகப்பெரிய பயங்கரங்களின் விளைகிடங்காக அல்லவா அதனை பல நாடுகளும் கையாளுகின்றன. அதில்தான் பிரச்சனை அதனால்தான் இவ்வாறு பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுகின்றன.
சாதாரண மூளைக்கு உலகில் பலபிரச்சனைகள் பிரச்சனைகளாகப் படுவதில்லை. பெரியகாரணங்களாக தோன்றுவதுமில்லை. அதனால்தான் சாதாரண மூளைகளைத் தொடர்ந்தும் உற்பத்திசெய்வதில் அதிகாரவர்க்கம் பல நுட்பங்களைக் கையாளுகின்றது. இந்த நுட்பங்களில் சிக்குண்டு சாதாரண மனிதர்கள் சிதைந்துபோகின்றார்கள். இந்த நுட்பங்கள் உண்மையில் அதிகார அமைப்பின் பொறிகளே. இந்தப் பொறி சகலரின் வாழ்க்கையினையும் பலியெடுக்கின்றது.
கிறிக்கெற் விரும்பிகள் இந்த மாதிரியான கருத்துகளுடன் முரண்பட நேரிடலாம். அவர்களுக்கு இதெல்லாம் ஒருபொருட்டல்ல. உண்மையில் இன்றைய கிறிக்கெற் ரசிகன் மைதானத்தில் உருட்டப்படுகின்ற பந்துதான். அல்லது எறியப்படுகின்ற பந்துதான.; ஆட்டத்தின் அணிகள் கொண்டாடப்படும் அளவிற்கு பந்துகொண்டாடப்படுவதில்லை. ஆட்டத்தின் நாயகர்கள் புகழ்பெறுகின்ற அளவிற்கு பந்து ஒருபோதும் புகழடைவதில்லை. ஆனால் அந்தப் பந்தைவைத்துத்தான் ஆட்டமே நடக்கின்றது. அந்த பந்து மைதானத்தில் படாதபாடெல்லாம் படுகின்றது. ஆட்டக்காரர்களையெல்லாம் ஒருகணம் மறந்துவிட்டு அந்தப் பந்தைமட்டும் ஒரு ஐந்துநிமிடம் பாருங்கள். அது எவ்வளவு முக்கியமான பொருளாக அந்த மைதானத்தில் இருக்கின்றது என்பது புரியும்.
அவ்வளவு ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் தனியே ஒருபொருளாக அதுதான் சுழல்கிறது. அதுமட்டும்தான் மையப்பொருளாக நின்று இயங்குகின்றது. அதைமையமாக வைத்துத்தான் ஆட்டமே நடக்கின்றது. ஆனால் பந்திற்கு எந்த முதன்மையும் இல்லை. பல இலட்சம் ரசிகர்களின் மனதில் அந்தப் பந்திற்கு சிறு இடமும் இல்லை. பந்தைப் போலத்தான் கிறிக்கெற்ரின் ரசிகர்களும். மெகாத்திருவிழாவில் கண்டுகளிப்பவர்களாகவே ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்றைய அரசியலில் "மெகா" என்ற வார்த்தை சாதாரண மனிதர்களை சல்லடையாக்குகின்றது.
மெகாபட்ஜட், மெகாத்தொடர்கள், மெகாவிளையாட்டு, மெகாநிகழ்ச்சிகள் எல்லாம் சாதாரண மனிதர்களின் மூளையில் மந்தப் புத்தியை நிரப்புகின்றன. மெகா என்றவார்த்தை கவர்ச்சியூட்டும் ஒரு அபாய வெடிகுண்டு
கிறிக்கெட் பிரித்தானியரின் விளையாட்டு. அதனை பிரித்தானியர்கள் தாம் ஆட்சிகொண்ட கொலனி நாடுகளில் பரப்பினார்கள். அப்படித்தான் அது இலங்கை, இந்தியா, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பரவி வேர்கொண்டது.
தனது ஆக்கிரமிக்குட்பட்ட நாடுகளில் அந்த விளையாட்டைப்பரப்பி அதனை ஒரு சர்வதேச விளையாட்டாக இன்று பிரித்தானியா காட்டுகின்றது. உண்மையில் வெள்ளையரின் மேலாதிக்கத்தின் இன்னொரு வெளிப்பாடு இது. ஆனால் இதனை அப்படியாரும் விளங்குவதில்லை. அப்படி ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒவ்வொருநாடடுக்கென்றும் சில விசேடமான விளையாட்டுக்கள் உண்டு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பான சுவையிருந்திருக்கின்றது..
கிளித்தட்டும் கிட்டிப்புள்ளும் விளையாடிய தமிழ்ச்சாதி இப்போது அப்படியொரு விளையாட்டை விளையாடியதற்காகவே வெட்கப்படுகின்றது. கிளித்தட்டு ஒரு சர்வதேச விளையாட்டா என்று என்னுடைய இளவயது நண்பர் ஒருவர் கேட்டு சண்டைக்கு வந்துவிட்டார். அவருக்கு அதுவொரு சிரிப்புக்கிடமான விடயம். கிளித்தட்டு எப்படி சர்வதேச விளையாட்டாக முடியும்? என்று அவர்கேட்கிறார். அவரைப்பொறுத்தவரையில் கிளித்தட்டு, கிட்டிப்புள்ளு, சடுகுடு, கபடி எல்லாம் வெட்கக்கேடான விளையாட்டுக்கள்.
கிறிக்கேற்றும் கால்பந்து, கரப்பந்தாட்டம் போன்றதுதான் ஆமறகுலகின் விளையாட்டுக்களதான சிறந்தவை. அவற்றுக்குத்தான் மதிப்புண்டு அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
என்ன செய்வது? அந்த இளவயது நண்பரை என்ன சொல்லமுடியும்?
அவருக்கு ஒன்றை மட்டும்சொல்லாம். அவருடைய அப்பாவும் தாத்தாவும் அவரின் முன்னோர்களும் விளையாடியவை கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும், கபடியும், சிலம்புந்தான் இப்படித்தான் பிரித்தானியாவில் கிறிக்கேற்றும் ஜேரிமனியில் கால்பந்தும் விளையாடப்பட்டன. யப்பானிலும் சீனாவிலும் குங்பூவும் கராட்டியும் விளையாடுகிறார்கள். உலகின் பல இனக்குழுக்கள் தங்கள் விளையாட்டுக்களை இன்றும் கைவிடாமல் தொடருகின்றார்கள்.
நாங்கள் யாரே எவரோ பிரித்தானியர்களுடைய விளையாட்டின் தாசர்களாகிவிட்டோம். அதற்காக அந்த விளையாட்டு தரமில்லை என்று அர்த்தமில்லை. அதைப் பார்க்கவோ ரசிக்கவோ கூடாது என்றும் இல்லை. அதுதான் உலகில் சிறந்த விளையாட்டு என்றும் அதற்கே பெரும் மதிப்பென்றும் கொள்ள முடியாது என்பதே இங்கே கவனிக்க வேண்டியது.
உலகத்தில் சிறப்பானவை பலஉண்டு. கிறிக்கேற்தான் சிறப்பு. அதனைத்தான் நாங்களும் ஏந்தவேண்டும் என்றால் எங்களை விடவும் வெள்ளையர்தான் சிறப்பானவர்கள். அவர்களைத் தான் நாங்கள் பெரிய ஆட்களாக ஏற்கவேண்டும் என்றுதான் முடியும். அதற்கு நாம் தயாரா? இன்றைய உலகில் எல்லோரும் மனிதர். எல்லோருக்கும் உரிமைகள் உண்டு என்று உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அது நடமுறைசார்ந்த பல பிரச்சனைகளுக்கு உட்பட்டாலும் அதுதான் உண்மை.
எனவே கிளிதட்டும் ஒரு சர்வதேச முக்கியத்துவம் பெறக்கூடிய விளையாட்டுத்தான் எட்டுக்கோடித் தமிழர்களின் விளையாட்டுக்கள் ஏன் சர்வதேச சமூகத்திற்கு வரமுடியாது. கிறிக்கெற் மட்டும் உலகத்தில் உள்ள அனைவரும் கொண்டாடப்படுகின்ற விளையாட்டா? இல்லையே.
அமெரிக்கா, கனடா, சீனா, யப்பான், இத்தாலி, ரஸ்சியா, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், ஜேர்மனி, சவுதி, ஈராக், ஈரான், கியூபா, காங்கேரி, போலந்து எனப் பல முக்கிய நாடுகளில் விளையாடப்படாத முக்கியத்துவம் பெறாத விளையாட்டுத்தானே இது?
இதெல்லாம் கிறிக்கெற்றுக்கு எதிரான வாதமல்ல. நமது மாயைகுறித்த ஒரு சிறு குறிப்பே.
கிட்டிப்புள்ளை தமிழீழத்தில் இப்போது பரவலாக விளையாடத்தொடங்கியுள்ளார்கள். அதற்கான விதிமுறைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. கிளித்தட்டும் அப்படித்தான்
குறிப்பு இது உலக கிண்ணத்தை ஒட்டி எழுதப்பட்டிருந்தாலும் தாமதமாக இங்கே வலைப்பதிவு செய்யப்படுகிறது வாசகர்கள் மன்னிக்க
Tuesday, June 5, 2007
அறம் அவரவர் சார்ந்தது
அமெரிக்காவைக் கண்டுபிடித்தது ஷகொலம்பஸ்| என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. எழுதப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புகளும் அப்படித்தான் சொல்லுகின்றன. ஆனால், இன்றைய மறுசிந்தனை இந்த வரலாற்றுப் புனைவின் மீது கேள்விகளை எழுப்புகிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் அமெரிக்கா இருக்கவில்லையா? அல்லது அப்படி அமெரிக்கா இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும் போன்ற பல கேள்விகள் வரலாற்றுப் புனைவுகளின் மீது எழுப்பப்படும்போது அறியப்பட்ட வரலாற்றின் பொய் முகமும் குரூரமும் வெளிப்படுகிறது.
அநேகமாக அறியப்பட்ட எல்லா வரலாற்றுக்கும் மறுபக்கம் அல்லது வேறுமுகங்கள் இருக்கின்றன. கொலம்பஸ் அமெரிக்காவில் கால்வைத்தபோது அங்கிருந்து பூர்வகுடிகளைக் கணக்கற்ற விதத்தில் கொன்று குவித்தார். அப்படி அந்தப் பூர்வீகக் குடிகளைக் கொன்று, வெற்றி கொண்டுதான் அமெரிக்காவில் கொலம்பஸ் தன்னை நிலை நிறுத்தினார்.
மேற்குலகின் பார்வையிலும், அறிவிலும் கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார். அமெரிக்காவுக்கு ஒளியூட்டினார். அதனைத் துலங்கச் செய்தார் என்ற மனப்பதி வுதான் இருக்கிறது. இதனால், அவர்கள் கொலம்பஸை முதன்மை அடையாளமாகவும் வரலாற்றின் நாயகனாகவும் கொண்டாடுகின்றனர்.
கொலம்பஸ் கொன்று குவித்த அமெரிக்கப் பூர்வ குடிகளைப் பற்றிய கணக்கெடுப்புக்களோ மதிப்பீடோ மனப்பதிவோ மேற்கில் இல்லை. அது குறித்த வருத்தமோ தயக்கமோகூட அவர்களுக்கில்லை. குறிப்பாக, மேற்காதிக்கச் சிந்தனையில் இல்லை.
இந்தியாவில் 1948 சனவரி 30 அன்று காந்தி கோட்சேயினால் சுட்டுக் கொல்லப் படுகிறார். காந்தியைச் சுட்டுக் கொன்றது தொடர்பாக 1948 ஓகஸ்ற் 11 அன்று கோட்சே நீதிமன்றத்தில் தன்னுடைய விரிவான வாக்குமூலத்தை அளிக்கின்றார். அப்போது இந்த வாக்கு மூலம் தடை செய்யப்பட்டு பின்னர் மொராஜி தேசாய் ஆட்சியிலிருந்த போது வெளியிடப்படுகிறது.
காந்திக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் மீது கொண்ட அக்கறை யினாலேயே என்று கோட்சே சொல்கிறார். அதற்கு ஆதாரமாக சீக்கிய, இந்து அகதிகள் காந்தியின் உண்ணாவிரதத்தினால் மசூதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதும் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாவை இந்தியா கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதும் பாகிஸ்தானைப் பிரிப்பதற்கு காந்தியே முக்கிய காரணமாக இருந்தார் என்றும் கோட்சே தெரிவித்தார்.
காந்தியின் கோணத்திலிருந்து அணுகுவோர் பெரும்பான்மையான இந்துக்கள் முஸ்லிம் களின் மீது பரிவுடன் நடந்து கொள்வார்கள், பெருந்தன்மையுடன் இணைந்து வாழ்வார்கள் என்று காந்தி நினைத்தார் என்கின்றனர்.
