Thursday, September 27, 2007

வரலாற்றில் இருந்து பெறுதல்...

வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாதவர்கள் எப்போதும் தண்டனைகளையே பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் தண்டனையாவே இருப்பார்கள்என்று சொல்லப்படுவதுண்டு. அந்த மாதிரித்தான் இலங்கையின் அரசியலும் இருக்கிறது. அரசியலுக்குரியவர்களும் இருக்கின்றனர்.திரும்பத்திரும்ப தவறுகளையே செய்யும் போக்கு அதிகாரத்திலிருக்கும் தரப்பினரால் மேற்கொள்ளப்படும்போது மக்கள் செய்வதறியாது மூச்சுத்திணறுகிறார்கள். இதுதான் இலங்கையின் பெரும் சாபமாகவும் மூடத்தனமாகவும் தீராத கேடாகவுமிருக்கிறது.

இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட பெரிய பிரச்சினை இனப்பிரச்சினையே. இந்தப்பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படவில்லை. இப்போதோ, இனியோ, தீர்க்கப்படக்கூடிய நிலையிலும் இல்லை. இலங்கையின் பொருளாதாரம், அரசியல், ஜனநாயகம், மக்கள் வாழ்க்கை, தேசிய வளங்கள், கல்வி, எதிர்காலம் என எல்லாவற்றையும் இந்த இனப்பிரச்சினை சிதைத்துக் கொண்டிருக்கிறது.இனப்பிரச்சினையினால் ஒரு பnரும் அந்நியப்படையெடுப்பும் நடந்திருக்கிறது. இனப்பிரச்ச்pனையின் விளைவான இந்தியப்படையெடுப்பை இலகுவில் யாராலும் மறக்க முடியாது. இப்பொழுது இன்னும் பிற சக்;திகளின் தலையீடோ அழுத்தங்களோ நடக்கக்கூடிய நிலையிலேயே இந்த விவகாரம் வளர்ந்து செல்கிறது.


சுதந்திரம் பெற்ற பிறகான ஒரு பிரச்சினையை இலங்கையர்கள் இன்னும் தீர்க்கத் தெரியாமலே இருக்கிறார்கள் என்பது எவ்வளவு வெட்கத்துக்குரியதும் அறிவிலித்தனமானதுமான நிலையாகும். இந்தப்பிரச்சினையே மையப்பிரச்சினையாகவும் எதையும் தீர்மானிக்கும் பிரச்சினை உள்ளது என்பதைத் தெரிந்தபோதும் இனியும்கூட இந்தப்பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய மார்க்கமெதுவும் இல்லாமலேயே இலங்கை இருக்கிறது.இந்தப்பிரச்சினைதான் இலங்கையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்பதைக்கூட இலங்கையர்கள் சிந்தித்ததாக தெரியவில்லை. அதாவது அதிகார வர்க்கத்தினர் தெரிந்து கொண்டதாக இல்லை. அப்படி அவர்கள் மெய்யாகவே இதை உணர்ந்திருப்பார்களெனில் அவர்கள் அது குறித்து கட்டாயம் சிந்தித்தே இருப்பர்.



