இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சர்வதேசக்கவனம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்குச் சாதகமானதாக, நீதியின்பாற்பட்டதாக அமையுமா என்ற கேள்வி பலதரப்பினரிடையேயும் எழுந்திருக்கிறது.
ஏற்கனவே வெளிச்சக்திகளின் தலையீடு அல்லது பங்கேற்பு என்பவற்றால் எந்த நன்மையும் பெறாத தமிழ்மக்கள் இப்போது புதிதாக உருவாகிவரும் வேறொரு கவனம் குறித்து இவ்வாறு சிந்திப்பது தவிர்க்க முடியாதது.இருபது ஆண்டுகளுக்கு முன்பான இந்தியத்தலையீடும் பின்னர் அண்மையில் நோர்வேயின் பங்கேற்பும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
எந்தத்தரப்பாக இருந்தாலும் அந்தத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எல்லாவற்றையும் ஏப்பம் விடக்கூடியதொரு அரசியல் சாணக்கியத்தை சிறிலங்கா அரசு கொண்டிருக்கிறது. அதில் அது பெரும் வெற்றியம் கண்டிருக்கிறது.
சிங்களத்தரப்பு கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியிலிருந்துகொண்டே தமிழ்மக்களை ஒடுக்கிவருகிறது. இது பகிரங்கமானது. தன்னுடைய ஆட்சியில் தன்னைவிட விகிதாசாரத்தில் குறைந் பிரதிநிதத்துவமுடைய சிறுபான்மையினரை அது கடுமையாக ஒடுக்கி வருகிறது.
அடிப்படையில் இது பாரிய குற்றத்துக்குரியது. நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நீதி கிடைக்கக் கூடியவாறான அரசியல் அமைப்பே இலங்கையில் இல்லை என்பது முதலாவது தவறான காரியம்.
ஆட்சியிலுள்ள சிங்களத்தரப்பினரைத்தவிர ஏனையோர் அச்சம் கொள்ளக்கூடியவாறாhகவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது.
தவிர இந்தச்சமூகங்களின்மீது போரும் நெருக்கடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் பாரிய மனித உரிமை மீறல்களாகும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடருகின்ற மனித உரிமை மீPறல்கள்.
ஆனால் இப்போதுதான் இவற்றையெல்லாம் சர்வதேச சமூகம் கண்டுள்ளது. அல்லது அப்படிக்கண்டுள்ளது போல காட்டுகிறது.
ஆனாலும் பகிரங்கமாக சிறிலங்கா அரசினதும் சிங்களத்தரப்பினதும் இத்தகைய நீதி மறுப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனமோ எதிர்ப்போ ஏற்பட்டிருப்;பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியே. இது தமிழரின் விடுதலைப்போராட்டத்துக்கும் தமிழ்மக்களின் அவல நிலைக்கும் கிடைத்திருக்கும் ஒரு சாதகமான வாய்ப்பே.
ஆனால், இந்த நிலைமையையிட்டு தமிழர்தரப்பு மீண்டும் நம்பிக்கை கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில்; தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய எந்த முயற்;சியையும் அதற்கெதிரான கண்ணோட்டத்துடனேயே சிங்களத்தரப்;பு பார்க்கின்றது.
இங்கே தமிழ் மக்களுக்குச்சாதகமானது, நீதியானது என்பதிலேயே ஏகப்பட்ட சிக்கல்களுண்டு. இந்தச்சொற்றொடர் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதை இங்கே பார்க்கவேண்டும்.