இங்கே பெருந்தன்மை பற்றியோ பரிவுபற்றியோ பேசுவதைவிட அவரவர்க்கான உரிமை கள் பற்றியே பேசவேண்டும். அதுவே அவசியமானது என்கின்றனர் காந்தியை மறுஆய்வுக்குட்படுத்தும் இன்னொரு சாரார். முஸ்லிம்களுக்குரிய உரிமை இந்துக்களுக்கான உரிமை என்பவை தனித்தனியாக வரையறுக்கப்பட வேண்டுமேயொழிய வெறுமனே பரிவும் இரக்கமும் மட்டுமல்ல என்கின்றனர் அவர்கள்.
இவை ஒவ்வொன்று தொடர்பாகவும் வௌ;வேறு கோணங்களிலான பார்வைகள் உண்டு. இந்த நிகழ்ச்சிகள் குறித்து இந்தியாவில் படிக்கப்படும் வரலாறும், பாகிஸ்தானில் படிக்கப்படும் வரலாறும், பிரிட்டனில் படிக்கப்படும் வரலாறும் வௌ;வேறாகவே இருக்கும் என்கிறார் சுரே~; குமார இந்திரஜித்.
ஒரு இடத்திற்குப் பல வரைபடங்களும் ஒரு காலத்துக்குப் பல சரித்திரங்களும் உண்டென்றும் அவர் மேலும் சொல்கிறார்.
மாற்றுச் சிந்தனையாளர்கள் வரலாற்றை மறுவாசிப்புச் செய்கின்றனர். இன்றைய அறிவுலகம் பன்முகத்தன்மையை அதிகம் நம்புகிறது. பன்முகத் தன்மையில் உருவாகுகின்ற பரிமாணங்களும் வலுவும் அதிகம் என்ற உண்மையை அது நிரூபிக்கிறது
அமெரிக்காவில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானவர்கள் குறித்த குறிப்புக்களோ அந்தக் கொலைகள் குறித்த குற்றவுணர்ச்சியோ இன்றும் மேற்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது மேற்கின் பன்முகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கொடுமையின் ஆறாதகாயங்களை தமிழில் மறுவாசிப்புச் செய்திருந்தார் எஸ். வி. ராஜதுரை. 1995இல் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுபமங்களா இதழில் எஸ்.வி.ஆர். இது பற்றி இரண்டு கட்டுரைகளை எழுதியிருந்தார். கொலம்பஸின் குரூரமுகத்தை; அதில் அவர் தெளிவாகக் காட்டினார்.. கூடவே மேற்குலகின் நாகரிகத்தையும்.
இதேபோல ச. தமிழ்ச்செல்வன் சுமங்களாவில் வேறொரு கட்டுரை எழுதியிருந்தார்.
உருண்டையான உலகத்தில் எப்படிக் கிழக்கும் மேற்கும் என்ற பிரிப்புக்கள் செய் யப்பட்டன? எந்த நோக்கத்திலும் எந்தத் தேவையின் அடிப்படையிலும் இந்தப் பிரிப்புகளும் பூமியின் ரேகைக்கோடுகளின் வரைபும் எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
நமது கல்வி முறையையும், மனப்பதிவுகளையும் பிளந்தெறியும் விதமாக தமிழ்ச் செல்வன் பல உண்மைகளை எடுத்து வெளியே வைக்கிறார்.
ஐரோப்பியர்களின் மேலாதிக்கமே இந்த வரைபுகளை நிர்ணயம் செய்தன. அதிலும் பிரித்தானிய எழுச்சியும் அதன் விரிவாக்கமும் இந்தத் தேவைகளை உருவாக்கின. இந்த எழுச்சியோடிணைந்து எழுந்த அறிவுவாதம் புதிய நிர்மாண விரிவாக்கத்திற்கு ஏற்ற மாதிரித் தன்னை நெகிழ்ந்து கொடுத்து இந்த நிர்ணயங்களைச் செய்தன.
ஐரோப்பா ஒரு காலம் தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் சிந்தித்தது என்பதே இதன் சாரம். வரலாறு என்பது குரூரமானது என்று சொல்வதன் உண்மை ஒரு வகையில் சரிதான். அது எத்தனைதான் படிப்பினைகளைத்தந்தாலும் மீண்டும் மீண்டும் குருரங்கள் நிகழ்வதற்கான நிலைமைதானே மிஞ்சிக்கிடக்கிறது.