இவ்வளவுக்கும் இந்தப்பிரச்சினை எவ்வளவு உயிர்களைக் பலியெடுத்திருக்கிறது. எத்தனை கோடி ரூபாய்களை அழித்திருக்கிறது. எவ்வளவு வளங்களையும் சொத்துகளையும் நாசமாக்கியிருக்கிறது என்பதையே தெரியாமல்தான் இன்னும் இந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்களா.அதுமட்டுமல்ல இன்னும் எத்தனை உயிர்களையும் சொத்துகளையும் எவ்வளவு வளங்களையும் அழிக்கப்பொகிறது என்பதைக்கூட இவர்கள் அறியாமலா இருக்கிறார்கள்.இல்லை, எல்லாமே இவர்களுக்குத்; தெரியும். ஆனால் தெரிந்து கொண்டும் தங்கள் விட்டுக்கொடாத்தன்மையினால் எல்லாவற்றையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே பெருந்தொகை நிதியை அவர்கள் போருக்;கு செலவிடுகிறார்கள். இலஙகையின் பொருளாதாரத்தில் அதிகபங்கு பொருக்காகவே செலவிடப்படுகிறது. இவ்வளவுக்கும் இலங்கையின் பாதுகாப்புக்கு வெளிச்சக்திகளின் அச்சுறுத்தல் பெரிதாக இல்லை. Nமுலும் அதற்காக பாதுகாப்பு நிதியை இவ்வாறு ஒதுக்க வேண்டுமென்ற கட்;டாயமும் இல்லை.



ஆனால் உள்நாட்டு யுத்தத்துக்கே இவ்வளவு பொருளாதாரமும் வளமும் பிரயோகிக்கப்படுகிறது. தன்னுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லாததன் விளைவே இதுவாகும். இந்த விட்டுக் கொடாத்தன்மை என்பது அறிவீனத்தின் அடியாகவும் தாழ்வுச்சிக்கலின் காரணமாகவுமே வருகிறது. இந்தத் தாழ்வுச் சிக்கலைக்கடக்க முடியாமலே சிங்களத்தரப்பு நீண்டகாலமாக வரலாற்றையே தவறாக்க முனைகிறது.இலங்கையின் சுதந்தரத்துக்குப்பின்னான வரலாற்றில் சிங்களவர்களே நாட்டைத் தொடர்ந்து ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்;. இப்பொதும் அவர்களே ஆட்சிப் பொறுப்பிலிருக்கிறார்கள். அவர்களுடைய ஆட்சியில் இலங்கையிலுள்ள சிறுபான்மைத் தேசிய இனங்கள் என்றைக்கும் கண்ணியமாக நடத்தப்பட்டதும் இல்லை. அவர்களுக்கான உத்தரவாதம், பாதுகாப்பு, நிறைவு, சமநிலை என எதுவும் வழங்கப்பட்டதாகவும் இல்லை.



இதுவரையான வரலாற்றில், இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னான அறுபது ஆண்டுகால சரித்திரத்தில், பல தடவைகள் முஸ்லிம் மக்கள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர். முஸ்லிம் மக்களை இன்னும் தமது நலனுக்காகப்பயன் படுத்தும் கருவிகளாகவே சிங்களத்தரப்பு பயன்படுத்தி வருகிறது. அதிலும் தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகவும் தமிழ்பேசும் மக்கள் ஓரு பலமிக்க சக்தியாக திரளாத படியும் அது பார்த்துக் கொள்கிறது. தமிழ் மக்களை வெற்றி கொள்ளுமட்டுமே முஸ்லிம்களையும் இந்த அளவுக்காவது அது பயன்படுத்தும். அந்ததத்தேவை முடிந்தால் முஸ்லிம்களை சிங்களத்தரப்பு பிழிந்து தள்ளிவிடும்.இதேபோல மலையகத்தமிழர்களையும் அது சிதைத்தும் புறநிலைப்படுத்தியும் வைத்திருக்கிறது. அவர்களையும் தனது தேவைகளுக்குப்பயன்படுத்தும் போக்கே தொடருகிறது. யதார்த்த நிலையில் இப்பொது மலையக மக்களும் மலையகக் கட்சிகளும் பலமிழந்தும் பிடியிழந்துமே இருக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முதலிருந்த நிலைமை இப்போது அங்கே இல்லை. மலையகப்பகுதியில் அந்த மக்களுக்கிருந்த பலமும் குறைந்தே போயுள்ளன.



