Monday, August 6, 2007

தாண்டமுடியாத கிணறுகள்...

1

வன்னியில் இப்போது ஐம்பது கிலோ நிறையுள்ள ஒரு சிமென்ற் பாக்கின் விலை என்ன தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் உண்மை இது. ஒரு பாக் சிமென்ற் இப்போது 5000 (ஐயாயிரம்) ரூபாய் விற்கிறது. ஆனால் இந்த விலைக்கும் தாராளமாக சிமென்றை வாங்கிவிட முடியவில்லை. அந்தளவுக்கு சிமென்ற்றுக்கு தட்டுப்பாடு வந்திருக்கிறது.



பல பள்ளிக்கூடங்கள் பாதிக்கட்டிடங்களோடு நிற்கின்றன. இதுமாதிரியே பல வீடுகளும் கட்டப்பட்ட குறையில் உள்ளன. ஏன் கிணறுகள் கூட அரைவாசி கட்டப்பட்ட நிலையில் பாதிக்கிணற்றோடு இருக்கின்றன. பாதிக்கிணறு கடந்தாயிற்று, இனி மீதிக்கிணறை கடக்கவேண்டியதுதான் என்று சொல்வார்களே அதுமாதிரி இப்போது பாதிக்கிணற்றோடு கட்டுவேலைகள் தடைப்பட்;டுவிட்டன. கிணறுகளின் கதி இப்படியென்றால், இதைவிடவும் படு மோசமான நிலையில் வன்னியில் பாலங்களின் கதி இருக்கிறது. சில பாலங்கள் பாதிக்கட்டு வேலையொடு இடைநடுவில் நிற்கின்றன. பாதியில் நிற்கும் பாலத்;தின்மீதேறி எப்படிப்பயணம் போகலாம்.



போக விரும்பினால் அந்தப்பாதிப்பாலத்தால் பயணம் போங்கள், இல்லையென்றால் போகாதிருங்கள் என்றமாதிரி அரசாங்கம் சொல்லாமற் சொல்லியுள்ளது. இல்லையென்றால் இதை வேறு எப்படி விளங்கிக் கொள்வது. கோடைகாலம் என்றால் எப்படியோ பாலத்தின் அருகால் கீழே இறங்கி பயணம் செய்யலாம். ஆனால் மாரியில் எப்படி கீழே இறங்க முடியும். வன்னியில் மாரிமழை கொட்டும். காட்டாறுகள் பொங்கிப்பாயும். அப்போது முழதாகக்கட்டப்பட்ட பாலத்தின் மீதேறியே பயணம் செய்யப்பயமாக இருக்கும். அப்படியிருக்கும்போது எப்படி பாதிப்பாலத்தால் பயணம் பொக முடியும். உலகில் வேறு எங்காவது இதுமாதிரி பாதிப்பயணத்தால் பயணஞ்செய்யும் வழக்கமிருந்தால் தயவு செய்து யாராவது அறிந்து சொல்லுங்கள்.



இருக்கின்ற வீPடுகளையே குண்டு போட்டு அழிக்கின்ற நாட்டில் புதிய பாலத்துக்காகவும் புதிய பள்ளிக்கூடங்களுக்காகவும் ஆசைப்பட:டிருக்கக்கூடாதுதான். ஆனால் என்ன செய்வது. இதெல்லாம் ஆசைக்காக தேவைப்படும் விசயங்ககளல்லவே. இதெல்லாம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவையானவை. இதில்லாமல் யாரும் வாழமுடியமா. இதையெல்லாம் யாரும் விரும்புவது தவறா. இப்போது ஒரு சிமென்ற் பைக்கற்றின் விலை இப்படி இருந்தாலும் அதைப்பார்க்கக்கிடைக்கிறதே என்று சசிக்குமார் சொல்கிறான். அவன் பாதி கட்டப்பட்ட மலசல கூடத்தை முழததாகக்கட்டி முடிப்பதற்காக இந்த விலைக்கும் வேற வழியில்லாமல் அதை வாங்கிப் போகிறான். அந்தப் பையை வாங்கி மண்ணெண்ணெய் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போவதை பலரும் வேடிக்கை போலவும் ஆச்சரியம் போலவும் பார்த்துக் கொண்டு போகிறார்கள்;.