இப்போது ஈராக்கில் தினமும் கொலைகள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. கட்டற்ற வகையில் அழிவுகள் தொடர்கின்றன. இன்றைய ஈராக் தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளும் அறிவிப்புகளும் எப்படி இருக்கின்றன என்பது சகலருக்கும் தெரிந்தது. அதேவேளை, ஈராக்கியர்களின் மனப்பதிவும் விருப்புகளும் எப்படி என்பதும் தெரிந்ததே. குறிப்பாக, ஈராக்கிலுள்ள ஸியா முஸ்லிம்களின் மனப்பதிவு வேறானது. சுனி முஸ்லிம்களின் பதிவு வேறானது. ஈராக்கிய அரசு மற்றும் போராட்டக் குழுக்களின் பதிவுகளும் நோக்கங்களும் வேறுவேறானவை. அங்குள்ள மக்களின் மனப்பதிவுகளும் வேறானவை.
இப்போது ஈராக்கின் வரலாறு என்பது அவரவர் நோக்கு, மனப்பதிவு, தேவைகளின் அடிப்படையில் வௌ;வேறாக எழுதப்பட வேண்டும். அப்படித்தான் எழுதவும்படுகிறது. இதில் சில இப்போது முன்னாதிக்கம் செலுத்தலாம். சிலவோ இப்போது பின்தங்கியிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் ஒருபோது மீண்டு மேலெழுந்து வரும்.
ஒற்றைப்படையான வரைபுகள் தகர்ந்துவரும் யுகம் இதுவென்பதை இந்த விடயங்கள் அனுபவமாக்குகின்றன.
வரலாறு என்பது அதிகாரத்தினால் கட்டமைக்கப்படுகிறது என்று சொல்வோர் உண்டு. அது அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தினால் அல்லது கலகத்தினால் உருவாக்கப்படுவது என்று குறிப்பிடுவோரும் உண்டு. வரலாறு என்பது வாழும் முறையால் உருவாகுவது என்று வாதிடுவோரும் உண்டு. வரலாற்றை அறிவே நிர்மாணிக்கிறது என்று நிரூபணம் செய்வோர்களும் இருக்கின்றார்கள்.
அதிகாரத்தினால் நிர்மாணிக்கப்படும் வரலாற்றின் கீழே குருதியும், நிணமும் நாறிக்கிடக்கின்றன. அதற்குள் தீராத வலியும் அவமானமும் குரோதமும் தீராப்பழியாக கொதித்துக்கொண்டும் பெரிதாகிக் கொண்டுமே இருக்கின்றன.
ஆபிரிக்காவை வெற்றி கொண்ட வெள்ளையர்கள் ஆபி ரிக்காவின் வரலாற்றைப் புனைந் திருக்கிறார்கள். இதுதான் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் நடந்தது. ஆனால், அங்கெல்லாம் நூற்றாண்டுத் துயரமாய் நூற்றாண்டுகளாய் தொடரும் வன்மமாய் இன்றும் பழங்குடிகள், மற்றும் கறுப்பர்களிடையே கோபமும் துயரமும் கொந்தளித்துக் கொண்டேயிருக்கின்றன. அவர்களுக்கான நீதியின்மைகள் தொடரும் வரையில் வெள்ளையர்கள் தங்களின் நாகரிகம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எத்தனைதான் வெள்ளை சனநாயகம் அழகாகப் பேசினாலும் அது ஆதிக்க வெளிப்பாடாகவோ அல்லது நாகரிகப் பொய்மையாகவோதான் இருக்கிறது.
அறத்தின் தளத்தில் கட்டமைக்கப்படுகின்ற மனப்பாங்கு, நீதி, நாகரிகம், வரலாறு குறித்த சிந்தனைகள் வலுவடைந்து வரும் சூழலில் அதன் தீவிரத்தை மழுங்கச் செய்வனவாகவே இன்றைய பொதுஅமைப்புக்களின் விரிவாக்கத்தை மேற்குலகம் செய்து வருகின்றது என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம் எது அறம் என்ற வாதங்களும் உண்டு. அவரவர் தத்தமது நிலைப்பாடு களிலிருந்து தமக்கான அறத்தை உருவாக்குகிறார்கள். இன்னும் சரியாகச் சொன்னால், தமது நியாயங்களுக்கு ஒரு அறக்கோட்பாட்டை உருவாக்குகின்றனர்.