இதேமாதிரியே அது தமிழர்களையும் பயன்படுத்த விழைந்தது. அதற்கு பெரும்பான்மையான தமிழர்கள் மறுத்ததன் விளைவுளை வைத்தே சிங்களத்தரப்பு தமிழர்களின் மீது பொரைத் தொடுததிரக்கிறது. அதாவது சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது அடையாளங்கள், சுய கௌரவம், எதிர்காலம் என்பவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒட்டிப்பிழைக்க வேண்டும் என்ற சிந்தனையும எதிர்பார்ப்புமே சிங்களத்தரப்பிடம் இருக்கிறது.அப்படி ஒட்டிப்பிழைக்கும் தரப்பினரை சிங்களவர்கள் பாராட்டுகிறார்கள். தங்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டு மற்றவர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்துகிறார்கள்.


இதில் வேடிக்கை என்னவென்றால் இதெல்லாம் சரியென்றே அவர்கள் சொல்லிக் கொண்டும் நம்பிக் கொண்டும் இருப்பதுதான். அது மட்டுமல்ல அவர்கள் இதை மற்றவர்கள் நம்பவேண்டும் என்றும் சொல்கிறார்;கள்.இந்த அறுபது ஆண்டுகால வரலாற்றில் சிங்களவர்களல்லாத ஏனைய சமூகங்களை எந்த அளவுக்கு தாங்கள் மதிப்போடும் கண்ணியத்தோடும் நடத்தியிருக்கிறோம் என்று அவர்கள் சிந்தித்திருப்பார்களா. இப்போதும் அப்படி மதிப்பாகவும் கௌரவமாகவும் நடத்துவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்று அவர்கள் தங்களை என்றாவது கேட்டுக் கொண்டார்களா..



அதிகாரத்திலும் ஆதிபத்தியத்திலும் ஆட்சியிலும் இருக்கிறோம் என்பதற்காக எதையும் செய்யலாம் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று அவர்கள் வெட்கமில்லாமல் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.அதுமட்டுமல்ல அவர்கள் ஆட்சியிலிருந்து கொண்டே ஏனைய சமூகங்களை படு மோசமாக நடத்தியபோது அவர்களுடைய மனச்சாட்சியும் அறமும் என்னமாதிரி இருந்தது.

வளமான கலையையும் பண்பாட்டுத்தளத்தையும் வாழ்க்கை முறையையும் கொண்ட கொண்ட சிங்களச்சமூகம் இனக்குரோதத்திலும் ஒடுக்குமுறையிலும் எப்படி எந்தக்கூச்சமுமில்லாமல் ஈடுபடுகிறது.உலகிலே சிறந்த மதப்பிரிவான, மதங்களிலேயே ஒப்பீட்டளவில் முற்போக்கு அம்சங்களுடைய பௌத்தத்தை பின்பற்றும் இந்த மக்கள் எப்படி வன்முறைக்கும் அழிவுக்கும் அழிப்புக்கும் தயாரானார்கள்.



சர்வதேச, பிராந்திய நெருக்கடிகளாலும் லாப நட்டக்கணக்குகளாலும் சூழப்பட்டிருக்கும் அரசியல், புவியியல் அமைவிடத்தில் இருக்கும் இந்தச் சிறுதீவில் உள்ளோரெல்லாம் ஒன்றாக நின்று எதிர்கொள்ள வெண்டிய பொதுப்பிரச்சினையை புர்ந்து கொள்ளாமல் அந்தச்சக்திகளுக்கு இடமளிக்கும் இவர்களின் பேதமைத்தனத்தை என்வென்பது.உண்மையில் சிங்களவர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெரும்பான்மையானவர்களாகவும் இருக்கும்போது அவர்கள் ஏனைய மக்களை பொறுப்போடும் கண்ணியத்தோடும் நடத்தியிருக்க வேண்டும். ஆனால்; அவர்களுக்கு அது குறித்த சிந்தனை கிடையாது. பதிலாக பொரைச் செய்து மற்றச் சமூகங்களை அடிமை கொள்வதிலேயெ அவர்கள் குறியாக இருக்கின்றனர்.



