Sunday, June 17, 2007

பறவைக்காதல்


பறவையின் சிறகில்

காத்திருக்கிறது பயணமும் பயணவெளியும்

பறவையின் உயிரும்

அழகும்

பறவையின் அடையாளமும்



அதன் சிறகில்

நிகழ்கிறது பயணமும் பயணவெளியும்

காற்றின் துணையும்



வெளியிலும் காற்;றிலும்

தன்னை நிகழ்த்தும் பறவை

அடைகிறது தன் புள்ளியை

எனினும் அது தன் பயணத்தின்

சுவடுகளை விட்டுச்செல்லவுமில்லை

எடுத்துச்செல்லவுமில்லை



காற்றையும் சிறகையும் இணைக்கும் நுட்பத்தை

கற்ற பறவை சொல்லித்தருமா எனக்கும்

தன் வாழ்தலின் நுட்;பங்களை



காற்றில் தன்னை நிகழ்த்தும்

நுட்பத்தினூடாக

அது கட்டுகிறது

தன் பயணக்கூட்டை



சிறகிலேயே

அதன் பயணமும் இளைப்பாறலும் நிகழ்கின்றன

அதனதன் தருணங்களில்

கூடவே

பயணிக்கும்போது இளைப்பாறலும்

இளைப்பாறலின்போது பயணமும்.

No comments: