Sunday, June 17, 2007

தகிக்கும் கூடு



காயங்களிலிருந்து

வெளியேறிய பறவை

தன்னுடன் எடுத்துச் செல்கிறது

தன் அழகிய மலரை

தன்னுடைய பெருந்தீயை

தன் கடலை

தன் வெளியை



அதனிடமில்லை

மீண்டும்

கூடு திரும்பும்

நினைவின் நிழல்



அது செல்லும் வழியில்

தன் சிறகுகளையும்

கொடுத்துச் செல்கிறது காற்றிடம்



வலிகளைக்கடந்து போகும் பயணம்

வெறுமையை

நிரப்பிவிடுகிறது கூட்டினுள்



பறவையின் ஆறாச் சூட்டில்

தவிக்கின்றது கூடு தனியே

No comments: