சவப்பெட்டியின் நிழலில் துளிர்த்த வேர்கள்
அதி பயங்கரமாகவும்
சாவகாசமாகவும்
வளர்ந்து செல்கின்றன
என் தூக்கத்தினூடும்
விழிப்பினூடும்
ஞபகங்கொள்ள முடியாத
பூச்செடிகளில்
யாரோ விட்டுச் சென்ற
புன் சிரிப்பின்மீது
இரத்தத்துளிகளின் நடனம் பாம்பின் நளினத்தோடு
காதருகில்
அச்சமூட்டும் ரகசியங்களைச்சொல்லும் எதிரி
அழைத்துச் சென்ற விருந்தில்
எதிர்பாராத விதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை
தலைகவிழ்ந்தபடியிருந்தார் கிறிஸ்;து
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது காலம்
பன்னூறு ஆண்டுகால
தோல்வியிpன் நிழலைப்பிரதிபலிக்கும்
அந்தத விழிகளில்
சகிப்பிpன் கடைசிக்கணம்
முடிவடைவதைக் கண்டேன்
No comments:
Post a Comment