Thursday, May 31, 2007

தராகி டி.சிவராம் நினைவுகள் அகலவில்லை

பிரகாசமானது அந்த நட்சத்திரம். ஞாபகங்களில் நிரம்பியது அதன் ஒளி. சிதறடிக்கப்பட்டபின்னும்; அது ஒளியுடனிருந்தது. அப்போது அது பல்லாயிரம் ஒளிமுகங்களாகியது. பல்லாயிரம் பல்லாயிரம் ஒளிமுகங்கள். ஒரு நட்சத்திரத்தின் சிதறடிப்பு பல்லாயிரம் நட்சத்திரங்களாகியது.



(-சிவராம் கொல்ப்பட்ட பிறகு அவரைப்பற்றி எழுதப்பட் கவிதையொன்றிலிருந்து.)



அப்போது அவர் அதிகம் பேசப்பட்டவராக இருந்தார்;. அதிகம் சர்ச்சைக்குரியவராகவும் இருந்தார். அதற்கு சில காரணங்களிருந்தன. அவர் அதிகம் சர்ச்சைக்குரிய விசயங்களை எழுதினார். மற்றவர்கள் அறியாத விசயங்களை எழுதினார். மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்களை எழுதினார். மற்றவர்கள் மதிப்பிடக்கடினமான விசயங்களையும் எழுதினார். இதனால் அவர் பெருங்கவனிப்புக்குள்ளானார்.



தொண்ணூறுகளில் தராகி என்ற பெயர் இலங்கையில் பெருங்கவனிப்பைப் பெற்றிருந்தது. அப்போது இலங்கையின் அரசியல் இராணுவ நிலைமைகள் மிகவும் பாரதூரமான ஒரு கட்டத்தில் இருந்தன. இதனால் ஊடகத்துறையிலும் இவற்றின் அதிர்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இவற்றை தராகி அறிவுபூர்மாக அணுகி, நவீனமாக வெளிப்படுத்தினார். இதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அதற்கேற்றமாதிரி அவர் தன்னை வடிவமைத்தார்.



சிவராம் கொல்லப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவரைப்பற்றிய முழு மதிப்பீடுகள் அவசியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுவரையிலும் அவரைப்பற்றிய அத்தகைய மதிப்பீடுகள் செய்யப்படவில்லை என்பது சற்று கவலை அளிப்பதாயினும் அவருடைய பாத்திரம் வலுவாக இலங்கை முழுவதிலும் உணரப்பட்டிருப்பது சற்று ஆறதலான விசயம். அதிலும் தமிழ் மக்களிடம் சிவராம் மிக ஆழமான பதிவாகவும் உறவாகவும் ஆகிவிட்டார். எனவே அவர் பற்றிய மதிப்பீடு நிகழ்ந்துதானிருக்கிறது. ஆனால் அந்த மதிப்பீடு அறிவு பூர்வமாக நடந்திருக்க வேண்டும். தராகி இயங்கிய துறையில் அது நடந்திருக்க வேண்டும். அது ஏன் நிகழவில்லை என்பது தவிர்க்க முடியாத கேள்விதான். இங்கே அத்தகைய மதிப்பீட்டைச் செய்யும் நோக்குடன் இந்தக்குறிப்புகள் எழுதப்படவில்லை. ஆனால் தராகி இயங்கிய சூழலைவைத்து இந்தக்குறிப்பு எழுத முயற்றிக்கப்படுகிறது.


தராகி டி.சிவராம் இலங்கையில் மிகப்புகழ்வாய்ந்த ஊடகக்காரராக பதினைந்தாண்டுகள்; செயற்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிடம் ஆழமாக உணரப்படுகின்ற அளவில் அவர் தன்னுடைய பாத்திரத்தை உருவாக்கி வளர்த்திருந்தார். அவர் செயற்பட்ட இந்தப் பதினைந்தாண்டுகளும் இலங்கை அரசியலிலும் போர் மற்றும் படைத்துறை என்பவற்றிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அசாதாரணமானவை. வாழும் உரிமைகேட்டுப்போராடிய தமிழர்களின்மீPது அரசு முழுமையாகப் போரைத்தொடுத்திருந்த சூழல் அது.

கூடவே தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் பெரும் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்பட்ட காலகட்டம் இது. இவற்றைத் தன்னுடைய நுன்னுணர்கொம்புகளால் உணர்ந்து கொண்டார் சிவராம். இது அவருடைய முதலாவது வெற்றி. அதாவது இந்த மாற்றங்களும் திருப்பங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டு வருகின்றதென அவர் கூர்மையாக அவதானித்தார். சிலவிசயங்களை முன்கூட்டியும் சிலவற்றை அவை நிகழ்ந்துவரும் சம காலத்திலும் கண்டறிந்து வெளிப்படுத்தியதன் மூலம் சிவராம் தன்மீது அதிக கவனத்தைக் குவித்தார். அவர் அந்த நாட்களில் பல தரப்பினராலும் வாசிக்கப்பட்டார். தேடி வாசிக்கப்படுமளவுக்கு அவருடைய எழுத்துகளிருந்தன. அந்தளவுக்கு பெறுமதியாக எழுதினார்.

போர் நிகழும் களத்திலும் காலத்திலும் இவ்வாறு செயற்படுவது மிகக்கடினமான காரியம். அது மிகச்சவாலான காரியமும் கூட. இதற்கு அசாத்தியமான துணிச்சலும் மிகக்கவனமாக இயங்கக்கூடிய அவதானமும் தேவை. சிவராம் இதைப்புரிந்து கொண்டு இயங்கினார். அவர் மற்றெல்லா ஊடகக்காரர்களையும்விட முற்றிலும் வேறான தளத்திற்குள்ளிருந்து ஊடகத்துறைக்கு வந்தவர் என்ற வகையில் இந்த விசயங்கள் அவருக்கு நன்றாக விளங்கியிருந்தன. இதனால் மற்ற ஊடகக்காரர்களைவிடவும் புதிய விசயங்களை அவரால் எழுதக்கூடியதாகவும் இருந்தது.

சிவராம் ஆயதப்போராட்ட அரசியலுக்குள்ளால் ஊடகத்துறைக்கு வந்;தவர். இவ்வாறு ஆயதப்போராட்ட அரசியலுக்குள்ளால் ஊடகத்துறைக்கு ஏற்கனவே விகரர் ஐவன் போன்றவர்கள் வந்திருந்தனர். என்றாலும் அவர்களின் தளம் வேறு. சிவராம் வந்த தளம் வேறு. விக்ரர் ஐவன் போன்றவர்கள் ஜே.வி.பி யின் கிளர்ச்சிப்போராட்டத்தினூடாக வந்வர்கள். சிவராமோ தமிழீழ விடுதலைப் போராட்டப்பாரம்பரியத்துக்கூடாக வந்தவர்.

தொண்ணூறில் இலங்கையின் ஊடகத்துறை முற்றிலும் புதிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. அதுவரையிலும் பின்பற்றப்பட்டு வந்த பத்திரிகைத்துறை முறைமை இனிமேல் தாக்குப்பிடிக்கமுடியாதென்ற நிலைக்கு உள்ளாகியது. சர்வதேச மயவாக்கம் அதிதீவிரத்துடன் நிகழவாரம்பித்த காலம். அதுவும் அமெரிக்கா தலைமையிலான புதிய உலக ஒழுங்கு விரிவாக்கம் பெற்ற காலம் அது. மேற்குலகின் நிழல் பெரும்பாலான தேசங்களின்மீது படியத்தொடங்கிய காலகட்டம்.

அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் என எல்லாவற்றிலும் வேறுபட்ட தன்மைகளும் போக்குகளும் தீவிரம் பெறத்தொடங்கியது அப்போது. இலங்கை போன்ற மூன்றாம் நான்காம் நிலை நாடுகளில் இந்த வேகவளர்ச்சி அல்லது விரைந்;த மாற்றம் சிதறலாகவும் மெதுவாகவுமே நடந்தது. ஆனாலும் அவற்றின் நொதிப்பு பொதுவாக எதிலும் உணரத்தொடங்கியிருந்தது. இது ஊடகத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேவேளை இலங்கையின் இனப்பிரச்சினை முழுஅளவிலான போருக்குள் திணிந்தபோது இந்தச்சவால் இன்னும் அதிக விசையோடு வெடித்தது. போர,; புதிய உத்திகளிலும் நுட்பங்களிலும் முனைப்புடன் விரிவுகொள்ள அதற்கிணையான ஊடகச்செயற்பாடும் புதிய வேகத்தையெடுக்க வேண்டியதாயிற்று.

அடிப்படையில் எப்போதும் யுத்தத்துக்கு ஒருவகையான கவர்ச்சியுண்டு. சம்மந்தப்பட்ட இரண்டு தரப்புகளுக்குமிடையிலான போட்டிகளும் அவை பெறுகின்ற வெற்;றி தோல்விகளும் இதில் முக்கியமானவை. அதிலும் யுத்தத்தில் எட்டப்படுகின்ற வெற்றி தோல்விகள்தான் அரசியலையும், நாளாந்த வாழ்வையும் நிர்ணயிக்கின்றது என்ற வகையிலும் இது முக்கியமானது. அதையும்விட உயிர் வாழ்வதற்கான உத்தரவாதத்தையே யுத்தத்தின் வெற்றி தோல்விகள்தான் அளிக்கின்றன. எனவே யுத்தம் எப்போதும் சீரியசாக இருக்கிறது. ஏனைய சீரியசான விசயங்களுக்கில்லாத பெருங்கவர்ச்சி யுத்தத்துக்கு உண்டு.

இவற்;றைவிட, அரசியல் அணுகுமுறைகள், அவற்றின் சுழிப்புகள் எல்லாவற்றையும் சனங்கள் ஏற்கனவே முற்றாக அறிந்திருந்தனர். ஆனால் போர் பற்றி, அதிலும் நவீன போர் பற்றி அவர்கள் அவ்வளவுக்கு அறிந்திருக்கவில்லை. ஆனால் போரின் போக்கையும் நிலைமையையும்; அவர்கள் அறிய வேண்டியிருந்தார்கள். இத்தகையதொரு அவசியச்சூழலில்தான் தராகி, இக்பால் அத்தாஸ் போன்றோர் எழுத வருகிறார்கள். இவர்கள் போரையும் போர்ச் செய்திகளையும் வெறும் தகவல்களாக வழங்க வில்லை. அதற்குமப்பால் போரின் தன்மையை, அதன் போக்கை, போரில் ஈடுபடும் விடுதலைப்புலிகளையும் சிங்களத்தரப்பையும் அல்லது அரசாங்கத்தையும் ஆய்வு ரீதியாகப்பார்க்கும் மரபொன்றை உருவாக்கினர்கள். அதாவது விஞ்ஞான பூர்வமாகப்பார்க்கும் பண்பை தங்களின் ஊடகத்தொழிலில் ஏற்றினர்கள். இதில் தமிழில் செயற்பட்டு வந்தவர்களில் இன்னுமொருவர் நிலாந்தன்.

போர்ச்செய்திகளை வெறும் தகவல்களாகப் படித்து வந்த சனங்களுக்கு இந்தப்புதிய ஆய்வுமுறைமை வித்தியாசமாகப்பட்டது. படைத்துறையையும் போரியலையும் இவர்கள் படித்தார்கள். இந்தத்துறையினரோடு சர்வதேசமெங்கும் தொடர்புகளைக்கொண்டார்கள். இவற்றின்மூலம் வாசகர்களுக்குப்புதிய பிரதேசங்களைக்காட்டினார்கள். வாசர்களுக்கு இது புதுமையாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. இவ்வாறு எழுதப்பட்ட இந்தக்கட்டுரைகளையும் பத்திகளையும் வெளியிட்டு வந்த பத்திரிகைகள் சட்டென ஆயிரக்கணக்கான பிரதிகளால் உயர்ந்தன என்று இப்போதும் பல பத்திரிகை நிறுவனங்கள் நினைவுகூர்கின்றன.

ஊடகத்துறையை நவீனமாக அணுக வேண்டும், அந்தமுறையிலேயே இயங்க வேண்டுமென்ற அடிப்படைப்புரிதல் இவர்களுக்கு இருந்ததுதான் இதற்குக்காரணம். இதற்குத்துறைசார்ந்த நிபுணத்துவத்துவம் அவசியம். அதனை வளர்ப்பதன்மூலமே இதனைச்சாத்தியப்படுத்தலாம் என்று இவர்கள் புரிந்திருந்தனர். அதாவது அறிவுபூர்வமாக செயற்படவேண்டும்; என்ற விளக்கம் இவர்களுக்கிருந்தது. தொழிலை, அதற்குரிய அடிப்படையான தகுதிகளுடன் செய்யும்போதுதான் அதற்குரிய பெறுமதியும் மதிப்பும் ஏற்படும். தராகி இவற்றை நன்றாக விளங்கியிருந்தார். அதற்கேற்ற மாதிரி அவர் தன்னைத்தயார்ப்படுத்தினார். இதை இன்னும் சரியாகச் சொன்னால் அதற்கேற்றமாதிரி அவர் தன்னைத்தயாரித்தார்.

தராகி தொடக்கத்தில் இயங்கிய தளம் ஆங்கிலப்பத்திரிகைகளில்தான். ஆங்கிலப்பத்pரிகைகளுக்கென்றொரு யதார்த்;தம் இருக்கிறது. முதலில் அதனை விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையில் பெரும்பான்மையானோர் சிங்களவர். அடுத்தது தமிழர். அப்படியென்றால் இந்த இரண்டு மொழியிலான பத்திரிகைகளும்தான் கூடுதலாக வரவேண்டும். இவற்றுக்குத்தான் அதிக செல்வாக்கும் மதிப்பும் இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் அப்படியல்ல. இவற்றைவிடவும் இங்கே ஆங்கிலப்பத்திரிகைகளுக்குத்தான் செ;லவாக்கு அதிகம். அவை தம்முடன் கொண்டு செல்கின்ற செய்திகள், கருத்துகள், விளம்பரங்கள், இலவச இணைப்புகள் எனச்சகலமும் இதற்கு ஆதாரம்.

படித்த, மேல்வர்க்கத்தினரும் மேல் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரும் ஆங்கிலப்பத்திரிகைகளின் வாசகர்களாக இருக்கின்றனர். இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச அளவிலான பார்வை கொண்டவர்கள். சர்வதேச அளவிலான விவகாரங்களில் அறிதலுடையவர்கள். வெளியுலகம் தெரிந்தவர்கள். எனவே இவர்களை இலக்காகக்கொண்ட ஊடகம் என்ற வகையில் அதற்கேற்றமாதிரி இவர்களுக்கான வழங்கலைச் செய்யவேண்டும். இதேவேளையில் ஆங்கில ஊடகங்கள் ராஜதந்திரிகள் மற்றும் வெளியுலகப்பிரதிநிதிகளையும் சென்றடைவன. ஆகவே அவர்களின் ரசனைத்தரம், அறிவுத்தரம் என்பவற்றையும் இந்த ஊடகங்கள் கவனம் கொள்ள வேண்டியது தவிரக்க முடியாதது. ஆங்கிலப்பத்pரிகைகளின் செய்தி வெளிப்பாடு மற்றும் அவற்றின் வடிவமைப்பு என்பனவற்றைவைத்தே இதைச் சாதாரணமாக கண்டறியலாம். பாமரத்தன்மையைக் கடந்த நிலை இவற்றில் உண்டு. ஆக இந்த அடிப்படையில்தான் இநதப்பத்திரிகைகளில் வருகின்ற எழுத்துக்களும் இருக்கவேண்டுமென்பது அவசியமாகிறது. எனவே, இவற்றில் எழுத வருவோர் முதலில் இவற்றுக்கேற்றமாதிரித் தம்மைத்தயார் செய்யவேண்டும். ஏறக்குறைய மேற்கின் வளர்ச்சி பெற்ற ஊடகமுறைக்கு நிகரான வெளிப்பாட்டையும் தரத்தையும் கொண்டதாக இருந்தாலே இவற்றின் வாசகர்களிடம் விசயங்கள் எடுபடும் என்ற நிலையில் இயங்க வேண்டும்.

தராகி என்ற டி. சிவராம் இந்தத் தன்மைகளைப்புரிந்து கொண்டு தன்னை ஊடகத்துறைக்குத் தயாரப்படுத்தினார். முதலில் அவர் ஆங்கில ஊடகங்களில்தான் எழுதினார். சிவராம் எழுத வந்த காலப்பகுதியில் இனப்போர் பெரும் சுவாலை விட்டு எரியத்தொடங்கியிருந்ததால் போர்பற்;றியும் அதன் அரசியல் பற்றியும் புதிய முறையிலான எழுத்துகள் வெளிவரத்தொடங்கியிருந்தன. முன்னெப்பொழுதையும்விட பத்தி எழுததுகளும் இராணுவ ஆய்வுகளும் அதிகமாக எழுதப்பட்டன. பத்திரிகைகளில் இராணுவ ஆய்வுக்கெனத்தனியான பகுதிகள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தளவுக்கு இந்த விசயங்கள் ஊடகத்தில் முக்கியம் பெற்றிருந்தன.

சிவராம் இதில் மற்றெல்லோரையும் விடவும் அதிகமான சாத்தியங்களோடு களத்தில் இறங்கினார். சிவராமுக்கு இருந்த ஆங்கில அறிவு, அவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஆயதப் பயிற்சி பெற்றிருந்தவர் என்பதனால் ஏற்பட்டிருந்த அந்த அனுபவம் மற்றும் அறிவியலில் உள்ள நம்பிக்கையும் ஆர்வமும், வரலாறு, இலக்கியம: புவியியல்; ஆகியவற்றில் இருந்த புரிதலும் அறிவும் என எல்லாம் கலந்தநிலையில் அவர் ஒரு புதிய வெளிப்பாட்டுக்காரனாகினார்.

இந்தக்கலவை அப்போது இலங்கைத்தீவில் ஊடகத்துறையில் இயங்கிய எவருக்கும் கிடைத்திராத ஒன்று. வெளிநாட்டுப்பிரதிநிதிகள் தராகின் எழுத்துகளை கூடிய கவனத்துக்குள்ளாக்கியிருந்தனர் என்று பின்னாளில் ராஜதந்திர வட்டாரங்களுடன் தொடர்புடைய ஊடகக்காரர் சிலர் சொனனார்கள். இனப்பிரச்சினையின் உள்முகத்தை அறியவும் தொடர்ந்து கொண்டிருந்த போரின் போக்கை அறியவும் அவர்கள் சிவராமின் எழுத்துக்களைப்பயன்படுத்தினார்கள்.

கொழும்பில் அப்போது சிவராமின் எழுத்துகளுக்கு பெருங்காத்திருப்பிருந்தது. அவருடன் போட்டியிலிருந்த ஏனைய ஊடகவியலாளரும்கூட அவர் அடுத்து என்ன சொல்லப்போகிறார், எதைப்பற்றியெல்லாம் எழுதப்போகிறார் என்ற ஆவலோடு காத்திருந்தனர். தமிழ் நிலப்பரப்புப்பற்றியும் போராளிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு அதைப்பற்றியெல்லாம் எழுதுவதற்குஅவரைத்தவிர அப்போது வேறெவரும் இருக்கவில்லை. இதனால் அவர் மற்றவர்களுக்கில்லாத வாய்ப்போடிருந்தார். இதைப்பின்னாளில் சிவராமே ஒத்துக்கொண்டிருக்கிறார்.

சிவராம் எழுதத்தொடங்கியபோது அந்த எழுத்தில் ஒரு புதிய அலை மேலெழும்புவது தெரிந்தது. அதற்குப் பிரதான காரணம்; நான் முன்னர் சொன்ன அவருக்கிருந்த தகுதிகள்தான்.

கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகக்காரர்களிலிருந்து விலகி, அவர்களுக்குத்தெரியாத பல புதிய விசயங்களை எழுதுவதன்மூலம் அந்த அலை உருவானது. அத்துடன் சில விசயங்களில் அவர் கொஞசம் கூடுதலாக சர்ச்சைக்குரிய விதமாகவும் கை வைத்தார். சிவராம் யார் என்று புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு பலபிராந்தியங்களிலும் சஞ்சரிக்கும் எழுத்து முறையைக்கையாண்டார். இதில் சிங்களவர்கள் கூடுதலாகத்தடுமாறினார்கள். இதைப்பற்றி பின்னாளில் அவர் வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார்.

தீவிரமாகவும் ஆழமாகவும் உயிர்ப்hன விசயங்களை அப்போது சிவராம் எழுதினார். குறிப்பாக ஈழவிடுதலைப்போராளிகள் பற்றி வெளியே தெரிய வராத பல சங்கதிகளை அவர் வெளிக்கொண்டு வந்தார். ஈழவிடுதலைப்போராளிகளின் ஆயதப்பயற்சி, அவர்களின் களவாழ்க்கை, பயணப்பாதைகள், கெரில்லா வாழ்க்கை, போருத்தி போன்ற பல விசயங்களை அவர் எழுதினார். அத்துடன் உலக விடுதலைப்போராட்டங்கள் பற்றியும் உலகின் மிக முக்கியமான போர் நடவடிக்ககைகளைப்பற்றியும் அறிந்து எழுதினார்.

மற்றவர்கள் தொடமுடியாத, மற்றவர்களுக்குத்தெரியாத பரப்பை சிவராம் திறந்ததன் மூலம் அவருக்கு கூடுதல் கவர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் ஈழவிடுதலைப் போராட்டத்தைப்பற்;றித் தெரிந்த ஒருவரை சிங்களத்தரப்பும் அப்போது அனுசரிக்கத்தொடங்கியது. காரணம் சிங்களத்தரப்புக்கு தனக்குத்தெரியாத ஒரு பரப்பை, தான் அறிய வேண்டிய பரப்பை எப்படியோ அறியக்கிடைக்கிறது என்ற எண்ணம்.

சிவராம் தனக்குத்தெரிந்த விசயங்களையெல்லாம் கொட்டி எழுதினார். அதன்மூலம் அவர் தன்னை ஸ்தாபித்தார்.

இது சிவராமுக்கு அப்போது வாய்ப்;பான ஒரு வெளியை உருவாக்கியது. அதேவேளை தமக்குச்சாதகமாக சிவராமைப்பயன்படுத்த சிங்ளத்தரப்பினர் முயன்றனர். ஆனால் சிவராம் அதற்குப்பலியாகவில்லை. அவர் தனக்குரிய, தான் இயங்கக்கூடிய வெளியை உருவாக்கிக்கொண்;டு தன்னுடைய தளத்தில் தொடர்ந்து இயங்கினார்.

சிவராம் தொடக்கத்திலிருந்தே ஈழவிடுதலைக்கான தளத்திலே செயற்பட்டவர். அந்தத்தளத்தை அவர் தொடர்ந்து பேணிவந்தாரே தவிர அதைவிட்டு விலகவில்லை. ஆனால் சிவராம் ஈழவிடுதலைத்தளத்தைவிட்டு விலகிவிட்டார் என்ற எதிர்பார்ப்பில் கொழும்பு அவரை அரவணைத்தது. சிவராம் இதனை தெளிவாக விளங்கியிருந்தார். விளங்கிக்கொண்டேதான் அவர் செயற்பட்டார்.

போர் மூலமோ முறையான தீர்வுத்திட்டத்தை முன்வைக்காமலோ தமிழ்மக்களின் பிரச்சினையைத்தீர்க்முடியாதென்று அவர் தொடர்ந்து எழுதிவந்தார். விடுதலைப்புலிகள் சிறிலங்கா ராணுவத்தால் வெற்றிகொள்ள முடியாத போரியல் முறையைக்கொண்டவர்கள் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தமிழ் மக்களையும் புலிகளையும் வேறுபடுத்திப்பார்க்க முடியாது என்று சொல்லிவந்த சிவராம், சிங்களவர்களால் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தரமுடியாதென்றும் சொன்னார். இது ஒரு கட்டத்தில் அவருக்கும் கொழும்புக்குமிடையலான தொழில்முறை உறவில் வெடிப்பை ஏற்படுத்தியது. சிவராமைப்பற்றி சிங்களத்தரப்பில் முகச்சுழிப்பும் விமர்சனமும் தோன்றியது. சிவராம் தன்னுடைய சுயருபத்தைக் காட்டிவிட்டார் என்று தீவிர சிங்கள ஏடுகள் அவரைச்சாடின. அவர் புலிகளின் ஆள் என்று நேரடியாக அவை குற்றம்சாட்டி அவரை முடக்கமுயற்சித்தன.அல்லது களத்திலிருந்து வெளியேற்ற முயன்றன.

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதிவந்த சிவராம், பின்னர் தமிழிலும் எழுதத்தொடங்கினார். தமிழ்த்தேசியம் பற்றியும் அது எதிர்கொண்டிருக்கிற சவால்கள் பற்றியும் அவர் விரிவான பார்வையை ஏற்படுத்தும் விதமாக எழுதினார். இக்காலப்பகுதியில் அவர் முழுதாக தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தைப்பலப்படுத்த வேண்டும், அதற்கான அகப்புறச்சூழ்நிலை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கத்தொடங்கினார். சர்வதேச அளவில் ஊடகத்துறை மூலம் பெற்றிருந்த அறிமுகத்தையும் தொடர்புகளையும் இதற்கு அவர் பயன்படுத்தினார். இதெல்லாம் கொழும்பு அரசியலுக்கு சீற்றத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவர் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த இடைநிலை ஊடகவியயலாளர்களும் புத்திஜீவிகளும் அவரைப்புரிந்து கொண்டிருந்தனர். அவருடைய நிலைப்பாட்டின் நியாயத்தன்மையையும் ஏற்றிருந்தனர்.

சிவராம் கொண்டிருந்த இன்னொரு முக்கியமான அம்;சம் அவர் அறிவுபூர்வமாக இயங்கியதன் காரணமாக அவருக்கு மேற்குலகிலும் அறிமுகமிருந்தது. அதனால் இலங்;கை நிலைவரம் தொடர்பாக அறிவதற்கான இன்னொரு வாசலாக அவர் மேற்குலகால் கொள்ளப்பட்டார். அதிலும் தமிழர் தரப்பின் நிலைப்பாடு தொடர்பாக மேற்கு நாடிபிடித்துப் பார்ப்பதற்குரிய ஆளாக இருந்தார். தனக்குக்கிடைத்த இந்தச்சந்தர்ப்பத்தையும் சிவராம் நன்றாகப் பயன்படுத்தினார்.

சிங்களவரின் சிந்தனை முறைமை என்பது சிங்களப் பௌத்தத்துடன் இணைந்த கூட்டுருவாக்கம் என்பதை அவர் வெளியுலகுக்கு தெளிவுபடுத்தினார். பிற்போக்குத்தனமும் அடிப்படைவாதப்பண்பும் திரண்டிருக்கும் சிங்கள ஆட்சியதிகாரம் ஒருபோதும் நியாயமான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாதென்று அவர் ஆதாரபூர்வமாக சொன்னார்.

இதெல்லாம் சிங்களத்தரப்பில் சிவராம் தொடர்பாக ஒரு எதிர்மறைத்தோற்றத்தை உருவாக்கியது. அவர் சிங்களத்தரப்பில் கூடுதலான விமர்சனத்துக்கு உள்ளானார். தொடக்கத்தில் அரவணைக்க முயன்ற சிங்களத்தரப்பினர் பின்னர் அவரை தூரவிரட்டிவிடவும் முடக்கிவிடவும் முனைந்தமையென்பது சிவராமே சொன்னது போல, சிங்களப்பௌத்தவாதத்தின் இயல்பே. இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அவர்கள் தமக்குச்சாதகமாக அவரைப் பயன்படுத்த விளைந்தனர். அது சாத்தியமில்லாது போகவே அவரை அவர்கள் அப்படி நிந்தித்தார்கள். அவருக்கான ஆபத்து வளையத்தையும் உருவாக்கினார்கள்.

சிஙகளவர்களிடத்தில் எத்தகைய புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாதென்று அவர் பல தடவை கூறியிருக்கிறார். பதிலாக தமிழர்கள் தமக்கான அரசியற்பலத்தை நிர்ணயம் செய்வதிலும் அதை வெற்றிகரமாக முன்னகர்த்துவதிலுமே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் என்றும் அதுவே இலங்கைத்தீவில் சமாதானத்துக்கான வழி என்றும் சொன்னார்.


இந்தக்கட்டத்தில் அவர் அதிக விமர்சனங்களுக்குள்ளானார். யுத்தம் நடக்கும்போது யுத்தத்திற்குள்ளே நிரம்பியுள்ள ரகசியச்சேதிகளுக்கிருக்கும் கவர்ச்சியும் செல்வாக்கும் அரசியல் விமரிசனங்களுக்கிருப்பதில்லை. அரசியல் விமர்சனங்கள் எப்போதும் கறுப்பு வெள்ளைத்தன்மைக்கு நெருங்கியவையாக இருப்பதால் சிவராம் இதில் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானார். தொடக்கத்தில் இராணுவ ஆய்வாளராக அறியப்பட்ட சிவராம் பின்னர் அரசியல் விமர்சகராகவே உணரப்பட்டார். பின்னாளில் அவர் அரசியல் விமர்சனத்துக்கும் அரசியல் அறிவுக்குமே அதிக இடமளித்துச் செயற்பட்டார். அதனால்தான் அவர் அவ்வாறு விமர்சிக்கப்பட்டார். இதில் தமிழர்கள் சிவராமோடு இன்னும் மிக நெருக்கமாகினார்கள். சிங்களவர்களோ அவரை எதிரி நிலையாளர் என உணரத்தொடங்கினார்கள்.


அதாவது தமிழர்களைத் தன் பங்குக்குப் பலப்படுத்தும் முயற்சியிலும் சிஙகள் மேலாதிக்;க அரசிலை உச்சமாக விமர்சிக்கும் வகையிலும் அவர் ஈடுபட்டார். குறிப்பாக நோர்வேயன் பங்கேற்புடனான சமாதான முயற்சிகளில் சிவராம் அதாடக்கத்திலிருந்தே அதிக ஈடுபாடற்றவராக இருந்தார். நோர்வே ஏற்கனவே பங்கேற்ற அமைதிப்பேச்சு முயற்சிகள் பாதிக்கப்பட்ட மக்ககுள்ளான நிரந்தர ஆறதலைத்தரவில்லை என்ற கருதது அவரிடம் இருந்தது. நோர்வே மிக நல்ல முன்னுதாரணங்களைக் கொண்டிருக்வில்லை என்ற வாதத்தையும் அவர் முன்வைத்திருந்தார். இதன்போதும் சிவராம் சற்று விமர்சனங்களுக்காளானார். ஆனால் இவைபற்றியெல்லாம் அவர் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. தனக்குப்படுகின்ற விசயங்களை ஆய்வுபூர்வமாக மற்றவர்களுடன் பகிர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவருக்கிருந்தது. அதிலும் தமிழ்ச்சமூகம் தன் விடுதலைக்காக எல்லாத்தளங்களிலம் பலம் பெற வேண்டும் என்ற விருப்பமே அவரிடம் மேலோங்கியிருந்தது எனலாம். அதற்காக தான் உழைக்கவேண்டும் என்றும் அத தன்னுடைய பொறுப்புவாய்ந்த கடமையென்றும் அவர் நினைத்திருந்தார்.


சிவராமிடம் இருந்த இன்னுமொரு சிறப்பம்சம், அவர் சகலரையும் சமமாக மதிக்கும் பண்புடையவர் என்பது.புதிய ஊடகவியலாளர்களையும் அவர் தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் சேர்த்திருந்தார். சிங்கள ஊடகவியலாளர்கள் தொடக்கம் சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள்வரையில் அவருக்கு நெருங்கிய அறிமுகமும் தொடர்பும் இருந்தன. அதேவேளை தெருவிலே சாதாரணமாக நடந்துபோகிற மனிதர்களிடமும் அவருக்கு நெருக்கமும் உறவும் இருந்தன. விவசாயிpகள்.கூலித்தொழிலாளிகள், மீனவர்கள்,ட்றைவர்மார் என சமூகத்தின் சகல தரப்பினரிடமும் அவர் தனடனுடைய உறவைப்பலமாக்கி அந்த மனிதர்களின் உணர்வலைகளைப்புரிந்து கொண்டிருந்தார். சமூகத்தின் நாடியோட்டம் என்ன எனபதில் அவருக்குகுத் தௌவான பார்வையும் படிமமும் ஏற்படுவதற்கு இவை பெருங்காரணமாக இருந்தன. அதனால் சிவராமின் எழுத்துகள் எப்பொழும் யதாரத்தமாக அமைந்தன. இந்த யதார்த்தப்பார்வை அவருக்கப்பலதடவை கைகொடுத்திருக்கிறது.

மட்க்களப்பு என்ற பிரதேச வாதத்தை கருணா தனக்குச்சாதகமாக தூக்கியபோது சிவராம் அதற்கெதிராக வெளப்படையாக நின்று அதை தவறென்று எதிர்த்தார். அரசியல் ரீதியாகவும் பிரதேசவாதம் என்பது பெரும் பலவீனத்தைத் தரும். அத்துடன் தமிழ் மக்களின் வரலாறு. பண்பாடு, உறவுநிலை என்;பவற்றிலும் பெரும் சிக்கல்களையும் தேவையற்ற பிரச்சினைகளையும் அது உருவாக்கும் என்று அவர் தீர்க்கமாகச் சொன்னார்.

சரியாகச்சொன்னால் அவர் தெளிவான பார்வையைக கொண்டிருந்ததுடன் பிழையான போக்குக்கெகதிராக தன்னை அர்ப்பணிதது அபாயமான சூழலிpலும் செயற்பட்டார். அவர் தன்னைக்கருதியதைப்போல தான் ஒரு போராளிக்கரிய பாத்திரத்தை நிரப்பவேண்டும் என நினைத்திருந்ததைப்போலவே அவருடைய பாத்திரம் அமைந்த விட்டது.

சோ.ப.வின் நினைவுச்சுவடுகள் கேள்விகளும் சவால்களும்


கவிதை பற்றிய மேலும் பல கேள்விகளை எழுப்புகின்ற விதமாக சோ.ப. வின் 'நினைவுச்சுவடுகள்' என்ற புத்தகம் வந்திருக்கிறது. கடந்த வாழ்வின் உயிர் நிரம்பிய அழியாச்சித்திரங்களையும் இழப்பின் கனதியையும் இந்தப்புத்தகம் தருகிறது. புத்தகத்தில் இரண்டு விசயங்கள் முக்கியமானவை. ஒன்று சிவசேகரத்தின் முன்னுரையும் சோ.ப.வின் என்னுரையும். இரண்டாவது சோ.ப.வின் நினைவுச் சுவடுகள் அல்;லது படைப்புகள்.

முதலில் சிவசேகரம் நவீன கவிதைப்பின்புலத்தைப்பற்றிச் சொல்வதை கவனிக்கலாம். இப்போது கவிதை என்ற பெயரில் அதிகமாக எழுதப்பட்டு வருகின்றவற்றால் புதிய கவிதைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைப்பற்றியும் அவை எதிர்கொள்கிற சவால்களைப்பற்றியும் சிவசேகரம் தெளிவாகச் சொல்கிறார்.

மரபுக்கவிதை என்ற பழைய கவிதைக்கு மாற்றாக புதுக்கவிதை வந்ததா அல்லது புதுமையாக எதையாவது செய்யவேண்டுமென்ற வேறுபட்ட தன்மையின் வெளிப்பாடாக கிளம்பிப்பின்னர் ஒரு வகையான பண்டிதத்தனங்களுக்குள்ளும் வரட்சிக்குள்ளும் அது சிக்குண்டிருக்கிறதா என்ற கேள்விகளை எழுப்புகிறார் சிவசேகரம்.

மரபு சார்ந்த கவிதையின் குறைபாட்டையும் போதாமைகளையும் நிவர்த்திப்பதற்காக உருவாகியது மாற்றுக்கவிதை. அப்படி உருவாகிய புதிய கவிதை எப்படி மீண்டும் அந்த மாறுதலுக்கெதிரான பண்டிதத்தனங்களுக்குள் சிக்குப்பட்டிருக்;க முடியும் என்பதும் அது எவ்வாறு எதிர்நிலைக்குத்திரும்பியிருக்;கலாம் என்பதும் சிவசேகரத்தின் கேள்விகள்.


புதிய கவிதை என்பது அடுத்த கட்டத்தின் வளர்ச்சி என்பதும் ஜனநாயகமயப்பட்டது என்பதும் சிவசேகரத்தின் வாதமாகிறது. அதனால்தான் அதற்கு அதிக மதிப்பென்றும் அவர் சொல்கிறார்.
தமிழ்க்கவிதை அதன் வேரிலிருந்து வளர்ச்சியடைந்து நவீனப்பட்டிருக்குமானால் பேச்சோசையைத்தவிர்க்க வேண்டும் என்பதில் பிடிவாதத்தையோ கடுமையான மறுப்பையோ கொண்டிராது என்பதும் சிவசேகரத்தின் நிலைப்பாடு. இதுமாதிரியான கருத்துகளை முன்வைத்துப்பலரும் முன்னரும் விவாதித்திருந்தாலும்; இன்னும் அது கவனத்திற்குரியதாகவே இருக்கிறது.


குறிப்பாக இன்றைய உலக மயமாதலின் நெருக்கடிப் பின்னணியில் அடையாளங்கள் முக்கிய கரிசனைக்குரியனவாகின்றன. அப்படிப்பார்க்கும்போது தமிழ்க்கவிதை தன் வேரிலிருந்து தன்னுடைய அடையாளத்துடன் நவீனப்பட்டிருக்க வேண்டும் என்றொரு நியாயமுண்டு. அந்த அடையாளம் தேவைக்கேற்றவகையில் பொருளிலும் வெளிப்பாட்டிலும் கலந்தும் விடுபட்டும் இருக்கும். ஒரு தருக்கபூர்வமான வளர்ச்சி நிலையில் அடைகின்ற புதுமையில் இது நிச்சயம் நடந்தே தீரும்.

இவ்வாறு இயல்பாக ஏற்படுகின்ற வளர்ச்சியில் அடையாளமும் அடையாளக்கூறுகளும் செறிவடைந்திருக்கும். தமிழ்க்கவிதை என்பது ஒரு அடையாளம். அதில் தமிழ்த்தனமும் தமிழின் தொடர்ச்சியும் வரவேண்டுமே எனக்கருதுவதில் தவறிருக்;கமுடியாது.

இந்தத்தமிழ்த்தனம் என்பதும் தமிழ்த்தொடர்ச்சி என்;பதும் ஊடாட்டங்களுக்கப்பாலான வரண்டு தனித்த தனமென்று அர்த்தமில்லை. தன் வேரிலிருந்து கிளைக்கின்ற அதேவேளை பிற மூலங்களின் அசைவுகளிலிருந்தும் அவற்றின் கூறுகளிலிருந்தும் தனக்குரியதை எடுத்து தன்னை வளப்படுத்தலாம். அப்படி வளப்படுத்துவது அவசியமும் கூட. அதுதான் பன்முகச்செறிவுடைய நவீன வளர்ச்சிக்குரியதாகும்.

இங்கே சிவசேகரம் அடுத்துக்குறிப்பிடுவது அல்லது வலியுறுத்துவது பேச்சோசையை கடுமையான தீர்மானத்துடன் புதிய கவிதை புறக்கணிப்பதைப்பற்றியது.
பேச்சோசையைத் தீர்மானகரமாகப் புறக்கணிக்கும்போது கவிதையின் இயல்பில் வரட்சி ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு. தவிரவும் பேச்சோசையோடு கவிதை மேற்கிளம்பி வருகையில் அந்தக்கவிதை பிறக்கிற சூழல், காலம், தரப்பினர்-மனிதர்கள், அவர்களின் மனவுலகு, உறவு எனப்பலவும் இயல்பாக இணைந்து புலப்பாடடைகின்றன.

இதில் முக்கியமாக கவிதை இயல்படைகின்றது எனலாம். அதற்காக வலிந்து பேச்சோசையையோ சந்தத்தையோ பிரயோகிக்க முனைகையில் கவிதை பலவீனமடைந்து விடுகின்றது. இங்கே கவிதைக்கு எதையும் 'பிரயோகித்தல் ' என்ற வகையில் கையாண்டால் அது கவிதையை வீழ்ச்சியிலேயே கொண்டுபோய்விடும். படிமப்பிரயோகமானாலும்சரி பேச்சோசையோ சந்தமோ கருத்து நிலையோ எதுவானாலும் சரி வலிந்த பிரயோகம் என்ற நிலையில் அவற்றைத்திட்டமிட்டால் அது கவிதையின் சரிவுக்கே கொண்டுசெல்லும்.

இதற்கு நல்ல உதாரணம், பிரமிள். பிரமிளின் பிந்தைய கவிதைகள் சிலவற்றில் அவர் வலிந்து பிரயோகித்த படிமங்களும் கருத்துகளும் பலவீனமானவையாகவே இருந்துள்ளன. குறிப்பாக அவருடைய அதிரடிக்கவிதைகள்.

பிரமிள் தொடக்க காலத்தில் எழுதிய கவிதைகளையும் விட அவர் கவிதையில் முதிர்ச்சியை எட்டியபின்னர் எழுதப்பட்ட இந்தக்கவிதைகளில் அவர் தோற்றிருந்தார்.

பேச்சோசைக்கும் சந்தத்;துக்கும் அதிக இடமளிக்கும்போது அபூர்வமாக சில வெற்றிகள் அதில் ஏற்பட்டாலும் அது ஆகக்கூடுதலான முயற்சியும் நுட்பத்திறனும் கையாளப்பட்டதால் ஏற்பட்;;ட அசாத்தியமான விளைவாகவே உருவாகி இருக்கும்.

பேச்சோசை தமிழ்க்கவிதையில் விசேசமான அடையாளங்;களை பிராந்திய ரீதியாகவும் சமூகரீதியாகவும் காட்டுகிறது. குறித்துச்சொல்வதானால் இதன்மூலம் திணைகளை உணரலாம். அதேவேளை அது கவிதைக்கு அதிக யதார்த்தத்தன்மையை அளிக்கிறது. அத்துடன் அந்தக்காலத்தோடும் அந்தக்களத்தோடும் அந்த மனிதர்களோடும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

இதேவேளை பேச்சோசையை முறையாகப்பயன்படுத்தத்தவறும்போது எதிர்மறை அம்சங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் கவனிக்க வேண்டும். அதற்குத் தமிழில் நிறைய உதாரணங்களுண்டு. சான்றாக வழவழாச்சீரழிவுகள் எரிச்சலூட்டும்படி ;ஆயிரமாயிரமாக இருக்கின்றன.

ஆனால் பேச்சோசையை சரியான நுட்பத்துடன் கையாளும்போது முன்னரே சொன்னதுபோல கவிதை நிகழ்களத்தையும் காலத்தையும் மனிதர்களையும் அவற்றின் உயிர்ப்போடு உணர வைக்கிறது எனலாம்.

இதற்கு நாம் நல்ல அடையாளமாக மு.சுயம்புலிங்கத்தின் படைப்புகளை காணலாம். சுயம்புலிங்கம் தன்னுடைய கவிதைகளிலும் கதைகளிலும் பயன்படுத்தும் மொழியினூடாக தன்னுடைய பரப்பை நிஜமாக்குகிறார். இந்தமாதிரி வட்டார மொழிகளில் பலர் தங்களின் பரப்பை திறம்பட நிஜமாக்கியுள்ளனர்.

பேச்சோசையின் இன்னொரு சிறப்பம்சம் புழங்கு மொழியை கையாள வேண்டியதும் கையாளக்கூடியதுமான அவசியமும் நிலையுமாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் புழங்கு மொழி வேறுபட்டுக்கொண்டேயிருக்கிறது. தலைமுறைகள் மாறும்போதும் சமூக ஊடாட்;;;டங்கள் நிகழும்போதும் இந்த மாற்றம் நிகழ்கிறது. அது அப்படி நிகழ்ந்தே தீரும்.

மக்கள் பேசும்மொழியென்பது புழங்குமொழியே. பேசுமொழியில் மக்களின் வாழ்நிலையும் வாழ்முறையும் புலனாகிறது. கவிஞர் இதனைக் கையாளும்போது இதன்வழியாக இயல்பாகவே கவிதை எளிமையை அடைகிறது. அத்துடன் பேச்சோசையுடன் வரும் கவிதையில் சாதாரண மக்களின் மொழிக்கும் வாழ்வுக்கும் அதிக இடம் கிடைக்கிறது. சாதாரண மனிதர்களும் கவிதையில் இடம்பெறுகின்றனர். கவிதை இயல்பாகவே ஜனநாயகப்படுத்தலுக்கும் உள்ளாகிறது. கவிதைப்பண்பும் மாற்றமடைகிறது.

இங்கே இவ்வாறு கூறுவதன் நோக்கம் பேச்சோசையை முதன்மைப்படுத்துவதற்கல்ல. பதிலாக பேச்சோசை கவிதையில் இணையும்போது நிகழ்கின்ற சாத்தியங்கள், விளைவுகள் குறித்த அவதானங்களுக்காகவே. சோ.ப. முன்னிறுத்துகிற மனிதர்களின் வழியான உலகத்தையும் அவர்களின் பேச்சு, வாழ்முறை மற்றும் உறவு நிலை என்பவற்றுக்கூடாகவும் கவிதையை - இந்தப்புத்தகத்தை அணுகிச்செல்கிறார் சிவசேகரம். சோ. ப இங்கே காட்டுகின்ற உலகம் வெகு சுவாரஷ்யமானதே.

அடுத்து, தன்னுடைய நினைவுச்சுவடுகளை, வாசகரின் தீர்மானங்களை நோக்கி விடுகிறார் சோ.ப. இதை அவர் தன்னுடைய இந்த நூலுக்கான முன்னுரையிலேயே சொல்கிறார். இதில் உள்ளவை கவிதைகளா அல்லது கதை கூறலின் இன்னொரு முறைமையா அல்லது வேறு ஏதாவது ஒரு வடிவமா என வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளட்;டும் என்றும் அதில் அவர் குறிப்பிடுகின்றார்.

