Thursday, September 27, 2007

வரலாற்றில் இருந்து பெறுதல்...

வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாதவர்கள் எப்போதும் தண்டனைகளையே பெற்றுக் கொள்வார்கள்.

Thursday, August 16, 2007

வன்னியில் இப்போது..

யாழ்ப்பாணத்திலிருந்து நிலைமைகளைச்சமாளிக்க முடியாதென்று வன்ன்pக்கு வந்திருந்த புகலவனின் அம்மா

கிழக்கின் அறுவடை

மிகவும் பாதகமானதொரு நிலைமைக்குள் இப்போது கிழக்குமாகாணம் தளளப்பட்டிருக்கிறது. இலங்கைததீவு சுதந்திரமடைந்த

Monday, August 6, 2007

வெளிச்சக்திகள் விரும்பும் மங்கள - ரணில் கூட்டு

கொழும்பில் இப்போது விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன. இந்த விசித்திரமான சம்பவங்கள் உருவாக்குகின்ற

தாண்டமுடியாத கிணறுகள்...

1

வன்னியில் இப்போது ஐம்பது கிலோ நிறையுள்ள ஒரு சிமென்ற் பாக்கின் விலை என்ன தெரியுமா? கேட்டால்

யாழ்பாணத்துக்கான பாதை மூடப்பட்டு ஒருவருடநிறைவு...

தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது என்பார்களே அதுமாதிரி, யாழ்;ப்பாணத்திலிருந்து பலாலிக்குப்போய் பிறகு

வருமுன் காக்குமா இந்தியா...

ஒரு திடீர்த்திருப்பமாக இந்தியாவின் முன்னாள் சிறப்புத்தூதுவரும் இலங்கை விவகாரங்களில்

இலங்கையின் பிளவுற்ற பொருளாதார நிலைகள்...

உங்களுக்கு முறிகண்டியை ஞாபகமிருக்கிறதா. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும்போது கண்டி வீதி என்று சொல்லப்படும் ஏ9 வீதியில், கிளிநொச்சிக்கு முன்பாக வன்னியின் மையத்தில் ஒரு சின்னக்கோவிலிருக்குமே, பாலை மரத்தோடு ஒரு சிறிய கொட்டில்போல இருக்கும் அந்தக்கோவிலை மறந்து விட்டீர்களா. கோவில் சிறியதாக இருந்தாலும் எப்போதும் அந்தக் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். முறிகண்டிப்பிள்ளையார் கீர்த்தியுள்ளவரோ இல்லையோ எல்லோருக்கும் நட்பானவர்.



கற்பூர வாசனையும் தேங்காய் உடைப்பும் கச்சானும் முறிகண்டியின் மறக்கமுடியாத ஞாபகங்கள். எப்போதும் அங்கே கூட்டம்தான். பெரிய திருவிழாவோ பொங்கலோ குளிர்த்தியோ என்று எதுவும் கிடையாது. ஆனால் எப்படியொ கூட்டம் திரண்டு விடுகிறது. நானறிந்தவரையில் முறிகண்டியில் ஆகப்பெரிய நேர்த்தி என்றால் தலைமுடி மழிப்பதும் சோறு தீத்துவதும்தான். நீண்டநாளைக்குப்பிறகு நேற்று முறிகண்டிக்குப்போனேன். கோவிலடி வெறிச்சோடிப்போயிருக்கிறது. ஆள்நடமாட்டமே நல்லாக்குறைந்து விட்டது. கடைகளும் குறைந்து விட்டன. ஆட்களில்லாமல் இருக்கும்போது எதுக்காக அதிகம் கடைகள் இருக்க வேணும்.



போன வருசம் இப்படியா இருந்தது முறிகண்டி. சமாதானம் வற்றியதுடன் முறிகண்டியும் வற்றிவிட்டது. ஏ9 வீதிப்போக்கவரத்து இருந்தால்தான் முறிகண்டி உயிர்ப்பாக இரக்கம். இப்போது ஏ9 வீதி கிழமையில் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் திறக்கப்படுது. அதுவும் முழுநேரமாகத் திறக்கப்படவில்லை. படையினர் விரும்பிய நேரத்தில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக மூன்று நாட்போக்குவரத்து நடக்கிறது. சில வேளை அதுவும் நடக்காது. இந்த நிலைமையில் எப்படி முறிகண்டியில் சனக்கூட்டமிருக்கும்.



அதிலும் யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்து வன்னிக்குள்ளால் இல்லாமற்போன பிறகு முறிகண்டியில் எப்படிச்சனம் கூடமுடியம். அப்போது எத்தனை பஸ்ஸ_ம் வாகனங்களும் அந்தக் கோவிலைச் சுற்றி நிற்கும். பெருந்திருவிழாவில் நிற்கிறதைப்போல அவ்வளவு சனம். அதிலும் ஒரு விசேசம் என்னவென்றால், மற்றக் கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில் எப்போதும் கூட்டமிருக்காது. சிலநேரம் அதிகமாகக்கூட்டமிருக்கும். சிலபோது குறைந்திருக்கும். ஆனால் திருவிழா முடிந்தால் கோவிலடி வெறிச்சோடிப்போய்விடும்.



முறிகண்டியில் எப்போதும் கூட்டமிருக்கம். அதன் அமைவிடம் இப்படியிருப்பதால் அதில் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் கூட்டம். ஏ9 வீதியினால் எவ்வளவுக்க வாகனங்கள் ஓடுகின்றனவோ அந்தளவுக்கு கூட்டம் இருக்கும். அவ்வளவுதான். வாகனப்போக்குவரத்து இல்லையென்றால் முறிகண்டிப்பிள்ளையார் தனித்துவிடுவார். நான் முறிகண்டிக்குப்போனபோது ஒரு பஸ்ஸ_ம் பழைய லொறியம் மூன்று நான்கு மண்ணெண்ணை மோட்டார் சைக்கிள்களும்தான் அங்கே நின்றன. அவையும் மல்லாவிக்கோ புதுக்குடியிருப்புக்கோ அக்கராயனுக்கோ போவதற்காக அங்கே இளைப்பாறுகின்றன.



போரின் நிலைமையை யாரும் முறிகண்டியில் பார்க்கலாம் என்றொரு நண்பர் முன்பு ஜெயசிக்குறு காலத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது. அதுமட்டுமா தமிழ்மக்களின் வாழ்வின் செழிப்பையும் வரட்சியையும் கூட முறிகண்டியில் பார்த்தால் தெரியும்.மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிள்கள் புகையைக் கக்கிக்கொண்டு தனியே நீண்டு வெறித்திருக்கும் வீதியால் போய்க் கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரிய மூட்டைகளைக் கட்டிக்கொண்டு போகிறார்கள். யாருடைய முகததிலும் பெரிய மகிழ்ச்சியைக்காணவில்லை. எல்லோரும் படு சீரியஸாகவே இரக்கிறார்கள். போர் எப்பொதும் சீரியஸாகவே இருக்கிறது.
அது உயிரோடும் வாழ்வோடும் நேரடியாக் சம்மந்தப்பட்டது. கரணம் தப்பினால் மரணம் என்பார்களெ அதுதான். உயிருடன் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் யாரும் விளையாட முடியுமா. அதில் அவகாசமோ அவதானக்குறைவோ இருக்க முடியாது.



இந்தச் சீரியஸ்தனம் எப்படியொ எல்லாச் சனங்களுக்கும் வந்துவிடுகிறது. போரில் அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியோ ஏதோ வகையில் சம்ந்தப்பட்டே ஆகிவிடுகிறார்கள். போரின் இயல்பு அது. அது யாரையும் தீண்டாமல் விடாது. அதையார் விரும்பினால் என்ன விரும்பாது விட்டால் என்ன அது எவரையும் விட்டு வைக்காது. போரின் நிழல் படிந்த முகங்களோடு அவர்கள் எங்கெங்கோவெல்லாம் போய்க்கொண்டிருக்கிறார்கள். மண்ணெண்ணெய் மோட்டார்ச் சைக்கிள்கள் எதையும் தாங்கிக் கொள்ளத்திராணியுள்ளவை என்பதாகப்படுகிறது.



இவ்வளவு பெரும் பாரத்தோடு மேடு பள்ளம் நிறைந்த வீதிகளாலும் ஒழுங்கைகளுக்குள்ளாலும் அவை அவர்களுடைய வீடுகளுக்கும் தோட்ங்களுக்கும் கடற்கரைக்கும் பேசாமற்போகின்றன.
இது என்ன வேடிக்கை. சனங்கள் இப்படி புழதி படிந்தபடி மணணெண்ணெய் வண்டிகளிலும் வாகனங்களிலும் அலைந்தபடியிருக்கும்போது வெள்ளை வாகனங்களில் பெரிய கொடி பறக்க தொண்டு நிறுவனங்கள் புழதியை வாரியிறைத்தபடி பறக்கின்றன.



என்ன் செய்வது எல்லாம் விதியாகிவிட்டது என்றபடி ஒரு சைக்கிளோடி தன்பாட்;டில் சொல்லிக்கொண்டு போகிறார். அவரை முந்தியும் எதிர்;கொண்டும் இன்னும் பல தொண்டு வாகனங்கள் போகக்கூடும். ஆனால் அவரால் எதையும் முந்திச் செல்லமுடியாது. அவர் புழதி குடிக்கப்பிறந்தவர். அவர் மண்ணின் மைந்தனல்லவா.



யாரோ கத்திக்கதறியபடி ஒரு மோட்டார்ச்சைக்கிளில் வருகிறார்கள். எங்கே போகிறார்கள். ஏன் போகிறார்கள். இப்படி யாராவது அந்தரப்பட்டு வந்தால் ஒன்றில் பாம்பு கடித்திருக்கும். அல்லது விதானக்குண்டு வீசச்pல் அகப்பட்டு காயப்பட்ட சனங்களாக இருக்கும். இது யார். பொதுவாக ஆஸ்பத்திரி கேஸ்கள்தான்; இப்படி அந்தரப்பட்டு வரும்.



குண்டுவீச்சில் காயப்பட்ட கேஸ்தான் இதுவும். கடவுளெ.. இதென்ன கொடுமை … யார் காயப்பட்டிருக்கிறார்கள். ஆணா பெண்ணா மூப்பா இளமையா … .
பெண்ணொருத்திதான் காயப்பட்டிருக்கிறாள். கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள். காயப்பட்;ட பெண்ணை யாரோ ஒருத்தர் மடியில் தாங்கி வைத்திருக்கிறார். இரத்தம் இன்னும் காயவில்லை. சொட்டிக்கொண்டேயிருக்கிறது. தெருநீளம் அவளின் இரத்தம் சிந்தவேண்டிய விதியைப்பார்த்தீர்களா.



இந்த விதியைத்தான் இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி திரு மகிந்த ராஜபக்ஸ அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கிழக்கின் உதயம் என்று மட்டக்களப்பிலுள்ள குடுமு;பிமலையைக் கைப்பற்றியதை ஒரு பெரிய வெற்றி விழாவாக கொழும்பில் கொண்டாடியதே தமிழர்கள் இப்படி இரத்தம் சிந்தத்தான்.



2



கொழும்பில் மகிந்த ராஜபக்ஸ போன கிழமை பெரியதொரு வெற்றி விழாவைக் கொண்டாடினார். போரில் அவர் தன்னுடைய எதிர்காலத்தையும் இலங்கையின் நிகழ்காலத்தையம் முதலீடு செய்துள்ளார். அந்த முதலீட்டை அதிகம் கவர்ச்சிகரமாக்க வேண்டுமாயின் அவர் அப்படி கிடைக்கும் சிறு வெற்றிகளையோ சாதக அம்சங்களையோ அவர் கொண்டாடித்தான் ஆக வேண்டும். ஆனால் மகிந்த ராஜபக்ஸவின் இந்த விருப்பத்துக்கும் நோக்கத்துக்கும் கொழும்பில் உடன்பாடற்ற தன்மை அதிகரித்து வருகிறது. அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளே அரசாங்கத்தை இப்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.



கடுமையான இனவாதக்கட்சிகளாக அடையாளங்காணப்பட்ட சிஹல உறுமய மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளே அரசாங்கத்தின் வெற்றி விழாக்கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. இந்த வெற்றிவிழாவை அரசாங்கம் கொண்டாடவில்லை. இது மகிந்த ராஜபக்ஸவின் தனிப்பட்ட தேவைகள் , நலன்களுக்கான கொண்டாட்டம் என்றும் அந்தக்கட்சிகள் விமர்சித்திருந்தன.



அத்துடன் ஐ.தே.க வும் ஏனைய இடதுசாரிக்கட்சிகளும் ஊடகங்களும் கூட இநந்தக் கொண்டாட்டத்தை ஒரு பைத்தியக்காரத்தனத்தின் வெளிப்பாடு என்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவித்திருந்தன.



மகிந்தவின் இந்த வெற்றிக் கொண்டாட்;த்தின் ஆதரவு மற்றும் எதிர்ப்பலைகள் அடங்குவதற்குமுன்னர் இப்போது கொழும்பில் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திரு மங்கள சமரவீர, சூரியாராய்ச்சி ஆகியோரும் ரணிலும் மனோகணேசன் போன்றோரும் பெரியதொரு பேரணியை நடத்ததியிருக்கிறார்கள். இந்;தப்பேரணியில் கிட்டத்தட்;ட ஒரு லட்சம் மக்கள்வரையில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மகிந்த பெரியதொரு வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தி ஒரு வாரமாகுவதற்கு இடையில் இந்தப்பேரணி நடத்தப்பட்டிருக்கிறது.



அப்படி நடத்தப்பட்ட இந்தப்பேரணியில் இந்தளவு மக்கள் கலந்து கொண்டனர் என்றால் மகிந்தவின் அணுகுமுறையில் சனங்கள் திருப்பியறற்றிருக்கிறார்கள் என்றுதானெ அரத்தம். அத்துடன் ரணில் மங்கள கூட்டணியின் இந்தப்பேரணிக்கு போட்டியாகவும் எதிர்ப்பாகவும் அரசாங்கத்தரப்பும் சிங்களப்பகுதிகளெங்கும் கூட்டங்களை அதே நாள் நடத்தியது. ஆனால் அரசாங்கத்தரப்பின் கூட்டங்களுக்கு அவ்வளவாகக் கூட்டம் சேரவில்லை. அததுடன் இந்தக்கூட்டடங்களிலும் அரசாங்கத்தின் ஆதரவுககட்சிகள் கலந்து கொள்ளவில்லை.அப்படியென்றால் இப்போது அரசாங்கத்துக்குள் ஒரு வெடிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று யாரும் கேட்கலாம். அதில் ஓரளவு உண்மையுண்டு. இப்பொதே அரசாங்கத்துக்குள் இழுபறிகளும் உள் முரண்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன.



இந்தமாதிரியான ஒரு நிலையைத்தான் இப்போது சர்வதேச சமூகமும் இலங்கையைப் பொறுத்து விரும்புதாகத் தெரிகிறது. அதாவது அரசாங்கம் பலவீனப்படும் ஒரு நிலையையே அது அதிகமும் விரும்புகிறது. இப்போது பலவீனமாக இருந்த ரணில் மெல்ல மெல்ல பலமடைந்து வரவதாக கொழும்பின் அசைவுகள் காட்டுகின்றன. ரணிலும் மங்களவும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ள எதிர்ப்பலை மகிந்தவை இனி நிச்சயம் நித்திரை கொள்ளவிடப்போவதில்லை.



மகிந்தவின் நிகழ்ச்சிநிரல் இப்படி அதிகரித்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சிங்கள மக்கள் பரவலாக வாய்விட்டே சொல்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லாமல் வேறு என்னதான் nசெய்ய முடியும். மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தபோது ஒரு லீறறர் மண்ணெண்ணெய் கொழும்பில் 28 ரூபாய்க்கு விற்றது. ஆனால் இப்போது 85 ரூபாயாகிவிட்டது. ( வன்னியின் விலை வேறு ) ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 24 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 55 ஆக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் எல்லாப் பொருட்களின் விலையம் பொரின் பேரால் ஏற்றிவிடப்பட்டுள்ளது.



ஒரு வருசத்தில் இப்படி இரண்டு மூன்று மடங்கு என் விலையேறும்போது அதை யாரால்தான் தாங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். இவ்வளவுக்கும்இந்த விலையேற்றத்துக்கு அவர் சிங்களச்சமூகத்துக்கு பரிசாகக் கொடுத்தது கிழக்கின் வெற்றியைத்தான். இந்த வெற்றி அவர்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. அதனால்தான் அரசாங்கத்தரப்பு ரணிலுக்குப்போடடியாக நடத்திய கூட்டங்களில் பெரிதாகச் சனங்கள் கூடவில்லை.ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் நடத்துகின்ற கூட்டத்துக்கே அதிகமாகச் சனங்கள் பொவது வழமை. ஏனென்றால் அப்போதுதான லாபங்களை அதிகமாகப் பெறலாம் என்று வஅர்கள் மதிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இந்தமுறை அரசாங்கத்துக்கெதிரான பேரணியில் அவர்கள் நின்றிருக்கிறாரகள என்றால் அது சாதாரணமானதல்ல.



அதுவும் இன்னும் நான்கு வருடங்கள் ஆட்சியிலிருக்கக்கூடிய அரசாக இருக்கும் அரசாங்கத்தை அவர்கள் இத்தனை வலுவாக எதிர்ப்பது கட்டாயம் கவனிக்கத்தக்கது. ரணிலை இப்போது சர்வதேச சமூகம் அதிpகமாக உசார்ப்படுத்துவதாகவும் தெரிகிறது. ஐ.தே.க விலிருந்து வெளியேறியோரால் பலவீனமான நிலையிலிருந்த ரணில் இப்போது மங்களவுடன் கூட்டுச் சேர்ந்து சற்றுப்பலமடைந்திருக்கிறார் என்பதை இந்தச்சம்பவங்கள் காட்டகின்றன.



இப்போது ரணில் மங்கள கூட்டுக்கு ஆமற்குலகின் ஆதரவும் ஆலொசனையும் இருப்பதாக பகிரங்கமாகவே கொழும்பில் பேச்சடிபடுகிறது. அதாவது ஜே.வி.பி யுடன் தொடரபில்லாத வட்டாரங்களெ இப்படிச் சொல்கின்றன.ஆக மகிந்த ராஜபக்ஸ எதிர்பாரி;த்ததற்கும் மாறாகவே நிகழ்சச்pகள் மாறத் தொடங்கிவிட்டன. அவர் இன்னும் வடக்கில் போரைத்தொடங்கவேயில்லை. அது மட்டுமல்ல புலிகளும் இன்னும் பொரை ஆரம்பிக்கவில்லை. அதற்கிடையில் அரசாங்கம் ஆட்டங்காணக்கூடிய நிலைமையை நோக்கிப் பnhய்க்கொண்டிருக்கிறது.



கிழக்கில் படைத்தரப்பு பெற்றிரக்கிற அனுகூலங்களுக்கே வரவேற்பில்லாத ஒரு நிலை இருக்கும்போது வடக்கில் படைத்தரப்பு சந்திக்கவுள்ள நிலைமைகள் எப்படியான வரவேற்பை அளிக்கும் என்பதை யாரும் இலகுவாக ஊகித்துக்கொள்ள முடியும்.வடக்குப்போர்க்களம் எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போலவும் எல்லோரும் சொல்வதைப்போலவும் முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக அது புலிகளுக்கே அதிக சாத்தியங்களையுடையது. எப்போதும் வன்னியில்தான் யுத்த முனைப்புகள் தணிவடைவது வழமை. அல்லது யுத்த முனை முறிபடுவது.



இப்போது மகிந்த ராஜபக்ஸவும் இப்படியான ஒரு தணிவுக்கும் முனைமுறிவுக்கும் உள்ளாகத்தான் போகிறார். அதற்கு முன்னர் அவருக்கு அரசியல் எதிரிகளும் எதிர் வளையங்களும் உருவாகிவிட்டன. அதேபோல அடுதத கட்டததில் போரின் எதிர் வளையங்களம் அவரையும் அரசாங்கத்தையும் சுற்றிவளைக்கவே போகின்றன.விட்டுப்பிடிக்கும் ஒரு அணுகுமுறையை பின்பற்றும் சர்வதேச சமூகம் இப்பொது சற்றுத் தூர்திலிருந்து வேடிக்கை பார்;க்கிறது.



ஆனால் அதற்கிடையில் முறிகண்டியில் இரத்தம் சிந்தச்சிந்த விமானக்குண்டு வீச்சில் காயப்பட்ட அந்தப் பெண்ணைப்போல மகிந்த ராஜபக்ஸ நாடுமுழுவதும் அவலங்களையும் இரத்தப் பெருக்கையும் உருவாக்கத்தான் போகிறார். அவர் இப்போது தன்னைக் கட்டுப்படுத்தமுடியாத போர் வளையத்துக்குள் நுiழைந்து விட்டார். அவர் மட்;டுமல்ல இலங்கைத்தீவில் மகிநதவின் பொறிக்குள் சகலரையும் அவர் வீழு;ததி விட்டார். இப்போது பரிதாபத்துக்குரிய நிலையிலிருப்போர் சனங்கள்ததான்.





3
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருபத்தைந்து நாட் திருவிழாவுக்கு பதினைஞ்சு வருசமாக வன்னியிலிருந்து கொண்டு விரதம் பிடிக்கிறா கமலமக்கா. ஒல்வொரு வருசமும் தன்ர ஊரக்குப் போய்விடுவன் என்று அவ முழு நம்பிக்கையோடு இருக்கிறதைப் புhர்க்க எனக்கே வயிறு பத்தி எரியும்.



அந்த மனுசியின்ர ஆசையையும் நம்பிக்கையையும் எப்படி என்னால் மறுதலிக்க முடியும். ஆனால் அதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை எண்டு அவ புரிந்து கொள்ள மாட்டா. அவவுக்கே நிலைமைகளை விளங்கிக் கொளளக்கூடிஙய அனுபவம் தாராளமாகவுண்டு.
இந்த முறையும் தான் போக முடியாத கோவிலுக்காக அவ விரதமிருக்கிறா. பதினைஞ்சு வருசமமாக அவ முரகனை நினைத்து நினைத்து உருகியிருககிறா. முரகன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வசமாகச் சிக்கிவிட்டார்.



