ஒரு பருவத்தின் நிழலில் கண்டேன்
காணாமற்போனவனின் புன்னகையை
கடந்துபோகமுடியாதபடி
கொதித்துக்கொண்டிருந்தது தீத்துண்டாக
அந்தப்புன்னகை
அதில் காயாமலே இருந்தன
இரண்டு கண்ணீர்த்துளிகளும்
அவனுடைய குருதியும்
திரும்பிச்செல்லவும் முடியவில்லை
காணாமற்போனவனின் புன்னகையை விட்டு
அங்கிருக்கவும் முடியாது
காயமறுக்கும்
கண்ணீர்த்துளிகளின் முன்னாலும்
குருதியின் அருகாமையிலும்.
No comments:
Post a Comment