" பேச்சு வழக்குத்தழுவிய எளிமையான சித்திரங்கள்" , "நினைவுச்சுவடுகளை எங்ஙனம் வகைப்படுத்துவரோ அறியேன் ", "இவை கவிதைகளே அல்ல என்று சிலர் அடித்துச்சொல்லக்கூடும். வாசகன் என் அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டாற்போதும்; என்ன பேரிட்டு அழைக்கிறான் என்பது பொருட்டல்ல. பெயரில் என்ன இருக்கிறது " , "இக்கவிதைகளை ஆக்குவதில் நான் கதை சொல்லியாக மாறி விட்டேனா என்றெல்லாம "; அவர் தெரிவிப்பதை புரிந்து கொண்டு அப்பாலே செல்லலாம்.
அதாவது இவற்றைத்தொகுத்துப்பார்க்கும்போது இந்த நினைவுச்சுவடுகள் பொறுத்து நாம் இலகுவில் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். பரிசோதனை முயற்சி என்றோ இவை கவிதைதான் என்றோ அவர் வாதிடவும் இல்லை.அவரே சொல்வதுபோல இவை ஒரு கதை சொல்லியின் வகையினதாக அமைந்துள்ளன.

உரை நடையில் புனைகதைக்கு கிட்;;;;டியதான பத்தி எழுத்துகள் மற்றும் பத்திக்கும் புனைகதைக்கும் இடையிலான வகை எழுத்துகள் தமிழில் கடந்த பத்ளதாண்டுகளில் அதிகம் எழுதப்பட்டுள்ளன. வாசகர்களிடம் இந்த வகை எழுத்துகளுக்கே இப்போது அதிகம் வரவேற்பிருக்கிறது. இனந்நதவகையில் அ.முத்துலிங்கம், ஜெயமோகன், எஸ். ராமகிருஸ்ணன், கி.ராஜநாராயணன். சோலைக்கிளி, இரவி அருணாசலம்;, கருணாகரமூர்த்தி எனப்பலரை இங்கே குறிப்பிடலாம்.

சோ.ப சொல்வதைப் போல கவிதையோ இல்லையோ என்பதற்கப்பால் இவை அவருடைய நினைவுச்சுவடுகள். அவர் வாழ்ந்த காலத்தின் பதிவுகள். அவ்வாறு பதிவுகொள்வதின்மூலம் இவை அக்காலத்தின் நினைவுச்சுவடுகளாகவும் ஆகிவிடுகின்றன.

முதல் அர்த்தத்தில் இவற்றை சோ.ப. என்ற ஒரு மனிதரின் நினைவுகள் என்று எடுத்துக்கொள்ளலாம். கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியையொட்டி யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கைச் சுவடுகளிவை. அதுவும் படித்து பிறகு உத்தியோகம் பார்ப்பதற்காக வௌ;வேறிடங்கள்வரை பயணம்செய்யும் வாழ்வைக் கொண்ட மத்தியதர வர்க்க மனிதரின் தடங்களிவை எனலாம்.

இந்த நினைவுச்சுவடுகள் மிகச் சுவாரஷ்யமானவை. எளிமையான வாசிப்பிலேயே சோ.ப. காட்டுகிற ஒரு காலகட்டத்;தையும் அதன் மனிதர்களையும் நாம் காணமுடிகிறது. இதில் சோ.ப. அடைகிற முதல் வெற்;;றி ஒவ்வொரு சுவட்டிலும் அவர் வாசகமனதில் எழுப்புகிற காட்;சிகளாகும். அப்படி ஒவ்வொரு சுவடுகளும் காட்சிகளை அலாதியாக எழுப்புகின்றன.

மனிதர்களையும் அவர்கள் வாழுகின்ற காலச்சூழல். சமூகச்சூழல்களையும் அவர்கள் வாழும் முறை, பேசும் முறை என்பவற்றையும் காட்;சியாக்கி விடுகிறார் சோ.ப. இதற்காக அவர் திட்டமிட்டுச் செயற்பட்டதாக உணர முடியவில்லை. அவருக்கு இயல்பாக அத்தகைய தன்மை வந்திருப்பதாகவே தோன்றுகிறது. காலம் மற்றும் சூழல் சித்திரிப்பிலும் அவர் அதிகமாக கவனம் செலுத்தியதாகவும் இல்லை. வேண்டுமானால் அவர் தன்னுடைய மனிதர்களைத்தான் அழுத்தமாக அறிமுகப்படுத்துகிறார் என்று சொல்லலாம்.

பெரியம்மா, ஐயன்னா கானா. அருள் அண்ணா, மாமா, பெரியப்பு, சின்னமாமா, அம்மா என ஒரு பெரிய உறவுவட்டம். இதுதான் சோ.ப.வின் நினைவுச்சுவடுகளில் பதிந்துள்ள நினைவுவட்டம். இந்த வட்டத்திலுள்ள மனிதர்களை அறிமுகப்படுத்துவதனூடாக அவர் ஒரு காலகட்டத்தையும் ஒரு சமூகத்தையும் நமக்குக் காண்பிக்கிறார். அது கழிந்த காலம். ஆனால் மனதில் இன்னும் உயிர்ப்போடுள்ள காலம்.

அதிகம் இயந்திரமயமாகியிராத அந்தக்காலத்தின் அமைதியும் அழகும் இயல்பும் உறவுகளின் நெருக்கமும் அன்பும் இவற்றுக்குள்ளிருக்கிற முரண்களும் வெளியும் இறுக்கமும் எனப்பல விசயங்களைச் சோ.ப எளிமையாகச்சொல்கிறார்.

அதிகமும் சோ.ப வின் சொந்த வாழ்வின் நினைவுமீட்டலாகத்தெரியும் இந்தச் சுவடுகளில் யாழ்ப்பாணச்சமூகத்தின் சராசரிக்குடும்பமொன்றின் ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுக்காலத்து அகத்தையும் முகத்தையும் காணலாம். அத்துடன் கல்வியறிவுக்கு முதன்மையளிக்கத்தொடங்கும் சராசரி விவசாயக்குடும்பத்தின் உள்முகத்தை இதில் காணமுடியும்.

ஒரு பக்கம் தன்னுடைய நெருங்கிய உறவுகளைச்சொல்லி அவர்களை அறிமுகப்படுத்தும் சோ.ப அவர்களையும் அந்தக்காலத்தையும் அதிகம் விமர்சனத்துக்குள்ளாக்கவில்லை. சோ.ப வின் மனச்சேகரிப்ப்pல் நல்ல பதிவுகள் மட்டுமே மிஞ்சியிருப்பதால் அவர் இவற்றை எழுதும்போதும் அவையே மீட்கப்பட்டுள்ளனவோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் அவருடைய அம்மா சொல்வதைப்போல "அவை செய்யிறது அவைஅவையோடை " என்பதற்கமைய சோ.ப வும் கசப்புகளையும் கரும்புள்ளிகளையும் அவற்றுக்குpயவர்களுடன் விட்டுவிட்டாரா. அல்லது பிற காரணங்கள் ஏதேனுமுண்டா அவற்றை அவர் திட்டமிட்டுத்தவிர்ப்பதற்கு என்று தெரியவில்லை. ஆனால் படைப்பில் மறுபக்கம் இல்லாதிருப்பது யதார்த்தமின்மையையும் நம்பகத்தன்மையையும் சிதறடிக்கும்படியாகவே காணப்படுகின்றன.

இதில் முதல் வட்டம் உறவினர்கள் என்றால் இரண்டாவது வட்டத்தில் வரும் அவருடைய மனிதர்கள் அதேகாலத்தின் ஏனைய யாழ்ப்பாணத்தவரும் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலைச் சூழலும் அங்குள்ள மனிதரும்.

சோ.ப வின் இந்த நினைவுச்சுவடுகளை அவர் எந்த வடிவத்தினூடாக எழுதியுள்ளார் என்பதல்லப்பிரச்சினை. இங்கே வடிவம் சார்ந்த பிரச்சினையை நாம் அதிகம் முதன்மைப்படுத்த வேண்டியது அவசியமில்லை. இவை கவிதைகளா இல்லையா எனபதைத்தீர்மானிக்கவேண்டியது வாசகர்களே என்று அவர் ஏற்கனவே சொல்லி விலகிவிட்டாரல்லவா. எனவே அது குறித்து இங்கே நாம் விவாதிப்பதை விடவும் இப்படைப்பின் பிற அம்சங்கள் பற்றிக்கவனிப்பது பொருத்தமாகும்.


சோ.ப. கவிதைக்குக் கிட்டவான ஒரு வகை வடிவத்தில் பேச்சுமொழியிpல் சுவாரஷ்யம் ததும்ப தன்னுடைய மனிதர்களை அறிமுகமாக்கி ஒரு உலகத்தைக்காட்டுகிறார். அவர்களின் கதைகளைச்; சொல்கிறார். இதில் முக்கியமானது சோ.ப அறிமுகமாக்கும் மனிதர்கள்.

ஒரு காலத்தில் சிரித்திரன்சுந்தர் அறிமுகப்படுத்திய மனிதர்கள், கே.டானியலின் மனிதர்கள், எஸ் பொவின் மனிதர்கள், வ.அ.இராசரத்தினத்தின் மனிதர்கள் என்று நாம் ஏற்கனவே அறிந்த மனிதர்களைப்போல சோ.ப. வின் மனிதர்களு;ம வருகிறார்கள்.

இதில் இரவி அருணாசலத்தின் காலம் ஆகிவந்த கதையின் மனிதர்களுக்கும் சோ.ப வின் நினைவுச்சுவடுகள் மனிதர்களுக்குமிடையில் அதிக இணைவுண்டு. இருவரும் வௌ;வேறு வடிவங்களில் தங்களின் வெளிப்பாட்டு முறைகளையும் வௌ;வேறு காலகட்டத்தையும் பொருளையும் கொண்டிருந்தாலும் அடிப்படையில் ஒன்றிணைகிறார்கள்.

தவிர, சோ.ப ஒரு வரலாற்றாசிரியராகவும் இயங்குகிறார். வரலாற்று விசயங்களைத் தேடிச்செல்லும் முனைப்பு அவரிடம் அதிகம் இல்லையென்றாலும் கடந்த தலைமுறைகளின் வாழ்க்கைச் சுவடுகளை பதிவதினூடாக அவர் சமூகவியலிலும் வரலாற்றிலும் தன்னுடைய பங்களிப்பைச் செய்கிறார். குறிப்பாக இந்தச்சுவடுகளை சமூகவியல் உளவியல் கண்ணோட்டங்களில் கூடுதலாக அணுகமுடியும். அவ்வாறு அணுகுவதற்கான வாசல்களை இவைதிறந்தும் கொள்கின்றன. இவ்வாறான எழுத்து முறையில் இதற்கான சாத்தியமும் அதிகமாக இருப்பதுண்டு.

பேச்சு மொழியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இ;ந்தப்படைப்புகள் மு.தளையசிங்கம் சொல்வதைப்போல மெய்யுள் சார்ந்த வடிவத்தை உருவாக்கு கின்றனவோ என்றும் எண்ணத்தோன்றுகின்றன.

இன்றைய நவீன கவிதை அசாத்தியமான பல தளங்களில் பல ரூபங்களில் நகர்ந்து செல்கிறது. அது மொழியின் அசாத்தியமான நுட்பங்களையும் சிந்தனையின் புதிய வெளிகளையும் அடுக்குகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே சோ.ப கையாள்கிற மொழி மற்றும் சொல்முறை என்பன சாதாரணமானவை. எளிமையானவை. ஏறக்குறைய மரபசார்ந்தவை. ஆனால் அவர் இவற்றுக்கப்பால் கடந்த காலத்தின் மனிதர்களையும் அந்தக்களத்தையும் அந்த காலத்தையும் உறைய விடாமல் நகர்த்துகிறார் என்பதே முக்கியமானது. இந்தத்தொகுப்பின் ஆதார சுருதி அதுதான்.

இன்றைக்கு பொருட்பாடற்றவையெல்லாம் அல்லது சாதாரணமானவை என்றாகி விட்டவையெல்லாம் முன்பு ஒரு காலத்தில் மிகப்பிரமாண்டமானவையாகவும் வியப்புக்குரியவையாகவும் இருந்திருக்கின்றன. அப்போது ஒரு மாட்டு வண்டில் பயணம் என்பதே எத்தனை முக்கியமானவையாக இருந்தது. ஒரு சைக்கிள் ஊருக்குள் பெரும் அதிசயப்பொருளாக இருந்தது. பெற்றோமக்ஸை பற்ற வைப்பதே பெரும் சாதனையாகக் கொள்ளப்பட்டது. இந்தமாதிரி இருந்தவை இன்று பொருளற்றவையாக இருக்கலாம். ஆனால் அன்று இதையெல்லாம் கடக்கவேண்டியிருந்தது. தவிரவும் இன்றைய அதிசயங்களெதுவும்கூட நாளை இது மாதிரி மிகச்சாதாரணமாகிவிடும் என்றும் உணர்த்துகிறார் சோ.ப.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது ஒருகாலத்தில் மனித குலத்தின் மாபெரும் மகத்தான சாதனையாகும். ஆனால் அது இன்றைக்கு ஒற்றைவரித்தகவலாகிவிட்டது.

அன்று யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஒரு முக்கியமான பொருள். அது ஒரு வகையில் லக்ஸ்ஸறிப்பொருளாகவும் இருந்தது. அந்தச் சைக்கிளை ஓட்டப்பழகுவதும் பெரும் சாதனைக்கு நிகராகவே பார்க்கப்பட்டது. அதைப்பழகுவற்கென்றே அரிய பெரு முயற்சிகள். அதுவொரு பெரும் வேலைபோல இருந்தது. இன்னும் இதைதச்சொன்னால், சைக்கிளோட்டுவது ஒரு கலையாகவே அப்போதிருந்தது. அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் நினைவுப்பரப்பில் இதெல்லாம் என்றைக்கும் அழியாப்பரப்புகளே. சோ.ப. இப்படிப்பலதை அள்ளிப்போட்டிருக்கிறார், தன்னுடைய நினைவுச்சுவடுகளில்.

இந்த வகையில் இந்த நினைவுச்சுவடுகளுக்கு அதிக பெறுமானமுண்டு. சோ.ப இந்தச்சுவடுகளின் ஊடாக பல நுட்பங்களைக் காட்டுகிறார். முதலாவது அவர் எழுப்புகின்ற காட்சிப் படிமங்கள். அந்தக்காட்சிப்படிமங்களை அவர் உயிர்ப்புடன் எழுப்புவதில் பெரும் வெற்றியைப்பெறுகிறார். கடந்த காலத்தை- இறந்த காலத்தை உயிருடன் வாசகருள் இயங்கவைப்பதன் மூலமாக இந்தச்சாதனையை அவர் நிகழ்த்துகிறார்.

காட்சி ஊடகமொன்றில் இதனைச்சாதிப்பது இலகுவானது. அதில் இதற்குச்சாத்தியங்களும் அதிகமுண்டு. ஆனால் இதை மொழியை மட்டுமே கொண்டு சாதிப்பது என்பதுதான் படைப்பாளியின் ஆளுமை எதிர்கொள்கிற சவால். சோ.ப வின் மனிதர்களுடைய பேசும்மொழியும் முறைமையும் கூட ஒலிப்படிமமாக நமக்குக் கிடைக்கின்றன.



உதாரணமாக



'சின்னப்பெட்டையா இருக்கேக்கையும்

இப்படித்தானடா நான்

இரவு

எல்லாரும் சாப்பிட்டுட்டுப் படுத்திடுவினம்

நான் சாப்பிட்டுக் கொண்டிருப்பன்

அப்பு திண்ணையில இருப்பார்

சுருட்டுக் குடித்தபடி



நீ ஆறுதலாயச் சாப்பிடு பிள்ளை

நானிருக்கிறன். '



இது உணர்த்துகிற தனிமைக்கெதிரான உளவியற் பலம், அன்பின்; ஆதரவு என்பன ஒரு பக்கமிருக்க மறுபுறத்தில் இதில் ஒருவகையான நாடகீயத்தன்மை, அதில் காட்சியும் ஒலியும் மேNலுழும்புவதைக் காணலாம்.



ஒரு சிறுமி, தனித்திருந்தபடி மங்கிய விளக்கொளியில் ஆறுதலாக மிக அமைதியாக தனித்துச் சாப்பிடுகிறாள.; அந்தச் சின்னப்பிள்ளை மீது தந்தைக்கிருக்கும் அன்பும் அக்கறையும் புரிந்துணர்வும் இயல்போடு நுட்பமாகக்;கவனப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர் மீதான, பெண்பிள்ளைகள் மீதான கரிசனை மிக்க வாழ்வும் உறவும் அந்நாட்களில் எப்படி இருந்துள்ளன என்பதை ஆதாரப்படுத்துகிறார் சோ.ப. இப்படிப்பல நல்ல கணங்களை அவர் கவனப்படுத்தியுள்ளார்.



அன்றைய மனிதரிடத்தில் பேதைமையும் அப்பாவித்தனமும் எதற்கும் சலியாமையும் பொதுக்குணமாக இருந்ததையும் அவர் காட்டுகிறார். இவை யெல்லாவற்றிலும் ஒரு மெல்லிய துயரமும் அங்கதமும் கலந்து இழையோடுவதையும் வாசகர் காணமுடியும்.



சோ.ப ஏற்கனவே 'வடக்கிருத்தல்' என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். ஆபிரிக்கக்கவிதைகள், தென்னிலங்கைக்கவிதைகள் என இரண்டு மொழிபெயர்ப்புத்தொகுதிகளையும் தந்திருக்கிறார். இவை தவிர ஆங்கிலம் வழியாக தமிழுக்கு பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்;புகளைச்செய்து வருகிறார்.



எனவே அவருக்கு உலக இலக்கியப் பரிச்சயம் நிறையவுண்டு. அதிலும் தமிழிலும் தமிழல்லாத வேறு பரப்புகளிலும் உள்ள பழைய இலக்கியப்பரிச்சயமும் நவீன இலக்கிய அறிமுகமும் தாராளமாகவுண்டு.



இவையெல்லாவற்றையும் கடந்து அவர் இந்த நினைவுச்சுவடுகளை ஆக்கியிருப்பதன் நோக்கம் மூன்றாம் உலக மண்டலம் இ ன்று எதிர் கொண்டிருக்கிற அடையாளமிழத்தலுக்கெதிரான முயற்சி எனவே படுகிறது. அத்துடன் இன்று போரினாலும் சர்வதேச மயப்படுத்தப்படும் வணிக உலகத்தினாலும் சிதைந்தும் அறுந்தும் போகிற வாழ்வின் சுவடுகளை சேகரித்தளிக்கிற காரியமாகவும் இருக்கிறது. ஒரு நற்பணியாக அவர் இதைச்செய்தளித்திருக்கிறார் என்றே படுகிறது.



அவருடைய இந்தச்சுவடுகளில் இருந்து இரண்டு தடங்கள் மாதிரிக்காக …





உண்ணாச்சொத்து



வேலுப்பிள்ளை வாத்தியார்

வேகமாய்ச் சைக்கிள் ஓடார்

மூப்பால் வந்த நிதானம்

சைக்கிளை நிறுத்தி அவர் இறங்கும் பாணி

வித்தியாசமானத

கால் ஊன்றும் உத்தி

அந்தத்தலைமுறைலில் இல்லை.

அந்தரப்பட்டுக்குதிப்பார்.மரியாதைகருதிப் பொறுத்திருந்தது

அலுத்துப்போய்

ஒருநாள் கேட்டே விட்டேன்

' பிறேக் றிம்மைத் தேய்ச்சா

கனகாலம் பாவிக்காது பாரும்'





தனிக்கட்டை

ராசம்மாக்கிழவி

சுறுசுறுப்பான மனுஷி

வயசு தெரியாத தோற்றம்

சந்தைக்குப்போய்

காய்கறிகள் வாங்கி

ஊர்மனைக்குள்

வியாபாரம் செய்வாள்

தலையில் கடகம்

கடகத்துக்கு மேலே

காற்செருப்பு

' ஏன் ஆச்சி செருப்பைப் போடேல்லை'

என் சின்ன மகள் கேட்டாள்

' வெயி; கடுமையெண்டால்ப் போடலாம்

நெடூகப்போட்டுத்திரிஞ்சா

கெதியில தேஞ்சுபோம், பிள்ளை'



புதவவருசம் பிறந்தால்

சந்திரகுமார் சுறுசுறுப்பாகி விடுவான்

தொண்டு நிறுவனங்கள்

வங்கிகள்

கடைப்படிகள்

எல்லாம் ஏறிஇறங்கி

கலண்டர்,டயறி சேகரிப்பான்.



அவனுக்குத்தேவை

ஒரு கலண்டரும் டயறியுமே.

ஆனால்

அவனிடம்

ஜனவரி முடிவில்

இருபது முப்பது சேர்ந்து விடும்.

சந்திரகுமார்

ஒரு பக்கமேனும்

டயறி எழுதி அறியான்



றிம் தேயாது சைக்கிளோடிய

வேலுப்பிள்ளை வாத்தியார்

விபத்துக்குள்ளாகி

மருத்துவமனையில் கிடந்தார்

செருப்பைப்பாதுகாத்த ராசம்மா

ஆணிகுத்தி

ஏற்புவலி வந்து செத்துப்போனாள்

சந்திரகுமாரின் டயறி

சலவைக்கணக்கு எழுதப்பயன் படுகிறது.





பொன்னையருக்கு வேலை போனது





ரியூற்றறிகள் இல்லாத

காலத்தில்

வீடுகளுக்குப்போய்

ரியூசன் கொடுத்தவர்தான்

பொன்னையா வாத்தியார்

கால் நடையில் தான் வருவார்

குதிக்கால் நிலத்தில் பாவாது

கற்பித்த பாடங்கள்

கணக்கும் ஆங்கிலமும்

அரைமணி நேரத்தில்

கற்பித்தல் நடந்ததோ இல்லையோ

எங்கள் செவியில்

அவர் தொங்குவது தவறாது

பொன்னையர் தொங்கியதால்

என் காதுப் பொருத்து

புண்ணாகியிருந்தது.

அவர் செய்யும் கொடுமையை

வெளியில் சொல்ல முடியாhது

' படிப்பு வரட்;டும் என்றுதானே

வாத்தியார் அடிக்கிறார்'

… இது மாமாவின் சித்தாந்தம்.

எனக்காக

அத்தை உருகினாலும்

தலையிடும் அளவுக்கு

துணிச்சலில்லை அவவுக்கு

பொன்னையரை மனசாரத்திட்டினேன்

என் திட்டுப் பலிப்பதாயில்லை

காதுப்புண்ணும் ஆறதில்லை

கடைசியாக

கடவுள் கண் திறந்தார்

ஒருநாள்

பொன்னையருக்குச் சீட்டுக்கிழிந்தது

வேறொன்றுமில்லை

என்னிலை விட்ட சேட்டையை

அருள் அண்ணாவிலை விட்டிருக்கிறார்

பெரியம்மா கண்டிட்;டா

' வாத்தியார்

படிகாட்டி என்ர பிள்ளை

என்னோடை இருக்கட்டும்

நீங்கள் வாருங்கோ'



என்ன மரம்



கிராமங்களில்

ஒவ்வொருவருக்கும்

ஒரு பட்டமிருக்கும்

அது பொருத்தமாகவுமிருக்கும்

கதிரவேலுவுக்கு அமைந்த

' காகம்' என்ற அடையும் அப்படித்தான்



கதிரவேலு தனிக்கட்டை

தமக்கை செல்லாச்சியோடு

வாழ்ந்து வந்தார்

நல்ல மனிசன்

மரியாதையான பேச்சு

மாலையில்

கொஞ்சம் கள் அருந்துவார்

அது போதும்

தள்ளும்பாட.



அன்று

இரவு எட்டு மணி

செல்லாச்சி திண்ணைக்குந்திலை

கதிரவேலு தட்டுத்தடவி

இருப்புக்கு வருகிறார்

முற்றத்து தென்னை முன் நின்று

அண்ணாந்து பார்க்கிறார்

அக்கா அக்கக்கா

இது என்ன மரம்

காத்திருந்து அலுத்துப்பான

செல்லச்சி சொன்னா

இதுதானடா தம்பி

வண்ணார்பண்ணைத் தென்னைமரம்!

Monday, May 28, 2007

ஒரு வாழ்த்துப்பாடல்



யாருந்திரும்பவில்லை

நினைவுகளைப் புதைக்கமுடியாச் சகதியில்

கிழிபட்டுக்கிடந்ததென் பறவை.

பிரிவு சொல்ல யாருமில்லை

வரவுசொல்லவும் யாருமில்லை

கண்ணெதிரே ஒளியைத்திருடிப்போகிறான் பகற்கள்வன்;

சகதியில் சிக்கிய பிணமாகக்கிடக்கிறேன்

இருள்

பயங்கர வனாந்திரமாக திரண்டு வருகிறது.

யாரிடம் முறையிடுவேன்?



அன்னா அக்மதோவா

என்னரும் சோதரி

துயரம் உன்னுடன் மட்டும் முடியவில்லை

இதோ என்னுடைய காலடியிலும்

பாம்புகள் சூழ்கின்றன

கொட்டும் பனியில்

இரும்புக்கதவுகளின் வெளியே நீ நின்றாய்



உள்வெளியென்றெல்லாப்பிராந்தியத்திலும்

வெக்கை தகிக்க

நானோ

உள்ளுமில்லை வெளியுமில்லை
கதவிடுக்கில்.

கனாக்கண்டேன் ஐ.பி.ஸி

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்

காற்றொலி கேட்டான் வானொலி படைத்தான்



- கண்ணதாசன்
உண்மைக்கும் பொய்க்குமிடையில் கிழிபடத்தயாராகவா

உம்மைத்தந்தீர்

மார்க்கோணி

ஒலியலைகளில்

உம்மைச் சேகரித்தீரே.



யாரேனுமொருவர் உமை நினைப்பரோ

வானொலி கேட்கின்ற போதில்.



தமிழர்கள் முதன்முதலாக எப்போது வானொலியைக் கேட்டிருப்பார்கள் என்று சரியாகத்தெரியவில்லை. அதுவும் தமிழிலான வானொலியை எப்போது கேட்டார்கள் என்று சரியாகத்தெரியவில்லை. இரண்டாம் உலகப்போர்காலத்திற்குமுன் இலங்கையில் ஒலிபரப்பு நடந்ததாகச்சொல்லப்படுகிறது. இல்லை அதற்குப்பின்னர்தான் ஒலிபரப்பு நடந்ததென்றும் சொல்கிறார்கள். ஆளாளுக்கு ஒவ்வொருவிதமாக ஒவ்வொரு காலகட்டத்தைச் சொல்கிறார்கள். ஆனால் தென்னாசியப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கும்முன்பு இலங்கை வானொலியில்தான் முதல் ஒலிபரப்பை கேட்டதாக கிடைத்த பதிவுகள் சொல்கின்றன. முதலில் இலங்கையில்தான் வானொலிச்சேவை ஆரம்பமாகியிருக்கிறது. அதற்குப்பிறகுதான் இந்தியாவிலும் பிற இடங்களிலும் அது விரிவடைந்திருக்கிறது.



இலங்கையிலும் தமிழ் ஒலிபரப்பு ஆரம்பமானது 1949இல்தான். கொழும்பிலிருந்த தபால் திணைக்களத்தின் ஒரு அறையில்தான் அந்த முதற்சேவை நடந்திருக்கிறது. பிரிட்டிஷ் படைகள் ஜேர்மனின் நீரிமூழ்கியைத்தாக்கியழித்தபின்னர அந்த நீர்மூழ்கியிலிருந்து மீடகப்பட்ட தொலைத்தொடர்பு சாதனத்தைப்பயன்படுத்தி அந்த ஒலிபரப்பைச் செய்ததாக தகவல். அந்த முதல் ஒலிபரப்பைக்கேட்டபோது அந்தத்தமிழ் மனிதன் எப்படிச்சந்தோசப்பட்டிருப்பான் என்று ஒருகணம் நினைத்துப்பாருங்கள்.



அப்போது வெள்ளையர்கள் இலங்கையைத்தங்களின் அதிகாரத்தின்கீழ் வைத்திருந்தார்கள். அதனால் வெள்ளையர்களே அந்த முதல் ஒலிபரப்பையும் செய்தார்கள். வெள்ளையர்கள் என்று சொல்லும்போது ஆங்கிலேயர்கள் என்றோ பிரித்தானியர்களென்றோ தனியாகச்சொல்ல வேண்டியுள்ளது. முன்னர் வெள்ளையர் என்றால் பிரித்தானியர் என்று எந்தக்குழப்பமும் இல்லாமல் புரிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது அப்படிச்சொல்லமுடியுமா? இப்போது ஐரோப்பியக்கண்டத்திலும் அவுஸ்ரேலியக்கண்டத்திலும் அமெரிக்காவிலும் நம்மாள்களுக்கு தாராளமாக உறவிருக்கிறது. அதனால் அவர்கள் எந்த வெள்ளையர்கள் என்று புரியாமல் குழம்பக்கூடும். எனவேதான் இந்த விளக்கம்.



பிரித்தானியர்கள் தங்களின் ஒலிபரப்புச்சேவையின் ஒரு அங்;கமாகவே இலங்கையிலும் வானொலிச்சேவையை ஆரம்பித்தார்கள்.



அந்த ஒலிபரப்பைக் கேட்பதற்கு அப்போது எல்லோரிடமும் வானொலிகள் இருக்கவில்லை. பொது இடங்களில் வைத்துத்தான் ஒலிபரப்பைக்கேட்டார்கள். அந்தப்பொது இடத்தில் சனங்கள் கூடுவார்கள். ஒலிபரப்பு நடக்கும்போது ஒருதுளி பிற சத்தம் கேட்காது. வானொலியின் ஒலிபரப்பை தேவகுரலினூடாக வரும் நற்செய்தியைக்கேட்பதைப்போலவே அவர்கள் கேட்டார்கள்.



அந்த ஒலிபரப்பில் அரச சேதிகளே அநேகமாக சொல்லப்பட்டன. வரையறுக்கப்பட்ட பிற நேரங்களில் நாட்டின் முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக மழை வெள்ளம், புயல், தேர்தல் கால அறிவிப்புகள் போன்ற விசயங்கள் சனங்களுக்கு அறிவிக்கப்பட்டன.



இப்படியே இருந்த வானொலிச்சேவை மெல்ல மெல்ல மக்கள் மயப்படத்தொடங்கியது. அப்படியே அது இன்னும் ஜனரஞ்சகமாகி வர்த்தக மயப்பட்டது. இதெல்லாம் இலங்கையின் வானொலி வரலாற்றைச்சொல்லும் நோக்கத்தையுடையதல்ல. பதிலாக எங்களிடம் எப்படி வானொலி அறிமுகமானது என்பது குறித்த ஒருசிறு அறிமுகம் மட்டும்தான்.



இலங்கை வானொலியுடன் சேர்ந்து இந்திய வானொலியும் ஈழத்தமிழருக்கு அறிமுகமாகியது. ஆனாலும் இலங்கை வானொலியே கவர்ச்சி மிக்கதாக இருந்தது. இலங்கை வானொலிக்கு இநதியாவிலும் பெரும் மதிப்பிருந்தது. இலங்கை வானொலியில் அறிவிப்பாளர்களாக இருந்தவர்கள் நட்சத்திர அந்தஸ்தத்தைப் பெற்றிருந்தனர். அந்தளவுக்கு இலங்கை வானொலிக்கு செல்வாக்கிருந்தது. இலங்கை வானொலியில் ஆரம்பவாளராகவும் முக்கியமானவராகவும் இருந்தவர் சிவபாதசுந்தரம். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கரம்பனைச்சேர்ந்த இவர் பின்னாளில் பி.பி.ஸி தமிழோசையை ஆரம்பித்தவர்களிலும் முக்கியமானவராக இருந்தவர். இவருக்கு இந்திய வானொலியாளரிடமும் இப்போதும் பெரு மதிப்புண்டு.


முன்னர் எல்லா வீடுகளிலும் வானொலி இருந்ததில்லை. வைத்திருந்த சிலரும் அதை ராஜமரியயாதையுடனதான் வைத்திருந்தார்கள். இப்போதுள்ளதைப்போல கைக்கடக்கமாக சிறியதாக அவை இருக்கவில்லை. அப்போது ட்ராஸ்ஸிஸ்ரர் றேடியோவெல்லாம் கிடையாது. பெரிய பற்றி மொடல் வால்வ் றேடியோக்கள்தான் புழக்கத்திலிருந்தன. இயக்கியவுடன் சத்தம் வராது. சிறிது நேரம் போகத்தான் மெல்லமெல்ல சத்தம் வரும். அவற்றின் இயல்பு அப்படி. அவை தோற்றத்தில் பெரியனவாக இருந்ததால் அவற்றை வைப்பதற்கென்றே தனியாக இடமொதுக்கி அவற்றுக்கென்றே தனியாக மரத்தாலான தட்டுகளையும் செய்து வைத்திருந்தார்கள். அதுக்குப்ப+ட்டுவேறு போட்டிருந்தார்கள்.


முதலில் குறுண்டிக், பிலிப்ஸ், கொஸோ ரெலிபங்கன், ஷார்ப் என்ற றேடியோக்கள் மிகப்பிரபலமாக இருந்தன. அதற்குமுதல் மார்க்கோனி என்றொரு றேடியோ இருந்ததாக நினைவு. ஆனால் அதை சரியாகச் சொல்ல முடியவில்லை.

வால்வ் மொடலுக்குப்பிறகு ட்ரான்ஸ்ஸிஸ்ரர். அதுக்குப்பிறகு ஐ.ஸி மொடல் வந்தது. பின்பு இப்போதுள்ள டிஜிற்றல் வகை வந்திருக்கிறது. காலம் மாறிவிட்டது. ஆயிரம் வகையிலும் விதவிதமான வடிவங்களிலும் தினம்தினம் றேடியோக்கள் வந்து கொண' டேயிருக்கின்றன.

அப்போது வானொலியைக்கேட்பதே ஒரு முக்கியமான வேலை. கண்ட நேரமெல்லாம் அதைக் கேட்கமுடியாது. எல்லா நேரமும் ஒலிபரப்பு இருந்ததும் இல்லை. சனங்களுக்கு தாராளமாக நேரமிருந்தாலும் அந்தளவு நேரத்தையும் உள்ளடக்கி எந்த ஒலிபரப்புச்சேவையும் இருக்கவில்லை. குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டிந்த நேரத்தில்தான் ஒலிபரப்பு நடந்தது.

எல்லா வேலைகளையும் முடித்;துக்கொண்டு கைகால் முகம் கழுவி வந்து ஒரு மாலைத்தேனீரொடு ஆரம்பிக்கும் வானொலி கேட்கும் படலம். அப்பொழுதுதான் றேடியோ போடப்படும். அதற்குமுன் காலை ஒலிபரப்பைக் கேட்டிருப்பார்கள். அநேகமாக இரவு ஒலிபரப்புத்தான் முக்கியமானது. றேடியோவைக்கேட்பதற்கென்றே அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஆட்கள் வருவார்கள். பிள்ளைகளின் படிப்புக்கு இடைஞ்சலில்லாமல் மெல்லிய ஒலியில் அடக்கமாக ஒலித்துக்;கொண்டிருக்கும் வானொலி. சில கிராமங்களில் அங்கிருந்த வாசிக சாலையிலும் வானொலிகளை வைத்து ஒலிபரப்பைச்செய்தார்கள்.




இரவு கேட்கும் நிகழ்ச்சிகளைப்பற்றி அடுத்தநாட் காலையிலோ மாலையிலோ அல்லது இரவிலோ பேசிக்கொள்வார்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பவும் பட்டன. பெரும்பாலும் நாட்டுநடப்புகளை அறியக்கூடிய ஒரு சாதனம் என்ற மனப்பதிவுதான் மக்களிடம் இருந்தது. செய்திகளையும் மக்களை வழிப்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளையும்தான் அந்தநாட்களில் ஒலிபரப்பில் சேர்த்துக்கொண்டார்கள்.

அதனால் அதற்கென்றே நேரத்தை ஒதுக்கி அவற்றைக்கேட்டார்கள். வானொலி வீட்டுக்குள் வெளியுலகத்தைக் கொண்டுவந்;த நல்லதொரு விருந்தாளியாகவே இருந்தது. அதனால் அதற்கென்றொரு தனியான மதிப்புமுண்டாகியது.


பெரிய வானொலிப்பெட்டிகளாக இருந்தபடியால் அவற்றை லேசில் எங்கும் எடுத்துச்செல்லமுடியாது. பக்குவம் பார்க்கவேண்டியதொரு பொருளாகவே அதை அதற்கென்றுதனியாகச் செய்யப்பட்ட பெட்டியில் வைத்துப் பாவித்தார்கள். சிலர் அதற்கென்றே தனியாகப்ப+ட்டுகளைச் செய்துவைத்திருந்ததும் உண்டென்று சொன்னேனல்லவா. அநத அளவுக்கு அதன் மதிப்பிருந்தது.


பிறகு ட்ரான்ஸிஸ்ரர் அறிமுகமானது. வானொலியில்நடந்த அடுத்தகட்டப்புரட்சி ட்ரான்ஸிஸ்ரர்தான். அது விலையும் குறைவு. கையாளவும் வசதியாக இருந்தது. ட்ரான்ஸிஸ்ரர் வந்தபிறகு எல்லா இடங்களிலும் அது பரவியது. றேடியோ என்பது சாதாரணமாகி விட்டது. சாதாரணமாக அது கையாளப் படவும்தொடங்கியது. அதனுடைய இறுக்கத்தன்மை கலைந்து நெகிழ்ச்சியுள்ளதொரு பொருளாகி விட்டது. அதேவேளை இப்போது நிகழ்ச்சிகளும் அதிகமாகி விட்டன. இதெல்லாம் சனங்களை வானொலியை நோக்கி கவர்ந்திழுத்தது. சனங்கள் தஙகளின் பொழுது போக்குக்காகவும் வளர்ச்சியடைந்துவரும் உலகின் தகவல்களை அறிவதற்காகவும் தவிர்க்க முடியாமல் வானொலியின் பக்கம் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. படித்தவர்;கள், படிக்காதவர்கள் எல்லோருக்கும் வானொலி நெருக்கமானது.


இப்போது இலங்கை போன்ற நாடுகளில்; வானொலி என்பது ஒரு மைய மீடியாவாகிவிட்டது. இது இந்த நாடுகளில் வானொலியின் மறுமலர்ச்சிக்காலம். இந்த மறுமலர்ச்சிக்காலத்தை இன்னும் வடிவாகச்சொன்னால் ஈழத்தமிழர்கள் விசுவமடுவிலும் முத்தையன் கட்டிலும் வவுனிக்குளத்த்pலும் இடைக்காட்டிலும் தங்களுடைய தோட்டத்தில் வெங்காயத்துக்குப்புல்லுப் பிடுங்கிக்கொண்டே தணியாத தாகம் நாடகத்தை கேட்டபோதே அது மலர்ந்தது எனலாம்.

அப்போது விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் வானொலியுடன்தான் தண்ணீர் கட்டினார்கள். வயற்காவலுக்குப்போகும்போதுகூட பொழுது போவதற்காக றேடியோவை எடுத்துப்போனார்கள். கடற்கரையில் மீனைக்காயப்போடும்போதும் றேடியோ பக்கத்திலிருந்து பாடியது. வீட்டிற்குள்ளிருந்து பாடிய வானொலி வெளியே உலாத்தத்தொடங்கியது. அநேகமாக எல்லா வீடுகளிலும் எல்லா இடங்களிலும் வானொலி பரவிவிட்டது. ஆனால் இப்போது றேடியோ என்றால் பாட்டுப்பெட்டி என்ற சித்திரம்தான் பொதுவாக எல்லோரின் மனதிலும் பதிந்திருந்தது. றேடியோப்பாடுகிறது என்றே இன்னும் சொல்கிறார்கள். ஆனால் வானொலி பாடுவதுமட்;;;டுமில்லை. அது பேசுகிறது, கதைசொல்கிறது, தகவலை வழங்குகிறது. நாடகங்களைக் கேட்கவைக்கிறது. இரண்டுபேரோ நாலுபேரோ சேர்;ந்து உரையாடுவதை நாமும் கேட்க வைக்கிறது. ஆனால் இதெல்லாத்தையும்விட அது பாடுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது. வானொலியை ஏறக்குறைய ஒரு பாடும் சாதனமாக்கியே விட்டார்கள். குறிப்பாக இலங்கை வானொலியின் வர்த்தகசேவைதான் இந்தப்பெரும் புண்ணியத்தைச் செய்தது. அது தமிழகச்சினிமாவின் பாடல்களை மையமாக வைத்தே தன்னுடைய வர்த்தக சேவையை நடத்தியது. பிறகு மெல்லமெல்ல இந்தப்போக்கு வளர்ந்து வானொலியென்றால் பாட்டுக்கேடபதற்கென்றே ஆகிவிட்டது. இப்போது தமிழில் ஒலிபரப்புச்செய்கிற பெரும்பாலான வானொhலிகளும் இந்தமாதிரி தமிழகத்தின் சினிமாப்பாடல்களை ஆதாரமாகக்கொண்டே தமது ஒலிபரப்பைச்செய்கின்றன. அதுவும் எவ்.எம்.றேடியோக்களுக்கு இதைத்தவிர வேறு மார்க்கமேயில்லை.

வானொலியின் புழக்கம் சாதாரண மக்களிடம் பெரும் அறிவுமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிட வேண்டும். படிப்பறிவு குறைந்த மக்களும் வானொலியைக் கேட்க முடியும் என்ற வசதி இதற்கு அதிகபட்சமான சாதகங்களை வழங்கியிருந்தது. இதுபற்றி தனியாக விரிவான மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக சமூகவியல் கண்ணோட்டத்தில் அது ஆய்வுசெய்யப்பட்டால் அதன் பெறுமதி இன்னும் அதிகமாகும்.

பகுதி இரண்டு


தேரதல்காலத்தில் வானொலிக்கிருக்கும் செல்வாக்கு சாதாரணமானதல்ல. ஆட்சி மாற்றம் என்பது அல்லது அந்தத் தேர்தலில் யார்வெல்லப்போகிறார்கள் என்பது சனங்களுக்கு முக்கியமாகிவிடுகிறது. இதில் அவர்களின் எதிர்பார்ப்புகளும் இருக்கும் என்பது இன்னும் கூடுதல் அக்கறைக்குரியது. தேர்தல்காலம் தவிர பிற முக்கியமான சந்தர்ப்பங்கள் வெள்ளம் புயல் போன்ற அனர்த்த காலங்களில்தான் வானொலிக்கிருந்தது. மற்றும்படி அது வீட்டில் இனிய தோழியாக சிலருக்கிருந்தது. சிலருக்கு அன்புக்குரிய நண்பனாக இருந்தது. வேறு சிலருக்கு நல்ல ஆசானாகவும் இன்னும் சிலருக்கு அது வழிகாட்டியாகவும் இருந்தது.


ஆரம்பத்தில் புண்ணியமூர்த்தி, கே.ஏ.கப+ர், செந்தில்மணி மயில்வாகனம் போன்றோர் நல்ல அறிவிப்பபாளரகளாகவும் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களாகவும் இருந்தார்கள். பிறகு வர்த்தக சேவையில் மயிலவாகனம் ஒரு தனிச்சகாப்தம் படைத்தார். அவரோடிணைந்து மொறாயஸ் இப்ராகிம், கோகிலவர்த்தனி சிவராஜா, ராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி துரைராஜசிங்கம், கணேஸ்வரன், ஜோர்க்கின் பெர்ணாண்டோ, பி.எச். அப்துல் ஹமீத், நடராஜசிவம் எனப்பலர் இலங்கை வானொலியில் சனங்களோடிணைந்திருந்தார்கள்.


இன்னொரு தரப்பில் ஜோர்ஜ் சந்திரசேகரன, சற்சொருபவதி, பி.விக ;னேஸ்வரன், நடேச சர்மா போன்றவர்கள் அறிமுகமாகியிருந்தார்கள்.

இதேவேளை வேறொரு வகையில் குறிப்பாக கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சித்தயாரிப்பாளரகளாக, வானொலி நாடகங்களில் பங்கேற்பவர்களாக சானா, காவலூர் ராஜதுரை, விஜயாள் பீற்றர், கே.எம்.வாசகர், சில்லையூர் செல்வராசன், கா.சிவத்தம்பி, முரகையன் போனன்றோர் இருந்தனர்.

இப்படியெல்லாமிருந்த வானொலிக்கென்றொரு காலம் பிறந்தது.அது வானொலியைக்கேட்கவே அஞ்சுகின்ற காலம். அஞ்சினாலும் அதைக்கேட்டே ஆகவேண்டுமென்ற கட்;;;;;;;;;;;டாயங்கள் நிறைந்த காலம். என்னதான் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும் யதார்த்தத்தை யாராலும்; புறக்கணிக்க முடியாதல்லவா.

தமிழரைச் சிங்களவர்கள் அடித்தார்கள். அடித்து விரட்டினார்கள். விரட்டிக்கலைத்தார்கள். ஓடுங்கள், ஓடி உங்களுடைய ஊருக்குப்போங்கள் என்று கத்தியோடும் பொல்;லுகளோடும் தீப்பந்தங்களோடும் தெருவில் நின்று கத்தினார்கள். வன்முறை வெடித்தது. குருதி வடிந்தது. தீயிலும் புகையிலும் தமிழரின்தேட்டமும் வாழ்வும் கருகியது. அப்போது வானொலிக்கருகில் கலக்கத்தோடிருக்கத்தொடங்கினார்கள் தமிழர்கள். ஆராருக்கு என்ன நடக்கிறதோ? எங்கே என்னவெல்லாம் செய்கிறார்களோ என்று பதற்றத்தோடும் பதைக்கும் நெஞ்சோடும் றேடியோவுக்கருகில் காத்திருந்தார்கள் தமிழ்க்குடிகள். ஆனால் வானொலி எல்லா உண்மைகளையும் சொல்லவில்லை. என்ற போதும் சனங்கள் அதைக்கேட்பதைத்தவிர வேறுவழியில்;லாமல் கிடந்தார்கள். சொல்லப்படுகின்ற கொஞ்சச் செய்திகளுக்காகவே அவர்கள் அப்படியிருந்தார்கள். அதைத்தவிர வேறு என்;னதான் அவர்களால் செய்யமுடியும்.

அப்போதுதான் ஓரளவுக்கு உண்மையைச் சொல்லக்கூடிய இன்னொரு வானொலியென்று இந்திய வானொலியை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதுவரையிலும் இனிய வானொலியாக இருந்த இலங்கை வானொலியை சனங்கள் சந்தேகிக்கத்தொடங்கினார்கள். இலங்கை வானொலி முதலில் உண்மைகளை மறைக்கிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பொய்சொல்லும் வானொலியை விட்டு அவர்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வேறு வானொலியின் பக்கம் போனார்கள்.

தொடக்கத்தில்; இந்திய வானொலியில் சரோஜ் நாராயணனும் ராஜாராமும் தங்களுக்காகவே செய்திகளைச் சொல்கிறார்கள் என்று நினைக்குமளவுக்கு ஆவலோடு கேட்டார்கள். அந்தமாதிரித்தான் அவர்களும் செய்திகளைச்சொன்னார்கள்.
இலங்கையில் தமிழர்கள் படுமோசமான முறையில் வதைக்கப்பட்டார்கள். போரை பகிரங்கமாக இலங்கை அரசாங்கம் தமிழர்களின்மீது பிரகடனப்படுத்தியது. எந்த றேடியோவின்மூலம் தங்;களுக்கான நற்செய்திகளையெல்லாம் கேட்கலாம் என்று முன்னர் நம்பியிருந்தார்களோ அந்த றேடியோதான் இப்போது அவர்களுக்கெதிராகப் போர்ப்பிரகடனஞ்செய்தது. தமிழர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். போர்ப்பிரகடனஞ்செய்த வானொலி பிறகு பொய் சொல்லத்தொடங்கி விட்டது. போரில் முதலில் பலியாவது உண்மை என்பார்கள். உணமையாகவே உண்மைதான் இங்கும் பலியாகியிருந்தது. உண்மைசொல்லாத வானொலியை யாரும்நம்ப மாட்டார்களல்லவா. தமிழர்கள் இலங்கை வானொலியை விட்டு மெல்ல இந்திய வானொலியின் பக்கம் போனார்கள் என்று சொன்னேனல்லவா. அவர்கள் பிறகு ஆல் இந்தியா றேடியோவின் ஆகாஷவாணி செய்திகளையும் மாநிலச்செய்திகளையும் முழதாக நம்பிக்கேட்கத்தொடங்கிவிட்டார்கள். இந்த இரண்டு சேவையிலும் சொல்லப்படும் செய்திகள் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவை நற்செய்திகளே. உண்மையில் அவை ஒருவகையில் ஆறுதலைத்தந்தன. அந்த ஆறுதல் அப்போது தேறுதலையும் தந்தது. பின்னர் இந்தக்கதை யெல்லாம் மாறியது வேறுண்டு.

மாநிலச்செய்திகளைக்கேட்பதற்கு தினமும் மாலை நேரங்களில் சநிதிகளிலும் பொது இடங்களிலும் வீடுகளிலும் சனங்கள் கூடினார்கள். சொல்லப்படும் செய்திகளை ஆவலோடு கேட்டார்கள். கேட்டு நம்பினார்கள். அப்படி நம்;பித்தான் பிறகு கெட்டார்கள். சனங்களைக் கெட்டார்கள் என்றும் சொல்லமுடியாது. மக்களை கெடுதிக்காளாக்கினார்கள் ஆல் இந்தியாக்காரர்கள்.

எங்களுக்கும் ஆதரவாக யாரோ இருக்கிறார்கள். நாங்கள் தனித்துவிடவில்லை என்று நம்பிய சனங்களை ஆல் இந்தியா றேடியோவின் ஆகாஷவாணிச்செய்தியும் ஏமாற்றியது. மாநிலச்செய்தியும் ஏமாற்றியது. இதில் மாhநிலச்செய்தி ஏமாற்றியதைத்தான் யாராலும் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. மத்திய அரசைமீறி மாநில அரசு எதையும் செய்யமுடியாது என்று தெரிந்தாலும் இப்படி ஒரேயடியாக அது கைவிட்டுவிடும் என்று நம்பக்கஸ்ரப்பட்டார்கள். எதிர்பார்க்காவிட்டாலும் விரும்பா விட்டாலும் நம்பித்தான் ஆக வேண்டும் என்பது யதார்த்தமாகி விட்டது.

சிங்களப்படைகள் ( இப்படிக்குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும். இலங்கைத்தீவில் பல இனங்கள் இருந்தாலும் இதன் படையோ முழுமையாகவும் சிங்களவர்களைக்கொண்டதே என எழுத்தாளர் சாந்தன் ஒரு தடவை சொன்;னது மிகச்சரியானதே.) செய்த கொடுமைகளையெல்லாம் அப்போது பி.பி.ஸியுடன் இணைந்து வெரித்தாஸ{ம் சொல்லியது. ஆனால் இதையெல்லாம் மீறி இந்திய வானொலிகள் சிறிலங்காப் படைகளின் அட்டுழியங்களையெல்லாம் வெளிப்படுத்தின.

சென்னை வானொலி, திருச்சிராப்பள்ளி வானொலி என்றெல்லா றேடியோவோடும் ஈழத்தமிழருக்கு நல்ல பரிச்சியமிருந்தது. அந்தளவுக்கு உறவிருந்தது. நெருக்கமுமிருந்தது.

இப்படியெல்லாமிருந்த வானொலிகள்தான் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது அன்புவழி என்றும் நேசக்கரம் என்றும் ஈழத்தமிழருக்காகவென்றே சிறப்பாக நிகழ்ச்சிகளைச் செய்து ஒலிபரப்பின. ஈழத்தமிருக்கென்று தனியாக அவை ஒலிபரப்பைச் செய்தபோதும் அதை எந்த ஈழத்தமிழரும் கேட்கவேயில்லை. எப்படி இலங்கை வானொலி தமிழருக்கெதிராக போர்பிரகடனம் செய்ததோ அதுபோலவே இந்திய வானொலிகளும்; ஈழத்தமிழரின்மீது போர்ப்பிரகடனம் செய்தன. இங்கும் முதலில் பலியானது உண்மைதான். உண்மை பலியாவதைப்பற்றி யாருக்குத்தான் கவலை?

அன்புவழி, நேசக்கரம் என்ற பெயர்களுக்கு எதிர்மாறாகவே இல்லாத பொல்லாத கதையையெல்லாம் இந்திய வானொலிகள் சொல்லிக் கொண்டிருந்தன. இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் ஒன்றுண்டு. இப்படி இந்த வானொலிகள் பொய் சொல்வது என்பது தனியே ஈழத்தமிருக்கு மட்டுமல்ல தங்கள் மக்களுக்கும்தான். இலங்கை வானொலி சிங்களவருக்கும் பொய்யையே சொன்னது. அதேபோல இந்திய வானொலியும் தன்னுடைய சனங்களுக்கு பொய்யைத்தான் சொன்னது.

பொய ' சொன்ன றேடியோக்களை விட்டு தமிழர்கள் மெல்ல வேறுபக்;கம் நகர்ந்தார்கள். தமிழில் சிங்கப்ப+ர் வானொலி, சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் பீக்கிங் வானொலி போன்றவையைக்கூட அவர்கள் மிகச்சிரமப்பட்டுக் கேட்டார்கள். உண்மையைத் தேடுவதென்பது சாதாhரணமானதல்லவே. இந்த அனுபவம் ஈழத்தமிழருக்கு நிறையவுண்டு. ஏனெனில் அவர்கள் இப்போதும் உண்;மையைத்தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இப்படியான மிக வில்லங்கமானதொரு சூழலில்தான் தமிழர்கள் தாங்களே தங்களுக்கான வானொலிகளை உருவாக்கத் தொடங்கினார்கள். எண்பதுகளின் நடுப்பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு படுத்தப்பட்டாலும் அது முழு அளவிலான சாத்தியப்பாட்டுக்க வந்தது தொண்ணூறுகளில்தான். எண்பத்தியேழாம் ஆண்டு புலிகளின்குரல் வானொலி யாழ்ப்;பாணத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டபோதும் இந்திய இராணுவத்துடனான போருடன் அது ஏறக்குறைய மூன்றாண்டுகள் இடைநின்றது.

தொண்ணூறுகள் ஈழத்தமிழரைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டம் எனலாம். எண்பதுகளில் அடித்து விரட்டப்பட்ட தமிழரெல்லாம் தொண்ணூறுகளில் பலம்பெறத்தொடங்கி விட்டார்கள். யாரிலும் தங்கி வாழாது தங்களின் சொந்தக்காலில் நிற்கக்கூடியதொரு நிலைக்கு அவர்கள் வந்த காலகட்டம் அது.

தொணணூறின் ஆரம்பத்திலேயே மீண்டும் புலிகளின் குரல் வானொலி ஒலிக்கத்தொடங்கியது. தமிழர்கள் தங்களின் கதையை தாங்களே சொல்லத்தொடங்கினார்கள். இதுவொரு மாறுதாலான காலகட்டம். இலங்கைத்தீவில் இரண்டு மையங்கள் இருக்கின்றன என்ற யதாhர்த்தத்தை ஆதாரப்படுத்திய காலகட்டம். ஆய்வாளர் நிலாந்தன் சொல்வதைப்போல கொழும்பு மையத்திலிருந்து தமிழர்கள் விடுபட்டு தங்களுக்கென்றொரு மையத்தை கட்டியெழுப்பிய காலகட்டம். அது மீடியாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி.

அப்போது வேறு வானொலிகள் அதிகமிருக்கவில்லை. லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பி.பி.சி, பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் இரண்டும் அவற்றின் குறைந்தளவு நேரச்சேவையிலும் செய்திகளை முதன்மைப்படுத்தியிருந்தன. மற்றச்சேவைகளை விடவும் இந்த இரண்டும் கூடுதலான உண்மைச்செய்திகளை வெளியிட்டன. பி.பி.ஸி க்கு எண்பதுகளில் இருந்தே சங்கர் இருந்தார். வெரித்தாஸ{க்கு சாமி இருந்தார். சங்கரும் சாமியும் ஈழத்தமிழர்களுக்கு அந்நாட்களில் மிக நெருக்கமாகியிருந்தார்கள். அவர்கள்தான் மற்ற எல்லோரையும்விடவும் தமிழ்மக்களின் உண்மை நிலைவரத்தைச் சொன்னார்கள். அதனால் அவர்கள் இருவரையும் தங்களுக்கு மிக நெருக்கமாகத் தமிழர்கள் கருதினார்கள். இப்போதும்கூட இந்த இரண்டு றேடியோக்காரர்களையும் லேசில் மறந்துவிட முடியாது. பின்னாட்களில் பி.பி.ஸி யில் ஆனந்தியும் வெரித்தாஸில் ஜெகத் கஸ்பாரும் அந்த இடங்களைப்பிடித்திருந்தார்கள். அதன்காரணமாக அவர்கள் இருவரும் பட்ட சிரமங்களும் அதிகம்.

சிற்லைகள் நடுத்தர அலைவரிசைகளுடன் புதிதாக பண்பலைவரிசை கூடுதலான செல்வாக்;கைச்செலுத்தத்தொடங்கியிருந்தது. பண்பலைவரிசையின் பெருக்கம் வானொலிகளின் பெருக்கத்;துக்கும் வசதியைக் கொடுத்தது. முன்னர் அரசு மட்டும்தான் வானொலியை நடத்தியது. ஆனால் பின்னர் தனியார் ஒலிபரப்புகள் அதிகளவில் வந்துவிட்டன.

பகுதி மூன்று.



உயிரே படத்தில் சாருக்கான் இந்திய வானொலியின் செய்தியாளராக வருகிறார். தீரவாத அமைப்பொன்று போராட்டத்தை நடத்துகின்ற பகுதிக்கு உண்மை நிலைவரத்தை அறிந்துகொள்வதற்காக அங்கே செல்கிறார். அங்குள்ள யதார்த்தத்தை அவர் அறிந்த போதும் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான வழியும் பாதுகாப்பும் என்ன என்பது குறித்த பார்வையை அவர் பெறமுடியாமல் போகிறார். அவருடைய செய்திப்பணி என்பது ஒரு கட்டத்தில் அதன் பெறுமதியை இழந்து விடுகிறது.

இந்தமாதிரி பல ஊடகக்காரர்களின் பணிகள் அவர்களால் பெறமதியற்றவையாக உணரப்பட்டிருக்கின்றன. உண்மைக்கு மாறாகவே தான் பல தடவைகளில் செய்திகளை வாசித்திருக்கிறேன் என்று இலங்கை வானொலியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அறிப்பாளர் ஒருவர் கவலையோடு சொன்னார். தான் அவ்வாறான செய்திகளை வாசித்துவிட்டு வீட்டுக்குப்போகும்போது செய்தியில் சொல்லப்பட்டவை உண்மைதானா என்று வீட்டில் பிள்ளைகள் கேட்பார்களாம். பிள்ளைகளிடம் பொய் சொல்ல முடியுமா? அதைவிடவும் தான் வாசித்த அந்தச் செய்தியில் சொல்லப்பட்ட தகவல்களில் அந்தப்பிள்ளைகளுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது. என்;றபடியால்தான் அவர்கள் அப்படித் தன்;னிடம் கேட்டதாக மிகவருத்தத்தோடு அந்த நண்பர் தன்னுடைய பணிகுறித்தும் நிலைகுறித்தும் சொன்னார். அவர் பிறகு தன்னுடைய பணியைவிட்டு விலகி வேறிடம் சென்றுவிட்டார்.

பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பார்கள். பேயும் பிணமுமாகிவிட்டது உலகம்.

பகுதி நான்கு.

எம்தமிழ் உறவுகளுக்கு உறவுப்பாலம் அமைக்க வருகிறது ஐ.பி.ஸி. என்ற அறிவிப்புடன் ஒரு நாள் ஒரு புதிய ஒலிபரப்பைக் கேட்டேன். அது முற்றிலும் புதியதுதான். அது நடந்தது பத்தாண்டுகளின் முன்பா? இருக்;கலாம். அப்போது வன்னியை ஊடறுத்து சிறிலங்காப்படைகள் ஜெயசிக்குறு என்ற பெயரில் பெரும் படையெடுப்பொன்றை நடத்திக்கொண்டிருந்த காலம். தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்தில்லை. தொலைபேசியில்லை. கடிதம்கூட ஒழுங்குமுறையில் வராது. சனங்கள் இங்கும் அங்குமாக பிரிந்து போயிருந்தார்கள். பக்கத்தில் ஐந்து பத்துக்கிலோ மீற்றர் தொலைவில் இருந்தவர்கள் அடுத்த ஊரக்குப் போவதற்கு நூறு நூற்றம்பது கிலோ மீற்றர் தூரம் சுற்றி கப்பலேறி கடல்வழிப்பயணம் செய்து படாத பாடெல்லாம் பட்ட காலம் அது. தலையைச்சுற்றி மூக்கைத்தொடுவது என்பார்களே அப்படித்தான் நடந்தது. பலவேளை அப்படித்தொடவும் முடியாது.

அப்போது பலருக்கு சரியான தொடர்புகளில்லை. யார் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாத நிலை. யுத்தம் முழுத்தீவிரத்தோடு தன் வலிமையைக்காட்டிக் கொண்டிருந்தது. மரணச்செய்திகள் சாதாரணமாகி அதுவொரு நாளாந்த நிகழ்ச்சி நிரல் போலாகியிருந்தது. அப்போது ஒரு பரிவுமிக்க தோழனைப்போல வெரித்தாஸில் ஜெகத் கஸ்பார் வெரித்தாஸில் உறவுப்பாலத்தை ஆரம்பித்தார். பாவப்பட்ட மக்களுக்காக மன்றாடுகின்றேன் தேவனே என்றமாதிரி அந்த நிகழ்ச்சி ஒருபெரும் மன ஆறுதலைத்தந்தது. தொடர்பில்லாதிருந்தவர்கள் எல்லாம் இணைக்கப்பட்டார்கள். அறியாத சேதிகளெல்லாம் அறியப்பட்டன. மூடிய கோட்டையைத் திறக்கும் ஒரு மோஸேஸின் செயலைப்போல கஸ்பாரின் உறவுப்பாலம் இருந்தது. ஜெகத் கஸ்பாரின் மூலம் வெரித்தாஸ் எல்லா வீடுகளிலும் ஒலித்தது. கஸ்பார் உணர்வுகளால் நெருங்கி ஈழத்தமிழர்களுடன் உறவாகினார்.

வெரித்தாஸைப்போல ஐ.பி.சி ஆதரவாகத் தலையைத்தடவி கண்ணீரைத்துடைத்துவிடும் ஒரு பரிவுநிரம்பிய தாயாக தாயகத்துக்கு வந்தது. காலை ஐந்தரைமணிக்கு நம்பிக்கை தரும் சொற்களோடு எங்களைத் துயிலெழுப்புவார் தாசீஸியஸ். எங்களுக்கானதொரு நல்ல வானொலி எப்படி அமைய வேண்டுமெனக்கனவு கண்டோமோ அதை எங்களுக்கு உண்மையிலேயே தந்தார்கள். ஐ.பி.சி யைக்கேட்பது தினமும் தவறக்கூடாது என்றாகி விட்டது. ஒருநாள் தவறினாலும் பலதை இழந்துவிடுவோம் என்று கவலை கொள்ளுமளவுக்கு அது அத்தனை விதமாக இருந்தது. அத்தகைய சிறப்புகளுடன் இருந்தது.

லண்டனிலிருந்து உலகத்தமிழருக்காக ஒலித்த அந்த வானொலி உண்மையில் தமிழ் வானொலிகளின் வரலாற்றில் ஒரு புதிய தடம்தான்.

ஐ.பி.சி உறவுப்பாலம் புலத்துக்கும் தாய்நிலத்துக்குமான இணைப்பாக அதன் சரியான பிரயோக அர்த்தத்துடனிருந்தது. ஈழத்தமிழர் தங்களுக்கான ஒரு வானொலியை ஏற்கனவே ஸ்தாபித்திருந்தார்கள். அது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோக ப+ர்வ வானொலியாக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசும் ஒரு ஊடகமாகவோதான் தொழிற்பட்டது. அதற்கடுத்;தபடியாக புலத்திலிருந்து ஐ.பி.சி இன்னொரு நிலையில் தாயக விடுதலைப்போராட்டத்தையும் தாயகத்திலுள்ள மக்களையும் புலத்திலுள்ள மக்களையும் இணைத்து ஒரு மறுமலர்ச்சிக்காலகட்டத்தை உருவாக்க முனைந்தது. குறிப்பாக தாயகத்துக்கப்பால் புலம்பெயர்ந்து வாழும்களத்திலிருந்து அது ஒலிபரப்பாகியது என்பதால் தாயகம் மீதான தாகத்தை அதிகளவில் கொண்டுள்ளதாக ஐ.பி.சி யை அடையாளம் காணலாம்.

ஐ.பி.சி யில் மொழிக்குச்சிறப்பிடம் இருந்தது. தொலைதூரத்தில் பிறமொழிச்சூழலில் வாழும்போது தாய்மொழி மீது பெரிய தாகம் ஏற்படும். புலத்தில் வாழ்கின்றபோது அந்நிய மொழிச்சூழலில் ஏற்படுகின்ற மனநெருக்கடிகளுக்கு றிலாக்ஸ் பண்ணுகிறமாதிரி தமிழில் கூடுதலான கவனத்தை ஐ.பி.சி யின் அறிவிப்பாளர்களும் நிகழ்சித்தயாரிப்பாளர்களும் கொண்டிருந்தார்கள். அதாவது அவர்கள் தங்களின் திருப்திக்காகவே இந்தமாதிரி மொழியில் அதிக அக்கறையெடுத்து கடுமையாக உழைத்தார்கள். தமிழ் இலக்கணத்தைக்கூட தாசீஸியஸ{ம் இரவி அருணாசலமும் மிக அழகாக ஆர்வமாகக் கேட்கவைத்தார்கள்.

ஐ.பி.சிக்குடும்பத்தினர் அந்த அரைமணிநேரத்தையும் பெறுமதியாக்கியேயிருந்தார்கள். நிகழ்ச்சித்தொகுப்பு, நிகழ்ச்சி அமைப்பு, குரல், ஒலிப்பதிவு, இசைப்பயன்பாடு, நேரஅளவு, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு என எல்லாவற்றிலும் பிரக்ஞை ப+ர்வமான அணுகுமுறையிருந்தது. அறிவுப+ர்வமான அணுகுமுறையை ஊடகமொன்று கவனிக்கவேண்டிய நெறிமுறையை ஐ.பி.சி. கொண்டிருந்தது. இதுதான் மிகக்குறைந்த காலத்திறகுள்ளேயே அதை எல்லோரும் கேட்கக்கூடியவாறாக்கியது. ஐ.பி.சி. க்கு மிகக்கூடுதலான நேயர்கள் பெருகியிருந்தார்கள். நாள்தவறாமல் காலை ஐந்தரைமணிக்கு அதைக்கேட்கும் வழக்கம் போர்க்களம் வரையில் இருந்ததென்று தாசீஸியஸிடமும் இரவி அருணாசலத்திடமும் கௌரி ரவிசங்கரிடமும் பல போராளிகள் நேரில் சொல்வதைப்பார்த்திருக்கிறேன்.

ஐ.பி.சி புலத்தில் இருபத்திநான்கு மணிநேர ஒலிபரப்பைச்செய்தது. அதை நாம் கேட்க முடியவில்லை. எங்களுகக்குக்கிடைத்தது அரை மணிநேர ஒலிபரப்பு மட்டும்தான். அந்த அரைமணிநேரத்தில் நாங்கள் புலத்தோடிணைந்தோம். புலம் எங்களோடிணைந்தது. இதுதான் ஐ.பி.சி உறவுப்பாலம்.