கமலமக்கா மட்டுமல்ல, மாவிடடடபுரத்தைச் சேர்ந்த முழப்பேரும் அங்கங்கே நின்ற முரகனை நினைத்து உருகவேண்டியதுதான இப்போது வாழ்வாயிற்று. இப்போது விரதமாவது பிடிக்கக்கூடியதாயிருக்கிறது. இனி அடுத்த கட்டத்தில் அதுவும் இல்லையோ அல்லது அப்படியே அடுத்த வருசம் மாவிட்டபுரத்திலேயே விரதம் பிடிக்கலாமோ என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேணும்.



இன்றைக்கும் அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவில் நடக்கும் மனிதவுரிமை மீறல்களைப்பற்றி ஒரு கண்டன அறிக்கை வந்திருக்கிறது. பிள்ளையையும் கிள்ளவிட்டு தொடட்டிலையும் ஆட்டிவிடும் தந்ததிரோபாயம் இது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வார்கள். இப்போது இலங்கை எத்தனை துண்டாக உளவியல் ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் துண்டாகிவிட்டது என்பதை யாரும் கவனிப்பதாக இல்லை. எரிகின்ற நாட்டில் இப்போது எத்தனையோ பெரும் அணிகள் வந்துவிட்டன. எல்லாம் ஒன்றிலொன்ற தங்கியபடி.



இந்தக்கவனக்குறைவுகளுக்கெல்லாம் ஒரு தண்டனை கிடைக்கத்தான் போகிறது. இனிப்போதும். அடுத்த கிழமை மிச்சத்தைப்பாக்கலாம். வெக்கையாகவும் கடும் புழக்கமாகவும் இருக்கு. இண்டைக்கு ஒரு கிலோ மீனின் சராசரி விலை என்ன தெரியுமா நானூற்றம்பது ரூபாய்.இனி யாரால்தான மீன் சாப்பிட முடியும். வாங்கேலாமல் கைவிடப்பட்;டவற்றில் இப்பொது மெல்ல மெல்ல மீனும் விலையேறிவிட்டது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நாட்டில் ரின் மீன் இறக்கப்படுகிறது என்று சிரித்திரன் சுந்தர் சொன்னதை ஒஐ தடவை நினைத்துப் பாருங்கள்.

மகிந்தவின் வெற்றிவிழாவிற்கு அடுத்து...

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் தமிழர்களை வெற்றி கொண்டுவிட்டோம் என்ற தோரணையில் பெரியதொரு வெற்றி விழாவைக் கொண்டாடியிருக்கிறது. இந்தமாதிரி முன்னர் திருமதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் ஒரு வெற்றிவிழாக் கொண்டாடப்பட்டது. அது யாழ்;ப்பாணத்தை வெற்றி கொண்ட விழா. இது மட்டக்களப்பின் குடும்பிமலைக்காட்டுப்பகுதியை வெற்றி கொண்ட விழா. இந்த வெற்றி விழாவுக்கு அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதே இப்போதுள்ள பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அடிப்படையில் இவ்வாறு இந்த வெற்றி விழாக்களை எப்போதும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் கொண்டாடுவதற்கான பின்னணி என்பது ஒன்றாகவேயிருக்கிறது. சந்திரிகா அப்போது போரை பெரும் எதிர்ப்புகளின் மத்தியில் ஆரம்பித்தார்.



அப்படி அவர் தொடங்கிய போர்; வெற்றியை நோக்கிச் செல்கிறது என்பதைக்காட்ட வேண்டிய தேவை அபடபோது அவருக்கிருந்தது. எனவே அதற்கு வெற்றி விழா அவசியப்பட்டது.
அத்துடன் நீண்டகாலமாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்தை முழதாக படையினர் கைப்பற்றியுள்ளனர் என்ற சேதியை வெளியே சொல்ல வேணும். அத்துடன் படையினரின் உளவியலை ஊக்கப்படுத்தி அவர்கள் அடுத்த போருக்கு தயாராகும் விதமாக செய்ய வேண்டும்.

இந்தமாதிரியான தேவைகள் மற்றும் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அப்போது அந்த வெற்றி விழாவைக் கொண்டாடினார் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவருக்கு அப்போது துணையாயக இருந்தவர் திரு. அனுருத் ரத்வத்த. அதாவது வீடுகொழுத்துகிற ராசாவுக்கு நெருப்புக் கொடுக்கும் மந்திரி போல அவரிருந்தார்.



இதேமாதிரி இப்போது கிழக்கில் மட்டக்களப்பு குடும்பிமலையைக் கைப்பற்றி விட்டதாகக்கூறி மகிந்தவின் அரசாங்கம் பெருமெடுப்பில் வெற்றி விழாவைக் கொண்டாடியுள்ளது. சந்திரிகாவுக்கு எந்தவகையிலும் தான் குறைந்தவரில்லை என்பதை இதன்மூலம் மகிந்து காட்ட முற்பட்டிருக்கிறார். அத்துடன் ரணிலுக்கும் மங்கள போன்ற புதிய அரசியல் எதிரிகளுக்கும் ஒரு செய்தியை அவர் இந்த வெற்றிவிழாவிpன் மூலம் சொல்ல முற்பட்டிருக்கிறார். போரில் தான் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் எனவே யாரும் தனக்குக் கிட்டவாக நெருங்க முடியாதெனவும் அவர் காட்;ட முற்பட்;டிருக்கிறார்.



நாட்டின் தேசியப்பிரச்சினையாக இருக்கும் இனப்பிரச்சினையை போரின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதைத் தீர்க்கலாம் என்று அவர் சிங்களச் சமூகத்துக்கு சொல்ல முற்பட்டிருக்கிறார். அப்படிச் சொல்வதன் மூலம் சிங்களத்தரப்பின் முழமையான ஆதரவை போருக்காகத் திரட்;ட முடியும் என்றும் ஜனாதிபதி கணக்கிட்டிருக்கிறார். அப்படிப்போருக்கு ஆதரவாக சிங்கள மக்களைத் திரட்டிவிட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வைத்து ரணிலோ மங்களவோ அல்லது ஜே.வி.பி யோ தனக்கெதிராக போராட்டங்களை நடத்த முடியாது என்றும் அவர் கருதியுள்ளார்.



அத்துடன் பொருளாதாரப்பிரச்சினைகளை யாரும் தூக்கவோ அது தொடர்பாக கேள்விகளை எழுப்பவோ முடியாத ஒரு நிலையை இந்தப்போரின் வெற்றி மூலம் அவர் உருவாகக்pவிட்டார். தவிர, கிழக்கின் வெற்றியை பிரமாண்டப்படுத்துவதன் மூலம் வடக்கிலும் அடுத்த வெற்றி இதுபோலப் பெறவேண்டும் என்ற ஒரு போட்டியணர்வை படையினர் மத்திpயில் ஏற்படுத்துவது. அதாவது கிழக்கின் கட்டளைத்தளபதிகளுக்கும் வடககிலுள்ள கட்டளைத்தளபதிகளுக்குமிடையில் போட்டியுணர்வை ஏற்படுத்தி தொடரும் வடக்குப் போர்க்களத்துக்கு சூடேற்றுவது.



மேலும் இந்த வெற்றியைக் கொண்டாடுவதன் மூலம் படையினரின் உளவியலை போரை நோக்கி உந்துவது. எப்படியென்றால் போரில் வெற்றி பெறமுடியும் என்று ஒவ்வொரு படையினரையும் அவர் நம்ப வைக்க இதன் மூலம் முயல்கிறார். அத்துடன் போரில் ஈடுபடும் படையினரின் உறவினரை ஆற்றுப்படுத்தவும் அவர் இந்த வெற்றி விழாவைப் பயன் படுத்தியிருக்கிறார். பொதுவாக சிங்களச்சமூகத்தை போருக்கு முழு அளவில் தயார்ப்படுத்துவதே இதன் நோக்கம்.



போரில் வெற்றி கிடைக்கும் என்ற ஒரு தோரணையை ஏற்படுத்தி விட்டால் சமாதானத்தைப் பற்றி யார் கதைத்தாலும் அது சிங்கள மக்களின் மத்தியில் எடுபடாது என்பது மகிந்த ராஜபக்ஸவின் கணிப்பாகும். அதிலும் மேற்கு இனி இப்போதைக்கு அமைதிப்பேச்சு வார்த்தையைப்பற்றி பேச்சே எடுக்க முடியாது என்ற கட்டம் உருவாகிவிட்டது. இதையே அவர் நோக்காகக் கொண்டு இயங்கியிருக்கிறார். கடந்த ஓராண்டுக்குள் கிழக்கை தன்னுடைய முழக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அவர் சொல்வதும் இவற்றின் பின்னணியில்தான். இதன் அடிபபடையில்தான் புலிகளின் மீதிப்பகுதியையம் தாம் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று அவர் கடந்த வாரம் கொழும்பில் தெரிவித்திருப்பதும்.



எனவே ஜனாதிபதி முழதாகப் போர்ச்சன்னதமாடத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு இப்போது போர்தான் உள்ள ஒரே மார்க்கம். அவரிடம் சமாதானத்துக்குப் போகும் வழியெதுவும் கிடையாது. இனப்பிரச்சினையைத்தீர்ப்பதற்கான வேறு தெரிவுகளும் அவரிடமில்லை. அதனால் அவர் போரில்தான் முழு முதலீட்டையும் செய்திருக்கிறார். மகிந்த சிந்தனையில் செய்யப்படாதவைகளையும் செய்ய முடியாதவையையும் அவர் போரின் மூலமே கணக்குத்தீர்க்க விரும்புகிறார். யுத்தத்தில் கேள்விகளுக்கு இடமில்லை என்பார்கள். எல்லாக்கேள்விகளுக்குமான ஓரெ பதிலை யுத்தம் சொல்லிவிடும். ஆனால் அந்த யுத்தம் தோற்கும்போது எல்லாக்கேள்விகளும் யுத்தபிதாவை நோக்கியே ஒரு பெரும்யுத்தத்தை நடத்தத் தொடங்கிவிடும்.



மகிந்த தன்னை நோக்கிய எல்லாக் கேள்விகளைத் தவிர்ப்பதற்காகவும் தமிழ்மக்களை நோக்கி பெரும் யத்தத்தை நடத்துகிறார். அவர் கடந்த ஒரு வருடகாலமாக யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை திறக்காமலே மூடி வைத்திருக்கிறார். ஏறக்குறைய அதுவும் ஒரு போர் நடவடிக்கைதான். அதாவது யாழ்ப்பாணத்தில் அவர் தமிழ் மக்களை முற்றுகைக்குட்படுத்தி வைத்திருக்கிறார். தமிழ்மக்களைத் திரளச் செய்தால் அவர்கள் பலமடைந்து விடுவார்கள் என்ற அடிப்படையில் அவர்களை அவர் துண்டு துண்டாக பிரித்து தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்.



இதன்மூலம் அவர்களின் போரிடும் ஆற்றலையம் திரள் சக்தியையம் குறைப்பதே அவருடைய நோக்கம். அப்படி அவர்களை மட்டுப்படுத்pக் கொண்டு தொடர்ந்து போரை முன்னெடுப்பது. அதுவும் ஒவ்வொரு பகுதியாக போரைத்தொடுத்து அந்தப்பகுதிகளை மெல்ல மெல்ல கைப்பற்றுவது. இதன்படியே கிழக்கில் ஒரு வருடகாலத் தொடர் போரில் அவர் ஒவ்வொரு பகுதியாக மெல்ல மெல்ல கைப்பற்றினார். அவருடைய இநதத்திட்;டத்துக்கு கிழக்கின் புவியியல் நிலையம்சம் சாதகமாக இருந்துள்ளது.



கிழக்கில் இது வரையில் வலுவான மரபுவழிச்சமரெதையும் புலிகள் செய்யதில்லை. வாகரையிலும் படுவான்கரையிலும் அவர்கள் மரபுவழிக்குக்கிட்டவான ஒரு போர் முறையைக் கையாண்டிருந்தபோதும் முழு அளவில் அவர்கள அங்கே ஒரு போதும் மரபு வழிச்சமரைச் செய்யவில்லை. ஆனால் அவர்கள் 1990 காலப்பகுpதயிலேயே அதாவது ஏறக்குறைய பதினாறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே வடக்கில் மரபுவழிச்சமரை நடத்தியுள்ளனர். ஆனையிறவு படை முகாம் மீதான புலிகளின் முதலாவது பெரும் போர் நடவடிக்கையின் பொது புலிpகள் மரபுவழிச் சமரைச் சய்திருந்தனர். அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களிலும் பல களங்களிலும் புலிகள் வடக்கில் மரபுவழிச்சமரை நடத்தியுள்ளனர்.

ஆனால் அவர்கள் கிழக்கில் அவ்வாறான ஒரு பொறிமுறைக்குப் Nபுhகவில்லை. அப்படிப்போகவும் அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் கிழக்கில் மரபுவழியிலான பெரும் போரைச் செய்யக்கூடிய களநிலை இல்லையென்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தம்மை நொக்கி வரும் பெரும்போரை அங்கே வலுவுடன் நின்று எதிர் கொள்வதை விடவும் அங்கிருந்து தம்மைப்பாதுகாப்பாக வெளியகற்றுவதையே அதிகமும் விரும்புவார்கள். அதனையே அவர்கள் இப்போது செய்து மிருக்கிறார்கள்.



வாகரையைப் படையினர் கைப்பற்றியபோதும் இதுமாதிரியெ புலிகள் தம்மைப்பாதுகாப்பாக வெளியகற்றியிருந்தனர். அப்படி வெளியகற்றுவதன் மூலம் தமது போரிடும் திறனை அவர்கள பாதுகாத்துள்ளனர். அத்துடன் வெளியகன்ற புலிகள் எல்லாம் திரண்டு அவர்கள் இப்போது வன்னியில் பெரும் பலமாகியிரு;ககிறார்கள். அடுத்து பெரும் பேரை எதிர்கொள்ளக்கூடிய மாதிரியோ அல்லது பெரியதொரு போரைச் செய்யக்கூடியமாதிரியோ அவர்களின் பலம் திரண்டிருக்கிறது. இந்தப்பலத்தை ஒரு மையத்தில் திரட்டியிருப்பது அரசாங்கமே.



இதெல்லாம் நிச்சயம் படை;தரப்புக்குத் தெரியாதென்றுமில்லை. படைத்தரப்பைப் பொறுத்தவரையில் அதற்கு இராணுவச் சமநிலையில் அது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முனனர் தோல்விகளைச் சந்தித்ததாகவே அதன் கவலையிருந்தது. அப்படியே அதைப்பற்றிய மதிப்பீடுமிருந்தது.



அதை ஈடுகட்டும் நோக்குடன் இப்போது கிடைத்திருக்;கும சந்தர்ப்பத்தை படைத்தரப்பு பயன்படுத்த விளைகிறது. அதாவது இப்போது படைவலுச்சம நிலையில் புலிகளை வென்று விட்;டதாக அது தன்;னை உயர்த்தியுள்ளது. இதற்கமைய அது தனக்குச்சாதகமான பகுதிகளில் போர் நடவடிக்கையை விரிவாக்கியிருக்;கிறது. இதன்படி படைத்தரப்பு இப்பொழுது ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆனால் இந்த அடைவு குறித்து பல்வேறு வகையான அவதானங்களுண்டு.



கிழக்கில் வெற்றியைப்பெறுவதற்காக மிகவும் அகன்ற பரப்பில் படைததரப்பு காலை வைததுள்ளது. இதன்படி அது கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக பெருஞ்சிரமப்பட வெண்டியிருக்கும். ஏனெனில் எல்லோரும் எதிர்பார்ப்பதைப்போல புலிகள் தமது நடவடிக்கையை கெரில்லாப் போர்முறைக்கு மாற்றுவார்கள். அப்படி கெரில்லாப்போர் முறையை அவர்கள்; கைக்கொள்ளும்போது படைத்தரப்பு அதைச்சமாளிக்க பெரிதும் திண்டாடும்.



அத்துடன் கிழக்கின் சமூக நிலையும் முற்றிலும் வித்தியாசமானது. அங்கே தமிழ் முஸ்லிம் சிங்களச் சமூகங்கள் இருக்கின்றன. அடுத்து தொடரும் கெரில்லா போரில் தனியே தமிழ் மக்களை மட்டும் படையினர் பழிவாங்கவோ இலக்க வைக்கவோ முடியாது.



அத்துடன் பரவியுள்ள படையினரைப்பாதுகாக்கவும் அவரகளுக்கான வழங்கல்களைச் செய்யவும் படைத்தரப்புக்கு அப்போது பெரும் நெருக்க்டியம் சவாலும் ஏற்படும். அப்போது அங்கே மேலதிக படையினரைக்குவிக்கவும் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் வேண்டிய கட்டம் அரசாங்கத்துக்கு ஏற்படும்.



அதேவேளை அப்போது அரசாங்கம் வேறு முனையில் போரைத் தொடங்கினால் அதற்கும் ஆளணி வேண்டும். எந்தப்பிரதேசத்தையும் கைப்பற்றுவது ஒரு படையின் பெறுமானத்தைக்காட்டுவதல்ல, கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதே அதன் நிலைப் பெறுமானம் என்பார்கள்.



இந்த நிலைப் பெறுமானத்தை அரசாங்கம் எட்டுமா. அதற்குப்புலிகள் இடமளிப்பார்;களா. ஏனெனில் புலிகள் இப்போது அரசாங்கத்தை மட்;டுப்படுத்த வேண்டிய அவசியத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கத்தின் போர் முனைப்புக்கு பதிலளிக்கவேண்டிய கட்டத்திலிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தின் போர முனைப்பை அவர்கள தணிக்க வேண்டுமெனில் வரும்போரை முறியடித்து அரசாங்கத்தின் முது கெலும்பை உடைக்க வேண்டும். அல்லது தாங்கள் ஒரு போரைத் தொடங்கி அதன் மூலம் அரசாங்கத்தை பின்னடையச் செய்யவேண்டும்.



இதன்படி அடுத்து நடக்கப்போகிற போர் என்பது அரசாங்கத்தை கட்டாயமாக போர் வெறுப்புக்கும் சமாதான விருப்புக்கம் கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான உள்வெளி அமைவுகளை திரு. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் உருவாக்கி விட்டது.
இப்போது அரசாங்கம் கொண்டாடியுள்ள வெற்றி என்பது தமிழ்மக்களை நிறையவும் காயப்படுத்தி விட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர் யாழ்;ப்பாணத்தின் வெற்றியைக் கொண்டாடிய அரசாங்கம் அப்போது தமிழ்; மக்களை அவமானப்படுத்திpயது. அதையே இப்போது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் செய்திருக்pறது.



அப்போது யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டதாகக்கூறிய அரசாங்கம் இப்பொழுது அதை திறந்த வெளிச்சிறைக்கூடமாக்கி வைத்திருப்பதைப்போல கிழக்கும் ஒரு தீராத பிரச்சினைகளின் மையமாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது தொடரும் யுத்த பூமியாகவும் அமைதியற்ற பகுதியாகவும் ஆகக்கூடிய சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றன. அத்துடன் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான எல்லையும் எட்டியே விட்டிருக்கிறது. அது போராயினும் சரி சமாதான மூலமாயினும் சரி. கிழக்கை ஒரு வெல்லும் வரை அல்லது கிழக்கை திரு;வில் இணைக்கும் வரை புலிகள் எதற்கும் இறங்கிவர மாட்டார்கள்.



ஆகவே பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகியே விட்டிருக்கிறது. போரின் மூலம் பெறப்படும் உடனடி வெற்றிகள் ஒரு போதும் தீர்வுக்கு வழியைத்தராது என்பது மிகச்சரியாகவேயிருக்கிறது.
இப்போது கிழக்கில் பெற்றுக் கொண்ட சாதக நிலையை பாதிக்கப்பட்டமக்களின் நோக்கு நிலையிலிருந்து பார்க்காமல் தன்னுடைய தேவை மற்றும் நோக்கு நிலையிலிருந்து பார்த்து கொண்டாடுகிறார் ஜனாதிபதி. என்ன செய்வது சந்திரிகா குமாரதுங்கவைப்போல டி.பி விஜயதுங்கவைப்போல அவரும் ஆட்சியிலிருக்கும்போது குதிரையை ஓட்டுகிறார். அவர் குதிரையை விட்டு இறங்கியவுடன் எல்லாமே தெரியவரும். அதாவது வெல்ல முடியாத போரில் தான் என்ன செய்திருக்கவேண்டும் என்று.

Tuesday, July 3, 2007

த.அகிலன் கவிதைகள் வெளிதேடியலையும் இன்னொரு பறவை

அகிலனின் கவிதைகளைப்பற்றி எழுதத் தொடங்கும்போது முதலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. எந்த அகிலனின் கவிதைகளைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது
என்ற கேள்வி உருவாகக்கூடியமாதிரி, தமிழில் பல அகிலன்களின் பெயர் பதிவாகியுள்ளது. அதிலும் ஈழத்தில் மட்டும் இரண்டு அகிலன்களுண்டு. ஒருவர் பா. அகிலன். மற்றவர் த.அகிலன். இருவருமே சமகாலத்தில் கவிதைகளை எழுதிவருகிறார்கள். இரண்டுபேருமே நவீன கவிதையின் புதிய பிரதேசங்களைக்கண்டடையும் முனைப்புடையவர்கள். எனவே இதில் எந்த அகிலனைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்று யாரும் முதலில் கேட்கவோ அவதானிக்கவோ கூடும்.

அதற்கு முன்னர் தமிழில் அகிலன் என்ற அடையாளம் பதிந்திருக்கும் விதம் குறித்து எழுதவேண்டிய நிலையுள்ளது. இந்தப்பெயர் கடந்த தலைமுறையில் பதிந்த விதம் வேறுவிதமானது. அது படைப்பின் கூர்மைக்கும் செம்மைக்கும் எதிரானதாகவே இருந்தது. அந்தத்தலைமுறையில் இருந்த அகிலனை வாசித்தவர்கள் ஏராளம். அந்த அகிலன் தமிழ்ப்படைப்புக்கு எதிராக இயங்கியவர் என்ற தெளிவின்றியே அன்று தமிழ்ச்சமூகம் அந்த அகிலனைக் கொண்டாடியது. இப்போதும் பொதுவாக அந்த அகிலனைப்பற்றிய மறுவாசிப்புகளில்லாமலே தமிழ்ச்சமூகமிருக்கிறது. செய்யப்பட்ட மறு வாசிப்புகளையும் முன்வைக்கப்பட்ட விமரிசனங்களையும் தமிழ்ச்சமூகம் சரியாகப்புரிந்து கொண்டதாகவும் இல்லை.

அகிலனுக்கு இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோதே படைப்பின் நுட்பங்களை அறிந்தவர்கள்கண்டித்தார்கள். அந்த விருதுக்கு அகிலன் தகுதியற்றவர் என்றும் எதிர்த்தார்கள். அப்போது விருதுக்குழு மீதே பெரும் குற்றம் சாட்டப்பட்டது. காலம் இவ்வளவு கடந்த பின்னும் அந்த விருது அகிலனுக்கு வழங்கப்பட்டமை குறித்து இன்னும் தீராத சர்ச்சைகளும் விமர்சனங்களுமுண்டு. ஆனால் அந்த அகிலன் தமிழில் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார். தமிழ்ச்சூழலின் அவல நிலையே இதுதான்.

தமிழில் பெரிதுங்கொண்டாடப்படுவோர் விழல்களாகவே இருந்துள்ளனர். இப்போதும் அப்படியான விழல்தனங்கள்தான் கொண்டாடப்படுகின்றன. விழல்தனங்கள் தமிழில் இலகுவாக வெற்றி பெற்றும் விடுகின்றன. பதிலாக சீரியஸானவை கவனிப்பாரற்றே கிடக்கின்றன.

இந்த அறிவீனம் அல்லது புரிதலின்மை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் பாரதியின் காலத்திலும் இருந்தது. இப்போதும் தொடருகிறது. பாரதியை அன்று பலரும் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்கிறோம். ஆனால் இப்போது மட்டும் யாரைச்சரியாகப் புரிந்து கொள்கிறோம். யாருக்கு உரிய இடத்தைக் கொடுக்கிறோம்.


தமிழில் பெருவாரியாகக் கொண்டாடப்;படும் சினிமா இதற்கு துலக்கமான உதாரணமாகும். வெற்றிப்படங்களாகவும் வெற்றிப்பட நாயகர்களாகவும் தமிழ்மூளை கண்டுபிடித்துக் கொண்டாடும் தரப்புகளின் சிறப்பு எதுவெனத் தெரியுமல்லவா. அதுபோலவே பெருவாரியான தமிழர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற படைப்பாளிகள், அரசியல்வாதிகள், விசயங்கள் எல்லாமே மிகவும் தரங்குறைந்தவையும் வாழ்க்கைக்கு எதிர்மாறானவையுமே இருக்கின்றன.

பதிலாக தரமானவையும் சிறந்தவையும் பாராமுகமாக இருக்கின்றன. சீரியஸானவை புறக்கணிக்கப்படுகின்றன. சீரியஸான ஆட்களும்தான்.

இத்தகைய துயரமும் அவலமும் நிறைந்த பின்னணியில்தான் தமிழ்ப்படைப்புகளை அணுகவேண்டியிருக்கிறது. அதிலும் அகிலன் என்ற ஒரு படைப்பாளி எழுதிய கவிதைகளைப்பற்றி எழுதவரும்போது இந்த மாதிரி ஒரு முன்விளக்கத்தைக் கொடுக்கவேண்டிய வருத்தந்தரும் நிலையுமிருக்கிறது.

இப்போது இரண்டு அகிலன்கள,; அகிலன் என்ற பெயர் தமிழ்ச்சூழலில் பதிந்துள்ள முறைமைக்கும் அடையாளத்துக்கும் மாறாக எழுதிவருகிறார்கள். இதில் பா. அகிலன் தன்னுடைய பதுங்குகுழி நாட்கள் என்ற தொகுப்புக்கூடாக பெருங்கவனிப்பைப் பெற்றவர். தமிழில் அகிலன் என்ற அடையாளம் பா.அகிலனின் மூலம் வேறுவிதமாக மாறுகிறது என்ற தொனியில் அவருடைய கவிதைகளை முன்வைத்துப் பேசும்போது வெங்கட்; சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது இன்னொரு அகிலன், வெங்கட் சாமிநாதன் சொன்னதைப் போல இன்னொரு புதிய அடையாளமாக தெரிகிறார். மாறுதலான பார்வையும் அனுபவமும் வெளிப்பாடும் கொண்ட ஒரு கவிதைத்தளத்தை நிர்மாணிக்க முனைகிறார் இந்தத் த. அகிலன்.

இவருடைய கவிதைகள் இன்னமும் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்படவில்லை. ஆனால் அகிலனின் கவிதைகள் பல இதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. அப்படி வெளியாகியுள்ள கவிதைகள்தான் இப்போது இந்த விமரிசனத்தை எழுத்தூண்டியிருக்கின்றன.

புரிந்துகொள்ளுதலில் இடையறாது நிகழும் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தவறுகளையும் -துயரோடு- சொல்லத்துடிக்கின்றன த. அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள் மனிதனைச் சிதைக்கும் அவலத்தை அகிலன் சொல்கிறார். இப்படி புரிதலின்மையின் மையத்தை அகிலன் சொல்லத்துடிக்கும்போது அதை அவற்றின் அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல் வேறுவிதமாகப் புரிந்து கொள்ளும் நிலையும் யதார்த்தத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதுதான் மிகச் சுவாரசியமானதும் மிக அவலமானதுமாகும்.

புரிந்துகொள்ளலின்மை பற்றி பேசும்போது அதையே புரிந்து கொள்ளாமலிருக்கும் அவலத்தை என்னவென்று சொல்லலாம். புரிந்துகொள்ளலில் நடக்கின்ற குறைபாடுகளைப்பற்றி குறிப்பிடும்போது அதனையே குறைபாட்டுடன் புரிந்து கொள்ள முற்படும் அவலம் என்பது பெரும் வேதனைக்குரியது. இப்படியெல்லாம் புரிதலின்மை நிகழும்போது மனிதன் புழுவைப்போல துடித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. இந்தத் 'துடித்தல் ' என்ற அந்தரிப்பு நிலைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் பேரவலம் அகிலனின் கவிதைகளில் நிரம்பிக்கிடக்கின்றன. நவீன வாழ்வில் நிரம்பிக்கிடக்கும் காயங்களில் அநேகமானவை புரிதலின்மையினால் ஏற்படுவதே.

புரிதலின்மையில் மொழியும் நடத்தைகளும் முக்கியமாகின்றன. மொழியின் தொனி பல சந்தர்;ப்பங்களிலும் எதிர்மறையான புரிதல்களை, விளக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றது. சொல்லில் மட்டும் பிழையான பொருள் ஏற்பட்டு விடுவதில்லை. சொல்லும் தொனியிலும் தவறான புரிதல் நிகழ்ந்து விடுகிறது. இதற்கு மொழியின் விரிவிலுள்ள போதாமை ஒரு காரணம். அத்துடன் அந்தச் சொற்களைப்பற்றிய படிமமும் அவை உணர்த்துகிற முன்னனுபவங்களும் இவ்வாறு தவறான புரிதல்களுக்குக் காரணமாகிவிடுகின்றன. அவ்வாறு படிமம் உருவாகுவற்கு அப்போதைய மனித நடத்தைகளே காரணமாகின்றன.

ஆகப் பொதுவாக, மொழிக்கும் அப்பால் மனித நடத்தைகள் முக்கியமானவையாகின்றன. இந்த நடத்தைகள்தான் சொல்லுக்கான பொருளை அர்த்தப்படுத்துகின்றன: நம்பகத்தன்மையையும் உருவாக்குகின்றன.

ஒரு காலத்தில் மதிப்பாக இருந்த சொல் பின்னர் கொச்சைப்படுத்தப்பட்ட பாவனைக்காளாகிறது. அம்மா என்ற சொல்லும் அது சுட்டும் உணர்வும் அந்த உறவும் அடையாளமும் மிகப் பெறுமதியானது. ஆனால் அது சுருக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் நிலைக்கு வந்திருப்பதன் அவலத்தை என்ன என்பது.

இன்று பொருளும் (அர்;த்தமும்) நம்பகத்தன்மையும் இழந்திருக்கும் ஏராளம் சொற்களுண்டு. இந்த அர்த்தமின்மையையும் நம்பகமின்மையையும் மனித நடத்தைகளே உருவாக்குகின்றன. அர்த்தத்தையும் நம்பகத்தன்மையையும் உருவாக்க வேண்டிய நடத்தைகள் அதற்கு எதிர்மாறாக இயங்குவதே இப்Nபுhது அதிகரித்துள்ளது. இது இன்னுமின்னும் பெருகியபடியே இருக்கிறது.

உறவுகளுக்குள் நாங்கள் பெரும்பாலும் சந்திக்கின்ற பல பிரச்சினைகளின் மையமே புரிந்து கொள்ளலில் நிகழ்கின்ற தவறுகளும் சறுக்கல்களுமே. அகிலனுடைய கவிதைகளின் மையம் இதுதான்.

என்னுடைய
காலடிச்சுவடுகள்
கண்காணிக்கப்படுபவை
புன்னகைகள்
விசாரணைக்கானவை

அடுத்த கணங்கள் பற்றிய
அச்சங்களும்
துயரும் நிரம்பிக்கிடக்கிறது
வழிமுழுதும்

(அடுத்து வரும் கணங்கள்)


அதிகமதிகம் அவநம்பிக்கையும் தன்னலத்தின் குரூரமும் பெருகிக் கிடக்கும் சூழலில் விதிக்கப்பட்டிருக்கும் சாபமாகிக் கிடக்கிறது நியாயவானின் வாழ்க்கை. நீதியும் நியாயமும்கூட ஆளாளுக்கு வேறுபடுகின்றன. சார்புநிலைப்படுகின்றன. குடும்பங்கள் விரிசலடைந்து வருகின்றன. உறவுகளுக்குள் அந்நியத்தன்மை பெருகி முகமூடிகளை உற்பத்தி செய்கிறது. அன்பில் எண்ணற்ற கரும்புள்ளிகளையும் காயத்தையும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது புரிந்துணர்வின்மை. எதிரும் புதிருமான நிலைப்பாடுகளுக்கு முடிவேயில்லை என்றாகி விட்டது.

அகிலன் எழுதுகிறார்



எப்போதும்
எனது சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்
மனதில் ஒளிந்திருக்கிறது

(தவறி வீழ்ந்த முடிச்சு)





இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையானதாயிருக்கிறதா

(எதிர்பார்ப்பு)





நான் சிந்திப்பதை
நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்
அது என்னைக்
கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது.


புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
கண்களின் பின்னாலுள்ள
இருள்நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான் நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான் சிந்திப்பதை நிறுத்தியேயாக வேண்டும்.

(சிந்திப்பது குறித்து)

ஒழுங்கமைப்புகள், தனியாள் நிலைப்பாடுகள் என்வற்றுக்கிடையிலான புரிதலில் உள்ள பெருங்குறைபாடுகள் வாழ்வைப்பிளந்தெறிகிறது. இந்த இரண்டையும் சமநிலைப்படுத்துவதிலும் சரியான அணுகுமுறைகளில்லை என்பது முக்கியமானது. இவற்றுக்கிடையிலான புரிதல் சரியாக நிகழ்ந்திருக்குமானால் அவலங்களுக்கும் துயரத்துக்கும் இடமேற்பட்டிருக்காது. தவிர முரண்களும் கொந்தளிப்பும் கூட ஏற்படாது. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் மனமும் இதயமும் அறிவொழுக்கமும் இன்னும் பெரிதாக இல்லையென்பதே கொடுமையானது.

" எல்லோருக்கும் அறிவும் இதயமும் சேர்ந்திருக்கவேணும்" என்று சொல்வார் ஒரு நண்பர். " அதுவுமில்லாது விட்டால் அறிவாவது இருக்க வேண்டும். இல்லையென்றால் மனச்சாட்சியாவது இருக்க வேணும். இது எதுவும் இல்லாமற்தான் இன்று சூழல் இப்படிக் கெட்டுக் கிடக்கிறது " என்று சொல்வார் அவர்.

அதிகாரம் மிகப் பெரும் சவாலாக மனிதனைச் சூழ்ந்திருக்கிறது. மனிதன் மீPளமுடியாத சவாலாக அது பல ரூபங்களிலும் அரூபங்களிலும் விருத்தியுற்றுக் கொண்டேயிருக்கிறது. அழிவேயில்லாத மிகப் பெரிய சவால் அது. நுட்;பங்களும் தந்திரங்களும் பொறிகளும் குரூரங்களும் நிரம்பிக்கிடக்கும் பெரும் சவால்.

மனிதனி;ன் எல்லாப்படைப்புகளும் எண்ணங்களும் அதிகாரத்தை நோக்கியதாகவும் அதிகாரத்தை எதிர்ப்பதாகவும் அல்லது அதை மறுப்பதாகவுமே இருக்கிறது.

ஒரு பக்கம் அதிகாரத்தின் திரட்சிக்காக மனித ஆற்றல் முழுதும் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் அப்படித்திரண்ட அதிகாரம் மனித வாழ்வுக்கு எதிராக இயங்குகிறது என மீண்டும் அந்த அதிகாரத்துக்கெதிராக மனித ஆற்றல் முழுவதும் திரட்டப்படுகிறது. இப்படியே மனித அவலம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

அதிகாரத்தின் நிழல்படியாத வாழ்க்கையில்லை. அதிகாரத்தின் குருதியோடாத இதயங்களில்லை. ஆளுக்காளிடம் வடிவங்களிலும் அளவுகளிலும் அது மாறுபடலாம். அல்லது வேறுபடலாம். ஆனால் தன்மையிலும் அடிப்படையிலும் அது ஒன்றுதான்.

அதிகாரம் ஒரு போதை. மிகப் பெரியபோதை. தீராப்போதை. மனிதனின் மிகப்பெரிய ருசியான பண்டமே அதிகாரம்தான். அது போதையூட்டும் ருசி. ருசி தரும் போதை. அந்த ருசி பிடிபடப்பிடிபட அது தீராத்தாகத்தை அளித்தபடியேயிருக்கிறது.

அதிகாரத்தின் வேர்முடிச்சுகளில் நிம்மதியின்மை கிளைக்கிறது. மனிதனை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய பிரம்பாக அது சதா மனிதகுலத்தை மிரட்டிக்கொண்டேயிருக்கிறது. மிகநுண்ணிய வடிவங்களிலும் வகைகளிலும் மாபெரும் வலைப்பின்னலாக அது வாழ்வைச்சுற்றியிருக்கிறது. அதற்கு எண்ணற்ற நுட்பங்கள் உருவாகிவிட்டன. இதுவரையில் மனித குலம் தன் ஆற்றலை அதிகாரத்தின் நுட்பங்கள் குறித்தே அதிகளவில் செலவளித்திருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அதிகூடிய நுட்பமுடைய கருவியும்; அதிகாரம்தான்.

அதேபோல மனித உழைப்பின் பெரும்பகுதியும் அதிகாரத்துக்கும் அதிகாரத்துக்கெதிரான முயற்சிகளுக்குமாகவே செலவளிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவரிடம் உள்ள அதிகாரம் பிரயோகிக்க முடியாமற்போகிறது. இன்னொருவர் அதையும் சுவீகரித்துக்கொண்டு பலமான நிலையில் பெருக்கிறார். அப்படிப் பெருக்கும்போது வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. இங்கேதான் சிதைக்கப்படும் வாழ்வைக்குறித்து படைப்பியக்கம் நிகழ்கிறது. இந்தப்படைப்பியக்கம் அதிகாரத்துக்கு எதிரானவாழ்வியக்கமாக வாழ்வை நசிக்கும் அத்தனை குரூரங்களுக்கும் எதிரானதாக தொழிற்படுகிறது.

ஆனால் பொதுத்தளத்தில் மாற்று அதிகாரம் குறித்த சிந்தனை இன்று பின்னகர்ந்து கொண்டிருப்பதாகவே படுகிறது. வணிகக்கலாச்சாரமும் உலகமயமாதலும் உருவாக்கியுள்ள இடைவெளியின்மை வாழ்க்கையை மீள்பரிசீலனை செய்யும் மனோநிலையையும் அவகாசத்தையும் இல்லாமற் செய்துவிட்டது.

மறுபுறத்தில் அதிகாரத்துக்குப் பலியாகும் சனங்களின் தொகை பெருகிக் கொண்டேயிருக்கிறது. சனங்கள் விழிகளை இழக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய செவிகளையும் இழந்துபோகிறார்கள். பொதுவாகச் சொன்னால் புலன்களை இழந்துபோகிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த புலன்களையிழந்த மனிதர்களுக்காகவே இப்போது பெருவாரியான ஊடகங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. புலன்களுக்காகவும் புலன்திறப்புக்காகவும் இயங்கவேண்டிய ஊடகங்கள் புலன்களை அடைக்கும் முரண்நிலை பெருகிய யதார்த்தம் இது.

அதிகாரத்தைப் பரப்பும் அதைப் பிரயோகிக்கும் நுண்ணரசியலின் வடிவப் பெருக்கில் இன்று ஊடகங்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்தளவுக்கு மாற்றதிகாரத்துக்கான அறிவுப்பலமும் நுட்பமும் விழிப்பும் ஊடகப்பயன் பாடும் இல்லை.

இதெல்லாம் அகிலனுக்கும் பிரச்சினையாக இருக்கின்றன. உறவுகளுக்கிடையில் பெருகியிருக்கும் அதிகாரம் பொய்முகங்களையும் நெருக்கடிகளையும் உற்பத்தி செய்தபடியே யிருக்கின்றது.

அதிகார மனோநிலை எதையும் சந்தேகிக்கிறது. எதையும் தன்னுடைய கோணத்திலிருந்தே பார்க்க முற்படுகிறது. அதனால் எல்லாவற்றிலும் அதிகளவுpல் தவறுகள் நிகழ்கின்றன. அதாவது தவறான புரிதல்களும் அச்சங்களும் ஏற்படுகின்றன. உண்மையில் இது எந்த அடிப்படையும் அற்றது. தேவையில்லாதது. வாழ்;க்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரானது.

அதிகாரத்துக்கெதிரான கவிதைகளைச்சமகாலத்தில் தீவிரமாக எழுதியவர் எஸ்போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகர். அவருடைய கவிதைகள் அதிகாரத்தின் குரூர முகத்தை கடுமையாக எதிர்த்தன. அதிகாரத்தின் நுட்பத்தையும் அதன் பொறிகளையும் எஸ்போஸ் தன்னாற்றல் முழுவதையும் திரட்டி எதிர்த்தார்.

ஆனால் அந்த அதிகாரம் அவரை ஏதோ ஒரு வடிவத்தில் பலியெடுத்து விட்;;டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எஸ்போஸ் சொல்லி வந்த அதிகாரம் அவர் எதிர்பார்த்ததைப் போல அவரைக் கொன்று விட்டது. அவர் தன்னுடைய குழந்தைகளின் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சமகால வாழ்வின் நிலைமைகளோடு இதை இணைத்து அகிலன் எழுதுகிறார் இப்படி …

பற்கள் முளைத்த
இரவுகள்
கனவுகளைத்தின்று கொழுத்தன

தூக்கத்தை
சிறையிலடைத்த
இரவின் படை வீரர்
விழிகளைச் சூறையாடினர்

……..
…….
என் கனவின் மீதியை
வானில் கரைக்கிறது
நடு நிசியில்
வீரிட்டுப் பறக்கும்
ஒரு பறவை

மனிதனின் அத்தனை மாண்புகளையும் அதிகாரம் என்ற இந்தக்கரும்புள்ளி பெருநோயாகி அழித்துக் கொண்டேயிருக்கிறது.

மனிதன் தன் வரலாற்றில் இந்தப்பூமியை அதிகளவில் சுவீகரித்திருக்கிறான். உண்மையில் அப்படிச் சுவீகாரம் பண்ணும் அதிகாரமோ உரிமையோ மனிதனுக்கில்லை. இந்தப்பூமியில் மனிதனும் ஒரு பிராணியே. ஏனைய பிராணிகளுக்கிருக்கும் இயற்கையின் உரிமைதானே மனிதனுக்கும் உண்டு. ஆனால் இந்த உண்மையை மனிதன் விட்டுவிட்டு தன்னுடைய அதிகார வெறிக்காக இதுவரையில் பூமியின் பெருவாரியான வளங்களை அழித்திருக்கிறான். மனித உழைப்பின் பெரும்பகுதியைச் சிதைத்திருக்கிறான். உண்மையில் இந்தப்பூமியின் மிகப்பெரிய எதிரி மனிதனே. தன்னுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் பண்புக்கும் அவன் உருவாக்கிய அறத்துக்கும் நீதிக்கும் அவனே எதிரி.

இந்தப்பிரச்சினைகள் பொதுவாக எந்தப்படைப்பாளியையும் நிம்மதியாக இருக்;க விடுவதில்லை. அதிகாரத்தின் வௌ;வேறுவிதமான பொறிகளால் கணமும் நிம்மதியற்றுத்தவிக்கும் அந்தர நிலையின் வலியை உணரும் நிலையையிட்ட வருத்தம் அகிலனையும் அலைக்கிறது.

அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்;
நிரம்பிக்கிடக்கிறது வழிமுழுதும்;

(அடுத்து வரும் கணங்கள்)


உறவுகளுக்குள்ளும் மின்னலைகளாக அதிகாரமே ஊடுருவியிருக்கும்போது அன்பு பாசம் இரக்கம் நேசம் எல்லாமே பொய்யாகி விடுகின்றன. இதனால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நலன் சார்ந்தே எல்லாம் நிர்ணயம் செய்யப்படுகிறது. நலனின் அடிப்படையிலேயே இணக்கமும் இணக்கமின்;மையும் நிகழ்கிறது. அகிலன் இந்த நுண்வலைப்பின்னலை கண்டு அதிர்ந்துள்;ளார்.

பிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு மூலையில்
சிக்கிக் கொண்டது
திருப்தியும் அன்பும்;

(தவறி வீழ்ந்த முடிச்சு)

இந்த நிலையில் மெய்யன்புக்கும் உறவுக்கும் இடமில்லை. உண்மையான அர்த்தத்தில் இதெல்லாம் உணரப்படுவதுமில்லை. அதனால் அவை உரிய முறையில் பொருட்படுத்தப்படுவதுமில்லை. உறவு அன்பினாலும் கருணையினாலும் எதிர்பார்ப்புகளுக்கப்பாலான நெருக்;கத்தினாலுமே உருவாகிறது என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்துக்குள்ளாகிறது.

பதிலாக அது நலன்சார்ந்து. தேவைகளின் அடிப்படையில் பராமரிக்கப்படுகிறது என்பதைக்காணும்போது அதற்கப்பால் சிந்திக்கும் மனம் படுகின்ற துயரம் சாதாரணமானதல்ல.

இது அன்புக்கு எதிரானது. கருணைக்கும் உண்மைக்கும் மாறானது. பரஸ்பரம் என்பதற்கும் பற்றற்றது என்பதற்கும் இதில் இடமில்லை.

அன்பு என்பதன் பொருள் சிதையும் போது அதன் மெய்ப்பொருள் தேடும் மனம் அவலத்தில் வீழ்கிறது. இப்படி வீழ்ந்த மனங்களில் ஒன்று அகிலனுடையது. அன்பினால் இழைக்கப்படுவது உறவு என எதிர்பார்க்கும்மனதில் எழும் காயஙங்களை அகிலன் தன் கவிதைகளில் வலியெழும்பக்காண்பிக்கிறார்.

எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்

(துயரின் தொடக்கம்)


அகிலனுக்கு எல்லாமே துயரமயமாக இருக்கிறது. உண்மையற்;ற தனம் பெருகும் போது இப்படி புன்னகையும் துயரின் தொடக்கமாகவே இருக்கும் என அவர் உணர்கிறார்.

தன்னைப்புரிந்து கொள்ளத்தவறும் மனிதர்களை நோக்கி அகிலன் பேச முனைகிறார். புரிந்துகொள்ளத்தவறுவது வேறு. புரிந்து கொள்ள மறுப்பது வேறு. இரண்டு அனுபவங்களும் அகிலனை வருத்துகின்றன.

நமது வாழ்வில் அநேக தருணங்களில் நாம் பலதையும் புரிந்து கொள்ளத்தவறி விடுகிறோம். அதேபோலவே பல சந்தர்ப்பங்களிலும் மனிதர்களையும் மனித நடத்தைகளையும் விளங்கிக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இது இடைவெளிகளை உருவாக்குகிறது. பின்னர் இந்த இடைவெளிகளை நிர்பபமுடியாமலும் கடக்கமுடியாமலும் திணறுகிறோம். அகிலன் இந்த அந்தரிப்பையும் இந்த மூடத்தனத்தையும் கோபத்தோடும் துயரத்தோடும் பரிகாசத்தோடும் சொல்கிறார்.

என் மரணத்தின் போது
நீ ஒரு உருக்கமான
இரங்கற் கவிதையளிக்கலாம்
ஏன் ஒரு துளி
கண்ணீர் கூட உதிர்க்கலாம்

என்
கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்
அதைப் பூக்களால்
நீ நிறைக்கலாம்

நீ என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேநீரோ
வரும்
பொளர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது

(எதிர்பார்ப்பு)


உளவியற் சிதைவுகள் ஏற்படுவதன் அடிப்படையே பெரும்பாலும் புரிந்துணர்வின் வீழ்ச்சியே.

அகிலனின் காதற்கவிதைகளின் மையமும்கூட புரிந்து கொள்ளலின் நெருக்கடிகளைப்பற்றியவையே. அல்லது புரிந்து கொள்ளலில் உள்ள குழப்பமே. அவருடைய பெரும்பாலான கவிதைகளில் தொனிக்கிற கேவல், துயர்க்குரல் என்பது ஏதோ ஒரு வகையில் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையின் வீழ்ச்சியே.

யாரோடும் பகிர முடியாதுபோன
புன்னகையும்
முத்தங்களும்
துயரங்களும்
என்னுடையவைதானென்று
யாருக்குத் தெரியும்

என் வார்த்தைகளின்
அர்த்தம் கூட
எனதாயில்லை

..........
..........

அழுவதற்கான
வெட்கங்கள் ஏதுமற்று
துளிக்கும்
என் கண்கள்

(சுயம்)

இந்தப்புரிந்துணர்வின்மை என்பது மனிதனின் எல்லா ஆற்றலையும் சிதைக்கும் பெருங்கண்ணியாக இருக்கிறது. அதிகாரத்தைப்போலவே இதுவும் எதிர் அம்சங்கள் நிறைந்தது. எனவே இந்த அடிப்படையைச் சீர்செய்யாதவரையில் மனித முயற்சிகளும் ஆளுமையும் பொருளற்றே போகின்றன.

மனித குலம் திரட்டிய ஆற்றலுக்கு எதிராக புரிந்துணர்வின்மையின் எதிர்மறைவிளைவுகள் பெருகிக்கொண்டேயிருப்பதால்தான் இவ்வளவு இடர்ப்பாடுகளும் பூமியில் நிரம்பிக்கிடக்கின்றன என்று அகிலன் உணர்த்துகிறார். புரிதலை அதன் மெய்ப்பொருளில் சாத்தியப்படுத்தாதவரையில் எந்த உன்னதங்களும் சாத்தியமில்லை என்கிறார் அகிலன்.

அகிலனின் கவிதை மொழி தீவிரமானது. நவீன கவிதை பெற்றுவருகின்ற புதிய தொனியில் அவர் தன்னுடைய உணர்வுகளை பதிவு செய்கிறார். இந்தப்பதிவு ஒரு வகையான உரையாடல்தான். ஆனால் முறையீடற்ற உரையாடல்.

நேரடியாகச் சொல்லும் முறையில் எண்ணற்ற நேர், நேர் மறை அம்சங்களை காண்;பிக்கும் நுட்பத்தை தன்னுடைய கவிதை முறையாக்கிருக்கிறார் அகிலன். இது மென்மொழி. துயர்நிறை மொழி. யதார்த்த உலகத்தின் இடர்ப்பாடுகளை சொல்வதற்கான எளிய மொழி.

வாழ்வின் மீதான ஈடுபாடும் இளவயதின் தாபங்களும் எதிர்பார்ப்புகளும் அகிலனை வதைக்கின்றன. இயல்பற்ற சூழல் எல்லாவற்றையும் சிதைக்கிறது என்ற வருத்தம் அவரை அவருக்குத் தெரிந்த வகையில் பேச வைக்கிறது.

இதில் சில கவிதைகள் சொரிந்த தன்மையோடிருக்கின்றன. இவை ஆரம்ப நிலைக்கவிதைகளாகவும் இருக்கலாம். குறிப்பாக சில காதற் கவிதைகள். காதற்துயரைச் சொல்லும் கவிதைகளை விடவும் காதலின் ஏக்கத்தையும் அன்பிழைதலையும் சொல்லும் கவிதைகளில் மொழியின் அமைப்பும் உணர்வாழமும் குறைவாகவேயிருக்கின்றன. அதேபோல சில அரசியற் கவிதைகள். சுலொகத்தன்மைக்கு கிட்டவாக நிற்கின்றன அவை. அதாவது அகிலனின் கவிதை மொழிக்கு மாறானவையாகவும் விலகியும் தெரிகின்றன.

குரூரமாகப்பிளந்தெறியும் அரசியலை, அதன் அடக்குமுறைப்பயங்கரவாதத்தை அகிலன் வெறுக்கிறார்.

அவர் தன்னுடைய 'கனவுகளைத்தின்னும் இரவுகள் ' என்ற கவிதையில் சொல்கிறார்

நீள இரவின்
பெரு மூச்சு
துப்பாக்கிகளினின்றும்
புறப்படுகிறது ….
பெரும் ஊழியாய்.

என்று.

இவையெல்லாம் நம் வாழ்வைச் சுற்றிய யதார்த்தங்கள் என்பதை உணர்த்துவதே அகிலனுடைய அக்கறை. இந்த அக்கறைதான் அகிலனின் மீது வாசகருக்கு ஏற்படுகிற கவனம். அவருடைய கவிதைகளின் மீது ஏற்படுகிற கவனமும்.

யப்பானின் காய் நகர்த்தல்கள்


யப்பானிய சிறப்புத்தூதுவர் யசூஸி அகாஸி ஒரு காரிய சித்தர் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அவர் தன்னுடைய நோக்கம் நிறைவேறும் வரையில் ஒரு போதும் அந்த முயற்சியில் தளர்ந்து விடுவதில்லை.

அந்த முயற்சி வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவர் எவ்வளவு கீழே இறங்கமுடியுமோ அந்தளவுக்கு கீழே இறங்கிக்கொள்வாhர். எவ்வளவு இறுக்;கமாக நிற்க முடியுமோ அந்தளவுக்கு இறுக்கமாக நிற்பார்.

அவரைப் பொறுத்த வரையில் யப்பானுக்காகவே எல்லாம். அதுவும் எதிர்கால யப்பானுக்காக எல்லாம் எல்லாம்.

அகாஸியின் தீவிரமான முயற்சி இப்Nபுhது மெல்ல வெளிப்படையான பலனை அவருக்கு ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. அவர் போர் நெருக்கடியும் அபாயமும் நிறைந்த வாகரைக்கே போயிருந்தார். அவரால் எடுக்கக்கூடிய எல்லாவகையான றிஸ்க்கையும் அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மீள் குடியேற்றம் என்றபோர்வையில் சிறிலங்காவுக்கு உதவும் பொருட்டே அவர்அங்கே சென்றார். அவருடைய பயணம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டும் முயற்சி என்று சில நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறர்கள்.

அத்துடன் சிறிலங்காவுக்கு வேண்டிய உதவிகளை யப்பான் தொடர்ந்து செய்யும் என்றும் அவர் சொல்லியிருந்தார். இப்படிச் சொல்லி, அவர் சிறிலங்காவுக்கு ஒரு பெரிய தூண்டிலைப் போட்டிருந்தார்.

சிறிலங்கா இப்பொழுது சர்வதேச ரீதியாக மனித உரிமைகள் விசயத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் யப்பானின் இந்த உதவியும் அறிவிப்பும் சிறிலங்காவுக்கு பெரும் ஆறதலாகவேயிருந்தது. அதற்குப் பதிலாக சிறிலங்கா இப்போது யப்பானுடன் மீண்டும் கொடுக்கல் வாங்கல்களை அதிகரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களின் முன்பு நூற்றுக்கு மேற்பட்டோரைக் கொண்ட பெரியதொரு வர்த்தகக் குழுவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீனாவுக்குப் போயிருந்தார். Nபுhகும்Nபுhது பெரியதொரு பரிசாக அவர் ஒரு யானைக்குட்டியையும் கோண்டு போயிருந்தார்.சிறிலங்காவில் சீனா தாhராளமாக முதலீடுகளைச் செய்யலாம். சீனப் பொருட்களை இலங்கைச்சந்தையில் விற்கலாம் என்ற உடன்படிக்கைகள் அப்போது செய்யப்பட்டன.

இப்படி முழதாக இலங்கையை மகிநத ராஜபக்ஸ சீனாவிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு வரத்துணிந்தார். மகிந்தவின் இந்த வி;ட்டுக்கொடுப்புக்காக சீனா அவர் கேட்டுக் கொண்ட ஆயத உதவிகளைச் செய்யமுன்வந்துள்ளது. ஆனால் அந்த நிலைமையை சற்று மாற்றியமைக்கும் விதமாக இப்போது அகாஸியின் முயற்சிகள் அமைந்திருக்கின்றன. அவருடைய முயற்சியின் விளைவாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித Nபுhகல்லாகம அடங்கிய குழவினர் இப்போது யப்பானுக்குப் போயிருக்கிறார்கள்.

யப்பானில் இந்தக்குழுவுக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நிலமை குறித்து Nபுhகல்லாகம யப்பானியத் தொலைக்காட்சியில் விளக்கம் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் யப்பான் சிறிலங்காவை மிக நெருங்கி வந்துவிட்டது.

அதாவது சீனாவுக்கு கிடைத்திருக்கும் சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்பை கையகப்படுத்தும் தீவிர முயற்சியில் இப்பொழுது யப்பான் ஈடுபட்டிருக்கிறது. இதில் யப்பானுக்கு இன்னொரு அனுகூலமுண்டு. யப்பான் எப்போதும் நேரடியாக சிறிலங்காவின் அரசியலில் தலையிட்டதில்லை. அதேவேளை அது பாரம்பரிய நட்புறவு என்ற அடிப்படையில் வெளியே அதிக சலனமில்லாமல் தன்னுடைய காரியத்தைப் பார்க்கிறது.

இதேNவுளை ஏறக்குறைய பன்னிரண்டாண்டுகளுக்கு முதல் சிறிலங்காவின் சந்தையில் யப்பான் அதிக செல்வாக்குடையதாக இருந்தது. குறிப்பாக ஐ.தே. க காலத்தில் யப்பானின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. எங்கும் யப்பான் மயம், எதிலும் யப்பான் மயம் என்றமாதிரி இருந்தது அப்போது.

சந்திரிகா வந்து இதை மாற்றியமைத்தார். அவர் தமிழ் மக்களுக்கான போரைச் செய்வதற்கான முறையில் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை தயாரித்தபோது அது யப்பானுக்கு சற்றுப் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை மாற்றுவதற்காக யப்பான் கடுமையாக முயன்றது. இதற்காக அது சமாதானத்தையும் ரணிலையும் முழுதாக நம்பியுமிருந்தது. ரணில் ஆட்சிப்போறுப்பை ஏற்றவுடன் யப்பான் அதிகமாக சந்தோசப்பட்டது. ரணில் போர்; நிறுத்த உடன் படிக்கையைச் செய்தNபுhது யப்பான் அதற்கு முழு ஆதரவைத் தெரிவித்து உதவியது.

இந்தப்புதிய ஏற்பாட்டுடன் யப்பான் வலு மும்முரமாக களத்தில் இயங்கத் தொடங்கியது. அகாஸி சிறப்புத்தூதுவராக இலங்கைக்கான பயணங்களைத் தொடங்கினார். இந்த ஐந்தாண்டுகளில் அதிகமாக இலங்கைக்குப் பயணம் செய்த வெளிநாட்டுத்தூதர்களில் அகாஸியும் ஒருவர். அவர் விடுதலைப்புலிகளையும் பலதடவை சந்தித்தார். அவருடைய சந்திப்புகள் ஒவ்வொன்றும் மிக நெருக்கமானது போலத் தோன்றும்;. அந்தளவுக்கு அவர் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் நன்றாக நெருங்கிப்பழகுவார்.

பேச்சுக்களின் போது பேச முடியாத சில கதைகளை பின்னர் மெல்ல தனிப்பட்ட முறையில் காதில் போட்டு விடுவதிலும் அவர் ஒரு வகையான உத்தியைக் கடைப்பிடித்தார். ஆனால் அகாஸியின் இந்தத்திட்டத்துக்கு முரணாக ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனாலும் அவரோ யப்பானோ தமது தரப்பின் எந்த முயற்சியையும் கைவிடவில்லை.அவர் அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்பிக்களைச் சந்தித்த போது அவர்கள் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் போர் முனைப்பையும் தமிழ் மக்களுக் கெதிரான Nபுhக்கையும் அகாஸியிடம் சொன்னார்கள். அதற்கு அகாஸி சொன்னார், 'ரணிலைத் தோற்கடித்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறீர்கள் ' என்று.

' அதைச் சீர்செய்யத்தான் இப்போது நீங்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தாராளமாக உதவுகிறீர்களா. இதில் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதை நீங்கள் அறியவில்லையா ' என்று காட்டமாக பதிலுக்குத் திருப்பிக்கேட்டிருக்கிறார்கள் த.தே. கூட்டமைப்பினர். இதற்கு அகாஸி எந்தப்பதிலையம் சொல்லாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் வேறு விசயங்களைப்பற்றிப் பேசினாராம்.

இதேபோல ஒருதடவை அவர் விடுதலைப்புலிகளைச்சந்திக்கும் Nபுhது " யப்பானுக்கு அமெரிக்கர்கள் என்ன செய்தார்கள் என்று நாங்கள் இப்போது யோசிக்கவில்லை, அமெரிக்காவுடன் எப்படி இருக்கப் போகிறோம், மாறிவரும் புதிய உலகில் எதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம் என்பதைப்பற்றியே சிந்திக்கிறோம், கடந்தகாலத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருப்பதைவிடவும் எதிர்காலத்தில் என்ன செய்;லாம் என்று சிந்திப்பதே முக்கியமானது " என்ற தொனிப்பட சொல்லியிருந்தாராம்.

அதாவது 'அமெரிக்கா அணுக்குண்டு போட்டதையே மறந்து விட்டோம் அதைவிடவா இந்தப்பிரச்சினையெல்லாம் பெரியது ' என்று அவர் கேட்காமல் கேட்கிறார். இந்தக்கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதோ இல்லையோ ஆனால் இதுதான் அகாஸி, இதுதான் யப்பான். அதாவது இத்தகைய ஒரு போக்கைப் பின்பறறியதால்தான் இனறு யப்பான் மீண்டும் உலக அரஙகில் முன்னுக்கு வந்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அதாவது யப்பானின் வெளியுறவுக் கொள்கை மிக வித்தியாசமானது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவைப்போலல்லாது அது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது எனபதே இங்கே கவனிகக் வேண்டியது.


யப்பான் இரண்டாம் உலகப்போருடன் சர்வதேச சமூகத்தால் முற்றிலும் துண்டித்து விடப்படும் அபாயத்திலிருந்த நாடு. அதிலும் மேற்குலகம் யப்பானை அடியோடு 'படுத்;திவிடும் ' நோக்கில் அதனைத் தனிமைப்படுத்த முயற்சித்;தது. யப்பான் ஒரு ஆசிய நாடாக இருந்ததும் இதற்கான காரணங்களில் ஒன்று. தவிர யப்பான் மூர்கத்தனமான உழைப்பிலும் நுட்பத்திறனிலும் வளர்ச்சி பெற்ற தன்மையுடையததாக இருந்தது. அதிலும் ஆசிய நாடுகளிலேயே யப்பானில்தான் இந்த இயல்பு முதன்முதலிலும் அதிகமாகவும் இருந்தது.

எனவே இந்தமாதிரியான காரணங்களால் மேற்கு யப்பானை அடக்கி வைப்பதற்காக அதைத்தனிமைப்படுத்த முயற்சித்தது. ஆனால் அதற்குள்ளால், அந்தத்தடைகள் நெருக்குவாரங்களுக்குள்ளால் எல்லாம் யப்பான் நிமிர்ந்து விட்டது.

உண்மையில் அமெரிக்கா யப்பானுக்கு இழைத்த அநீதி என்றென்றைக்கும் மாறாதது மட்டுமல்ல, மறக்க முடியாததும் கூட. ஆனால் அதை வைத்துக் கொண்டு பகைமை பாராட்டும் அரசியலை யப்பான் தவிர்த்து விட்டது. அதன்மூலம் அது தொடரும் நெருக்க்டிகளைத் தவிர்த்ததுடன் புதிய வளர்ச்சியை நோக்கியும் போய்விட்டது. யாராலும் புறக்கணிக்கமுடியாத ஒரு ஸ்தானத்தையும் பெற்றிருக்கிறது.

இப்போது சர்வதேச ரீதியில் சந்தையைப் பகிர்வதுடன் தீர்மானமெடுக்கும் தரப்புகளில் முக்கியமான நாடுகளில் ஒன்றாகவும் அது தன்னை நிலை நிறுத்தியிருக்கிறது. இத்தகைய உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் யப்பானின் உளவியலும் உழைப்புத்திறனும் சிந்தனையுமே அடிப்படை.

யப்பானியர்களின் உழைப்பைப்பற்றி பொதுவாக எவரும் சிறப்பித்தே சொல்வார்கள். அந்த உழைப்புத்தான் அவர்களுடைய முதல் நம்பிக்கை.

எந்தச்சூழலிலும் தங்களின் உழைப்பின் மூலம் எந்தத்டைகளையும் தாம் கடந்து விடுவோம் என்ற மனோ பலம் அவர்களிடம் வலுவாகவுண்டு. அதேபோல அந்த உழைப்புக்கான பெறுமதியை வீணாக இழக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள்.

எனவே தங்களுடைய உழைப்பின் பெறுமதியை இழக்காமல் அதை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கிலான வெளியுறவுக் கொள்கையை அவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதையே அவர்கள் பின்பற்;றுகிறார்கள்.

இந்த வெளியுறவுக் கொள்கையில் அவர்கள் தங்களுக்கான வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது யப்பானின் முதன்மையிடம் குறித்தே அவர்கள் எப்போதும் இயங்குகிறார்கள்.

இதற்கு யப்பானின் வரலாற்றில் நிறைய அடையாளங்களுண்டு. ஆனால் அதைப்பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில்; பார்த்துக் கொள்வோம்;.

சீனா எனற பெரிய நாட:டுக்கு அருகில் கடலால் சூழப்பட்ட தீவுககூட்டமாக இருந்த யப்பான் சீனாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் பல தடவை வைத்திருந்தது இதற்கொரு நல்ல உதாரணம்.

இந்தப்பின்னணியில் இப்போது யப்பான் இலங்கை விவகாரத்தில் செயற்படுகிற விதத்தைப் பார்க்கலாம்.

யப்பான் இலங்கையின் அரசியல் விவகாரங்களில் நேரடியாக தலையிடாத ஒரு போக்கைக் கடைப்பிடித்து வந்தது. ஆனால் இது வெளியே தெரிந்த ஒரு Nபுhக்கு மட்டுமே. இதற்குப்பின்னே மறைமுகமாக யப்பானின் தொடர்புகளும்; உதவிகளும் இலங்கை அரசியலிலும் இனப்பிரச்pனையிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

யப்பானின் வர்த்தகத் தொடர்புகளும் நிதியுதவிகளும் சிறிலங்கா அரசை எப்போதும் பலப்படுத்தியே வந்துள்ள்து. அதிலும் ஜே. ஆரின் காலத்தில் யப்பான் சிறிலங்காவுக்குச் செய்த உதவிகளும் சிறிலங்காவுடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகளும் சிறிலங்காவை மிகப்பலமாக்கின.

இது இனப்பிரச்சினையில் பாதிப்புகளை அடைய விடாமல் சிறிலங்காவைக் காப்பாற்றியது. அதேவேளை போரினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை யப்பானின் இந்த உதவி மறுவளத்தால் ஈடுசெய்தது.

இதில் யப்பான் இலங்கையின் இனப்பிரச்சினையில் பாதகமான நிலைப்பாட்டை எடுததாக முழுதாகச்சொல்ல முடியாது. அதாவது யப்பான் தமிழர்களுக்குப் பாதகமான நிலைப்பாட்டை எடுத்ததாக அர்த்தமில்லை. ஆனால் யப்பானின் பொருளாதார உறவுகளையும் உதவிகளையும் திரட்டி சிறிலங்கா தமிழர்களுக் கெதிராகவே பிரயோகித்தது.

யப்பானுக்குத் தேவை எப்போதும் சந்தையே. அதிலும் இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதார வளர்ச்சி யப்ப்hனுக்கு நேரடிச்சவாலான விசயம். இந்தியாவும் சீனாவும் யப்பானின் சந்தையை இப்போது அதிகமாகப் பங்கு போட்டு வருகின்றன.

குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில்; அதிக செல்வாக்கை யப்பான் செலுத்தி வந்தது. இப்போது இந்தச் சந்தையை இலக்கு வைத்து சீனாவும் இந்தியாவும் தமது பொருளுற்பத்தியையும் சந்தையையும் விரிவாக்கம் செய்துள்ளன. இது இன்றைய நிலையிலும் எதிர்கால நோக்கிலும் யப்பானுக்கு நெருக்கடிகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் காரியங்கள்.

எனவேதான் யப்பான் புதிய 'றோலைப் பிளே' பண்ணத் தொடங்கியிருக்கிறது. இதன்படி அது இணைத்தலைமை நாடுகளுக்கூடாகவும் தனியாகவும் உதவி வழங்கும் தரப்பினருடன் இணைந்தும் இந்த விசயத்தைக் கையாளுகிறது.

மறுபக்கம் தன்னுடைய தேவைகளுக்காக இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்துக்கு அப்பாலும் அது செயறபடத்தீர்மானித்துள்ளது போலுள்ளது. இந்தமுறை இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தை உள்ளடக்கிய கூட்டறிக்கையை சேர்ந்து விடுவதில் யப்பான் இணங்கவில்லை என்றும் சொல்லபபடுகிறது.

இலங்கையில் போரோ சமாதானமோ எதுவோ நடந்தாலெனன் நடக்காது விட்டாலென்ன தனது நலன்கள் நிறைவேறினால் போதும் என்று நினைக்கின்றது யப்பான்.

இதில் மகிந்த ஆட்சியென்றால் என்ன ரணில் ஆட்சியென்றால் என்ன என்ற கட்டத்துக்கும் அது வந்து விட்டது. அதாவது அது ரணில் ஆட்சியமைக்கும் வரையில் காத்திருக்குத் தயாரில்லை.

அதுதான் அகாஸியே சொல்லி விட்டாரே அமெரிக்கா செய்த பாதகத்தைவிடவும் தமக்குத் தேவையாக இருப்பது இன்றைய நலன்களே, எதிர்காலத்துக்கான பலத்தை சேகரிப்பதற்கான வளங்களே. அதுக்காக அவர்கள் எதையும் மறக்கவும் தயார், மன்னிக்கவும் தயார். யாரோடும் கூட்டுச்சேரவும் தயார். யாரைப் பகைக்கவும் தயார்.

அதாவது இப்போது இலங்கை விவகாரத்தைப் பொறுத்தே இந்த நிலைப்பாடு. அகாஸி ஒரு விடாக்கண்டராக இந்த முதுமையிலும் ஓடித்திரிகிறார். அவர் எல்லாக்கதவுகளையும் திறக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடே இயங்கிக் கொண்டிருக்கிறார்.


சிறிலங்கா அரசாங்கத்தை மனித உரிமைகள் விவகாரத்தில் மேற்கு நாடுகள் அதிகமாகக்கண்டித்து வருகின்ற பின்னணியில் யப்பான் இப்படி நடந்து கொள்வதும் அகாஸி இப்படித்துணிந்து சொல்லியிருப்பதும் சாதாரணமானதல்ல.

அதுவும் அமெரிக்காவுடன் நட்புறவாகவும் கூட்டுடன்படிக்கைகளிலும் இணைந்து செயற்படும் யப்பான் இவ்வாறு சொல்லியிருக்கிறது. அத்துடன் இணைத்தலைமை நாடுகளில் முக்கியமான ஒரு நாடாகவும் அது இருக்கிறது. இப்படியிருக்கும்போது அது இவ்வாறு பகிரங்கமாக ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறது என்பதை இங்கே உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

யப்பான் இதை தன்னிச்சையாகச் செய்யவில்லை. யப்பானின் இந்த நிலைப்பாடும் அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் ஒரு பொது முடிவின் விளைவுகளே.

அதாவது மேற்குலகம் யப்பானுக்கூடாகவும் இந்தியாவுக்கூடாகவும் சிறிலங்காவைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது.

இதன்படி இந்தியா சிறிலங்காவுக்கான ஆயத உதவிகளைச் செய்ய முன்வந்துளளது. சீனா, பாகிஸ்தான், ஈரான் என்று மாற்று அணியுடன் சிறிலங்கா உறவு கொள்வதை மேற்குலகமும் மற்றும் இந்தியா யப்பான் ஆகிய நாடுகளும் விரும்பவில்லை.

மேற்குலகம் சிறிலங்காவை நெருக்கும்போது அது சீனா சார்;ந்த அணியைநோக்கிச் சரியத் தொடங்குகிறது. எனவே இதனைத்தடுப்பதற்கான உபாயமாகவே இணைத்தலைமை நாடுகளும் மேற்குலகமும் இந்த அணுகுமுறைக்கு வந்துள்ளன.

இதன்படி இந்தியா சிறிலங்கா அரசாங்கம் கேட்காமலே ஆயத உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. அதனால்தான் அது ஆயத உதவிகள் செய்யப்படுமென்றும் ஆனால் அந்த உதவி யுத்தத்துக்கானதல்ல என்றும் தெரிவித்தது.

இந்தியாவின் இந்த அறிவிப்பு சிங்களத்தரப்பின் யுத்த விரும்பிகளுக்கு எரிச்சலையூட்டியது. அதேவேளை இந்தியா ஆயத்தத்தை வேண்டுமானால் தரலாம். ஆனால் யுத்தம் செய்வதா இல்லையா என்று தீர்மானிப்பதற்கு இந்தியாவுக்கு உரிமை கிடையாது என்றும் அவர்கள் காட்டமாக இந்தியாவுக்கு சொன்னார்கள்.

ஆனால் இந்தியா இதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அது பெரியதொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பெரும் பின்னணியடன் இயங்குவதால் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.

இந்தியாவைப்பொறுத்தவரையில் சிறிலங்காவின் பாதுகாப்புக்கு ஆயத உதவிகள் வழங்கப்படும். அதன்மூலம் ஆயதத்தேவைகளுக்காக வெளியே செல்வதையம் வெளித்தொடர்புகளையும் தவிர்;பப்து என்ற நோக்கமே இதில் நிரம்பியிருக்கிறது.

இந்தியாவின் இந்தக் கோரிக்கையை முதலில் எதிர்ப்பதாக சிறிலங்கா காட்டிக் கொண்டாலும் இப்போது அந்தக் கோரிக்கைக்கு இணங்கிப் போகும் நிலையிலேயிருப்பதாக தெரிகிறது.

இதேNபுhல யப்பானைக் கொண்டு நிதியுதவியை அளித்து அதன்மூலம் சிறிலங்காவை அரவணைத்து வழிக்குக் கொண்டுவரும் உத்தியும் மேறகுலகினால் மேற்; கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.


அதாவது ஒரு கூட்டு நடவடிக்கையாகவே இந்த விவகாரங்களெல்லாம் இப்போது இலங்கைப்பிரச்சினையில் இடம்பெற்று வருகினறன.

இதேவேளை சிறிலங்காவை போருக்குச் செல்ல விடாமற் தடுக்கும் உபாயமாகவே யப்பானுக்கூடாக மேறகுலகம் முயற்சிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். அதாவது சிறிலங்கா சீனாவை நோக்கிச் செல்வதைத்தடுப்பதற்கும் போரை நோக்கி முழு அளவில் செல்வதைத் தடுப்பதற்கும் மேற்கு கடுமையாக முயற்சி;பப்தாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில் மேற்கு தன்னுடைய மனித உரிமைகள் அமைப்புகளின் மூலம் சிறிலங்காவை வேண்டிய அளவுக்கு கண்டித்து விட்டது. அப்படிக் கண்டனங்களைத் தெரிவித்தபிறகு நேரடியாக உதவிகளைச் செய்யமுடியாது. எனவேதான் அது யப்பானுக்கூடாக உதவிகளைச் செய்து அதன்மூலம் உருவாகும் ஒரு மென்நிலைக்கூடாக சிறிலங்காவை போரிலிருந்து விலக்க முயற்சிக்கிறது.

எதிர் நிலையில் நிற்பதற்கு முன்னான அணுகுமுறையாக மேற்கின் இந்த முயற்சி கருதப்படுகிறது. அதாவது இலங்கைத்தீவில் அடுத்த போர் முனைதிறபடக்கூடாது என்பதில் மேற்கு கொண்டுள்ள அக்கறையே இவையெலல்hம்.

அப்படியென்றால் அடுத்து நடக்கப்போவது என்ன. சிறிலங்கா அரசு இந்தக்கட்டுகளுக்குள்; நிற்குமா. இதைத் தெரிவதற்கு அதிக காலம் தேவையில்லை.

இப்போது கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி இணைத்தலைமை நாடுகள் இரகசியமாக வைத்திருக்கும் விசயங்களை நடைமுறை சாரர்ந்த திட்டடங்களுடன் அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடலாம் என்று தெரியவருகிறது.

இனப்பிரசசினைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டிய விடுதலைப்புலிpகளையும் அரசாங்கத்தையும் பொறுப்புச் சொல்லத்தக்கதாக இணைத்தலைமை நாடுகள் எடுத்துள்ள தீர்மானங்களும் அந்தத்தீர்மானங்களையொட்டிய அறிக்கையின் விசயங்கம் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறத.

அதாவது சமாதானத்தை நோக்கி இழுக்கப்படும் இணைத்தலைமை நாடுகள் மற்றும் மேற்கின் அணுகுமுறையை இந்த அறிக்கை கொண்டுவரவுள்ளது என்பதே இதன் பொருளாகும்.

இதற்காக எவ்வளவு காய் நகர்த்தல்களும் எத்தனை சுழிப்புகளும் எததனை விதமான அணுகுமுறைகளும் எத்தனை தரப்பினரும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அகதியாகிக் கொண்டும் கொலையாகிக் கொண்டுமேயிருக்கிறார்கள்.

யுத்த விமானங்கள் இன்னும் தலைக்கு மேலே சுற்றிக் கொண்டேயிருக்கின்றன. சனங்கள் பங்கர்களை வெட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். என்னதான் நடக்கிறது என்று எவருக்குமே புரியவில்லை என்று ஒருவர் சொன்னதுதான் இந்த நிலைமைகளை அவதானிக்கும்போது நினைவுக்கு வருகிறது.

Thursday, June 28, 2007

அகாஸி சொல்வதென்ன

யப்பானிய சிறப்புத்தூதுவர் யசூஸி அகாஸி ஒரு காரிய சித்தர் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அவர் தன்னுடைய நோக்கம் நிறைவேறும் வரையில் ஒரு போதும் அந்த முயற்சியில் தளர்ந்து விடுவதில்லை.

அந்த முயற்சி வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவர் எவ்வளவு கீழே இறங்கமுடியுமோ அந்தளவுக்கு கீழே இறங்கிக்கொள்வாhர். எவ்வளவு இறுக்;கமாக நிற்க முடியுமோ அந்தளவுக்கு இறுக்கமாக நிற்பார்.

அவரைப் பொறுத்த வரையில் யப்பானுக்காகவே எல்லாம். அதுவும் எதிர்கால யப்பானுக்காக எல்லாம் எல்லாம்.

அகாஸியின் தீவிரமான முயற்சி இப்Nபுhது மெல்ல வெளிப்படையான பலனை அவருக்கு ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. அவர் போர் நெருக்கடியும் அபாயமும் நிறைந்த வாகரைக்கே போயிருந்தார்.

மீள் குடியேற்றம் என்றபோர்வையில் சிறிலங்காவுக்கு உதவும் பொருட்டே அவர்அங்கே சென்றார். அவருடைய பயணம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் காட்டும் முயற்சி என்று சில நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறர்கள்.

அத்துடன் சிறிலங்காவுக்கு வேண்டிய உதவிகளை யப்பான் தொடர்ந்து செய்;யும் என்றும் அவர் சொல்லியிருந்தார். இப்படிச் சொல்லி, அவர் சிறிலங்காவுக்கு ஒரு பெரிய தூண்டிலைப் போட்டிருந்தார்.

சிறிலங்கா இப்பொழுது சர்வதேச ரீதியாக மனித உpமைகள் விசயத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் யப்பானின் இந்த உதவியும் அறிவிப்பும் சிறிலங்காவுக்கு பெரும் ஆறதலாகவேயிருந்தது.

அதற்குப் பதிலாக சிறிலங்கா இப்போது யப்பானுடன் மீண்டும் கொடுக்கல் வாங்கல்களை அதிகரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களின் முன்பு நூற்றுக்கு மேற்பட்டோரைக் கொண்ட பெரியதொரு வர்த்தகக் குழுவுடன் ஜனாதிபதி சீனாவுக்குப் போயிருந்தார். சிறிலங்காவில் சீனா தாhராளமாக முதலீடுகளைச் செய்யலாம். சீனப் பொருட்களை இலங்கைச்சந்தையில் விற்கலாம் என்ற உடன்படிக்கைகள் அப்போது செய்யப்பட்டன.

ஆனால் அந்த நிலைமையை சற்று மாற்றியமைக்கும் விதமாக இப்போது அகாஸியின் முயற்சிகள் அமைந்திருக்கின்றன. அவருடைய முயற்சியின் விளைவாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித Nபுhகல்லாகம அடங்கிய குழவினர் இப்போது யப்பானுக்குப் போயிருக்கிறார்கள்.

யப்பானில் இந்தக்குழுவுக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சீனாவுக்கு கிடைத்திருக்கும் சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்பை கையகப்படுத்தும் தீவிர முயற்சியில் இப்பொழுது யப்பான் ஈடுபட்டிருக்கிறது.

ஏறக்குறைய பன்னிரண்டாண்டுகளுக்கு முதல் சிறிலங்காவின் சந்தையில் யப்பான் அதிக செல்வாக்குடையதாக இருந்தது. குறிப்பாக ஐ.தே. க காலத்தில் யப்பானின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.

சந்திரிகா வந்து இதை மாற்றியமைத்தார். அவர் தமிழ் மக்களுக்கான போரைச் செய்வதற்கான முறையில் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை தயாரித்தபோது அது யப்பானுக்கு சற்றுப் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை மாற்றுவதற்காக யப்பான் கடுமையாக முயன்றது. இதற்காக அது ரணிலை முழதாக நம்பியுமிருந்தது. ரணில் ஆட்சிப்போறுப்பை ஏற்றவுடன் யப்பான் அதிகமாக சந்தோசப்பட்டது. ரணில் போர்; நிறுத்த உடன் படிக்கையைச் செய்தNபுhது யப்பான் அதற்கு முழ ஆதரவைத் தெரிவித்து உதவியது.

இந்தப்புதிய ஏற்பாட்டுடன் யப்பான் வலு மும்முரமாக களத்தில் இயங்கத் தொடங்கியது. அகாஸி சிறப்புத்தூதுவராக இலங்கைக்கான பயணங்களைத் தொடங்கினார். இந்த ஐந்தாண்டுகளில் அதிகமாக இலங்கைக்குப் பயணம் செய்த வெளிநாட்டுத்தூதர்களில் அகாஸியும் ஒருவர்.

ஆனால் அகாஸியின் திட்டத்துக்கு மரணாக ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

அவர் அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்பிக்களைச் சந்தித்த போது அவர்கள் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் போர் முனைப்பையும் தமிழ் மக்களுக் கெதிரான Nபுhக்கையும் அகாஸியிடம் சொன்னார்கள். அதற்கு அகாஸி சொன்னார், ரணிலைத் தோற்கடித்ததன் பலனை இப்போது அனுபவிக்கிறீர்கள் என்று. இதை அவர் சொல்லும்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்ற உணர்வோடுதான் சொன்னாராம்.

இதேபோல ஒருதடவை அவர் விடுதலைப்புலிகளைச்சந்திக்கும் Nபுhது " யப்பானுக்கு அமெரிக்கர்கள் என்ன செய்தார்கள் என்று நாங்கள் இப்போது யோசிக்கவில்லை, இனி அமெரிக்காவுடன் எப்படி இருக்கப் போகிறோம், மாறிவரும் புதிய உலகில் எதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம் என்பதைப்பற்றியே சிந்திக்கிறோம், கடந்தகாலத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருப்பதைவிடவும் எதிர்காலத்தில் என்ன செய்;லாம் என்று சிந்திப்பதே முக்கியமானது " என்ற தொனிப்பட சொல்லியிருந்தாராம்.

அதாவது 'அமெரிக்கா அணுக்குண்டு போட்டதையே மறந்து விட்டோம் அதைவிடவா இந்தப்பிரச்சினையெல்லாம் பெரியது ' என்று அவர் கேட்காமல் கேட்கிறார்.

இந்தக்கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதோ இல்லையோ ஆனால் இதுதான் அகாஸி, இதுதான் யப்பான்.

அதாவது இத்தகைய ஒரு போக்கைப் பின்பறறியதால்தான் இனறு யப்பான் மீண்டும் உலக அரஙகில் முன்னுக்கு வந்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அதாவது யப்பானின வெளியுறுவுக் கொள்கை மிக வித்தியாசமானது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவைப்போலல்லாது அது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது எனபதே இங்கே கவனிகக் வேண்டியது.

யப்பான் இரண்டாம் உலகப்போருடன் சர்வதேச சமூகத்தால் முற்றிலும் துண்டித்து விடப்படும் அபாயத்திலிருந்த நாடு. அதிலும் மேற்குலகம் யப்பானை அடியோடு 'படுத்;திவிடும் ' நோக்கில் அதனைத் தனிமைப்படுத்த முயற்சித்;தது.

யப்பான் ஒரு ஆசிய நாடாக இருந்ததும் இதற்கான காரணங்களில் ஒன்று. தவிர யப்பான் மூர்கத்தனமான உழைப்பிலும் நுட்பத்திறனிலும் வளர்ச்சி பெற்ற தன்மை. அதிலும் ஆசிய நாடுகளிலேயே யப்பானில்தான் இந்த இயல்பு முதன்முதலிலும் அதிகமாகவும் இருந்தது.

எனவே இந்தமாதிரியான காரணங்களால் மேற்கு யப்பானை அடக்கி வைப்பதற்காக அதைத்தனிமைப்படுத்த முயற்சித்தது. ஆனால் அதற்குள்ளால், அந்தத்தடைகள் நெருக்குவாரங்களுக்குள்ளால் எல்லாம் யப்பான் நிமிர்ந்து விட்டது.

உண்மையில் அமெரிக்கா யப்பானுக்கு இழைத்த அநீதி என்றென்றைக்கும் மாறாதது மட்டுமல்ல, மறக்க முடியாததும் கூட. ஆனால் அதை வைத்துக் கொண்டு பகைமை பாராட்டும் அரசியலை யப்பான் தவிர்த்து விட்டது. அதன்மூலம் அது தொடரும் நெருக்க்டிகளைத் தவிர்த்ததுடன் புதிய வளர்ச்சியை நோக்கியும் போய்விட்டது. யாராலும் புறக்கணிக்கமுடியாத ஒரு ஸ்தானத்தையும் பெற்றிருக்கிறது.

இப்போது சர்வNதுச ரீதியில் சந்தையைப் பகிர்வதுடன் தீர்மானமெடுக்கும் தரப்புகளில் முக்கியமன நாடுகளில் ஒன்றாகவும் அது தன்னை நிலை நிறுததியிருக்கிறது. இத்தகைய உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் யப்பானின் உளவியலும் உழைப்புத்திறனும் சிந்தனையுமே அடிப்படை.

யப்பானியர்களின் உழைப்பைப்பற்றி பொதுவாக எவரும் சிறப்பித்தே சொல்வார்கள். அந்த உழைப்புத்தான் அவர்களுடைய முதல் நம்பிக்கை.

எந்தச்சூழலிலும் தங்களின் உழைப்பின் மூலம் எந்தத்டைகளையும் தாம் கடந்து விடுவோம் என்ற மனோ பலம் அவர்களிடம் வலுவாகவுண்டு. அதேபோல அந்த உழைப்புக்கான பெறுமதியை வீணாக இழக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள்.

எனவே தங்களுடைடய உழைப்பின் பெறுமதியை இழக்காமல் அதை மேலும் அதிகரிக்ச் செய்யும் நோக்கிலான வெளியுறவுக் கொள்கையை அவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதையே அவர்கள் பின்பற்;றுகிறார்கள்.

இந்த வெளியுறவுக் கொள்கையில் அவர்கள் தங்களுக்கான வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது யப்பானின் முதன்மையிடம் குறித்தே அவர்கள் எப்போதும் இயங்குகிறார்கள்.

இதற்கு யப்பானின் வரலாற்றில் நிறைய அடையாளங்களுண்டு. ஆனால் அதைப்பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில்; பார்த்துக் கொள்வோம்;.

சீனா எனற பெரிய நாட:டுக்கு அருகில் கடலால் சூழப்பட்ட தீவுககூட்டமாக இருந்த யப்பான் சீனாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் பல தடவை வைத்திருந்தது இதற்கொரு நல்ல உதாரணம்.

இந்தப்பின்னணியில் இப்போது யப்பான் இலங்கை விவகரத்தில் செயற்படுகிற விதத்தைப் பார்க்கலாம்.

யப்பான் இலங்கையின் அரசியல் விவகாரங்களில் நேரடியாக தலையிடாத ஒரு போக்கைக் கடைப்பிடித்து வந்தது. ஆனால் இது வெளியே தெரிந்த ஒரு Nபுhக்கு மட்டுமே. இதற்குப்பின்னே மறைமுகமாக யப்பானின் தொடர்புகளும்; உதவிகளும் இலங்கை அரசியலிலும் இனப்பிரச்pனையிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

யப்பானின் வர்த்தகத் தொடர்புகளும் நிதியுதவிகளும் சிறிலங்கா அரசை எப்போதும் பலப்படுத்தியே வந்துள்ள்து. அதிலும் ஜே. ஆரின் காலத்தில் யப்பான் சிறிலங்காவுக்குச் செய்த உதவிகளும் சிறிலங்காவுடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகளும் சிறிலங்காவை மிகப்பலமாக்கின.

இது இனப்பிரச்சினையில் பாதிப்புகளை அடைய விடாமல் சிறிலங்காவைக் காப்பாற்றியது. அNதுவேளை போரினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை யப்பானின் இந்த உதவி மறுவளத்தால் ஈடுசெய்தது.

இதில் யப்பான் இலங்கையின் இனப்பிரச்சினையில் பாதகமான நிலைப்பாட்டை எடுததாக முழதாகச்சொல்ல முடியாது. அதாவது யப்பான் தமிழர்களுக்குப் பாதகமான நிலைப்பாட்டை எடுத்ததாக அர்த்தமில்லை. ஆனால் யப்பானின் பொருளாதார உறவுகளையும் உதவிகளையும் திரட்டி சிறிலங்கா தமிழர்களுக் கெதிராகவே பிரயோகித்தது.

யப்பானுக்குத் தேவை எப்போதும் சந்தையே. அதிலும் இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதார வளர்ச்சி யப்ப்hனுக்கு நேரடிச்சவாலான விசயம். இந்தியாவும் சீனாவும் யப்பானின் சந்தையை இப்போது அதிகமாகப் பங்கு போட்டு வருகின்றன.

பதினைந்து வருசத்துக்கு முதல் சிறிலங்காவில் யப்பான்தான் பொருளாதாரப் பிரயோகத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. ஆனால் அந்த நிலைமை பின்னர் இல்லை.

குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில்; அதிக செல்வாக்கை யப்பான் செலுத்தி வந்தது. இப்போது இந்தச் சந்தையை இலக்கு வைத்து சீனாவும் இந்தியாவும் தமது பொருளுற்பத்தியையும் சந்தையையும் விரிவாக்கம் செய்துள்ளன. இது இன்றைய நிலையிலும் எதிர்கால நோக்கிலும் யப்பானுக்கு நெருக்கடிகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துமு; காhரியங்கள்.

எனவேதான் யப்பான் புதிய 'றோலைப் பிளே' பண்ணத் தொடங்கியிருக்கிறது. இதன்படி அது இணைத்தலைமை நாடுகளுக்கூடாகவும் தனியாகவும் உதவி வழங்கும் தரப்பினருடன் இணைந்தும் இந்த விசயத்தைக் கையாளத் தொடங்கியுள்ளது.

மறுபக்கம் தன்னுடைய தேவைகளுக்காக இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்துக்கு அப்பாலும் அது செயறபடத்தீர்மானித்துள்ளது போலுள்ளது. இந்தமுறை இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தை உள்ளடக்கிய கூட்டறிக்கையை சேர்ந்து விடுவதில் யப்பான் இணங்கவில்லை என்றும் சொல்லபபடுகிறது.

இலங்கையில் போரோ சமாதானமோ எதுவோ நடந்தாலெனன் நடக்காது விட்டாலென்ன தனது நலன்கள் நிறைவேறினால் போதும் என்று நினைக்கின்றது யப்பான்.

இதில் மகிந்த ஆட்சியென்றால் என்ன ரணில் ஆட்சியென்றால் என்ன என்ற கட்டத்துக்கும் அது வந்து விட்டது. அதாவது அது ரணில் ஆட்சியமைக்கும் வரையில் காத்திருக்குத் தயாரில்லை.

அதுதான் அகாஸியே சொல்லி விட்டாரே அமெரிக்கா செய்த பாதகத்தைவிடவும் தமக்குத் தேவையாக இருப்பது இன்றைய நலன்களே, எதிர்காலத்துக்கான பலத்தை சேகரிப்பதற்கான வளங்களே. அதுக்காக அவர்கள் எதையும் மறக்கவும் தயார், மன்னிக்கவும் தயார். யாரோடும் கூட்டுச்சேரவும் தயார். யாரைப் பகைக்கவும் தயார்.

இணைத்தலைமை நாடுகளின் தீர்மானத்தில் விலகி நிற்கவும் அது துணிந்திருப்பதன் பின்னணியை இந்த வகையிலே புரிந்து கnhள்ளலாம்.

அதாவது இப்போது இலங்கை விவகாரத்தைப் பொறுத்தே இந்த நிலைப்பாடு. அகாஸி ஒரு விடாக்கண்டராக இந்த முதுமையிலும் ஓடித்திரிகிறார். அவர் எல்லாக்கதவுகளையும் திறக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடே இயங்கிக் கொண்டிருக்pறார்.

Wednesday, June 27, 2007

விடுதலை அரசியலின் உக்கிரம் மலர்ச்செல்வன் கவிதைகள்


வாழ்க்கையின் உத்தரவாதங்கள் தகர்ந்து போயிருக்கும் யதார்த்தவெளியில் தனித்தலையும் கவியின் மொழிதலாக மலர்ச்செல்வனின் கவிதைகள் பெருகியிருக்கன்றன. அதிரும் மனமும் நொருங்கும் சூழலும் சிதறடித்த மொழியைக் கூட்டியள்ளி மலர்ச்செல்வன் தன் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவிந்த உணர்வின் சிதைகளில் மூட்டப்பட்ட பெருந்தீயாய் கொழுந்து விடுகின்றன அவருடைய தனித்துத் திரிதல் கவிதைகள்.

வாழவிரும்பிய கணங்கள் எதிர்நிலையில் விபரீதங்கொண்டு இயங்குவதை
சகிக்க முடியாமல்தத்தளிக்கும் நிலை ஒரு புள்ளியில் உணரப்பட
இன்னொரு புள்ளியில் சகிப்பை மீறிய கோபம் மலர்ச்செல்வனுக்குள்
பொங்குகிறது. இது ஒரு நிலை. ஆனாலும் மலர்ச்செல்வனின்
கவிதைகளில் துயரத்தின் நிழலே படிந்திருக்கிறது.

துயரம்தான் மலர்ச்செல்வன் கவிதைகளின் மையம். துயரம் வனைகின்ற மொழியை தன்னொழுங்கில் அமைப்பதன்முலம் கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என மூன்றின்மீதும் கேள்விகளை எழுப்புகிறார் மலர்ச்செல்வன். மனிதவாழ்க்கையில் இது காலவரையும் கண்டறியப்பட்ட உண்மைகளென்ன? மனிதமனம் தொகுத்துக் கொண்டிருக்கும் அனுபவத்தின் நிலையென்ன? எது அதனைப்புறந்தள்ளுவது? வாழ்வின்மீது எது நிழல் விழுத்துவது? எப்போதும் ஒவ்வொருவிதமாகத் திரட்சிபெற்று மேலெழும் அரசியலா? அந்த அரசியலின் வௌ;வேறு முகங்களா?

உண்மையில் அரசியல் எப்போதும் ஏதோவொருவகையில் அனுபவத்துக்கு எதிராகத்தான் இயங்குகிறதா? அப்படி அது இயங்குகின்றபடியால்தானோ எப்போதும் அனுபவத்துக்கு முரணாகவும் அதைப்பொருட்படுத்தாமலும் அது வாழ்வைச்சிதைக்கும் வாளைத்தன் உறையில் வைத்திருக்கிறது?
அது வாழமுடியாத்துயரம் அறிவின் யுகமாகிய இன்று கூட தீராப்பழி பெருத்து வாழ்வைச் சிதைக்கிறது. எதனெதன் பேராலோவெல்லாம் ஏதொரு சம்பந்தமுமில்லாமல் பழிவாங்கப்படுகிறார்கள் சனங்கள். தீராத்துயரின் வலியின் குருதித்தெறிக்கைகள் தனித்திருந்தலின் கவிதைகளில் படிந்துள்ளன.

இப்போது நிகழ்காலத்தில் சிதையும் வாழ்வுபற்றிய மனித மனத்தின் மதிப்பீடென்;ன? நிகழ்காலம் வரையான அறவியலும் அறிவியலும் வாழ்வின் மீது நிகழ்த்துவதென்ன? வாழ்வின்மீது துன்பத்தின் நிழல் விசமாகக்கவிகையில் இந்த அறவியலும் அறிவியலும் என்னவாகின்றன? உண்மையில் அதிகாரத்துக்கிடையிலான போட்டியும் அது பெருக்கும் நுட்பங்களும் கண்டறிந்த எல்லா அறிவியலையும் அறவியலையும் துவம்சமாக்கி விடுகின்றன. அறிவியலும் அறவியலும் துவம்சமாகும்போது வாழ்க்கை சிதைகிறது. இங்கே துன்பத்தின் ஊற்று பெருக்கெடுத்து வாழ்வை மூழ்கடிக்கிறது. இதுவே தொடரும் யதார்த்தம்.

இதற்கெதிராகத் தொடர்;ந்தும்;;; இன்னொரு முனையில் மனிதமனம் இயங்குகிறது. அது அதிகாரத்துக்கு எதிரானது. ஆனால் அதேவேளை அது அதிகாரத்தைப் பகிரக் கோருகிறது. அதிகாரத்தைப்பகிர்வதற்கான மனப்பாங்கு, இணக்கம் தயார் என்பன இல்லாதபோது அதைப்பகிர்வதற்கான வன்முறை வெடிக்கிறது. இந்த வன்முறையின் எல்லையை அது வெடித்தபின் யாராலும் நிர்;ணயம் செய்யமுடியாது. அது கட்டற்றது. அது எல்லாப் பருவங்களையும் ஊடுருவி எல்லாத்திசைகளையும் சிதைத்து விடுவது. இங்கேயும் வாழ்வின் மீது துன்பத்தின் நிழல் கருந்திரையாகப்படர்கிறது. எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை தன்வழியே துளிர்க்கிறது.

எல்லாக்காலத்தையும் சிதைக்கும் அதிகாரத்தின்முன் அறமும் தோற்கிறது. அறிவியலும் தோற்கிறது. அப்படியாயின் உலகம் இதுவரையிலும் தன்னனுபவத்திலும் தன்னறிவிலும் கண்டதென்ன? அதிகாரத்துக்கான போட்டியென்பது அறிவுக்கும் அறிவின்மைக்கும் இடையிலான போட்டியா? கடவுளே இதன்முடிவெது? இதற்கு முடிவேயில்லையா? ஒரு அதிகாரத்துக்கு எதிரான மாற்று அதிகாரமென்பது இன்னொரு அதிகாரமாக மாறிவிடும் விந்தை இன்னும் மாறமலிருக்கிறதே. மாற்று அதிகாரமென்பது இன்னொரு அதிகாரத்தின் தொடக்கமா? என்று மலர்ச்செல்வன் அச்சத்தோடு உணர்கிறார். இந்த உணருகை அவரை எழுதத்தூண்டுகிறது. அதொரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் மொழிதல்தான் மலர்ச்செல்வனின் தனித்துத்திரிதல் கவிதைகள்.

மலர்ச்செல்வன் வாழ்கின்ற சூழலும் காலமும் அவருடைய கவிதைகளை வனைகின்றன. அதற்குரிய மொழியை வழங்குவதும் காலமும் சூழலுமே. ஒரு கவிஞன் தன் கவிதையைக் காலத்திலும் சூழலிலுமே கண்டெடுக்கிறான். அது கவிதையின் வடிவமாயினும் சரி அதன் மொழியாயினும் சரி அதன் பொருளாயினும் சரி காலமும் சூழலும் விரிக்கின்ற பரப்பிலே அவன் அதை எடுத்துக்கொள்கிறான். மலர்ச்செல்வன் தன்னுடைய காலத்திலும் தன்னுடைய சூழலிலும் கண்டெடுத்து உருவாக்கியளித்துள்ள இந்தக்கவிதைகள் நமக்கு முன்னுள்ள ஒருவகைச் சவாலே. நம் காலத்தின் நிலையை அப்படியே தொகுத்து நம்முன்னே வைக்கிறார் மலர்ச்செல்வன். வைத்துவிட்டு அவர் நமது முகத்தைப் பார்த்தபடியிருக்கிறார். என்ன பதில் நம்மிடமிருந்து வருமென்ற ஆவலுடன்.

சிதையும் நம் காலத்தில் நமது பாத்திரமென்ன? நமது அனுபவமும் அறிவும் என்ன செய்யப்போகின்றன? காலத்துயராய் இது இன்னும் எத்தனை யுகத்துக்கு நீளப்போகிறது.அதிகாரம் குவியப் போகிறதா? அதிகாரம் என்பது அதன் மெய்யான அர்த்தத்தில் துயரந்தானா?அது துயரத்தைப் பெருக்குகிறதா? அதிகாரத்துக்கிடையிலான போட்டியில் நிகழ்வதென்ன? வாழ்வின் சிதைவில் துளிர்த்துப்பெருகும் துயருறுவலிதானா
துயரத்தை நிலைநிறுத்தத்தான் இத்தனை போட்டிகளும்? அப்படியெனில் வெற்றியென்பது என்ன? துயரத்தை கைப்பற்றுவதிலா?

மலர்ச்செல்வன் இவற்றிலிருந்து விலகிச்செல்ல முனைகின்றார். ஆனால் அவரால் அப்படி விலகிச்செல்லவும் முடியவில்லை. சூழல் அவரை நிர்ப்பந்திக்கிறது. காலம் அவரை அழுத்துகிறது. இந்த நிலையில் இணைந்தும் விலகியும் மலர்ச்செல்வன் பயணிக்கிறார். அது ஒரு வகைத்தனிப்பயணம்.

மலர்ச்செல்வன் தனித்துத்திரிகிறார். தனித்துத்ததிரிய முடியாக்காலத்தில் அவர் ஒரு சாகசக்காரனைப்போல தனித்திருக்கிறார். இந்தத் தனியன் தனமே மலர்ச்செல்வனின் பலம். அதொருவகை வீரமே.


மலர்ச்செல்வன் மிக எளிதாய் ஆனால் வலியதாய் தன் உணர்வைப்பகிர்வதன் மூலம் தன்னுள் எரிகின்ற சுடரை மற்றவர்க்கும் பற்றவைத்து விடுகிறார். எரிகின்ற காலத்தையும் சூழலையும் இணைப்பதன் மூலம் இந்த வித்தையை அவர் எளிதாக நிகழ்த்தி விடுகிறார்.


ஈழவாழ்வின் கதிகலங்கிய நாட்களின் பதிவுகளாக இந்தத் தொகுதிக் கவிதைகள் பலவுண்டு. அவற்றிற்பல ஏற்கனவேயுள்ள ஈழக்கவிதைகளின் தொடர்ச்சியே. இன்னும் சொல்லப்போனால் தென் ஈழக்கவிதைகளின் தொடர்ச்சி இவை எனலாம். அதிலும் சோலைக்கிளிக்குப் பின்னான சுவடுகள்.

சோலைக்கிளிக்குப்பிறகு இந்தத்தொடர்ச்சியில் ஆத்மா றஸ்மி ஓட்டமாவடி அரபாத் அலறி அனார் என ஒரு வளர்நிலையுண்டு.

தென்னீழ சமகால வாழ்க்கை அசாதாரணங்கள் கொண்டது. அதன்வழி அதன் கனவும் நிசமும் அபத்தத்தின் ஈரம் ஊறியது. குருதியிலிருந்து தீ மூண்டெரியுமு; யதார்த்தம் அது. தீயினுள்ளிருந்து குருதி பீறிட்டோடும் வரலாற்றையுடையது. இதை மலர்ச்செல்வன் உணர்ந்துள்ள முறைமை அல்லது விதமே இக்கவிதைகள்.
அரசியல் உணர்வு அல்லது அரசியல் இடையீறு கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழ்க்கவிதையைப்பாதித்து வருகிறது. ஈழத்தில் அரசியலின் நிழலற்று எந்தக்கவிஞரும் தங்கள் கவிதைகளை எழுதியதில்லை நேரடியாகவேர் மறைமுகமாகவோ. விலக்காக சில கவிதைகள் வாழ்வின் ஏனைய திசைகளிலுக்கு நகர்ந்திருக்கலாம். அந்தளவுக்கு அரசியல் ஈழவாழ்வில் செல்வாக்குப்பெற்றுள்ளது. அது உயிருடன் விளையாடுகிறது. உயிர்வாழ்வதற்கு அதைச்சார்ந்தும் விலகியுமிருக்கவேண்டும் என்ற தத்தளிப்பை உருவாக்கியுள்ளது. மலர்செல்வனுக்கு இந்தஅரசியலின் செல்வாக்கு அதிகமுண்டு.

முன்னகரும் வகையான வழிகளைத் தொடும் பயணமாக மலர்செல்வன் தன் அரசியல் தேர்வைச் செய்கின்றர் மூன்று காலங்களாக வகைசெய்யப்பட்டிருக்கும் இந்தத்தொகுதியின் கவிதைகளில் தொடர் அடக்குமுறை என்ற இராணுவப்பயங்கரவாதத்துக்கு எதிரான வலுப்பாதைகள் நிகழ்த்தப்படுகின்றன. மிகயதார்த்தமாக தான்வாழ்கின்ற மட்டக்களப்பு நிலப்பகுதியின் ஆன்மாவின் நடனத்தை நிகழ்த்தி அந்த யதார்த்தத்துக்கு நம்மை அழைத்துச்செல்கிறார் எளியசொற்களின் மூலம் உருவாக்கப்படுகிற-அல்லது உருவாகின்ற நிகழ்காலத்தின் தோற்றத்தையும் அதன் உயிரையும் தருவதற்கு மலர்செல்வனிடம் சொற்கள் உருவாகிவிட்டன.

விடுதலைஅரசியலின் மீதுள்ள பற்று அல்லது நாட்டம் இந்தத் தொகுதிகவிதைகளில் முன்னெழுந்தவாறு நிற்கின்றன அதில் அவருக்குள்ள நம்பிக்கைகள் சிதறல்கள் முனைப்புகள் தெளிவுகள் தெளிவின்மைகள் சரிவுகள் விலகல்கள் கொந்தளிப்புகள் அடங்குதல்கள் குற்றவுணர்;வுகள் இயலாமைகள் எல்லாம் சாட்சிப்படுத்தப்படுகின்றன. உள்ளுக்குள்ளே ஊடுருவிப்பதிவாகியிருக்கும் கொந்தளிப்பின் நடனம் நிழலாகவும் நிஐமாகவும் தெரிகின்றது. சகலத்தையும் காட்சிப்புலமாக விரிக்கும் உத்தியை பின்பற்றுவதன் மூலம் எல்லாவற்றுக்கும் ஒருசுவடு நிலையை ஆதாரநிலையை மலர்செல்வன் உருவாக்குகிறார். அழிவின் சுவடுகளும் வலியும் அதன் கருநிழலும் காலத்தால் கலைந்து போய்விட்டாலும் மலர்செல்வனும் ஈழக்கவிதைகளும் ஆதாரப்படுத்துவது இந்தச் சுவடுகளையே இதுகாலத்தால் நகர்த்த முடியாத காயங்களாக இருப்பதற்கு இவற்றுக்குள் துடிக்கும் ஆன்மாவே பலம்.


எண்பதுக்குப்பின்னான ஈழக்கவிதையின் இன்னொரு சுவடாக வரும் மலர்ச்செல்வன் அதிலிருந்து சில இடங்களில் விலகுகிறார். அந்த விலகலே மலர்ச்செல்வனின் அடையாளம். அதுவே தமிழ்க்கவிதையில் எதிர்பார்க்கப்படுவது.

ஒரு மொழிக்குப் புது முகங்களே அவசியமானது. சாயல்கள் இரண்டாம் பட்சம். அல்லது நாலாம் பட்சம். சாயல்களுடைய கவிதையும் அப்படியே.

கடந்த காலத்தின் நினைவுகளில் வீழ்ந்து சுழலும்போது தவிர்க்க முடியாமல் சாயலோடான மொழிக்கும் அதன் வெக்கை தகிக்கும் நிழலுக்கும் சென்று விடுகிறார் மலர்ச்செல்வன். இது பயணமல்ல. பயணத்துக்கு முரணானது.

அவர் இதிலிருந்து மீள வேண்டும். மலர்ச்செல்வன் தன்னடையாளங்களோடு பல இடங்களில் செய்யும் பயணம் வேறானது. அதுவே தொடர வேண்டும்.

மலர்ச்செல்வனுக்குள் நிகழ்ந்தபடியிருக்கும் உணருகை புதிய பயணத்தின் சுவட்டுக்குரியது. அது மேலும் திசைகளைத் திறக்கும்.

Monday, June 25, 2007

மகிந்தவின் போர்ப்பொறி

முழு ஈழத்தமிழரையும் இயங்க முடியாத ஒரு நிலைக்குத்தள்ளியிருக்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. தமிழர்களைப் பொறுத்தவரையில் ராஜபக்ஸ ஒரு டேஞ்சரான பேர்வழி என்று ஒரு நண்பர் சொல்வது மிகச்சரியாக இருக்கிறது.
இலங்கைத்தீவில் எங்கேயிருந்தாலும் சுயமாகச் சிந்திக்கமுடியாத அளவுக்கு மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கெதிராக உள்ளது. எதையும் திட்டமிட முடியாதவாறும் மகிந்தவின் போர்ப்பொறி தமிழருக்கு முன்னால் விரிக்கப்பட்டிருக்கிறது.
எல்லா இடங்களிலும் வௌ;வேறு விதமான ஒப்பிரேஸன்களை தமிழருக்கெதிராக மகிந்தவின் அரசு செய்து வருகிறது. எல்லாமே தமிழ்மக்களை முடக்கும் நோக்pலானவை. அத்துடன் அவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையிலுமானவை.
இவையெல்லாவற்றுக்கும் அரசாங்கம் சொல்கிற பதில், அல்லது நியாயம் இதெல்லாம் புலிகளுக்கெதிரான போர் என்பதே. அரசாங்கம் அதை இன்னும் வியாக்கியானப்படுத்தி பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்றும் சொல்கிறது.
இப்படிச் சொல்வதன்மூலம் தனது பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்துவதுடன் பயங்கரவாதத்துககு எதிரான போரை சிறிலங்கா செய்துவருவதாகவும் அதற்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவையென்றும் ஒரு தோற்றப்பாட்டை அது காட்ட முனைகிறது.



ஆனால், சிறிலங்காவில் அரச பயங்கரவாதமே கடந்த முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரச பயங்கரவாதமே இலங்கைத்தீவிலும் தென்னாசியப்பிராந்தியத்திலும் பெரும் நெருக்கடிச்சூழலையும் உருவாக்கியுள்ளது. இதனைச் சர்வதேச சமூகமும் நன்கறியும்.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பதே அரச பயஙகரவாதத்தின் இன்னொரு வடிவம்தான். அது அரசியல் ரீதியாகவும் தமிழர்களை ஒடுக்குகிறது. இராணுவரீதியாகவும் ஒடுக்குகிறது. பிராந்திய நாடுகளையும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது.
இந்த ஒடுக்குமுறைக்கு பல சந்தர்ப்பங்களிலும் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச சமூகமும் ஆதரவை வழங்கி வந்திருக்கிறது. சர்வதேச சமூகம் தன்னுடைய நலன்களுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்குள் இந்தப்பயங்கரவாதத்தை அது இன்னொரு விதத்தில் வளர்த்தும் வந்திருக்கிறது.
ஆனால் அரசு என்ற அடிப்படையில் இந்தப்பயங்கரவாதம் மறைக்கப்பட்டும் காப்பாற்றப்பட்டும் வந்துள்ளது. அப்படி இது காப்பாற்றப்பட்டு வந்தமையே இப்போது மகிந்த அரசின் உசசமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாகியுமிருக்கிறது. இதை இன்னும் மென்போக்காக மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில, என்ற அளவில் இப்போதும் சர்வதேச சமூகம் காப்பாற்றலாம் அல்லது மறைக்கலாம். ஆனால் அது இன்னும் இன்னும் பயங்கரமானதாகவும் கட்டுப்படுத்த முடியாததாகவும் வளர்ந்தே செல்லும்.



ஏனெனில் இலங்கையின் இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது வரவர மேலும் மேலும் சிக்கலாகியே செல்கிறது. அந்த கூர்மைப்பட்ட வளர்ச்சியின் இப்போதைய நிலையே மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரலாகும். மகிந்தவின் இந்த நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதே இப்போது சர்வதேச சமூகத்தின் முன்னாலுள்ள பிரதான கேள்வியாகும். மகிந்தவின் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே சர்வதேச சமூகத்துக்கு உவப்பில்லாமலேயிருந்தது. அவர் ஆட்சிக்கு வரும்போதே முன்வைத்திருந்த 'மகிந்த சிந்தனை ' என்ற கொள்கைப்பிரகடனம் அப்போதே சர்வ தேச சமூகத்துக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கவில்லை. அந்தப்பிரகடனத்தில் மேற்கின் விருப்பங்களுக்கு அதிக இடமிருக்க்வில்லை எனபது இங்கே கவனிக்கத்தககது. அதிலும் தொடருகின்ற இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு யோசனைகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்வில்லை. அப்போது மேற்கின் ஆதரவோடு நோர்வேயின் அனுசரணையில் சமாதானப் பேச்சுவாhர்த்தை நடந்து கொண்டிருந்தது. சமாதானப் பேசசுவார்த்தைக்கு முற்றிலும் நேர்மாறான கருத்தையுடைய தரப்பாக மகிந்தவின் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இது ஒரு மோசமான சமிக்ஞை என்று அப்போதே பல நோக்கர்களும் சுட்டிக்காட்டியிருந்தாhர்கள். அந்தச் சமிக்ஞை இப்போது எதிர் நிலையில் பிரகாசமாயிருக்கிறது.



இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸவின் நிகழ்ச்சி நிரலை சர்வதேசம் தொடர்ந்தும் அனுமதிப்பதா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் அந்த நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு அடுத்து எவ்வாறு கையாளப் போகிறது என்பதும் முக்கியமானது.



உண்மையில் மகிந்தவின் நிகழ்ச்சிநிரல் தமிழர்களுக்கும் இந்தியா, ஜப்பான் உள்ளடங்கிய மேற்குலகத்துக்கும் எதிரானது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அது இந்தத்தரப்புக்கு எதிர் விளைவுகளை உருவாக்கும் ஒரு பாதகமான நிகழ்ச்சி நிரலாகும்.
அடுத்த கட்டமாக எந்த அசைவுகளையும் ஏற்படுத்த முடியாத படிக்கு அந்த நிகழ்ச்சி நிரல் இறுக்கமானது. அதனால்தான் அது இத்தனை சிக்கல்களுக்குள்ளாகியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை விழுங்கிய நிழ்ச்சி நிரலாகவும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழவை முடக்கியதாகவும் சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தததாகவும் இந்தியா நெருங்கவும் முடியாது தூரப்போகவும் முடியாது தவிக்கும் படியாகவும் என பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலாக அது இருக்கிறது. மேற்கு இப்போது பலவிதமான மறைமுக அழுத்தங்களைக் கொடுக்கின்ற போதும் மகிந்த எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை என்ற நிலையை அவர் தன்னுடைய நிகழ்ச்p நிரலுக்குள்ளால் உருவாக்கியுள்ளார். அதாவது தன்னுடைய திட்டத்தின் ஒரு பாதியை சீனா மற்றும் அதனோடிணைந்த வளைய நாடுகளுடன் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறார். இதை அவர் மறைமுக வெளிப்படையாகவே கையாள்கிறார். பட்டும் படாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்று சொல்வோமே அதேமாதிரிக் கையாள்கிறார்.



இது மேற்குத்லைமையிலான சர்வதேச சமூகத்துக்கு ஒரு மிகப்பெரிய நெருகக்டிக்குரிய விசயமாகவுள்ளது. இதை இந்த அணியினர் இறுக்கிப்பிடிக்வும் முடியாது தளர்த்தி விடவும் முடியாத ஒரு நிiலையில் கையாள முயற்ச்சிக்கின்றனர். இதில் ஆகப்பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டிருப்பது இந்தியாதான். இந்தியா சிறிலங்காவைக்கட்டுப்படுத்தவும் முடியாமல் அதற்கு ஆதரவளிக்கவும் முடியாமல திணறுகிறது.அது வலிய உதவிககளைச் செய்கிறேன் என்று சொன்னாலும் அதனை சிங்களவர்கள் இப்போது ஏற்கத்தயாரி;லலாதது போலக்காட்டுகிறார்கள். ஏன் இந்தியாவின் ஆயத உதவியையே அவர்கள் பகிரங்கமாகவே மறுத்துமிருக்கிறார்கள்.



ஆனால் இந்தியா இதையெல்லாம் புரிந்து கொள்ளாததுபோல தொடர்ந்தும் தன்னுடைய ஆயத உதவிகள் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் என்று சொல்லிக்கொண்டேயிருக்pறது. இந்தியாவின் ஆயத உதவி அறிவப்புகளை, அதிலும் வலிந்த ஆயத உதவிகளை சிறிலங்காவின் பொறுப்பான அமைச்சர்களும் அதிகாரிகளும் படுகேவலமான முறையில் கொச்சைப்படுத்தி நிராகரித்தாரர்கள்.
இந்தியா கொட்டும் பழைய குப்பைகளை வாங்குவதற்கு சிறிலங்கா தயாரில்லை என்றுகூடச் செசான்னாரர்கள். ஆனால் இந்தியா மிகப்பிடிவாதமாகவும் மிகவும் தீவிரமாகவும் சிறிலங்காவுக்கு உதவியே தீருவேன் என்ற முடிவு செய்திருக்கிறது. அதிலும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலொசகர் நாரயணன் சொன்னதை சிறிலங்கா பொருட்படுத்தாமல் விட்;டதன் பின்னரும் இந்திய்ப பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி மறபடியும் இந்திய உதவிகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும் என்று கெஞ்சாத குறையாக, அழாக்குறையாகச் சொல்லியிருக்கிறார்.

அதுவும் சிறிலங்கா அரசாங்கம் இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்குப்பதிலாக இராணுவரீதியாக போரையே செய்து கொண்டிருக்கிறது என்ற நிலையிலும் அதற்கு இப்படி இராணுவ உதவிகள் தாராளமாகக்கிடைக்கின்றன.ஒருபக்கம் மனித உரிமை மீறல்கள் பற்றிய கண்டனங்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டிருக்கிறNபுhதும் இந்த உதவிகளை சம்மந்தப்பட்ட தரப்பினர் வழங்கிவருவது கவனத்திற்குரியது. இதற்கிடையில் இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கிடையில் சிறிலங்கா சீனாவிடம் ஒரு தொகுதி ஆயதங்களை வாங்கியிருப்பதாகவும் தெரிகிறது. சீனாவிடம் சிறிலங்கா ஆயத உதவிகளைப் பெறக்கூடாது எனறுதான் இந்தியா முந்திமுயன்றபோதும் அதற்கு சிறிலங்கா மசிந்து கொடுக்க்வில்லை. அது சீனாவிடம் நெருங்க நெருங்க அதற்குப்பதிலாக சிறிலங்காவுக்கு இந்தியாவும் ஜப்பானும் இன்னும் மேற்குலகமும் போட்டிபோட்டுக்கொண்டு தாராளாக உதவவருகிpன்றன.



மகிநத இப்படி சகல தரபபினரிடமிருந்தும் உதவியைப் பெறக்கூடியதொரு பொறியமைப்புக் கொண்ட ராஜதந்திரத்;தை கையாள்கிறார். இது மகிந்த ராஜபக்ஸவுக்கு முன்னர் திருமதி சந்திரிகா குமாரதுங்க கையாண்ட ராஜதந்திர அணுகுமுறையாகும். சிங்களவர்கள் இப்போதுள்ள ஒற்றை உலக ஒழுங்கையும் அதற்குள் தென்னாசிய, தென்கிழக்காசியப்பிராந்திய அரசியலையும் நன்றாகப்புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஒரு அவதானி சொன்னார். அதாவது அவர்கள் இப்போது இநத நெருக்கடிகளைக்கடப்பதற்காகவும் சிறிலங்காவை எப்போதும் சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய புள்ளியாக வைத்திருக்கவும் தங்களுடைய ராஜதந்திரத்தை வடிவமைததிருக்கிறார்கள். சிங்கள ராஜதந்திரம் கடந்த முப்பதாண்டுகளில் தென்னாசியப்பிராந்தியத்தில் பெருந்துலக்கமாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறாரர். தவிர சிங்கள ராஜதந்திரத்தை சரியாக விளங்கிக் கொள்வதாயின் அது இந்திய ராஜதந்திரத்தை விடவும் சிறப்பானதாகவுமே இருப்பதாகவும் படுகிறது என்றுமவர் மேலும் சொல்கிறார். இதுபற்றிப்பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். சிங்களவர்களின் இந்த ராஜதந்திரம் என்பது அவர்களுடைய வரலாற்றுத் தொடர்ச்சியை காட்டுவதற்கு அவர்களிடமுள்ள மகாவம்ச ஆக்கத்தைப்போலவே தனித்தன்மை கொண்டதாக உள்ளது. அதாவது கூட்டு எண்ணத்தின் விளைவாக அதை அவர்கள் திரட்டிக்கொள்கிறார்கள்.



மகிந்தவைப்பலப்படுத்துவதும் இந்தக்கூட்டு எண்ணத்திரட்சிதான். இது ஒரு பக்கம் தமிழ் மக்களுக்கெதிரான மனப்போக்குடையது. அதேNவுளையில் அது இந்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக்கொண்டது. ஆனால் இத்தகைய விரோதப் போக்குடைய சிறிலங்காவின் எண்ணத்திரட்சிக்கு இன்னும் இந்தியத்தரப்pல் வலுவான ஒரு மறுதீர்மானம் அல்லது மறு சிந்தனை உருவாகவில்லை என்பது கவனத்திற்கும் வருத்தத்துக்குமுரியது. எப்படியோ மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை சர்வதேச சமூகம் தொடர்ந்து அனுசரிக்க முடியாத ஒரு நிலைக்கு வந்துவிட்டது. எனவே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது முக்கியமாகியுள்ளது.



அத்துடன் தமிழர் தரப்பும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை மாற்றி புதிய சூழ்நிலையொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழர் தரப்புக்கு இப்போது இரண்டு பிரதான அணுகுமுறைகளிருக்கின்றன. ஒன்று போரை போரினால் எதிர்கொள்வது. இப்போது அதை நோக்கியே கள நிலவரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப்போரென்;பது சாதாரணமாக நடந்து விடப்போவதில்லை. அது பெரும் மாற்றங்களுக்கும் முடிவுகளுக்குமானது. எனவே அதறகேறற மாதிரியே அதன் விளைவுகளும் மிகப்பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பாhர்க்கப்படுகிறது. பெரும் உயிரிழப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் போராகவே அது இருக்கும். மற்றது போருக்கெதிராக சிறிலங்காவை மடக்குக்கூடிய மாதிரி ராஜதந்திரப் பொறியை வைப்பது.



அந்த அணுகுமுறை சர்வதேச சமூகம் தமிழர் தரப்பை நோக்கி நெருங்கக்கூடியமாதிரி அமையும் போது தமிழர் தரப்பு பல அனுகூலங்களை பெறவாய்ப்பிருக்கிறது. இப்போது சர்வதேச சமூகம் போருக்கெதிரான ஒரு நிலைப்பாட்டை விரும்புகிறது. இந்த விருப்பத்தை தமிழர்கள் தமக்குச்சாதகமாக கையாள்வதன் மூலம் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலை சிதைக்க முடியும்.

நிலவரம்

இலங்கை இனப்பிரச்சினை இப்போது சகலருடைய கட்டுப்பாட்டையும்மீறி விபரீத கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது அது பெரும் போரொன்றின் விளிம்புக்கு வந்து விட்டது.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேவழியாக போரைத்தான் பிரச்சினையுடன் சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பும் தேர்ந்திருக்கின்றன என்று மேற்குலகின் ராஜதந்திரி ஒருவர் கவலையோடு சொன்னார்.
ஆனால் இந்தப் போரை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. அது தொடர்ந்து சமாதானத்தையே வலியுறுத்தி வருகிறது. போரில் ஈடுபட்;டுள்ள சம்மந்தப்பட்ட தரப்புகளான விடுதலைப்புலிகளையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் சமாதானத்தை நோக்கித்திரும்பும்படி தொடர்ந்து அது வலியுறுத்தி வருகின்றது.

இப்போது இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் போதும் இந்த நிலைப்பாடு மீண்டும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போர் நிறுத்தத்தை பின்பற்றுமாறு இணைத்தலைமை நாடுகள் கேட்டுள்ளபோதும் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கமும் புலிகளும் சம்மதம் தெரிக்கக்கூடிய நிலையில் இலலையென்று தெரிகிறது. ஆனாலும் மேற்கு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றுவதாக இல்லை.

அத்துடன் இப்போது மேற்குலகம் சம்மந்தப்பட்ட தரப்புகளை போரை நோக்கிச் செல்லாதிருக்கும் வகையில் அவற்றைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மெல்ல இறங்கியுள்ளது.

இதன்படி மனித உரிமை மீறல் விவகாரத்தை வைத்து சிறிலங்கா அரசாங்கத்தை கட்டுப்படுததும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் எலல்hத்திசைகளிலிருந்தும் மனித உரிமைகள் விவகாரத்தைக் கண்காணிக்கும் கண்களை சிறிலங்காவை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.



இறைமையுள்ள அரசு என்ற வகையில் முதற்கட்டமாகச் செய்யக்கூடிய அழுத்தத்தையே இப்போது மேற்குலகம் சிறிலங்காவின் மீது பிரயோகித்திருக்கிறது.



மனித உரிமை மீறல்களை குற்றச்சாட்டாக வைத்து சிறிலங்காவுக்கான நிதிக்குறைப்பையும் அவை செய்வதற்குத் திட்டமிட்டிருக்கின்றன.



தவிர தமது முதலீடுகளை சிறிலங்காவில்; செய்வததையும் அவை இப்போது குறைத்திருக்கின்றன. தொடரும் போரினால் பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லி முதலீட்டுக் குறைப்பை மேற்கு நாடுகள் செய்திருக்கின்றன. அத்துடன் தமது பிரஜைகள் சிறிலங்காவுக்குச் செல்வதையும் அவை மடடுப்படுத்தியுள்ளன.

இதேபோல விடுதலைப்புலிகளுக்கும் அவை மறைமுக நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.


வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்காகச் செயற்படுவோரையும் ஆதரவழிப் போரையும் மட்டுப்படுத்தும் வகையில் பிரான்ஸிலும் லண்டனிலும் இடம்பெற்ற சில தமிpழரின் கைதுகள் இதனையே காட்டுகின்றன.


இப்படி நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலம் போரைத்தவிர்த்து சமாதானத்துக்கான வழிமுறைக்கு இரண்டு தரப்பினரையும் கொண்டு வரலாம் என்றும் அவை கருதுகின்றன.


இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் இன்னும் மேற்குலகம் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழவையும் புரிந்துணர்வு உடன்படிக்கையையும் நம்பிக்கைக்குரியதாக கருதிக் கொண்;டிருக்கிறது.

நடைமுறை அர்த்தத்தில் போர் நிறுத்த உடன்படிக்கையும் புரிந்துணர்வு உடன்படிக்கையும் செயலற்றிருந்தாலும் அது உத்தியோக பூர்வமாக இரண்டு தரப்பினராலும் இன்னும் மீறப்படவில்லை என்பது மேற்கைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகவேயிருக்கிறது.

அதாவது இந்த உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக மீறக்கூடிய திராணி இன்னும் இரண்டு தரப்பினருக்கும் இல்லை என்று கொழும்பில் மேற்கு நாடொன்றின் ராஜதந்திரியொருவர் கூறியது இங்கே கவனத்திற்குரியது.


சர்வதேச அபிப்பிராயத்தை முழுதாக நிராகரிக்கக்கூடிய அகச்சூழல் சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு ஏற்படாத வரையில் தமது முயற்சிகளுக்கான இடம் இன்னும் பலமாக இருப்பதாகவே சரிவதேச சமூகம் கருதுகின்றது.

எனவே இவற்றை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு பேச்சுவாரத்தைச் சூழலை உருவாக்கி விடலாம் என்றும் அது வலுவாக நம்புகிறது.

ஆனால் கள யதார்த்தம் சமாதானத்துக்குச் சாதகமாக இல்லையென்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. அது முழதாக போருக்கே தயாராக இருப்பதாகவும் எப்போதும் பெரும் போரொன்று வெடிக்கக்கூடிய நிலையே காணப்படுவதாகவும் களத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் சொல்கின்றன.


கொழும்புச் செய்திகளும் வன்னி மற்றும் யாழ்ப்ப்hணச் செய்திகளும் இவற்றை உறுதிப்படுத்துகின்றன. முழு இலங்கைத்தீவிலும் நிலவுகின்ற போருக்கான தயாரப்படுத்தல்களும் போர் குறித்தான அச்ச நிலையும் இவற்றை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஆனால் உண்மை நிலையென்பது, இப்போது போரோ சமாதானமோ யாரும் நினைத்தமாதிரி இலகுவானதாக இலங்கையில் இல்லை என்பதுதான்.

சமாதானத்துக்கான முயற்சிகள் எவ்வளவு கடினமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு போர் செய்யும் நிலையும் கடுமையானதாகவேயிருக்கிறது.
இனிவரும் போர்க்களம் மிக முக்கியமானதொரு புள்ளியாகும். அதாவது இந்தக்களமே மையப்புள்ளி. சவால்கள் நிறைந்த பெரும் புள்ளி.
சிறிலங்காப் படைகளைப் பொறுத்தவரையில் வன்னியை நோக்கிப் பெரும் படையெடுப்பையும் போரையும் மேற்கொள்வதைத்தவிர வேறு தெரிவுகள் இப்போது அவற்றுக்கு இல்லை.
அதேபோல விடுதலைப்புலிகள் வன்னியிலிருந்து வெளியே படை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதாவது யாழ்ப்ப்hணம் மீதோ மணலாற்றின்மீதோ மன்னாரின் மீதோ தான் அவர்கள் அடுதத கட்டத்தாக்குதல்களை தொடுக்கலாம்.

இதன்படி வன்னியைச்சுற்றிய தடைகளை அகற்றுவதே புலிகளின் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கிறது. அப்ப்டித் தடைகளை அகற்றிக் கொண்டே இடுத்த கட்டத்துக்குப் போகமுடியும் என்றும் அவர்கள் சிந்திக்கக்கூடும்.

இவ்வாறு வன்னியைச்சுற்றிய தடைகளை அகற்றும் நடவடிக்கையில் இரண்டு அனுகூலஙகள் புலிகளுக்குண்டு. ஒன்று வன்னி மீPதான சிறிலங்கா அரசின் படையெடுப்பைத் தடுக்கலாம். அடுத்தது வன்னி மீதான இறுக்கத்தை உடைக்க்லாம். இப்போது இந்த இரண்டும் புலிகளுக்கு மிக அவசியமானவை.
இதேபோலவே சிறிலங்கா அரசுககும் பிரச்சினைகளுண்டு. அது இப்போது அவசரமாகப் புலிகளை கட்டுப்படுத்தா விட்டால் அவர்கள் வன்ன்pக்கு வெளியே படையினரின் பிடியிலுள்ள பகுதிகளின் மீது தாக்குதல்களை நடத்துவார்கள். அது அரசாங்கத்துக்கு பெரும் சி;ககலைக் கொடுக்கும்.

அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையை முறித்ததே போர் மூலம் வெற்றியைத் தான் பெறமுடியும் என்ற நோக்கோடுதான். அப்படியிருக்கும்போது புலிகள் வன்னிக்கு வேளியே போரைத்தொடுத்து அரசாங்கத்தை தோற்கடித்தால் அது தன்னை நிலைப்படுத்த முடியாதென்று அஞ்சுகிறது.

அத்துடன் வன்னிப் போர்க்களம் அரசாங்கத்துக்கு சாதாரணமானதாகவோ சுலபமானதாகவோ இருக்கப் போhவதில்லை. மேலும் வன்னிமீது அரசாங்கம் போரைத்தீவிரப்படுத்தும் போது கொழும்பும் அதன் விளைவுகளை அதிகளவில் எதிர் கொள்ள வேண்டிவரும்.

இப்போதுள்ள பிரச்சினையே இதுதான். இரண்டு தரப்புக்கும் அடுத்த கட்ட நகர்வென்பது பெரும் சவாலுக்குரியதாகவே யிருக்கிறது. அது சமாதானமாக இருந்தாலும் சரி போராக இருந்தாலும் சரி.

எனவே இந்தப்பின்னணியில் இனிநடக்கும் போர் பெரிய விளைவுகளைத்தரக்கூடியது. இதனையே சர்வதேச சமூகம் உள்ளிட்ட ஐ.நா சபை கூட சொல்கின்றன. பெரும் மனிதப்பேரிவுகள் ஏற்படக்கூடிய நிலையே இப்போது ஏற்பட்டிருப்பதாகவும் அவை கவலையடைந்திருக்கின்றன.

இந்த நிலையில் போரைத்தவிர்ப்பதற்கு ஒரேயொரு தெரிவு மட்டுமே உண்டு. அது சர்வதேச சமூகததின் கைகளிலேயே இருக்கிறது.

பொத்தாம் பொதுவாகவும் மேலோட்டமாகவும் அழுத்தங்கள் என்ற போர்வையிலும் கண்டனங்கள் என்ற வகையிலும் ஒளித்து விளையாடாமல் சர்வ தேச சமூகம் இப்போது தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.

சிறிலங்கா பிற நாட்டு உதவிகளிலும் ஆதரவிலும் தங்கியிருக்கும் நாடு. அதிலும் சர்வNதுச நிதியுதவியை வைத்துத்ததான் சிறிலங்காவின் பட்ஜெட்டே உருவாக்கப்படுகிறது. எனவே சிறிலங்காவை கட்டுப்படுத்தக்கூடிய வல்லாண்மை சர்வதேச சமூகத்துக்கு மிக வசதியாகவேயுண்டு.
இந்த வசதியையப்பயன் படுத்தி அது சிறிலங்காவை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் சமாதானத்துக்கும் போர் நிறுத்தத்துக்குமான ஒரு புறச்சூழலை உருவாக்கலாம். சிறிலங்கா அரசின் போர் முனைப்புக்குறையும் போது புலிகளின் போர் முனைப்பும் தணிந்து விடும்.
சம்மந்தப்பட்ட இரண்டு தரப்பினருடனும் தொடர்பை இன்னமும் சர்வNதுச சமூகம் வைத்திருப்பது இங்கே உதவக்கூடும். ஆனால் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போவதென்பது சாதாரணமானதல்ல. அதற்கு ஏராளமான தடைகளிருக்கின்றன என்பதையும் நாம் இங்கே கவனிக்க் வேண்டும்.

அந்தத் தடைகளைத் தாண்டக்கூடிய மனப்பக்குவத்தை பிரச்சினையுடன் தொடர்புடைய தரப்புகளிடம் வளர்க்க வேண்டும் என்று நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.



பிரச்சினைகளைக் கையாளக்கூடிய பொறுமையும் நிதானமும் புரந்துணர்வும் மேலான நோக்கும் இல்லாத வரையில் மாற்றுத் தெரிவுக்கும் தீர்வுக்கும் இடமில்லைஎன்றும் அவர்கள் சொல்கிறார்கள்.



எனவே போர்தான் யதார்த்தத்தில் இருக்கிறது போலும். அதாவது அழிவுகளும் கண்டனங்களும்தான் மிஞ்சப் போகின்றன. மீண்டும் வகைதொகையில்லாத அளவில் கண்டன அறிக்கைகள் வரப் போகின்றன.


அந்த அறிக்கைகள் காலங்கடந்தவையாகவும் ஏதும் செய்ய முடியாதவையாகவுமே இருக்கும். அதைப்பற்றி யாருக்குத்தான் கவலையிருக்கப் போகிறது.


இதற்கெல்லாம் முதற்படி தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய கரிசனை உண்மையாகவே சகலருக்கும் ஏற்பட வேண்டும். குறிப்பாக சர்வ தேச சமூகத்துக்கு.

Tuesday, June 19, 2007

மகிந்த ராஜபக்ஸவின் அணுகுமுறைகள்

அதிகரித்திருக்கிற முரண்பாடுகளின் கூர் முனையை மழுங்க வைக்கும் முயற்சிகளில் இப்போது சிறிலங்கா அரசு முயன்று வருகிறது. இதற்காக சிறிலங்கா ஜனாதிபதியே களத்திலிறங்கிச் செயற்பட்டுவருகிறார். சர்வதேச சமூகத்தின் நெருக்கடிகளைத்தணிப்பதற்காக அவர் இப்போது அதிக கவனத்தை எடுத்திருக்கிறார். இதை அவர் ஒரு உபாயமாகவே கடைப்பிடிக்கிறார்.


போர் நிறுத்த உடன்பாட்டை மீறி, மனித உரிமைகளைப் பொருட்;படுத்தாது சிறிலங்கா அரசு செயற்பட்டு வருவதால் அதற்கு சர்வதேச அளவில் அதிக கண்டனங்கள் வந்தவாறே இருக்கின்றன.
இந்தக்கண்டனங்கள் இன்னும் வரவர கூடுகின்றனவே தவிர குறைவதாகத் தெரியவில்லை. அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைகளைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

போரை நிறுத்தாத வரையில் அதனால் மனித உரிமை மீறல்களைக்கட்டுப்படுத்த முடியாது என்பது நடைமுறையான உண்மை. ஆனால் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலில் போருக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இனப்பிரச்சினைத்தீர்வு குறித்து அதனிடம் வேறு தெரிவுகளும் மாற்று யோசனைகளும் கிடையாது.

அதனால் அது போரையே தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. அப்படிப் போரைச் செய்யும்போது மனித உரிமை மீறல்கள் தொடர்ந்த படியேயிருக்கும். மனித உரிமை மீறல்கள் தொடரப்படும்வரையில் அதற்கான கண்டனங்களும் வந்தவண்ணமேயிருக்கும்.
ஆனால் இந்தக்கண்டனங்கள் ஒரு கட்டத்தில் அரசுக்கு நெருக்கடிகளையும் அழுத்தங்களையுயும் கொடுக்கும். அத்துடன் கண்டனங்களை வெளியிட்டு வரும் தரப்பினர் தொடர்ந்து வெறுமனே அவற்றை வெளியிட்டுக் கொண்டிருக்கவும் முடியாது.

இந்த யதார்த்தத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டே சிறிலங்கா ஜனாதிபதி இப்போது புதிய அணுகுமுறைக்குச் சென்றுள்ளார். தன்னைச்சூழ்ந்துள்ள நெருக்கடிகளைத் தணிக்க முயல்கிறார்.

அவர் தன்னுடைய தந்திரோபாயத்தின்படி இப்போது மூன்று முனைகளில் தன்னுடைய வியூகத்தை வகுத்திருக்கிறார். ஒன்று தமிழ் மக்களை செயற்படமுடியாத ஒரு நிலைக்குத்தள்ளுவது. அடுத்தது புலிகளைப்பலவீனப்படுத்துவது. மூன்றாவது சர்வNதுச சமூகத்தை தன்னுடைய பக்கத்துக்கு கவர்ந்திழுப்பது.

இன்று இலங்கைத்தீவில் தமிழர்கள் எங்கேயிருந்தாலும் அவர்கள் எல்லோரும் நிம்மதியற்ற ஒரு நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழர்கள் கொழும்பிலிருந்தாலென்ன மட்டக்களப்பிலிருந்தாலென்ன யாழ்ப்பாணத்திலிருந்தாலென்ன அவர்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது என்று மகிந்த ராஜபக்ஸ சொலலிவிட்டார்.

அத்துடன் தமிழ் மக்கள் எதையம் திட்டமிட முடியாதவாறும் செய்ற்பட முடியாதவாறும் ஒரு நிலையை அவர் உருவாக்கியுள்ளார். எங்கும் இறுக்கமான நடைமுறைகளுக்குள்தான் தமிழர்கள் வாழவேண்டியிருக்கிறது இப்போது. அது கொழும்பிலும் சரி, யாழ்ப்பணத்திpலும் சரி வவுனியாவிலும் சரி எங்கும்தான். முழுத்தமிழர்களையும் அவர் தன்னுடைய ஆட்சியில் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்.

போரை தமிழ் மக்களுக் கெதிராக முழுஅளவிலும் விரிவாகவும் வௌ;வேறு வடிவங்களிலும் நுட்பமாகவும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறும் அவர் வடிவமைத்திருக்கிறார்.

ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு அவருடைய 'ஒப்பிறேஸன்கள்' வேறுபடுகின்றனவே தவிர அடிப்படை ஒன்றுதான். அதாவது அவர் இப்போது தமிழ் மக்களுக்கெதிரான ' மல்ரி ஒப்பிறேஸன்'களில் ஈடுபட்டிருக்கிறார்.

எனவே தமிழ் மக்களுக்கெதிரான அவருடைய போரென்பது முழு அளவிலானதே.

அடுத்தது, அவர் புலிகளைப்பலவீனப்படுத்த முயற்சிப்பது. முதற்கட்டமாக கிழக்கிலிருந்து புலிகளை அகற்றுவது. அது முடியாது என்றால், அவர்களை அங்கிருந்து ஓரங்கட்டுவது, அதுவும் முடியாதென்றால் அவர்களை அங்கே பலவீனப்படுத்துவது என்பதே அவருடைய திட்டம்.

இதன்படி சிறிலங்கா அரசு போர் நிறுத்த உடன்படிக்கையை அப்படியே தள்ளி வைத்துவிட்டு, வெளிப்படையாகவும் கநேரடியாகவும் கிழக்கில் போரை நடத்தத் தொடங்கியிருந்தது.

இதில் நேரடியாயகவே சிறிலங்கா அரசுக்குபெரும் பாதிப்புகள் வருமென்று தெரிந்த போதும் அதை மகிந்த ராஜபக்ஸ பெரிதும் பொருட்படுத்தவில்லை.
அதாவது போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி போர் செய்யப்படுவது என்பது சர்வதேச சமூகத்தின் விருப்புக்கு மாறானது என்பது ஒன்று. அடுத்தது அப்;படிப்போரைச் செய்யும் போது அதனால் ஏற்படும் மனித அழிவுகள் உரிமை மீறல்கள் எல்லாம் அவருக்கெதிராகவே வரும் என்பது அடுத்தது.

ஆனால் அவர் முதற்கட்டமாக புலிகளைப்பலவீனப்படுத்தும் முயற்சிலேயே ஈடுபட்டார். அவருக்குத் தெரியும் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டிவரும் என்று. அது தவிர்க்க முடியாத யதார்த்தமும் கூட.

அப்படி தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும் போது புலிகள் பலவீனமான நிலையிலேயே இருக்க வேண்டும் என்று அவர் கணக்கிட்டார். இதற்கு வாய்ப்பாக அவர் கருணா குழவைப் பயன்படுத்தி காரியங்களைச் சாதிக்க முற்படுகிறார்.

கிழக்கில் புலிகளை பலவீனமாக்கி விட்டால் அடுத்;தது வடக்கில் வன்னியில்தான் அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அதை தான் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கணித்தார். இதன்படி அவருடைய படை நடவடிக்கைகளை வகுத்திருக்கிறார்.

இதற்கெல்லாம் சாதகமான முறையியல் அவர் சிறிலங்காவுக்குள் குறிப்பாக சிங்களத்தரப்புக்குள் ஒரு பொறிமுறையை வகுத்திருக்கிறார். அதன்படி சிங்களத்தரப்பை போருக்கு ஆதரவாக அவர் முழதாகத் திரட்டி விட்டார். போருக்கெதிராகவும் அவருடைய நிகழ்ச்சி நிரலுக்கெதிராகவும் அங்கே வலுவான அழுத்தங்களைக் கொடுக்கும் நிலை எவரிடமும் இப்போதில்லை.

அடுத்ததாக சர்வதேச சமூகத்தை கையாள்வது அல்லது அதை சமாளிப்பது. தொடக்கத்தில் அவருடைய போர் முனைப்புக்கும் அதனால் ஏற்பட்ட போர் நிறத்த மீறலுக்கும்; எதிராக சர்வதேச சமூகம் கடுமையான கண்டனங்களை வெளியிட்டது.

மகிந்த ராஜபக்ஸ இந்தக்கண்டனங்களைப் பொருட்படுத்தாது தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் போரை நிறுத்த முடியாத இந்தக்கண்டனங்கள் அடுத்த கட்டத்தில் மனித உரிமை மீறல் என்ற வடிவத்தில் வரத்தொடங்கியுள்ளன.

முதலில் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வந்த சர்வதேசத்தின் விருப்பை அப்படியே தூக்கிவீசிய ராஜபக்ஸவினால் இப்போது வரும் கண்டனங்களை அப்படி தூக்கியெறிய முடியவில்லை.

போரை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் சொன்ன போது அவர் அதற்கு, சிங்களத்தரப்பின் பெரும்பான்மை விருப்பமும் அரசாங்கத்தின் நிலைமையும் போரைச் செய்ய வேண்டியதாகவே உள்ளதென்று காட்டினார். அதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டதோ இல்லையொ அவர்அப்படித்தான் அதை நிரூபித்தார். அவருக்கு ஆதரவாக, அவருடைய அந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவாக சிங்களத்தரப்பும் நின்றது.

முழுச்சிங்களச் சமூகமும் போரை ஆதரிக்கிறது என்பதை சர்வதேச சமூகம் விளங்கியிருக்கிறது என்று ஒரு சிங்கள ஊடகம் வெளிப்படையாகவே எழுதியுமிருந்தது. ( சிங்களச்சமூகம் போரையே விரும்புகிறது என்பதை சர்வதேசம் விளங்கியிருக்லாமே தவிர அது அதை ஏற்றுக் கொண்டதா என்பதை கவனிpக்க வேண்டும்.)

சிங்களத்தரப்பின் போர் நிறுத்த மீறலையும் போர் முனைப்பையும் கட்டுப்படுத்த முடியாத சர்வ தேச சமூகம் மனித உரிமை மீறறல்கள் என்ற பேரில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி யாருக்கும் எழ வாய்ப்புண்டு. சிறிலங்கா அரசின் போர் முனைப்பை கட்;டுப்படுத்த முடியாத நிலையிலா சர்வதேச சமூகம் இருக்கின்றது என. ஒரு வகையில் சிறிலங்கா அரசை முழுதாகக்கட்டுப்படுத்தும் நிலையில் இன்னும் சர்வதேச சமூகத்தின் நெருக்குவாரம் சிறிலங்காவுக்கு இல்லை.

சிங்களவர்கள் எந்த நெருக்கடிக்குள்ளும் சுழித்து லாபம் தேடும் ஒரு அரசியற் பாரம்பரியத்தை உரு வாக்கி வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா தலைமையிலான சர்வதேச ஒற்றை உலகமே இப்போதிருந்தாலும் அதற்குள் ஆசிய மண்டலத்தின் செல்வாக்கு வலயம் இன்னும் முற்றாகக் கரைந்து விடவிpல்லை. அதிலும் சீனா, இந்தியா என்ற அடையாளங்கள் அல்லது செல்வாக்கு வலயங்களின் இயல்பு மெல்லியதாக இன்னும் இருக்கிறது. இதைத்தனக்கு சாதகமாகப்பயன் படுத்துகிறது சிங்களத்தரப்பு.

இதன்படி அது மேற்குலகத்தின் நெருக்குவாரங்கள் அதிகரிக்கும் போது சீனாவின் பக்கம் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒட்;டிக்கொள்வதன் மூலம் லாபங்களையும் பாதுகாப்பையும் அது பெற்றுவிடுகிறது. கடுமையாக நெருக்கினால் சிறிலங்கா முற்றுமழுதாக சீனாவைச்சார்ந்து விடும் என்று மேற்கு எதிர்பார்க்கிறது.

ஆக, இத்தகைய பின்னணியில் நேரடியாக சிறிலங்காவுடன் முட்டிக்கொள்ளும் நிலைக்கு மேற்குலகம் இன்னும் தயாராகவில்லை. அதனால் அது மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில் மறைமுக நேரடி அழுத்தத்தை சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்திp வருகிறது. இந்த அழுத்தத்தில் எந்த நாடும் நேரடியாக முழு அளவில் சம்மந்தப்படாது. அதேவேளை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தங்கள் தரப்புக்கண்டனங்களையும் திருப்பியின்மைகளையும் தெரிவிப்பதற்கு அவற்றின் மனித உரிpமை அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

இந்த அமைப்புகளின் கண்டனங்களுடன் சேர்ந்து ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான அமைப்பும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புகளின் கண்டனம் அடுத்த கட்டத்தில் ஏதாவதொரு தீரமானத்தை சமமந்தப்பட்ட தரப்புகள் எடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டத்துக்கு தள்ளுமென்பதால் அதற்கு முன்னதாக ஜனாதிபதி நேரடியாகக் களத்திலிறங்கி சூட்டைத்தணிக்கத் தொடங்கி விட்டார்.

இதன்படியே அவர் அதிரடியாக ஜெனிவாவுக்குப் புறப்பட்டதும் நோர்வேப் பிரதிநிதிகளைச் சந்தித்ததும். ஜெனிவாவில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பிரதிநிதியை அவர் சந்தித்து இலங்கையில் தொடருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசி, அது தொடர்பாகத் தான் உடனடிக்கரிசனத்தைக் கொள்வதாகச் சொல்லியுள்ளார்.

ஜனாதிபதி மனித உரிமைகள் பிரதிநிதியை சந்தித்ததே சர்வதேச சமூகத்துக்கு பெரிய திருப்தியளிக்கும் விசயமாகும். அவர்களைப் பொறுத்தவரை பிரச்சினைக்கு அதனுடன் சம்மந்தப்பட்ட தரப்பு முகம் கொடுத்தால் அது முதல்கட்ட வெற்றி என்றே கருதுகிறார்கள்.

ஆனால் மகிந்தவைப் பொறுத்தவரையில் அவருக்கு ஒரு தற்காலிக நெருக்கடித்தணிவு தேவைப்படுகிறது. அதைத்தேடியே அவர் ஜெனிவாவுக்குப் போனார். ஜெனிவாவில் அவர் கூறியபடியும் ஒப்புக்கொண்டபடியும் எதையும் செய்யப்போவதில்லை. ஆனால் தற்காலிகமாக அவர் ஆறுதலைப் பெற்றுள்ளார்.

ஆனால் இதைவிடவும் அவர் நோர்வேயின் சமாதானப்பிரதிநிதிகளைச் சந்தித்ததே அவருடைய முக்கிய தந்திரமாகவுள்ளது.

நோர்வேப்பிரதிநிதிகளான எரிக் சூல் கெய்ம்மிடமும் ஜோன் ஹான்ஷர் போவரிடமும் புலிகளை பேச்சு மேசைக்குக் கொண்டுவரும்படி அவர் கேட்டுள்ளார். பந்தை அவர் நோர்வேயிடம் கொடுத்துள்ளார்.

இனி நோர்வே இதற்குரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற கட்டம் இது. ஆனால் யதார்த்தத்தில் பேச்சுக்கான சூழலே இல்லை. இப்போது நோர்வே புலிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நிலையை அவர் உருவாக்கியுள்ளார். அத்துடன் பேச்சுக்கு புலிகள் வரத்தயாரில்லை என்றால் பழியைப்புலிகளின் மீது போட்டும் விடலாம் என்றெல்லாம் அவர் கருதுகிறார்.

இதன் அர்த்தம் தான் பேச்சுக்கு தயார் என்பதாகக் காட்டுவதே. இப்போது படைவலுச்சமநிலையில் அரசாங்கம் வலுவாக உள்ளதாக அவர் கருதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அத்துடன் நோர்வேயோ சர்வதேச சமூகமோ இப்போதைக்கு தீர்வுத்திட்டம் பற்றியோ பேச்சுவார்த்தைபற்றியொ தன்னிடம் எதையும் பேச முடியாது என்ற நிலையை உருவாக்க முயன்றுள்ளார்.

எதிலும் தான் முந்திக் கொள்வதன் மூலம் தனக்குச் சாதகமான ஒரு களநிலையைத் தயாரிக்கும் நோக்கிலான அணுகுமுறையில் அவர் தானே நேரடியாக முன்னின்று செயற்படுகிறார்.

இந்த அணுகுமுறைக்கு இப்போது ஏதாவது சிறு வெற்றிகள் கிட்டலாம். ஆனால் அவை தற்காலிக வெற்றிகளே. அல்லது வெற்pபோலானவையே. உண்மையான முறையில் அவர் எதிலும் செய்றபடாத வரையில் அவர் எந்த வெற்றியையம் பெறப்போவதுமில்லை. நன்மைகளை அடையப் போவதுமில்லை.

அவருடைய தந்திரப்பொறிக்குள் சிக்குப்படும் சர்வதேச சமூகமும் ஒரு போதும் இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கண்டடையப் போவதுமில்லை.

பதிலாக பெரும் பேரழிவுக்குள் இலங்கைத்தீவைத்தள்ளும் மகிந்தவின் நோக்கத்துக்கு சகலதரப்பும் வழியேற்படுத்துவதாகவே படுகிறது.