பிற சமூகங்கள் மீதான ஒடுக்கு முiறைக்கெதிரான குரல்கள் சிங்களத்திரப்பில் இருந்தாலும் அது திரட்சி பெறாமல் செயலுக்கான தகுதியும் வலுவுமற்ற நிலையிலேயே இருக்கிறது. அகக் குறைந்தது சிங்களப் பொது மக்களின் மனப்பாங்கை அறம் சார்ந்தும் ஜனநாயம் சார்ந்தும் வளர்த்தெடுக்க முடியாத யதார்த்த நிலையே அங்கே நிலவுகிறது.எனவே அப்படிப் பிறரைக் கண்ணியமாக நடத்துவதற்குரிய ஆற்றலும் மனப்பாங்கும் நாகரீகமும் அவர்களுக்கு கிடையாதென்பதை அவர்கள் அறிய வேண்டும். அதற்காக வரலாற்றின் முன்னுக்கு அவர்கள் பகிரங்கமாக வெட்கப்பட்டு தலைகுனியவே வேண்டும்.



இன்றுள்ள நிலையில் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக விதிமுறைகள் மற்றும் பொதுமனிதப்பண்பாட்டின்படி பார்த்தால் சிங்களச்சமூகம் அனைத்துத் தகுதிகளையும் இழந்து விட்டது.இதில் சோகமான உண்மையென்னவென்றால் இந்த இனவாத வன்முறைச் சிந்தனைக்குள் முதல் தலைமுறை இடதுசாரிகள் சிக்குண்டது மட்டுமல்லாது அடுத்த தலைமுறையான ஜே.வி.பி புரட்சிவாதி 'களும் அமிழ்ந்துபொனதுதான். இந்தக்காரணங்களால் இலங்கைத்தீவிலுள்ள எல்லாச் சமூகத்தினரும் தீராத துன்பத்துக்கும் அழிவுக்குள்ளும் ஆபத்துக்கும் உள்ளாகி வருகின்றனர்.



சிங்களவர்கள் தமது குரொதம் நிறைந்த சிந்தனையினால் தாமும் தமது எதிர்காலத்தை பாழாக்குவதுடன் பிற சமூகங்களின் எதிர்ககாலத்தையும் நிகழ்காலத்தையும் பாழாக்கிக் கொள்கின்றனர்.உலகத்தின் இயங்குநிலையும் போக்குகளும் சடுதியாக மாற்றமடைந்து செல்லும்போது இலங்கை மட்டும் அதனிலிருந்து விலகியும் பின்தங்கியும் இருக்கின்றது.

அது எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் பொர் செய்வதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய உலக ஒழுங்கில் பொரைச் செய்ய விரும்பும் ஒரு தேசம் மிகவும் பின்Nhனக்க üச ; செல்லவே முயற்சிக்கிறது என்று பொருள்.போர் பற்றிய ஆட்;சிமுறை பற்றிய முந்திய கோட்பாடுகளும் வரைவிலக்கணங்களும் அணுகுமுறைகளும் பெருமளவுக்கும் கடந்த நூற்றாண்டுடன் தகர்ந்து விட்டன.



கடந்த நூற்றாண்டில் நடந்த இரண்டு உலகப்போர்களும் ஏற்படுத்திய தாக்கங்கள் இந்த மாறுதல்களுக்கு பெருங்காரணங்களாகும்.சென்ற நூற்றாண்டில் உருவாகிய சிந்தனையும் அனுபவங்களும் அதற்கு முந்திய வாழ்க்கையையும் ஆட்சி அதிகார அமைப்புகளையும் அவற்றின் அணுகுமுறைகளையும் விசாரணைக்குட்படுத்தின.சிந்தனையிலும் அனுபவத்திலும் ஏற்பட்ட மாற்றங்களும் வளர்ச்சியும் புதிய வழிகளையும் மாற்று ஏற்பாடுகளையும் உருவாக்;கியுள்ளன. தொடர்ந்து மாற்றங்களைக் கோருகின்றன.