புலம் என்னும் போது இனனொரு ஞபகமும் வருகிறது. ஐ.பி.சி புலம் என்றொரு நல்ல சஞ்சிpகையையும் வெளியிட்டிருந்தது. ஏறக்குறைய ஆறு அல்;லது ஏழு இதழ்கள் வெளிவந்திருக்கலாம் என்று நினைவிருக்கிறது. புலம் இதழ்களில் ஒரு வானொலி சஞ்சிகைக்கு அப்பாலான புதிய உள்ளடக்கச் செழுமையிருந்தது. ஈழத்திலக்கிய அறிமுகம், மொழி பற்றிய கட்டுரைகள், முன்னோடிப்படைப்பாளிகளின் அறிமுகமும் அவர்களுடைய சிறந்த படைப்புகளின் தெரிவும் இன்னும் பல புதிய விசயங்களும் புலத்தில் இடம்பெற்றன.

ஒரு வானொலி ஒலியை அடிப்டையாகக் கொண்டது. அந்த ஒலியை எப்படிக்கையாள்வது என்பதைப்பொறுத்தே அது மக்களிடம் வரவேற்பைப் பெறுகிறது. அது வழங்கும் ஒலியில் என்னென்ன அம்சங்கள் எப்படியெப்படி அமைகின்றன என்பதுதான் இதில் முக்கியமானது. மொழியும் இசையும் இதில் முக்கியமானவை. மொழியைக்கையாள்வது வானொலியில் ஒருகலை. அந்த மொழியினூடாக எவ்வாறான பயனுள்ள விசயங்கள் பேசப்படுகின்றன என்பதைப்பொறுத்தே அந்த வானொலியை மக்கள் அடையாளம் காண்கிறார்கள். அப்படிக்கண்டு அதைத் தங்களுடன் இணைத்துக்கொள்வதற்கும் அதுவே காரணமாகிறது.

பல வானொலிகளிலும் இப்போது சரியான மொழிப்பிரயோகம் இல்லையென்று மூத்த வானொலி அறிவிப்பாளர்களே வெளிப்படையாக சொல்கிறாhர்கள். அத்துடன் இளைய தலைமுறை அறிவிப்பாளர்களில் பலர் வயிற்றாலும் மூக்காலுமே கதைக்கிறார்கள். ஆனால் வானொலியை புதிய தலைமுறை கூடுதலாக மக்கள் மயப்படுத்தியிருக்கிறது. வானொலியில் பின்பற்றப்பட்டு வந்த இறுக்கத்தன்மையான பல விசயங்களை விட்டு அதனை நெகிழ்ச்சிக்குரியதாக்கிஙிருக்கிறார்கள்.



முன்னர் வானொலி ஒரு அதிகார மையத்திலிருந்து ஒலிப்பதான உணர்வே இருந்தது. அரச ஊடகமாக அது இருந்தது இதற்கான முக்கிய கரணமாக இருக்கலாம். அதனால் அது அந்தத் தொனியைப் பேணியது. அத்துடன் ஒரு அரச வானொலிக்குரியவாறு பொறுப்புடன்கூடிய சீரியஸ் தன்மையையும் அது கொண்டிருக்க வேண்டியதாயிற்று. தாய் அல்லது தகப்பன் ஸ்தானத்திலிருந்து பேசவேண்டிய பொறுப்பு இது. ஆனால் தனியார் வானொலிகளின் வருகை இந்த நிலையைமுற்றாக மாற்றி விட்டது. தனியார் மயத்தின் விரிவாக்கம் எல்லாத்துறைகளிலும் ஏற்படுத்திய அதிர்வுகளும் மாற்றங்களும் வானொலியிலும் நிகழ்ந்தது. அறிவுறுத்தும் நிலை, உரையாற்றும் நிலை, கட்டளையிடும் தன்மை, தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற மாதிரியான மேல் கீழ் நிலை என்பனவற்றை முற்றாக நிராகரித்தன புதிய வானொலி முறைமைகள்.



புதிய முறைமைகளில் கேட்போருடன் நேரடியாக பேசுவதான உணர்முறையின் உருவாக்கம் நிகழ்ந்தது. அத்துடன் கேட்போரும் வானொலியில் நேரடியாகப் பங்கேற்றனர். தொலைபேசியூடான இந்தப் பங்கேற்பு வானொலியில் நிகழ்ந்த முக்கியமான மாற்றமே. வானொலி மக்கள் மயப்பட்டதுடன் அது ஜனநாயகப்பட்டதும் இங்கே ஏற்பட்டது. சில வானொhலிகள் இதனைச் சரியாகப்பேணுகின்றன. வேறுபலவோ இதனை மலினப்படுத்;தி சீரழிப்;பதையும் காணமுடிகிறது.



வெகுஜன ஊடகம் என்ற வகையில் அதிக பொறுப்பை கட்டாயம் பேணவேண்டிய கடமை வானொலிகளுக்குண்;டு. அதற்காக அவை இறுகிப்போயிருக்க வேண்டுமென்றில்லையே. அதேவேளை நேரத்தைக் கழிப்பதற்காக மட்டும் இயங்கவும் முடியாது. அநேக தமிழ் வானொலிகள் இப்போது தமிழகச்சினிமாவின் பாடல்களை ஆதாரமாகக்கொண்டே தமது ஒலிபரபபுச்சேவையை நடத்துகின்றன. தவிரவும் அதே சினிமாவில் கையாளப்படுகின்ற மலினமான உத்திகளையும் பேச்சு மொழியையும் பேசுமுறையையும் பின்பற்றுகின்றன.



வாய்த்த ஒரு புதிய முறைமையை மேல்நிலையில் விரிவாக்கம் செய்வதற்குப்பதிலாக அதனைத்தவறாகப்பயன்படுத்தி பெறுமதியற்றதாக ஆக்கும் காரியங்களே தொடர்கின்றன. ஜனநாயகத்தைப் பாழாக்கும் எதிர் நடவடிக்கை இது.


ஐ.பி.சி யில் இந்தமாதிரியான பிரச்சினையை நாம் காணவில்லை. எங்களுக்கு கிடைத்த அரைமணிநேர ஒலிபரப்பைக்கொண்டே இவ்வாறு கூறுகிறேன். ஐ.பி.சி யின் செய்திச்சேவை இதில் முக்கியமானது. தாயகத்தின் செய்திகள் இதில் விரிவாகச் சொல்லப்படுகின்றன. இதன்மூலம் புலத்திலும் தமிழகத்திலும் தாயகச்செய்திகள் அறியப்படக்கூடிய ஒரு வெளிப்பாட்டுத்தளம் நிpர்மாணிக்கப்பட்;டது. செய்தி அளிக்கையிலும் விரிவு, ஆழம், நேர்த்தி என்பனவுண்டு. தாசீஸிஸியஸ் இதற்கு முன்னோடியாக இருந்தார். அவர் முன்னர் பி.பி.ஸி யில் பெற்றிருந்த அனுபவம் இதற்குக் கைகொடுத்திருந்தது.

இப்போது புலத்தில் நிறைய வானொலிச்சேவைகளிருக்கின்றன. கனடா, ஒஸ்ரேலியா, பிரான்ஸ், லண்டன் எனப்பல இடங்களில் இருந்தும் பல ஒலிபரப்புகள் செய்யப்படுகின்றன. இதில் சில இணையத்திலும் ஒலிக்கின்றன. ஆனால் ஐ.பி.சி பெற்றிருக்கிற நெருக்கத்தையும் முக்கியத்துவத்தையும் இன்னும் பிற வானொலிகள் பெறவில்லை.



தமிழருக்கென்று ஒரு வானொலி இல்லாதிருந்த காலம் மாறி இப்போது தமிpழருக்கே அதிகமான வானொலிகள் என்றாகிவிட்டது.

Sunday, May 27, 2007

புதிய கொடிகள் அசைகின்றனவா? புதிய வழிகள் தெரிகின்றனவா?

சர்வதேச மயப்பட்டிருக்கிற இலங்கையின் இனப்பிரச்சினை அடுத்த கட்டத்தில் எப்படியான திருப்பங்களுக்கும் நிலைக்கும் உள்ளாகப்போகிறது என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது. இப்போது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரித்தானியா, சீனா, நோர்வே, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா எனப்பல தரப்பும் கூடுதலான அக்கறையைக் கொண்டிருக்கின்றன. இந்த அக்கறையை அவை வெளிப்படையாகவும் காட்டிக்கொள்கின்றன.



இனப்பிரச்சினை தொடர்பாக அபிப்பிராயங்களைச் சொல்லுதல், ஆலோசனைகளைத் தெரிவித்தல், தங்களின் விருப்பங்களை கோடிகாட்டுதல் என்றவாறாக இவற்றின் செயற்பாடுகளிருக்கின்றன.



முதல்முறையாக சீனாவும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையே சிறிலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.



இந்தத்தரப்பினர்தான் இன்று உலகின் அரசியல், பொருளாதார விசயங்களில் தீர்மானமெடுப்போராகவும் எதையும் கட்டுப்படுத்தும் வல்லமையுடையோராகவும் இருக்கின்றனர். இதில் நோர்வே சற்று விதிவிலக்கு. மற்றும்படி இன்றைய உலக ஒழுங்கில் செல்வாக்குச் செலுத்தும் தரப்பினராக இவர்களே இருப்பதால் இந்தத்தரப்பினரின் இலங்கை தொடர்பான அக்கறை கூடுதலான கவனத்திற்குரியதாகிறது.



எனவே இந்தத்தரப்பினரின் அக்கறையும் கவனிப்பும்; இந்தப்பிரச்சினையில் கூடுதலாக ஏற்பட்டிருப்பதால், இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாதது. அதிலும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் சற்றுக் கூடுதலாக இலங்கை விவகாரத்தில் கரிசனை கொண்டிருப்பதாக தெரிவதால் ஏதாவது மாற்றங்;கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு கூடுதலாக தமிழ்மக்களிடம் தானுண்டு. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வருந்தியவர்;கள் துன்பப்பட்டு வருகிறவர்கள் என்ற வகையில் இத்தகைய எதிர்பார்ப்பு அவர்களிடம் உருவாகியிருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு ஏதாவது பொருளுண்டா என்பதே இங்கே இப்போது அறியவேண்டியது.



இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக சர்வதேசக்கவனமோ அக்கறையோ முன்னரைவிடவும் அதிகமாயிருக்கிறது என்பது உண்மைதான். இப்போது தினமும் இந்த நாடுகளின் பிரதிநிதிகளில் யாராவது ஒருவர் இந்தப்பிரச்சினை குறித்து கதைத்தபடியே இருக்கின்றார். அறிக்கைகளும் அடிக்கடி வந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், அதற்காக நடைமுறையில் இனப்பிரச்சினை தீர்வை நோக்கிச் செல்லவுமில்லை. தமிழ்

மக்களின் வாழ்க்கைக்கு எந்தவிதமான உத்திரவாதமோ நம்பிக்கையோ ஏற்படவும் இல்லை. இந்தச்சர்வதேசக் கவனிப்பினால் சிறிலங்கா அரசினதும் சிங்களத்தரப்பினதும் அணுகுமுறையிலும் சிந்தனையிலும் எந்த மாற்றங்களையும் அவதானிக்கவும் முடியவில்லை.



அப்படியென்றால் இந்தத்தரப்பினரின் கவனிப்பின் பெறுமானம் என்ன என்ற கேள்வி பெரியதாகவே எழுகிறது. அதுவும் தமிழ்மக்களிடம் இது இன்னமும் ஆழமாக எழுகிறது.



முதலில் இந்த விவகாரம் பற்றிய சர்வதேசக்கவனத்தின் பெறுமானம் இன்றைய நிலையில் எத்தகைய பெறுமதிக்குரியது என்று பார்க்கவேண்டும். எத்தகைய நோக்கங்களுக்குரியதென்றும் கவனிக்க வேண்டும். அத்துடன் அரசாங்கமும் சிங்களத்தரப்பும் இந்தச்சூழலில் எப்படி இயங்குகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.



சர்வதேச சமூகம் என்பது இப்போது இரு நிலைகளையுடையதாக வளர்ச்சி பெற்று வருகிறது. முன்னர் அமெரிக்கா, ரஷ்யா என்று சொல்லப்;பட்ட இருதுருவ அரசியல் போய் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலகமே சர்வதேச உலகமாக மாறியிருந்த நிலை இப்பொழுது அடுத்தகட்டத்தை நோக்கி வளர்ச்சி பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதில் சீனா முக்கிய புள்ளியாக நொதிக்கிறது.



அமெரிக்கா தலைமையிலான விரிவாக்கத்துக்கு ஈடுகொடுத்து சீனாவும் தன்னுடைய விரிவாக்கத்தைச் செய்து வருகிறது. இதன்படி ஆபிரிக்க நாடுகளில் கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் சுவடுகள்தான் அதிகமாகியிருக்கின்றது. அதேபோல தென் ஆசியப்பிராந்தியத்திலும் சீனாவின் நிழல் விரிவடைந்து வருகிறது. தென் கிழக்காசியாவிலும் இதே நிலைமைதான்.



வளர்ச்சி பெற்றுவரும் சீனப்பொருளாதாரத்துக்கான சந்தைத்தேவை சீனாவை அதிகம் சுறுசுறுப்படையச் செய்திருக்கிறது. அடுத்தது சீனாவின் வேகஉற்பத்திக்குத் தேவையான அளவுக்கு மூலப்பொருளும் அவசியமாக இருக்கிறது. எனவே அதற்காக சீனா தன்னுடைய கால்களை அகல விரித்து வைக்கிறது. இந்தப்போட்டியில் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்வதற்காக சீனா பல பிராந்தியங்களிலும்; தனக்கான படைத்துறைத்தளங்களையும் ஸ்தாபித்து வருகிறது.



சீன விரிவாக்கம் மேற்குலகத்துக்கு விருப்பமானதல்ல என்றபோதும் உருவாகியுள் யதாhர்த்தத்தை அது அதிகம் உராய்வுகளில்லாமலே கையாளவும் தணிக்கவும் விரும்புகிறது.



இதன்படி சீனாவும் அமெரிக்காவும் அதிகம் தொலைவு மில்லாத அதிகமும் நெருக்கமும் இல்லாத ஒருவகையான இணைநிலையைக் கடைப்படிக்கின்றன. கடந்த ஆண்டு சீனத்தலைவர் அமெரிக்காவுக்குச் சென்றதும் அமெரிக்கத்தலைவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதும் பல விசயங்களில் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.



ஆனால் இந்த மென்னுறவுக்கு முன்னும் பின்னுமாக வல்லரசுகளுக்கடையிலான வெட்டி யோடுதல்களும் நடந்து கொண்டுதானிருக்கிறது.



சீனா மிக விரைவாகவும் ராஜதந்திரமாகவும் இந்த விசயத்தில் செயற்பட்டு வருகிறது. அதாவது அது கடந்த பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் கொண்டிருந்த வெளிப்படையற்ற தன்மையை விட்டுவிட்டது. இப்போது தான் போட்டியில் ஈடுபடும் ஒரு வலுவான தரப்பு என்பதை வெளிப்படையாக்கியுள்ளது.



இதேவேளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் சீனாவுக்;கெதிரான போட்டியிலும் விரிவாக்கத்திலும் வேகமாக இயங்கியே வருகின்றது. ஆக இருநிலைப் போட்டி என்பது மீண்டும் ஏதோ ஒருவகையில் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் இதன் அர்த்தம் முன்னர் இருந்ததைப்போல இருதுருவ அரசியல், பொருளாதார,படைபலப் போட்டியென்றில்லை. அப்படி இல்லை என்றும் இல்லை. இதுவொரு கலங்கல் நிலையிலான போட்டி. அதேவேளை இதன் தன்மையும் வடிவமும் வேறானது.



இந்தப்போட்டிக்குள் சில நாடுகள் சிக்குப்பட்டிருக்கின்றன. சில நாடுகள் இதற்குள் தமது சாதுரியமான சிந்தனையாலும் புத்திபூர்வமான நடவடிக்கைகளாலும் லாபத்தையும் பெற்றுக்கொள்கின்றன. இலங்கை இதில் இரண்டாவது வகையில் புத்தி பூர்மாக செயற்பட்டு தன்னுடைய லாபங்களையும் நோக்கங்களையும் அடைகின்றது.







இந்த அணுகுமுறையைத்தான் இப்போது சிறிலங்கா அரசும் பின்பற்றுகிறது. அது தன்;னுடைய இனவாத நடைமுறையைப்பின்பற்றுவதற்காக சீனாவின் பக்கமும் சாய்கிறது. தேவையானபோது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உலகத்தின் பக்கமும் சாய்கிறது. அப்படிச்சாய்ந்தே அது தன்னுடைய தேவைகளையும் நலனையும் நிறைவேற்றிக்கொள்ளுகிறது.



சிறிலங்கா அரசு இப்;படியெல்லாம் டபிள்கேம் அடிக்கிறது என்று அமெரிக்காவுக்கும் தெரியும். சீனாவுக்கும் தெரியும். ஏன் இதெல்லாவற்றையும் இந்தியாவும் அறியும். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அவரவர் தேவை,அவரவருக்கான நலன் என்ற அடிப்படைதான் இங்கே முக்கியமானதாக இருக்கிறது. அதன்படியே அரசியலும் அதன் அறமும் அக்கறைகளும் கருணையும் இருக்கின்றன.



தன்னுடைய இனவாதப்போக்கைப்பலமாக்குவதற்கு சிறிலங்கா அரசு, உலகத்தின் பெருந்தரப்புகள் எல்லாவற்றையும் தனக்குச்சாதகமாகவே பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்போதும் அப்படியே அவற்றைப்பயன்படுத்தி வருகிறது.





ஆக ஒருவருக்கொருவர் தேவையாக இருப்பதன் அவசியத்தை வைத்துக்கொண்டு அவரவர் அரசியல் நடக்கிறது. அந்த அரசியலன்படிதான் அறம் நீதி. நியாயம்,மனித உரிமைகள் எனச் சகலதும் பார்க்கப்படுகின்றன.



இதற்குள் இந்த அண்டிப்பிழைக்கும் தரப்புகள் என்று சொல்;லக்கூடிய நாடுகள் தமது தவறான அரசியலை மிக வெற்றிகரமாக நடத்திவிடுகின்றன. இது அரபுலகத்திலும் நடக்கிறது. இங்கேயும்; நடக்கிறது.



பிற்போக்குச் சக்திகளும் மதவாத, இனவாத அரசுகளும் ஏன் அரசல்லாத தரப்புகளும் இந்தவாய்ப்பை தாராளமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இதற்கு ஏராளம் உதாரணங்களுண்டு.



இலங்கை அரசும் இந்த பொது உபாயத்தையே பின்பற்றி தன்னுடைய இனவாதத்தை தமிழரின்மீது பிரயோகிக்கிறது. இங்கே கவனிக்கவேண்டிய முக்கியமான விசயம் ஒன்றுண்டு.



இலங்கையில் இனப்பிரச்சினை உண்டென்ற விசயம் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாங்கம் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றும் இந்தத்தரப்புகள் நீண்டகாலமாகச சொல்லி வருகின்றன. அதற்கு இராணுவ வழிமுறை ஒரு போதும் தீPர்வாகாது என்றும் இந்;தச்சகலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால் சிறிலங்கா அரசோ இவையெல்லாவற்றுக்கும் நேர்மாறாகவே நடந்து கொள்கிறது. அப்படி அது நடந்துகொள்வதற்கான துணிபென்பது என்ன என்றே தமிழ் மக்கள் கேட்கிறார்கள்.



அதிலும் இனப்பிரச்சினை தீர்க்ப்பட வேண்டும் என்று பலரும் கடுமையாக வலியுறுத்தியும் வற்புறுத்தியும் வருகின்ற சூழலில் அதைப்புறந்தள்ளி விட்டு அது போரிலே ஈடுபட முனைப்புக்காட்டுவதென்பது சாதாரணமானதல்ல. அத்துடன் இவ்வளவு நிலைமைகளுக்கப்பாலும் எந்த வகையான அடிப்படைகளுமில்லாத தீர்வொன்றை ஆளும் கட்சி முன்வைக்கத்துணிந்ததும் நமது கவனத்திற்குரியது.



இப்போது இவற்றை நாம் தொகுத்துப்பார்ப்பதன் மூலம் நமக்குச் சில உண்மைகள் தெரியவரும். சர்வ தேச சமூகத்தின் கண்டனங்களும் வற்புறுத்தல்களும் சிறிலங்கா அரசை பெரிதும் பாதிக்காது. அப்படிப்பாதிக்கக்கூடிய அரசியற் பின்புலம் இப்போது இலங்கைக்கு இல்லை.



இலங்கையை இந்தியாவும் கைவிட முடியாது. இந்தியாவுடன் இணைந்து மேற்குக்கூட்டணியும் கைவிடவியலாது. அதேபோல சீனாவும் இதைப்பாராமுகமாக இருக்க முடியாது.



ஒரு உதாhரணத்தை இங்கே சொல்லவேண்டும். விடுதலைப்புலிகளின் வான்படையினால் ஏற்படக்கூடிய போர் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக சிறிலங்கா சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் உதவியைக் கோரியுள்ளது.



இந்த இடத்pல் சீனாவின் உதவியைச் சிறிலங்கா பெறுவதை இந்தியா அனுமதிக்க முடியாது. அப்படி அது இப்போது அனுமதித்தால் பின்னர் சீனாவின் நேரடியான புலனாய்வு அவதானிப்புக்கும் அச்சுறுத்;தலுக்கும் தொல்லைக்கும் ஆளாக நேரிடும். எனவே இந்தியா தானாகவே வலிந்து சிறிலங்காவிற்கான பாதுகாப்புக்கு இப்போது உதவவேண்டும். இதுதான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்.



இப்படித்திரைக்குப் பின்னால் ஏராளம் சங்கதிகளுண்டு.



மேற்குலகம் தன்னுடைய நவீன அணுகுமுறையின்படி அதிகம் நேரடியான தலையீட்டுத்தன்மையை விலக்கிச் செயற்படடு வருகிறது. அதனால் அது ஜனநாயகம், மனித உரிமைகள், அரசியற் தீர்வு என்றவாறாகப் பேசுகிறது. அதாவது ஒரு வகையான கனவான தனத்தை அது காட்டுகிறது. இன்றைய நாகரீகமான அரசியற் தலையீட்டை இந்த அணுகுமுறையிலேயே மேற்கு செய்கிறது.



எனவே தன்னுடைய செல்வாக்கிற்குட்பட்ட நாடுகளில் மனித உரிமை விவகாரங்களை அது வலியுறுத்துகிறது. அதற்காக இந்த விசயங்களெல்லாம் அங்கே முழு அளவில் கடைப்பிடிக்;கப் படுகின்றன என்;று அர்த்தமில்லை. ஆனால் மேற்கு இது தொடர்பாக கூடுதலாகப் பேசியும் வலியுறுத்தியும் வருகிறது.





இதேவேளை சீனா தன்னுடைய விரிவாக்கத்துக்காக பல முனைகளிலும் தேவையான சக்திகளை அரவணைக்கிறது. இதில் அது தனக்கிசைவான தரப்பை உருவாக்குகிறதே தவிர அந்தத்தரப்புகளின் உள்நாட்;டரசியல் குறித்து அது அதிகம் கவனம் செலுத்துவதில்லை.



சம்மந்தப்பட்ட நாடு உள்நாட்டில் மிக மோசமான போரையோ ஒடுக்கு முறையையோ மக்கள் மீது நடத்தினாவும் அது அதைப்பற்றி எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டுவதில்லை. அது தனக்குத் தேவையான பொருளாதாரத் தளத்தைப்பற்றியும் தனது விரிவாக்கத்துக்கான சாதக நிலைபற்றியுமே அதிகம் சிந்திக்கிறது. அதன்படி அது ஓடுக்குமுறையை மேற்கோள்ளும் அரசுக்கு தாராளமாக ஆயுத உதவி உட்;பட சகல ஆதரவையும் உதவிகளையும் வழங்குகிறது.



இடதுசாரி அரசொன்று எப்படி இவ்வாறு இயங்க முடியும் என்று யாரும் ஆச்சரியத்தோடு கேட்கலாம். பத்தாண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவுக்கு சீனா பெருந்தொகையான ஆயதங்களை வழங்கியிருந்தபோது சீனச்சார்பு கொம்யூனிஸ்ட் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டேன்.



எப்படி ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் ஒரு இனவெறி அரசுக்கு சீனா இப்படி இராணுவ உதவிகளை வழங்கமுடியும் என்ற என்னுடைய கேள்விக்கு அந்த நண்பர் சொன்ன பதில், இப்போது சீனா ஒரு வளர்ந்து வருகின்ற பெரும் வல்லரசாகியிருக்கிறது. அதனால் அதன் வளர்ச்சியை மேலும் விரிவாக்க அது இந்தமாதிரி காரியங்களில் ஈடுபட்டே தீரும். நமது விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் அப்பாலானது இந்த அணுகுமுறை. அமெரிக்காவுக்குப்போட்டியான ஒரு நிலையை அது எதிர்கொள்ளத்தொடங்கியுள்ளது. எனவே அது ஒடுக்கப்படும் மக்களைப்பற்றியெல்லாம் இனி அக்கறைப்படுமென்று சொல்லமுடியாது என்று.



ஏறக்குறைய அந்த நண்பர் இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் அப்போதே சொல்லியிருந்தார். அவர் அப்போது சொன்னவைதான் இப்போது நடந்து கொண்டிருப்பதாகப் படுகிறது.



எனவே இத்தகைய அதிகாரப்போட்டி உலகத்தில் இரு வேறான தலையீடுகள், அணுகுமுறைகளின் மத்தியில் நமது பிரச்சினை இருக்கிறது. இதில் மேற்குலகம் இப்போது சிறிலங்கா அரசுக்கு வழமையை விடவும் சற்று அதிகமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. சிறிலங்காவில் அதிகரித்திருக்கும் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து அது தொடர்ச்சியாக கண்டனங்களை வெளியிட்டு வருகிறது.



மேற்குலகத்தின் கனவான் தனமான இந்த துப்புரவுப்பணியில் சிறிலங்கா அரசின் ஒத்துழைப்புப் போதாது என்பதே இப்போதுள்ள பிரச்சினை. மேற்குலகம் சிறுவர் உரிமைகள், பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை விசயங்களில் அதிக கவனத்தையும் கொண்டிருக்கிறது. இதற்காக அது பெருந்தொகையான நிதியையும் ஆண்டுதோறும்; செலவழிக்கின்றது. அத்துடன் இதற்காக அது நிறையத் தொண்டு நிறுவனங்களையும் களப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதிலும் இந்த நிறுவனங்;களும் களப்பணியும் மூன்றாம் உலக நாடுகளிலேயே அதிகமாக மையமிடப்பட்டுள்ளன.



எனவே இந்த அடிப்படையில் சிறிலங்கா இப்போது மனித உரிமைகள் விவகாரத்தில் பொறுப்புச்சொல்ல வேண்டிய கட்டத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டே இப்போது அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கை இனப்பிரச்சினை பற்றி அதிகமாகக் கதைககின்றன.



ஆனால் இந்தத்தரப்பின் கண்டனங்களையும் கருத்துகளையும் சிறிலங்கா கவனத்தில் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. பதிலாக இன்னும் அது போர் முனைப்போடு இருப்பதாகவே தெரிகிறது. போரைத்தீவிரப்படுத்தும்; போக்கையே அவதானிக்கவும் முடிகிறது. இராணுவ வழித்தீரவிலேயே அது முழு அக்கறை கொண்டுமிருக்கிறது.



மேற்குலகம் கண்டனங்களைத்தெரிவிக்கும்போது சிறிலங்கா சீனாவின் பக்கம் சாய்ந்து தன்னுடைய தேவைகளையும் நலனையும் பெறுகிறது. அதனால் அதற்கு இந்தக்கண்டனங்கள் அதிக அழுத்தத்தையோ நெருக்கடியையோ கொடுப்பதாக இல்லை.



மேற்கு இறுக்கத்தை ஏற்படுத்தும்போது அதிலிருந்து விடுபடுவதற்காகவும் தனது இனவாத நடவடிக்கையை தொடரவும் சிறிலங்கா சீனாவைப் பயன்படுத்துகிறது.



இவ்வாறு இந்த இரட்டை உலகத்தை சாதுரியமாக பயன்படுத்தும் சிறிலங்காவை வெளியுலகத்தின் எந்த மென் அழுத்தங்களும் மாற்றத்துக்குள்ளாக்கப்போவதில்லை. ஆகையால் இன்றுள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் அக்கறைகளையிட்டு தமிழ்மக்கள் அதிகம் திருப்பங்களை எதிர்பார்க்கமுடியாது. துவிர ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன ஒடுக்கு முறையை வெற்றிகரமாக செயற்படுத்தி வந்த கொழுத்த அனுபவம் சிறிலங்காவுக்கு இருக்கிறது என்பதையும் இங்கே நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.





அதேவேளை முதற்தடவையாக சீனா உட்பட சகல வெளிச்சக்திகளும் ஒரே நேர்கோட்டில் இபபோது இனப்பிரச்சினை பற்றி பொதுச்சிந்தனைக்கு வந்துள்ளன.



இந்தப்பொதுச் சிந்தனை வளரச்சி பெற வேண்டும். அதாவது அமெரிக்கா தலைமையிலான தரப்பும் சீனாவும் இந்திய, ஜப்பான் உள்ளிட்ட பிற தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டில் இந்தப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் வரவேண்டும்.



இத்தகையதொரு நிகழ்ச்சி நிரலைத்தயாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது என்பது உண்மை. அதாவது சிறிலங்காவின் ஜனாதிபதி திரு மகிந்த ராஜபக்ஸ எவரையும் எடுத்தெறியும் போக்குடையவர். அதேவேளை தீவிர இனவாதக்கூட்டணியுடன் சேர்ந்துகொண்டு இராணுவத்தீர்வில் அவர் கடுமையான நாட்டத்தோடு செயற்பட்டு வருகிறாhர். இதைத்தவிர அவருடைய நிகழ்ச்சி நிரலிலும் மனதிலும் மூளையிலும் வேறு தெரிவேயில்லை. இது சர்வ தேச சமூகத்தை ஒரு மையத்தில் குவிப்பதற்கு உதவலாம். சிங்களத்தரப்பும் மாற்று அபிப்பிராயமில்லாமல் போருக்கே ஆதரவளித்து வருவதால் இதற்கான சந்தர்ப்பம் இன்னும் அதிகித்திருக்கிறது என்றே சொல்ல முடியும். ஆனால் இப்பொழுதுள்ள கவனிப்பும் கரிசனையும் மட்டும் போதாது.



இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்பும் சற்று வேகமாகவும் நிதானமாகவும் புத்திபூர்வமாகவும் செயற்பட வேண்டிய காலகட்டம் இது. தமிழர் தரப்புக்கான அருமையான சந்தர்ப்பத்தை சிங்களத்தரப்பும் திரு மகிந்த ராஜபக்ஸவும் உருவாக்கி வருகிறார்கள். இதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கு களத்திலும் புலத்திலும் நொதியங்கள் உடன் தேவை.







இப்போது இவற்றை நாம் தொகுத்துப்பார்ப்பதன் மூலம் நமக்குச் சில உண்மைகள் தெரியவரும். சர்வ தேச சமூகத்தின் கண்டனங்களும் வற்புறுத்தல்களும் சிறிலங்கா அரசை பெரிதும் பாதிக்காது. அப்படிப்பாதிக்கக்கூடிய அரசியற் பின்புலம் இப்போது இலங்கைக்கு இல்லை.



இலங்கையை இந்தியாவும் கைவிட முடியாது. இந்தியாவுடன் இணைந்து மேற்குக்கூட்டணியும் கைவிடவியலாது. அதேபோல சீனாவும் இதைப்பாராமுகமாக இருக்க முடியாது.



ஒரு உதாhரணத்தை இங்கே சொல்லவேண்டும். விடுதலைப்புலிகளின் வான்படையினால் ஏற்படக்கூடிய போர் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக சிறிலங்கா சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் உதவியைக் கோரியுள்ளது.



இந்த இடத்pல் சீனாவின் உதவியைச் சிறிலங்கா பெறுவதைத இந்தியா அனுமதிக்க முடியாது. அப்படி அது இப்போது அனுமதித்தால் பின்னர் சீனாவின் நேரடியான அச்சுறுத்;தலுக்கும் தொல்லைக்கும் ஆளாக நேரிடும். எனவே இந்தியா தானாகவே வலிந்து சிறிலங்காவிற்கான பாதுகாப்புக்கு உதவவேண்டும். இதுதான் இப்பேபாது நடந்து கொண்டிருப்பதும். இப்படித்திரைக்குப் பின்னால் ஏராளம் சங்கதிகளுண்டு. அதையெல்லாம் கணக்கிலெடுத்தக்கொண்டே தமிழர்கள் தமது பாதையையும் பயணத்தையும் தீர்மானிக்க வேண்டும்.

தலைப்பு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அரசு பெருங்குற்றத்தை செய்து வருகிறது. தான் பாதுகாக்க வேண்டிய மக்களை அது கொன்றும் ஒடுக்கியும் வருகிறது. வெளிப்படையாகவே இனப்பாகுபாட்டையும் அநீதியையும் இழைத்து வருகிறது. அதுவும் சிறுபான்மையாகவுள்ள மக்களின் மீதே இந்தக்; கொடுமைகளை அது பிரயோகித்து வருகிறது. இதற்கெல்லாம் எப்படிச் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறது என்று கடுங்கோபத்துடன் ஒரு முதியவர் கேட்டார்.



அவரை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்தேன். பதினைந்து ஆண்டுகள் தான் அகதியாக இருக்கிறேன் என்று சொன்னார். இந்தப்பதினைந்து ஆண்டுகளில் தான் மூன்று தெரிதலில் அகதியாக இருந்து கொண்டே வாhக்களித்தேன் என்றும் கூறினாhர்.



அவர் பதினைந்தாண்டுகளில் பதினொரு வீடுகளுக்கு மாறியிருக்கிறார். அந்தப்பதினைந்தும் வீடுகள் என்றும் சொல்ல முடியாது. அநேமாக அவற்றில் ஒன்றிரண்டைத்தவிர மற்றெல்லாமும் குடிசைகளே. அவருக்கு சொந்தமாக நிலமுண்டு. ஆனால் அங்கே அவர் இருப்பதற்கு அனுமதியில்லை. அங்கே போகவும் முடியாது. அவர் தன்னுடைய கட்டிய வீடுண்டு. ஆனால் அதில் அவரால் வாழமுடியாது. அந்த வீட்டுக்குப்போவதற்கு அவருக்கு அனுமதியுமில்லை. அதெல்லாம் இப்போது உயர்பாதுகாப்பு வலயம் எற்றாக்கப்பட்டு விட்டன. அதனால் இவற்றிலெல்லாம் அவருக்கு இப்போது உரிமையுமில்லை.



அவருடய காணி, வீடு எல்லாம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு சிறு பாதுகாப்பும் இல்லை. அவர் அகதி அட்டையுடன் அலைந்து கொண்டிருக்கிறார்.



இது அந்த முதியவருக்குமட்டுமான தனியான ஒரு பாதிப்பல்ல. இலங்கைத்தீவில் வாழுகின்ற தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு நிகழ்ந்துள்ள பொதுவான நிலை. அதுவும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் அல்லது தாயகப்பிரதேசம் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளில் இதுதான்,இப்படித்தான் நடந்துள்ளது.



கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இனவன்முறைகளின்போது தமிழர்கள் சிங்களப்பகுதிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். அப்போதவர்கள் பாதுகாப்புத்தேடி தமது தாயகத்துக்கே ஓடி வந்தார்கள். இவ்வாறு நவீன இலங்கையின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் நான்கைந்து தடவைகள் விரட்டப்பட்டிருக்கிறார்கள்.



சிங்கள தேசத்தில் அல்லது சிங்களப்பபகுதிகளில் தமிழர்கள் நிரந்தரமாக வாழமுடியாது என்ற நிலையையும் உணர்வையும் உண்மையையும் அந்தச்சம்பவங்கள் காட்டின.



அதன்பிறகு இப்போது, தமிழர்கள் தமது சொந்த நிலத்திலேயே நிம்மதியாக வாழமுடியாது என்றாகி விட்டது. தமிழ் மக்களின் தாயகப்பிரதேசம் பெரும் இராணுவ வலயங்களாககப்பட்;டுள்ளது. மக்களோ அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அதுவும் லட்சக்கணக்கான மக்கள் இருபதாண்டுக்கும் மேலாக அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.



இலங்கையின் புதிய வரலாற்றில் இதெல்லாம் புதிய விசயங்களில்லை. எண்பதினாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவும் புதியதல்ல. இனப்பிரச்சினை தீர்க்கப்படுமென்று சொல்லிச்சொல்லியே அரசாங்கத்தால் தமிழ்மக்களின் மீது போர் தொடுக்கப்;பட்டும்; தொடரப்பட்டும் வருகிறது. அதுவும் புதியதல்ல. இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை அரசாங்கம் நம்ப வில்லை என்றும் அரசியற் தீர்வின்மூலமே அதனைத்தீர்க்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. பதிலாக இப்படிச்சொல்லிக்கொண்டே பெரும் படையெடுப்புகளும் நில ஆக்கிரமிப்புகளும் தொடரப்படுகின்றன. இவையும் புதியனவல்ல.



அப்படியென்றால் எதுதான் புதியதென்று நீங்கள் இப்போது கேட்கக்கூடும். அப்படி நீங்கள் கேட்டால் சந்தேகமேயில்லை. நீங்கள் புத்திசாலிதான்.



வரலாற்றில் முன்னகரும் சக்திகளிடமும் தரப்பினரிடமும்தான் புதமையும் புதியவையும் இருக்கும். அவைதான் வளர்ச்சிப்போக்கில் எப்போதும் புதியனவற்றை உருவாக்குவதும் புதியன குறித்துச் சிந்திப்பனவாகவுமிருக்கும். அதற்கு மாறாக வரலாற்றின் இயங்குவிசைக்கெதிராக செயற்படுவோரிடம் புதியனவற்றையும் புதுமையையும் யாரும் எதிர்பார்க்க முடியாது.



சிறிலங்காவில் புதமைக்கெப்படி இடமிருக்க முடியும். இன்றைய உலகம் விரைவும் நுட்பமும் இலகுவும் பொதுத்தன்மையும் நிரம்பியது. இதன்படியே அது தொழிற்படுகிறது. போட்டியும் ஆற்றலும் நிரம்பிய உலகில் பன்முகத்தன்மைக்கு அதிக இடமளிக்கும் போக்கு அதிகரித்துச் செல்கிறது. விடுதலை குறித்த எண்ணங்கள் விரிவடைந்து வளர்ச்சி பெற்றுவருகின்றன. பெண் விடுதலை, சிறுவர் உரிமைகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள் எனச் சகலரையும் பொதுத்தளத்துக்கு உயர்த்தி எல்லோரின் ஆற்றலையும் பெறும் போக்கு விருத்தியாகிவருகிறது.



படுமோசமான அடக்கு முறைகளையும் அடிமைமுறைகளையும் கடைப்பிடித்த நாடுகளும் தரப்பினரும் தாம் முன்னர் அப்படி நடந்து கொண்டதற்காக வருத்தமும் வெட்கமும் அடைகின்றனர். அந்த வெட்கக் கேடான, வருத்தந்தரும் அனுபவத்திலிருந்து பாடங்களைப்பெற்றுக்கொண்டு அவர்கள் புதிய உலகம் பற்றி சிந்திக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சிந்திப்பதன் மூலம் புதிய உலகத்தைப் படைக்கவும் விரும்புகிறார்கள். அவர்கள்தான் அடுத்துவரும் உலகத்தை ஆளவும் கூடிய பெறுமானத்தையும்; தகுதியையும் பெறுகிறார்கள்.



ஆனால் இந்தப் பேருண்மையை விளங்கவே மாட்டாம் என்று சிங்களத்தரப்பும் சிறிலங்கா அரசும் தானும் கெட்டு தமிழ் மக்களையும் கெடுத்துக்கொண்டிருக்கிறது.



அது வரலாற்றின் இயங்குவிதியிலிருந்து தனிமைப்படவே விரும்புகிறது. இனவொடுக்கு முறை என்பது அறிவும் மாண்பும் நிரம்பிய சமூகங்களில் வெட்கந்தரும் ஒரு விவகாரமாகும். அதிலும்; ஆட்;சிப்பொறுப்பிலிருக்கும் பெரும்பான்மையானோர் தமது ஆட்;சிக்குட்பட்டிருக்கும் மககள்திரளை மிகக் கண்ணியமாகவும் பொறுப்போடும்; நடத்த வேண்டும். அரசு அதற்குரிய தகுதியை தான் கொண்டிருக்க வேண்டும்.



அவ்வாறு அது தன்தகுதியை கொண்டிருக்கவில்லை என்றால் அதற்குரிய மதிப்பு உள்ளரங்கிலும் கெட்டு விடும். வெளியுலகிலும் சரிந்து விடும். சிறிலங்காவுக்கு நெர்ந்திருப்பது இப்போது இதுதான்.



தமிழழ் மக்கள் சிறிலங்கா அரசை தங்களுடைய அரசாக கருதுவதை எப்போதோ விட்டுவிட்டார்கள். அவர்கள் நாற்பது ஆண்டுகளுககும் மேலாக இதனை வலுவாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்தக் காலப்பகுதியில் நடந்த தேர்தல்களின் மூலம் அவர்கள் எதனை விரும்புகிறாரகள் என்றும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். பின்னரும் அரசாங்கத்தின் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் தமது விருப்பு வெறுப்புகளையும் நிலைப்பாட்டினையும் ஏன் எதிர்ப்பினையும் கூட தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.



அனால் இவையெல்லாவற்றையும் சிறிலங்கா அரசாங்கமும் சிங்களளத்தரப்பும் கவனத்தில் எடுக்கவேயில்லை. பதிலாக அது மீண்டும் மீண்டும் போர் முனைப்போடும் இனவெறியோடும்தான் இயங்குகிறது.



ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிரச்சினை தீர்க்கப்படாது இருக்கிறது என்றால் அந்த நாடு எப்படி உருப்படும் என்ற சாதாரண கேள்வியை நீங்கள் ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். இந்த அரை நூற்றாண்டிலும் போருக்கும் இன ஒடுக்கு முறைக்குமாக எவ்வளவு பெருந்தொகைப்பணம் செலவழிக்கபபட்டிருக்கிறது. எத்;தனை ஆயிரம் உயிர்கள் தமிழர் தரப்பிலும் சிங்களத்தரப்பிலுமாக இது வரையில் பலியெடுக்கப்பட்டுள்ளன.



பல கோடீ ரூபாய்கள் பெறுமதியான சொத்துகளும் இயற்கை வளமும் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்ட்டும்; இருக்கின்றது. முன்னர் காங 'கேசன்துறையில் சீமெந்து ஆலை, பரந்தனில் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, மட்க்களப்பு வாழைச்சேனையில் இலமனையிற் ஏற்றுமதி என்று பல வருவாயையும் தொழில் வளத்தையும் தரக்கூடிய தளங்களிருந்தன. தவிர, இலங்கையின் கடல் வளத்தின் பெரும்பகுதியான வடக்குக் கிழக்கிலிருந்து கடல் உணவும் அந்தப்பொருட்களும் தாhராளமாக எடுக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அவை எதுவும் இல்லாமல் முடக்கப்பட்டு விட்டன.



ஐக்கியம் பற்றி பேசுகின்ற சிங்களத்தரப்பாளர்கள் இவ்வாறான குருட்டுத்தனமான ஒடுக்குமுறையாலும் பாரபட்சத்தாலும் இழக்கப்பட்ட தேசிய வருமானத்தையிட்டு எத்தகைய புரிதலைக்கொண்டிருக்;கிறார்கள.



தவிரவும் நாட்டைச்சேதப்படுத்தும் மையப்பிரச்சினையைத் தீர்க்கும் திராணியற்றுமிருககிறர்கள். அதிலும் இந்தப்பிரசச்pனையை இலகுவாகத்தீர்க்கக்கூடிய அதிக பட்சமான ஒத்தழைப்பைத்தமிழர்கள் வழங்கியபின்னரும் அவர்கள் இதனைத்தீர்க்க வில்லை என்பது இங்கே கவனத்திற்குரியது.



அத்துடன் இந்தப்பிரச்சினை உள்@ர் மட்டத்pலானபிரச்சினை என்ற கட்டத்தைக் கடந்து பிராந்தய மட்டத்த எடடியபோதுகூட இதைத்தீர்ப்பதற்கான ஆதரவு கிட்டியது. ஆனால் அதனையும் சிறிலங்கா தவறவிட்டது மட்டுமல்ல அது இந்தப்பிராந்தியத்தில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கும் விவகாரங்களை உருவாக்கியது. அத்துடன் சிறிலங்கா அரசு இன்னும் இந்தப்பிரச்சினையை தீர்க்;காமல் இழுத்தடிப்பதன் மூலம் இன்னுமின்னும் இந்தப்பிராந்தியத்தின் அமைதிக்கு எதிராகவே இயங்குகிறது.



இதனைச் சுரக்கமாக விளங்குவதாயின் இலங்கைத்தீவு என்பதை ஹெல உறுமயக்காரர்கள் சொல்லுவதைப் போல அரசாங்கம் சிங்களவருக்கு மடடுமே உரியதென்று கருதுகிறது. அதுதான் அடிப்படையானது. இந்த அடிப்படையிலேயெ அதன் அனைத்து நடவடிக்கைகளும்; நடந்து வருகின்றன.



சிறிலங்காவின் படைத்துறை முற்று முழதாக சிங்களவர்களைக்கொண்டே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. படையணிகள், றெஜிமென்ட் களுக்கு சூட்டப்பட்ட பெயர்வரை இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.



அதேபோல அரசாங்கம் நியமித்துவரும் வெளிநாட்டுத்தூதுவர்கள, அரசாங்க அதிபர், ஆளுநர்; எனப்பல நிர்வாக அதிகாரிகள் வரையில் படைத்துறையாளர்;ளையே இதற்குத் தெரிவு செய்யப்படுகின்றனர்.