ஈராக்கில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்பது அமெரிக்காவின் அறம். அமெரிக்கா வைத் துரத்துவோம் என்பது ஈராக்கிலுள்ள அமெரிக்க எதிர்ப்பாளர்களின் அறம். வெளியே இருந்து நோக்கும் ஒருவர் இந்த இரண்டிலும் எதை மெய்யான அறம் என்று கொள்வது?
இங்கே விரிந்த அறிவு தேவைப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அறிவைக் கட்டமைப்பதே பல சந்தர்ப்பங்களிலும் அதிகாரமையங்களாக இருக்கின்றன.
இலங்கை வரலாற்றில் சிங்கள மேலாதிக்க சிந்தனை உருவாக்கி வைத்திருக்கும் அறிவு, மேற்குலகம் தனது சந்தைப் பொருளாதாரத்துக்கமைவாக உருவாக்கிவரும் அறிவு என்பவற்றை இங்கே கவனிக்கலாம்.
பாடசாலைக் கல்வி தொடக்கம் ஊடகங்கள் மற்றும் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகள் வரையில் இந்த மேலாதிக்க அறிவு விரிவாக்கம் நடைபெறுகிறது.
ஆகவே, இதன் வழி நின்றே இவ்வாறான வரலாற்றுப்புனைவுகளின் மீது நின்றே அறத்தையும் அதாவது, மேலாதிக்க சக்திகளின் நியாயத்தையும் உலகம் ஏற்க வேண்டியுள்ளது.
இது மிகக் கொடுமையானது?
நேரடியான ஒடுக்குமுறையையும்விட மிகப்பயங்கரமானதும் ஆபத்தானதும் இந்த அறிவு மயமாதலும் இந்த அறமயமாதலும் என்று எச்சரிக்கை செய்கின்றனர் விடுதலைக்கான சிந்தனையாளர்கள்.
விடுதலைக்கான அறத்தை ஒடுக்குமுறை யின் அறம் ஒருபோதுமே அங்கீகரிப்பதில்லை.
வரலாறு எப்படி அவரவர் நோக்கு, நலன் சார்ந்திருக்கிறதோ அவ்வாறுதான் அறப் பார்வையும் இருக்கிறது.
இங்கே துயரமென்னவென்றால் எல்லா நோக்கு நிலைகளாலும் பல சந்தர்ப்பங்களிலும் வீழ்ச்சியடைவது வாழ்க்கைதான்.
வாழ்வை மேம்படுத்துவதற்காகவே உலகம் முழுவதும் எல்லாக் காரியங்களும் நடக்கின்றன என்று சொல்லப்படுகின்ற போதும் இதுவே மெய்யாய் நடக்கிறது.
விடுதலை வரலாறும் விடுதலைக்கான அறமும் அதற்கான வழியையே திறக்க முயற்சிக்கின்றன. விடுதலை வரலாற்றில் சாதாரண மனிதர்களின் உணர்வுகளும் பங்கேற்பும் இடம்பெறுவது இதில் முக்கியமான அம்சம். இதுவே ஏனைய வரலாற்றியல்புகளை விடவும் வேறுபட்டிருப்பதும் மதிப்புக்குரியதாக அமைவதுமாகும்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களுடைய உணர்வுத் தளத்தி லிருந்தும் பிறக்கின்ற வரலாற்றுக்கும் அறத்துக்குமே ஏனைய வரலாற்றை விடவும் மதிப்பு அதிகமாகிறது.
இது மற்றெல்லாப் புனைவுகளைவிடவும் அதிகம் வெளிப்படையானது. தவிர ஏனையவை அதிகமதிகம் ஆபத்தாக இருக்கும்போது இது மட்டும்தான் அவற்றிலிருந்து விலகி வேறு மாதிரியாக இருக்கிறது.
ஆனால், இந்த சனங்களின் வரலாறு இலகுவில் எட்டிவிடக்கூடிய தல்ல. அது விடுதலைப் போராட்டச் சூழலைத் தவிர வேறெங்கும் சாத்தியமாவதுமில்லை.
எல்லாக் குறிவைப்புக்களில் இருந்தும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய இலக்கு விடுதலையாளர்களுக்கே அதிகம் உண்டு. அதிக சவாலையும் அதிகவிழிப்பையும் விடுதலையாளர்களே கொண்டிருக்க வேண்டியது யதார்த்தத்தின் நியதி.

Subscribe to:
Comments (Atom)