இந்த மாற்று ஏற்பாடுகள் மாறாத நிலையிலுள்ள சமூகங்களை முன்னோக்கி மாறும்படி நிர்ப்பந்திக்கின்றன. அப்படி இன்று எந்த ஒரு சமூகமும் மாறாமலிருக்க முடியாது. இன்றைய சமூக அமைப்பென்பது சர்வதேச மயப்பட்டது. ஒரு இணைப்பில் தொடுக்கப்பட்டிருப்பது.மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் எண்ணங்களும் அவர்களுடைய தேவைகளும் மிகவும் மாறிவிட்டன. எதையும் அறிவுபூர்வமாக அணுகுகிற வளர்ச்சிக்கு மக்கள் சமூகம் வளர்ந்து விட்டது. அதேபோல அறிவுபூர்வமாகவே எந்தவிவகாரமும் கையாளப்படவேண்டும் என்ற ஒழுங்கும் யதார்த்தமும் இன்று உருவவாகிவிட்டது.



நம்பிக்கைகள், எண்ணங்கள், விருப்பு, வெறுப்புகள் எல்லாம் குறுகிய தேவைகள் நலன்களைக்கடந்து பரந்த அளவிலான எல்லைகளைக் கொண்டிருக்க் வேண்டும் என்ற நிலையும் உருவாகிவிட்டது.அப்படி அறிவார்ந்ததாகவும் பொதுவானதாகவும் பரந்ததாகவும் இருந்தாலே அது வலுவான ஆதரவுத்தளத்தைப் பெறும். அதற்கே பரந்தளவிலான அங்கீகாரமும் ஆதரவும் கிடைக்கும்.



எத அறிவுசார்ந்ததாக இருக்கிறதோ அதை நோக்கியே இன்றைய சமூகம் குவியும். இது இன்றைய சமூகத்துக்கு மட்டுமான விதியல்ல. இதுவே எப்பொதைக்குமான பொது விதி. கூர்ப்பின் விதியும் அதுவே.எனவெ பொது விதிகளை தொடர்ந்து மீறிக் கொண்டெயிருக்கும் ஒரு சமூகமும் ஓரு தேசமும் எந்தவகையிலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. அது தனக்கான தடைகளைத் தானே விதித்துக் கொண்டு அதற்குள் சிறைப்பட்டுக் கொண்டேயிருக்கும். அது விதித்த தடைகளை அதனால் கடக்க முடியாத அவலத்திற்குள் அது தன்னை வரையறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.



இதுதான் இப்பொழுது சிங்களச்சமூகத்துக்கும் சிறிலங்காவுக்கும் நடந்திருக்pறது. சர்வ தேச சமூகம் இப்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சிறிலங்காவில் தொடருகின்ற போர் மற்றும் வன்செயல்கள் பற்றியும் கதைக்கிறது என்றால் அதன் பொருள் என்ன. இலங்கையின் அரசியலும் சமூகநிலையும் பாதமிக்கப்பட்;டுள்ளது என்றுதானே அர்த்தம்.தங்குநிலைப்பொருளாதாரத்தில் நின்று கொண்டு அதிசாகசங்களைக்காட்டும் பேதமைத்தனத்தை எண்ணி சர்வ தேச சமூகமும் உள்@ர் மக்களும் நகைக்கின்றனர். வெண்டுமானால் ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாமலிருக்கலாம் அல்லது அவர்கள் பெருங்கற்பனையில் தம்மைப்பற்றியும் தமது தேசத்தைப்பற்றியும் எண்ணி மிதக்கலாம். ஆனால் யதார்த்தமும் எதிர்காலச் சவாலும் வேறு விதமாகவே இருக்கின்றன.