மேலும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் அந்த வழியான அணுகுமுறைக்கும் கொடுக்கப்படும் அக்கறைகளில் சிறிதளவேனும் அரசியல் தீர்வுக்கான முயற்சிக்கோ அது குறித்த சிந்தனைக்கோ அளிப்பதில்லை.



எனவே தொடர்ந்தும் அது பெருந்தவறையே செய்ய முயற்சிக்கிறது. இப்Nபோது சர்வ தேசத்துக்கு ஒரு நெருக்;கடி ஏற்பட்டிருக்கிறது.



சர்வதேச நிகழ்ச்சி நிரலின்படி மனித உரிமை மீறல்கள், இன ஒடுக்குமறை மற்றும் அடிப்படைவாத பண்புகளை அது நிராகர்த்தும் கண்டித்தும் வருகிறது. இந்தமாதிரியான விசயங்களெல்லாம் புதிய வணிக உலகத்துக்கு இடைஞ்சலானவை என்பது அதன் நிலைப்பாடு.



ஆகையால் சர்வதேச சமூகம் இப்போது இந்தப்பிரச்சினையில் கூடுதல் அக்கறை காட்ட முயற்சிக்கிறது. ஆனால் பழமைவாதத்திலும் மதத்திலும் இனவெறியிலும் ஊறிக்கிடக்கும் சிங்கள தேசத்தை அதனால் எழுப்ப முடியுமா என்பது சந்தேகம்தான்.



சிறிலங்கா தனக்குக் கிடைக்கும் அரிய மூன்றாவது சந்தர்ப்பத்தையும் விழிப்புணர்வில்லாமற் தவறவிட்டது. அது மட்டுமல்ல அது நோர்வே என்ற மென்போக்குடைய நாட்டையும் அதன் பின்னால் நின்ற சர்வதேச சமூகத்தையும் கூட புறக்கணித்தது.



அதன்விளைவுகள் தான் அது இப்பொழுது அறுவடை செய்து கொண்டிருக்கின்ற சர்வதெசக் கண்டனங்கள் என்பது.



சிறிலங்காவின் வரலாற்றிpல் அது இப்போது பெற்றுவரும் சர்வதேசக்கண்டனம் அளவுக்கு முன்னர் ஒர போதும் பெற்றதில்லை. இப்போது அரசாங்கத்துக்கு வெளியுலகம் விதித்து வரும் நெருக்கடியளவுக்கு மனனர் நெருக்கடிகள் ஏற்படவுமில்லை.



இவையெல்லாம் உணர்த்துகின்ற உண்மைள் மிகச் சாதாரணமானவை. கெடுகுடி சொற்கேளாது, வினை விதைத்தவன் வினை அறுப்பான், அன்று விதைத்தது இன்று விளைந்திருக்கிறது என்ற பழகிய உண்மைகளே.



அந்த முதியவரின் கண்ணீரில் தெரிவதென்ன சொல்லுங்கள்?

இருகுச் சந்திரயோகம்..(

இரண்டுவழிகளால் எப்போதும் உதவிகளும் நன்மைகளும் கிடைப்பதை இருகுருச் சந்திர யோகம் என்று சோதிடத்தில் சொல்லுவார்கள். இங்கே சோதிடம் பற்றி நாம் அதிகம் பேசவில்லை. ஆனால் இந்த இருகுருச்சந்திர யோகத்தைப்போல எப்போதும் சிறிலங்கா அரசுக்கு உதவிகளும் நன்மைகளும் கிடைப்பதைப்பற்றியே பார்க்கிறோம்.

அதுவும் போர், மனித உரிமை மீறல்கள், இனப்பிரச்சினைக்குத்தீர்வு காணாது இழுத்தடித்தல் என்று நாட்;டைப்பாழ்படுத்தும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும்போதே இந்த உதவிகள், இரண்டுவழியான உதவிகள்,இருகுருச்சந்திரயோக உதவிகள் சிறிலங்காவுக்கு கிடைத்துக் கொண்டிருக்கினறன.

சிறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களை தொடர்கிறது, அதிகரித்திருக்கும் வன்முறையைக்கட்டுப்படுத்த அது தவறி விட்டது என்றெல்லாம் சொல்லி அதற்கு நிதி உதவி அளிப்பதைப்பற்றி மீள் பரிசீலனை செய்யவுள்ளோம் என்பதாக சில நாடுகள் அறிக்கைவிட்டன.

சிறிலங்காவின் திருப்தியற்ற நடவடிக்கைகள் காhரணமாக நிதி முடக்கத்தைச் செய்வதாக கடந்த வாரங்களில் பிரிட்டன் கூடச் சொல்லியிருந்தது. அதற்கு முன்னர் ஜேர்மனியும் இத்தகைய அறிவிப்பைச் செய்திருந்தது. தொடர்ந்து இது மாதிரி பல தரப்பினரும் சிறிலங்கா அரசை எச்சரிப்பது போல அறிவிப்புகளைச் செய்தனர். ஐ.நா கூட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவை பல வகையிலும் குறறம் சாட்டியும் அறிவுறுத்தியும் எச்சரித்துமிருந்தது.

ஆனால் இந்த எச்சரிக்கைகள் பற்றியெல்லாம் சிறிலங்கா அரசு அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. இந்த அறிவிப்புகளால் உள்@ர அதற்கு நெருக்கடியோ அச்சமோ ஏற்பட்டிருக்;கலாம். ஆனால் அது வெளிப்படையாக உசார் நிலையிலேயே இருக்கின்றது. அப்படி இருக்கக்கூடிய மாதிரியே இன்னும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகளிருக்கின்றன.

" வேண்டுமானால் இலங்கைக்கு யாரும் உதவி செய்யலாம். ஆனால் அதற்காக யாரும் எமக்கு நிபந்தனை விதிக்க முடியாது" என்று சிறிலங்காவின் ஜனாதிபதி திரு. மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளமைக்கான பின்னணியை இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜபக்ஸ இப்படிச்சொல்வதற்குச் சில காரணங்களுண்டு. ஒன்று, சிறிலங்கா அரசை எவர் கண்டித்தாலும் அவர்களின் கண்டனம் எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்கக்கூடிய யதார்த்தத்தில் இல்லை என்பதைப்பற்றி அவருக்குத் தெரியும். அடுத்;தது ஒருதரப்பு உதவுவதற்குப்பின் நின்றால் அவர் இன்னொரு தரப்பினரிடம் உதவி பெறக்கூடிய பின்புலத்தோடிருக்கிறார்.
மேற்குலகம் பின்னின்றால் அவர் சீனாவிடம் உதவியைப் பெறுவார். அப்படித்தான் உதவிகள் பெறப்பட்டும் வருகின்றன. இதுதான் இங்கே இருகுருச் சந்திரயோகம் என்று சொல்லப்படுவது.

எனவே இந்தப்பின்னணியில் என்னதான் முன்னர் உதவிகளை மட்;டுப்படுத்துவோம் எனறு சர்வதேச சமூகம் சொன்னாலும் அது பின்னர் அதை முழுதாகச் செய்தே தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றது.

இதனால் அவர்களின் கண்டனத்துக்கு அப்பால் அவர்கள் செய்துவரும் உதவிகள் அரசாங்கத்தைப் பலப்படுத்துகின்றன. இதனால்தான் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் போர் முனைப்போடும் யாருடைய ஆலோசனைகளையும் கேட்காத தன்மையோடுமிருக்க்pறது.

இப்படிப் பெறப்படும் சர்வதேச சமூகத்தின் இந்த உதவிகள் நிதி, அரசியல் ஆதரவு, ஆயுத உதவி எனப்பல வகைப்படுகின்றன.

இந்த உதவிகளால் அரசாங்கம் பலமடைகிறது. அப்படி அது பலமடையும்போது அது தன்னை நோக்கி முன்வைக்கப்படும் கண்டனங்களையிட்டு அதிகம் கவலைப்படப்போவதில்;லை.

பிரித்தானியா சிறிலங்காவுக்கான நிதியுதவியில் பாதியை இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்களில் இப்போது அது சிறிலங்காவுக்கான நிதி உதவியை மீண்டும் அளிப்பதற்கு முன்வந்துள்ளது.

ஆனால் இதில் ஒரு சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னர் சிpறிலங்காவின் அபிவிருத்திக்கென அளிக்கப்படவிருந்த நிதி அந்த உதவியின் பெயரை மாற்றி இப்போது மீள் குடியேற்ற நிதி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

இது உண்மையில் கண்ணாமூச்சி காட்டும் விளையாட்டுத்தான். பிரித்தானியாவும் கண்ணா மூச்சி விளையாட்டில் ஈடுபடுகிறதா என்று யாரும் கேட்கலாம். ஆனால் அதுதான் நடக்கிறதாகத் தெரிகிறது.

சிறிலங்கா அரசினால் தொடரப்படும் போரினாலும் வன்முறைகளாலும் மனித உரிமைகள் படு மோசமாகச் சீரழிந்து போயுள்ளன என்பது பகிரங்கமாகியுள்ள நிலையில் தொடரந்து வெளிப்படையாக அதற்கு உதவ முடியாதென்ற நிலைமை பிரித்;தானியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் போர்முனைப்பை பல நாடுகளிலுமுள்ள பல்வேறு தரப்பினரும் க்ணடித்தும் வருகின்றனர். குறிப்பாக பிரித்தானியப் பாராளுமன்றில் அண்மையில் இலங்கை நிலைவரம் பற்றி அனைத்துக்கட்சிகளும் கவனிக்கத்தக்க விவாதத்தையும் நடத்தியிருந்தன. அதைத்தொடர்ந்து பிரித்தானியா தீர்வு முயற்சிக்காக பாடுபடவேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.

இதனுடனிணைந்தே அப்போது இலங்கைக்கான நிதிக்குறைப்பு அறிவிப்பும் வெளியானது. அதாவது ஏனைய கட்சிகளினதும் பொதுத்தீர்மானத்தின்போது நிதிக்குறைப்புப்பற்றி அறிவித்து விட்;டு பின்னர் வேறு சாட்டுகளைச் சொல்லி அந்த நிதியை பிரித்தானிய அரசு வழங்குகிறது.

இதில் மனித உரிமைகள் விசயத்தில் கூடுதலான அக்கறையுடனிருப்பதாகவும் காட்டிக்கொள்ளலாம். அதேவேளையில் சிறிலங்காவைப் பகைத்துக்கொள்ளாமலே அதனுடன் நட்புறவைப்பேணி அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்து தனது நலனையும் பேணிக்கொள்ளலாம் என்று பிரித்தானியா கருதுகிறது. ஆக இந்த இரட்டை அணுகுமுறையில் அதிகம் நன்மையைப் பெறுகிறது சிறிலங்கா. அதிகம் பாதிக்கப்படுவிறாhர்கள் தமிழ்மக்கள்.

இந்தமாதிரித்தான் அமெரிக்காவின் அணுகுமுறையும் இருக்கிறது. அது மனித உரிமைகள் விவகாரத்தில் தான் மிவும் இறுக்கமான நிலைப்பாட்டைக்கடைப்பிடிக்கப்போவதாகவும் அதன்பின்பே சிறிலங்காவுக்கான உதவிகள் பற்றிச் சிந்திக்க முடியும் என்றும் சொன்னது. அதேவேளை அது சிறிலங்காவுக்கான ஆயுத உதவியை வழமையை விடவும் இப்போது அதிகரிததிருக்கிறது. ஆனால் அந்த உதவி போருக்கல்ல என்றும் சொல்லுகிறது. இதுதான் வேடிக்கையானது.

முழு அளவிலான போரை சிறிலங்கா அரசு செய்து கொண்டிருக்கும் போது கிடைக்கும் ஆயுத உதவியை அது என்ன செய்யும் என்று சின்னக்குழந்தைகளுக்கும் கூடத் தெரியும். சிலவேளை இதுபற்றி அமெரிக்காவுக்குத் தெரியாமலிருக்கலாம். அல்லது இது பற்றி மற்றவர்களுக்கு ஒன்றுமே புரியாது என்றும் அது கருதிக்கொண்டிருக்கலாம்.

தீர்வு பற்றி நியாயமாகச் சிந்திக்காது விட்டால் நிதிக்குறைப்புச் செய்யவேண்டியிருக்குமென்றே ஜப்பானும் முதலிலு; தெரிவித்திருந்தது. ஆனால் அதைப்பின்னர் கைவிட்டுவிட்டு இப்போது நிதியைக் கொடுத்துள்ளது. அதுவும் மனித உரிமைகள் அமைப்புகளின் வேண்டுகோளையும் மீறி ஜப்பான் இந்த உதவியை வழங்குகிறது.

ஆக உதவிவழங்கும் நாடுகளின் நிதி மட்டும்தான் இப்போதுவரையில் தடைப்பட்ட நிதியாக இருக்கிறது.

பொதுவாகவே சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகள் இப்படித்தான் இருக்கின்றன. இதற்கு மேலும் சில விளக்கங்களுண்டு.

சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்தை முற்றாக மீறியே வாகரையிலும் மட்டக்களப்பு படுவான்கரையிலும் பெரும்படை யெடுப்பை மேற்கொண்டது.

வாகரைக்கு உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் அனுப்பாமல் அது தடுத்திருந்தது. தொண்டர் நிறுவனங்கள் கூட அங்கே செல்வதற்கான அனுமதியை அது மறுத்திருந்தது. இதெல்லாவற்றையும் இந்தத்தரப்பினர் அப்போது கண்டுகொள்ளவில்லை.


அந்தப்படையெடுப்புகளின்போதெல்லாம் பெரும் மனித அவலம் நிகழ்ந்தது. இது உலகறிந்த உண்மை.

அப்போது, அந்தப்படையெடுப்புகள் குறித்து சர்வதேச சமூகம் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்;காமல் மௌனமாகவே இருந்தது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்ட போதும் இந்தத்தரப்பினர் அது குறித்து எதுவும் கூறாதேயிருந்தனர்.

ஆனால் அந்த மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் நிலை தொடர்பாக விளக்கம் அளிக்கவென்ற பெயரில் வெளிநாடுகளிடமிருந்து நிதியைக்கறக்க சிறிலங்கா அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு இந்தச்சர்வதேசப்பிரதிநிதிகள் சென்றனர். இதன்போதுதான் அவர்கள் மட்டக்களப்பில் எதிர்பாராமல் நடந்ததொரு தாக்குதலில் சிக்கியதும்.

சர்வதேச சமூகத்தினரால் அங்கீகரிக்கப்பட்;;;;ட போர் நிறுத்த உடன் பாட்டையே மீறி அரசாங்கம் மக்கள்மீது போர் நடத்தும்போது அதைப்பாராமுகமாக இருக்கும் தரப்பினர் அந்த மக்களைவைத்து அதே அரசு நிதி உதவி கோரும்போது மட்டும் எப்படி உதவத்தயாராக இருக்கிறாhர்கள்.

அப்படியென்றால் சனங்களை இராணுவப்பிடிக்குள் வைத்திருக்கும் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவைத்தருகிறதா.

அதாவது மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியை சர்வதேச சமூகம் மறைமுகமாக ஆதரிக்கிறதா. அது தமிழ் மக்களை இராணுவ அடக்குமுறைக்குள் தள்ளிவிட்டுக்கொண்டு மனித உரிமைகளைப்பற்றி பேசி தன்னை நியாயப்படுத்துகிறதா.

இத்தகைய இரட்டை அணுகுமுறையைத்தான் முன்னர் இந்தியாவும் கடைப்பிடித்தது. அந்த அணுகுமுறைதான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இன்னும் பல பிரச்சினைகளை இன்னும் ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது.

அடுத்தது வாகரையிலுள்ளமக்களைப்போல யாழ்ப்பாணத்திலிலுள்ள மக்;களும் பெரும் பட்டினிச்சாவின் அவலத்துக்குள்ளாகியிருந்தனர். அவர்களுக்கான போக்குவரத்துப்பாதைகள் மூடப்பட்டேயிருக்கின்றன. இது பற்றியும் எந்தவிதமான அபிப்பிராயத்தையும் சர்வதேச சமூகம் இதுவரையில் சொல்லவில்லை.

உண்மையில் யாழ்ப்பாண மக்கள் பெரும்பொறிக்குள்ளேதானிருக்கிறார்கள். அடுத்து அங்கேயொரு பெரும்போர் மூழுமானால் அங்கு இடம்பெறக்கூடிய மனிதப் பேரவலம் மிகப்பெரியதாகவே இருக்கும். நெருக்கடியின்போதுஅந்த மக்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறக்கூடிய வழிகள்கூட இல்லை. ஒரு படமாளிகைக்கோ அல்லது உரு வானனத்துக்கோகூட அவசரகால வழிகளிருக்கும். ஆனால் யாழ்ப்பாண மக்களுக்கு எதுவுமில்லை.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வாகரையிலும் படுவான்கரையிலும் நடந்ததைப்போலவே இப்போது வன்னியிலும் சிறிலஙகா அரசு போருக்;கான நெருக்குவாரங்களை ஏற்படுத்துகிறது. வவுனியா மன்னார் பகுதிகளில் அடிக்கடி தொடருகின்ற இராணுவ நடவடிக்கைகள் இந்த அடிப்படையிலானவையே.

அத்துடன் வன்னிப்பகுதிக்கான Nபுhக்குவரத்துப்பாதைகளை அடிக்கடி மூடி முதற்கட்டமாக பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகின்றது. இத்தகைய நிலைமை மேலும் தீவிரமடையும்போது வன்னியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பல தொண்டர் அமைப்புகளும் வெளியேறிவிடும். இப்படியே அடுத்த கட்;;டத்தில் ஒரு மாபெரும்; மனித நெருக்க்டியை ஏற்படுத்தி தனக்குச்சாதகமான ஒரு நிலையை உருவாக்கிக்கொண்டு போரை முழு அளவில் நடத்த அரசாங்கம் தயாராகிறது.

ஆனால் வன்னிக்களத்தின் யதார்த்ம் வேறு விதமாகவே இருககும் என்பது வேறு விசயம். என்றபோதும் பெரும் மனித அவலம் நடக்க வாய்ப்புள்ளது என்பதே இங்கே கவனிக்க வேண்டிய செய்தி. அதிலும் மனித அவலங்களைப்பற்றி அதிகமாக கவலை கொள்ளும் சர்வதேச சமூகம் இது பற்றி ஒன்றுமே தெரியாமலிருப்பதுதான் வேடிக்கையானது. அதிலும் அரசாங்கம் போரை நடத்தக்கூடிய வலுவையும் பின்னணியையும் உருவாக்கி விட்டு வெளியே உயர் மனிதாபிமானம் பற்றிக் கதைக்கும் வெளியுலகத்தின் கனவான்தனத்தை இங்கே மக்கள் வேடிக்கையாகவே பார்க்கிறார்கள். அவர்கள் இதைக்கண்டு நகைக்கிறாரர்கள்.

இப்படித்தான் சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்தை மீறி, போரை தொடங்கியபோது அதைப்பற்றி எதுவும் பேசாதிருந்து விட்டு, பின்னர் அரசாங்கம் மனித உரிமைகளை மீறிக்கொண்டிருக்கிறது என்று இந்தச்சர்வதேச சமூகம் அழுது வடிகின்றது. அத்தகைய சீரழிவு ஏற்படுவதற்கு முன்னர் அதாவது போர்ச்சூழலுக்கு சிறிலங்கா அரசு போவற்கு முன்னர் அதைத்தடுதது நிறுத்தியிருக்கலாமே. அப்படி தடுத்து நிறுத்தக்கூடிய பொறுப்பும் வல்லமையும் சர்வதேச சமூகத்துக்கிருந்;தது. ஆனால் அதை அது செய்யவிரும்பவில்லை.
இப்போது சர்வதேச சமூகத்தினர் நாளாந்;தம் வெளியிட்டுவருகின்ற கண்டனங்களையும் அறிக்கைகளையும் அவர்களே அர்த்தமிழக்கச்செய்து வருகின்றனர்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால், அரசாங்கம் முன்வைப்பதாக சொலப்பட்ட தீர்வுத்திட்டத்தை அது இன்னும் வைக்கவில்லை. அது பல கால எல்லைகளை அறிவித்ததே தவிர அதை இன்னும் முன்வைக்கும் அறிகுறிகளே இல்லை.

அதேவேளையில் ஆளுங்கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்திருக்கும் உத்தேச யோசனைகள் காலங்கடத்தும் உத்தியாகவும் பிரச்சினைக்கான தீர்வைப்பற்றிச் சிந்தி;ககாமல் அதைமேலும் சிக்கலடைய வைப்பதாகவுமே இருக்கிறது.

அந்தத்தீர்வு யோசனை தமிழ் மக்களைமட்டும் அவமானப்படுத்தவில்லை. உண்மையில் அது சர்வ தேச சமூகத்துக்கு சிறிலங்கா அரசு கொடுத்துள்ள அவமானம் என்றே சொல்ல வேண்டும்.

எனவே எல்லாவற்றுக்கும் அப்பால்பெரும் போர் நிகழக்கூடிய நிகழ்ச்சி நிரலே வளர்ச்சியடைந்து செல்கிறது. பெரியதொரு மனிதப்பேரவலத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய சூழலையே சிறிலங்கா அரசு உருவாக்கி வருகிறது.

இந்த யதார்த்தத்தையெல்லாம் சர்வதேச சமூகம் அறியாமலிருக்கிறது என்று யாரும் சொல்ல முடியுமா.

வேண்டுமானால் அப்போதும் இந்தச்சர்வதேச சமூகம் ஒப்பாசாரமாக 'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சம்மந்தப்பட்;ட இரண்டு தரப்பினரும் இதில் அக்கறை செலுத்த வேண்டும் ' என்று அரசாங்கத்துடனும் முட்;டாமல் புலிகளுடனும் முட்;டாமல் சில அறிக்கைகளை மட்டும் விடலாம். அது ஏற்படும் மனித அழிவுகளை ஈடுசெய்யாது.

பதிலாக தமிழ் மக்கள் இன்னும் கொல்லப்படுவதற்கான சூழ்நிலைகளையே இந்த இரட்டைத்தனம் ஏற்படுத்துகிறது.

ஆக இரடடை நிலையிலேயே சர்வதேச சமூகம் இயங்குகிறது என்று தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் தமிழ் மக்களின் நியாயத்தையும் அந்த மக்களின் பிரச்சினைகளையும் அது புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இன்னும் தயாரில்லை என்பதும் புலனாகிறது.

எனவே தமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக இன்னும் பாடுபடவும் உத்தரிக்கவும் வேண்டித்தானிருக்கிறது.

இந்த உலகத்தில் நீதியின்மைக்கு இன்னும் இருகுருச்சந்திரயோகமே இருக்கிறது. அதற்கு நல்லதொரு உதாரணம் சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்கச்சிந்தனைக்கும் போர் வெறிக்கும் கிடைத்துவரும் சர்வதேச சமூகத்தின் இரட்டைமுக அங்கீகாரம்.