இதைச் சிங்களத்தரப்பினர் புரிந்து கொள்ளும் விதம் வேறானது. அவர்களைப்பொறுத்தவரையில் தமிழ்மக்களுக்கு நீதியொ நியாயமோ கிடைக்கவேண்டும் என்று என்றைக்கும் விரும்பியதில்லை. அப்படி யாராவது இந்தப்பிரச்சினையை நீதியான முறையில் அணுகித்தீர்க்க வேணுமென்று விரும்பினால் அது தமக்கெதிரானதாகவே அமையும் என்று கருதுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு நீதி கிடைப்பதுதான் சாதகம் எனப்படும். தொடர்ந்து பாதகமான சூழ்நிலைகளால் வாழ்வையிழந்த மக்களுக்கு நீதிகிடைக்குமென்றால் அதுவே அவர்களுக்குச் சாதகமானது எனப்படுகிறது. ஆனால் உண்மையான அர்த்தத்தில் இதைத் தமிழர்களுக்குச்சாதகமானது என்று சொல்லமுடியாது. சாதகமானது என்றால் மற்றத்தரப்பை விடவும் அதிகமான வாய்ப்புகள் ஒருதரப்புக்குக்கிடைக்கும் என்பதாகும். ஆனால் இங்கேஅப்படி வாய்ப்பெதுவும் கிடைக்கும் என்றில்லை. அத்துடன் தமிழர்கள் மற்றவர்களின் வாய்ப்புகளையோ உரிமைகளையோ என்றைக்கும் கேட்டதாகவும் இல்லை. அப்படியெதையும் விரும்பியதுமில்லை.
ஆனால் இதைப்புரிந்துகொள்ள முடியாமல் சிங்களத்தரப்பினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அதாவது தாமும் நீதியாக நடக்கத்தயாராகவில்லை. அதேவேளையில் மற்றவர்களையும் இந்தப்பிரச்சினையில் நீதியாக நடந்துகொள்வதற்கு அவர்கள் அனுமதிக்கிறார்களில்லை. இதுதான் அடிப்ப்டைப் பிரச்சினையே.
இந்தப்பிரச்சினையின் பின்னாலுள்ள சிங்களவரின் உளவியற் சிக்கல் மிகவும் பாரதூரமானது.
ஆதிக்கத்திலோ மேல்நிலையிலோ இருக்கும் ஒரு தரப்பு இலேசில் நீதியாக நடப்பதற்கு என்றும் சம்மதிப்பதில்லை. வர்க்க நிலையிலும் சரி, சாதியமைப்பிலும் சரி, பால்நிலையிலும் சரி, நிறம் மற்றும் பிரதேச ரீதியாகவும் சரி இது தான் யதார்த்தமானது. இதுதான் நடந்தும் வருகிறது.
எனவே ஆதிக்க நிலையில் இருக்கும் சிங்களத்தரப்பு சாதாரணமாக இந்த விசயத்தில் மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. இலகுவாக அது விட்;டுக்கொடுப்புகளைச் செய்துவிடும் என்றும் எதிர்பார்க்கவும் முடியாது.
இவ்வாறு தமிழ்மக்களுக்கு நியாயம்; கிடைக்கக்கூடிய தீர்வு முயற்சியை தவறாக விளங்கி அதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் பாரம்பரியமே இலங்கையில் தொடருகிறது. இதை ஒரு வகையான குருட்டுத்தனம் அல்லது அறிவீனம் என்றே சொல்லவேண்டும்.
இந்த ஆதிக்க மனத்தோடுதான் சிங்களவர்கள் எப்போதும் தமிழரின் பிரச்சினையைப் பார்க்கிறார்கள். இந்தப்பிரச்சினையின் தீர்வுக்காக முயற்சிப்போரையும் அவர்கள் இந்தக் கண்ணோட்டத்துடன்தான் நோக்குகிறார்கள்.
இது உள்நாட்டு நிலவரம் என்றால், சர்வதேச நிலவரம் எப்படியிருக்கிறது என்றும் நாம் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா இலங்கையில் தொடரும் மனித உரிமைகள் தொடர்பாக வருத்தம், கண்டனம் என்றவாறாக அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், அது சிறிலங்காவுக்கான ஆயத உதவிகளையும் செய்கிறது. அத்துடன் வழமையைவிடவும் இந்த ஆண்டு சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் ஆயுத உதவி அதிகளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக என்று அது மேலதிக உதவிகளை அரசாங்கத்துக்கு வழங்கவும் தயாராக இருக்கிறது.
ஆனால் அந்த அளவுக்கு தமிழரின் உரிமைகள் தொடர்பில் அது அதிக கரிசனை கொண்டதாக இல்லை. அதற்கான எந்த நல்ல துலக்கமான சமிக்ஞைகளையும் அது காட்டவில்லை.
இதேபோலான நிலைப்பாட்;டையே ஏறக்குறைய மொத்தமான மேற்குலகமும் எடுத்துள்ளது. அதாவது தாம் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானவர்கள் என்று அவர்கள் காட்டுகின்றனர். இதில் தமது கனவான்தனத்தை தாம் பேணுவதாகவும் நீதியாளர்களாக தாம் இருக்க முனைவதாகவும் நிரூபிக்கின்றனர்.
மறுபக்கத்தில் போருக்கு ஆதரவை வழங்குகின்றனர். அப்படி தாம் வழங்கும் ஆதரவுக்கு அழகான நியாயத்தையும் அவர்கள் சொல்கிறார்கள். இதற்குப்பின்னாலுள்ள சில உண்மைகளை நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இவற்றுக்கென்று தனியான நலன்சார்ந்த அரசியல் இருக்கின்றது. அந்த நலனின் அடிப்படையில்தான் அவர்களுடைய அனைத்து அணுகுமுறைகளும் இருக்கின்றன.
இப்போது பிரித்தானியாவில் இலங்கைப்பிரச்சினை தொடர்பான புதிய கரிசனை பாராளுமன்ற மட்டம் வரையில் ஏற்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டியது. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ்மக்களுக்கெதரான போர் நடவடிக்கைகள் வரையில் இங்கு கவனம் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பலகாலம் தொடர்ச்சியாக பாடுபட்டதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆனாலும் இந்தக்கரிசனை என்பது, பிரித்தானிய அரசாங்கத்தின் முழு அளவிலான கரிசனையாக வளர்ச்சியடையுமா என்ற கேள்வியுண்டு. பிரித்தானிய பாராளுமன்ற மரபின்படி இத்தகைய அக்கறையை அது வெளியுலகம் பற்றி கொண்டிருப்பது வேறு. அதாவது பாராளுமன்றில் அங்கத்துவம் பெறும் தரப்பினர் அல்லது கட்சிகள் தமது அபிப்பிராயங்களையும் நிலைப்பாடுகளையும் கொண்டிருப்பதும் தெரிவிப்பதும் வேறு. பிரித்தானிய அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் என்பது வேறு. ஆனால் இந்தத்தரப்பினரின் விவாதப்பொருளை அரசாங்கம் மதிக்கும். அந்த மதிப்பை அரசாங்;;கத்தின் தீர்மானம்; என நாம் அவசரப்பட்டுக் கருதிவிட முடியாது.
இன்னும் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைப்பிரச்சினை தொடர்பில் வெளிப்படையாகவும் தீர்மானமாகவும் எந்த அறிவிப்பையும் செய்துள்ளதாகத் தெரியவி;ல்லை.
இதேபோலத்தான் பிரான்சும் ஏனைய நாடுகளும் இயங்குகின்றன. அதாவது, சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களை இந்த நாடுகள் பகிரங்கமாகக் கண்டிக்கின்றன. பதிலாக சிறிலங்கா அரசின் போருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அவை உதவுகின்றன.
முதலில் போரை இவை நிறுத்தினால் மனித உரிமைகள் பாதிக்குமேல் பேணப்படும். போர்ச்சூழலை இவை மாற்றமுயன்றால் மீதி உரிமை மீறல்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆனால் அதைச் செய்ய இந்த நாடுகள் விரும்பவில்லை. இது ஏன்.
போருக்கு வழங்கும் அங்கீகாரம் என்பது மனிதவுரிமைகள் மீறப்படுவதற்கு வழங்கப்படும் ஆதரவு என்றே கொள்ளப்படவேண்டும். போர் என்பதே மனித உரிமைக்கு எதிராகவேதான் நடத்தப்படுகிறது.
தமிழ்மக்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாடென்பது அடிப்படையில் மனித உரிமை மீறலுடன் தொடர்பு பட்டதே. அதன் விளைந்த வடிவம்தான் போரும் ஏனைய ஜனநாயக மறுப்பு விசயங்களும்.
ஆக மிக நீண்ட காலமாக சிறிலங்கா அரசாங்கம் போரிலும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அப்படியென்றால் அது நீண்டகாலமாகவே முழு அளவில் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகிறது.
அப்படி அது பெரும் குற்றச்செயலில் ஈடுபட்டு வரும்போது அதைப்பற்றி அக்கறைப்படாத சர்வதேச சமூகம் இப்போது திடீரென இப்படி அறிக்கைகளை விடத்தொடங்கியிருப்பது புதிய அரசியல் உத்தியாகவே இருக்கிறது.
இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய இரண்டுதரப்பினருக்கும்தாம் அழுத்தம் கொடுப்பதாக இப்போது இந்தச் சர்வதேச சமூகம் காட்டுகின்றது. ஆனால் உண்மை நிலைமை அப்படியிருப்பதாகத் தெரியவில்லை.
அரசாங்கத்துக்கு வெறுமனே கண்டனங்களை மட்டும் தெரிவித்துக்கொண்டு தமிழர் தரப்புக்கு அதாவது விடுதலைப்புலிகளின் தரபபுக்கு அதனைவிடத்தாக்கமேற்படுத்தக் கூடிய அழுத்தங்களையும் கொடுப்பதாகவே தெரிகிறது.
இது பாரபட்சமானது. அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவகையான பெரும்பாதிப்பையும் ஏற்படுத்தாதது. அதனால் சமாதான நிலையைநோக்கி அது திரும்புவதற்கான சூழ்நிலை இதில் அதிகமேற்பட வாய்பப்pல்லை.
பதிலாக தமிழரை நோக்கிய போர் இன்னும் தீவிரப்படக்கூடிய சந்தர்ப்பமே அதிகமுண்டு.
இலங்கையின் ழுமு அளவிலான போர்ச்சூழலுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பாகும் என்று சர்வ தேசத்துக்கு நன்றாகத் தெரியும். இதற்கு சர்வதேசப்பிரதிநதிகளாக இலங்கையிலிருக்கும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும் நோர்வேப்பிரதிநிகளும் சாட்சி.
பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும் இதற்காதாரமாகவுண்டு. அப்படியென்றால் இது தொடர்பாக நேரடியாகவோ அல்லது வெளிப்படையாகவோ அதுவுமல்லாவிட்டால் கொஞ்சம் கூடிய நெருக்குவாரத்தையோ சர்வதேச சமூகம் சிறிலங்காவுக்குக்கொடுக்கலாம். ஆனால் அது அப்படிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.
பதிலாக விடுதலைப்புலிகளின் மீதுதான் மேலும் நெருக்குவாரங்களை ஏற்படுத்துவதாக உணர முடிகின்றது. அமெரிக்கா, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமிழ்மக்களின்; துயர்துடைக்கும் நோக்குடன்; செயற்பட்டு வந்தவர்களை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இவ்வாறே தெரிகின்றன.
பெருந்தவறுக்குப் பொறுப்பாகவுள்;ள அரசாங்கத்தை மென்போக்காக கையாள்வதன் நோக்கம் இந்தத்தரப்பினரின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்சார்ந்ததாகவே இருக்கிறது. அந்த நலனில் பாதிப்பேற்படுத்தாதவாறு அவை இந்;த விவகாரத்தைக் கையாள்கின்றன.
கொழும்பில் அவற்றுக்கிருக்கும் கரிசனையென்பது இதன்பாற்பட்டதே.
எனவே தமிழ்மக்கள் இன்னும் தமது விடுதலைக்காகவும் துயரங்களுக்காகவும் பாடுபடவேண்டித்தான்உள்ளது. தாயகத்தில் போருக்கெதிராக போரிட வேண்டிய தமிழர்கள்.அதேபோல புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசின் நீதியின்மையை அம்பலப்படுத்தி தமிழ்மக்களின் அவலவாழ்வை வெளிப்படுத்தும் கவனயீர்;ப்புப்போராட்டத்தில் புலம்பெயர்மக்கள். இந்த இருநிலைப் பங்களிப்பை பக்குவமாக தீவிரப்படுத்த வேண்டியேயுள்ளது.
விடுதலைக்;கான பயணம் தொடரத்தான் வேண்டும்.