யாருந்திரும்பவில்லை
நினைவுகளைப் புதைக்கமுடியாச் சகதியில்
கிழிபட்டுக்கிடந்ததென் பறவை.
பிரிவு சொல்ல யாருமில்லை
வரவுசொல்லவும் யாருமில்லை
கண்ணெதிரே ஒளியைத்திருடிப்போகிறான் பகற்கள்வன்;
சகதியில் சிக்கிய பிணமாகக்கிடக்கிறேன்
இருள்
பயங்கர வனாந்திரமாக திரண்டு வருகிறது.
யாரிடம் முறையிடுவேன்?
அன்னா அக்மதோவா
என்னரும் சோதரி
துயரம் உன்னுடன் மட்டும் முடியவில்லை
இதோ என்னுடைய காலடியிலும்
பாம்புகள் சூழ்கின்றன
கொட்டும் பனியில்
இரும்புக்கதவுகளின் வெளியே நீ நின்றாய்
உள்வெளியென்றெல்லாப்பிராந்தியத்திலும்
வெக்கை தகிக்க
நானோ
உள்ளுமில்;லை வெளியுமில்லை
கதவிடுக்கில்.
No comments:
Post a Comment