பிரதிபலிப்பானகளின் முகத்தில்
இல்லையொரு புதுப்புன்னகை
இல்லையொரு புது மொழி
இல்லையொரு புதுக்குரல்
இல்லையெந்தப்புதிதும்
உண்மையும்
இல்லையென்றும்
பிரதிபலிப்பான்களுக்குச் சொந்த முகமும்
ஓரிதயமும்.
நீ அனைப் பிரதிபலிக்கிறாய்
அவன் அவரைப் பிரதிபலிக்கின்றான்
அவர் பிரதிபலிக்கவும் ஒருவரிருக்கிறார்
உன்னை இவன் பிரதிபலிக்கிறான்.
கடவுளே
இவனைப் பிரதிபலிக்காதிருக்கட்டும்
ஒருவரும்.
பிரதிபலிப்பான்களின் சம்பாஷணையில்
ஒழிந்திருக்கிறது கபடத்தின் சர்ப்ப நிழல்;
பிரதிபலிப்பான்களின்
செயல்களிலில்லைச் சுயமும் துளிர்ப்பும்.
பரதிபலிப்பானகளிடம் எப்போதுமிருப்பதில்லை
அன்புக்கும் நட்புக்குமான
அந்ததரங்கமும் வெளிப்படையும்.
ஒரு மாறாத புண்ணை
ஒவ்வொரு பிரதிபலிப்பான்களும்
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இதயமென்றதற்குப் பெயரிட்டு
அதில் நெளிகின்றன
புழுத்த பொய்கள்.
பிரதிபலிப்பான்களிடமிருந்து
நழுவிக்கொண்டிருக்கிறது நிகழ்காலத்தின் மூச்சும்
எதிர் காலத்தின் விதையும்.
No comments:
Post a Comment