அதிக வரைவிலக்கணங்களாலும் அதிக விளக்கங்களாலும் ஒரு பிரச்சினையை விளக்குவதைவிடவும் துயரமான நிலை வேறில்லை என்பார்கள். ஏனெனில் யதார்த்தத்தையும் அறிதலையும் புறக்கணித்துள்ள ஒரு சமூகத்திடம் எப்படி பரஸ்பரத்தையும் நெருக்கத்தையும் எதிர்பார்க்க முடியும்.சிங்களச் சமூகத்தைப் பார்த்து ஏனைய சமூகங்கள் இந்தக்கேள்வியை கணநதோறும் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் சிங்களச் சமூகமோ எந்தக் கேள்விகளுக்கும் அப்பாற் பட்டதாக, தானிருப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்க்pறது.



இந்தக்கற்பனைதான் அதனை இப்பொழுது பிறருடைய அழுத்தங்களுக்கும் குற்றஞ்சாட்டுதல்களுக்கும் உள்ளாக்கியிருக்கிறது. இந்தக்கற்பனை முழவதும் தவறுகளின் மேலும் குற்றங்களின் மேலும் கட்டப்பட்டது. தவறுகளின் மேலும் குற்றங்களின் மேலும் கட்டப்பட்ட எந்தக்கற்பனையும் நிலைக்கவும் முடியாது. பாதுகாப்பானதாக இருக்கவும் முடியாது.



வரலாறு இந்த விசயங்களை எத்தனை தடவைதான் நிரூபித்தாலும் அதிகாரம் அதனை விளங்கிக்கொள்ள அனுமதிப்பதி;லை. அல்லது அதிகாரத்திலிருப்போர் உண்மைகளைக்கண்டறிய விரும்புவதில்லை. சிங்களவர்கள் தொடர்ந்து அதிகாரத்திலே இருந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய புலனுக்கு சிறு உண்மைகளும் நீதியும் புலப்படாது போனதுதான் விந்தையானது.அவர்கள் தாம் இழைத்த எந்த நீதியின்மை குறித்தும் இதுவரையில் வெட்கப்பட்டதாகச் சரித்திரமேயில்லை. அவர்கள் நீதியில்லாமல் நடக்கப்போய் இப்போது முழு நாட்டையும் போர் நிலைமைக்குள் தள்ளி விட்டுள்ளார்கள். இந்தக்குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும் இப்போது, இந்தக்கணத்தில், வன்னியில் ஆழஊடுருவும் படையினரால் ஒரு மதகுரு கொல்லப்பட்டிரு;ப்பதாக செய்திகள் சொல்லிக் கொணடிருக்கின்றன.



இந்த மாதிரியா கொலைகள் எல்லாம் இப்போதுதான் தொடங்குகின்றன என்றோ இவைதான் இறுதிக் nhகலைகள் என்றோ இல்லை. இவை முடிவிலாக் கொலைகளின் இடையில் நடக்கும் சிறு சம்பவங்கள். இந்தமாதிரி நிலையில் மனித நாகரீகமும் பண்பாடும் காணாமலே போய்விடுகிறது. சமூகத்தின் அறமும் மனித அடிப்படையும் கெட்டுவிடுகிறது.வரலாறு எத்தனை பெசூறுமதியாக இருந்தாலும் அதனைப்படிக்காதவரையில் அதனால் எதையும் செய்ய முடியாது என்பார்கள். அதேவேளையில் வரலாற்றின் விதியில் எதுவும் தப்புவதில்லை என்ற உண்மையும் இருக்கிறது. எது எப்படியோ வரலாற்றிலிருந்து யாரம் கற்றுக் கொள்வதில்லை என்ற கூற்றையே இங்கே சொல்லலாம். இந்தக்கட்டுரை கூட வரலாற்றைக் கருத்தில் கொண்டிருந்தால எழுப்பட்டிருக்கவே முடியாது.

No comments: