ஒரு ஆட்டுக்குட்டி
என்றும் நினைப்பதில்லை
தன் கழுத்தில் விழக்காத்திருக்கும் கத்தியை
என்றும் அது அறிவதில்லை
தன்னை வளர்ப்போனே
ஒரு கொலையாளன் என்பதை
சாவுக்குப்பிறகும்
தனது குருதியும் மாமிசமும்
மகிழ்ச்சிக்குரிய பண்டமாகிப் போகுமென்று
துள்ளுகிறது மகிழ்ச்சியுடன்
அழகாக
நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிறகொருநாள் மடிகிறது
நமது குருரவெளியில் எந்த நிபந்தனையுமின்றி
அது
நமக்கு ருஷியாகிப்போகிறது.
No comments:
Post a Comment