இதைப்பார்த்துவிட்டு அவன் சொல்கிறான்,

" இப்போது இந்தப்பையை இப்படிப்பார்க்கிறவர்கள், இன்னும் ஒரு ஆறெழு மாதத்தால் இதை கண்காட்சியில்தான் பார்ப்பார்கள். பிறகு ஒரு வருசத்தால் சிமென்ற்றை மியூசியத்தில்தான் பார்க்கவேண்டும் என்று.சிமென்றை மட்டுமா இப்படிப்பார்க்க வேண்டும். கடவுளே எங்களுடைய ஒவ்வொரு ஊர்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொரு விசயத்தையும் அப்படி;தான் பார்க்க வேணும்.



போரென்று வந்துவிட்டால் வழமை மறுப்பும் எப்படியொ வந்து விடுகிறது. அதாவது வழமையில்லாத நிலைதான் போரில் உடனடியாக வருகிறது. அப்போது தொலைபேசிகள் இயங்காது. போக்குவரத்துக்கு எரிபொருள் இருக்காது. மின்சாரம் இருக்காது. பாதைகள், பயணங்கள் எதுவும் ஒழுங்காக நடக்காது. பொருட்கள் கிடையாது. மருந்துப்பொருட்கள், மருத்துவ வசதிகள் எல்லாம் குறைந்து விடும். தபால் போக்குவரத்துக்கூட ஒழுங்காக இருக்காது. உணவுப் பொருட்களுக்கே பெருந்தட்டுப்பாடும் பற்றாக்குறையும் வந்துவிடுகிறது.



சனங்கள் எப்போதும் எல்லாத்துக்கும் கியூவிலேயே நிற்கிறார்கள். தூங்கும் நேரத்தைவிடவும் உழைக்கும் நேரத்தைவிடவும் அவர்கள் கியூவில் நிற்பதிலேயே பொரும்பகுதி நேரத்தை செலவிடுகிறார்கள். இப்படி கியூவில் நிற்கும்போது பஞ்சம் பெருகாமல் வேறு என்னதான் பெருகும்.

இதற்குள்தான் வாழ்ந்து தீர வேண்டும்.



நெடுங்கேணியிலிருந்து மரக்கறிகளைக்கட்;டிக்கொண்டு கிளிநொச்சிச் சந்தைக்கு வருகிறார்கள் உள்@ர் வியாபாரிகள். அவர்கள் வந்து சேருவதற்குள் மரக்கறியெல்லாம் வாடிவதங்கி விடுகிறது. மரக்கறியை ஏற்றி வருதற்கு என்ன கூலர் வாகனங்களா இருக்கின்றன. இந்த மண்ணெண்ணெய் மோட்டார்ச் சைக்கிளில் மரக்கறியைக்கட்டிக் கொண்டு வரும்போது அதுவெயிலில் வாடுகிறது. போதாக்குறைக்கு மண்ணெண்ணெய்ப்புகையில் வாடுகிறது. அந்தப்புகையடித்தால் காயெல்லாம் பழுத்துவிடும். பழுத்த கத்தரிக்காயை, இல்லையில்லை கத்திரிப்பழத்தை யார்தான் வாங்குவார்கள். அப்படித்தான் வாடிய கோவாவும் வதங்கிய பயிற்றங்காயாகவும் சந்தைகளிருக்கின்றன.இப்படியெல்லாம் வாடிவதங்கி சந்தைக்கு வரும்போது அங்கே குளிர்ச்சியான காய்கறிகளை வாங்குவதற்கு வருகிறவர்கள் எதைத்தான் வாங்க முடியும்.



ஆனால்;; ஒரு வேடிக்கை, எப்படியோ தம்புள்ளவில் இரந்து மரக்கறி வரகிறது. அதை மட்டும் படையினர் விட்டுவிடுகிறார்கள். ஏனென்றால் அது அவர்களுடைய உற்பத்திப் பொருட்களல்லவா. அந்த மரக்கறி லொறிகள் உள்ளே வருவதற்கு படையினர் கெடுபிடிகளையோ தடையையோ ஏற்படுத்த வில்லை. அவர்கள் தங்களுடைய பொருட்களை தமிழர்களுக்கு விற்க விரும்புகிறார்கள. தமிழர்களின் காசை எப்படியோ கறந்து விடுகிறார்கள்.



ஆனால் வவுனியாவிலிருந்து யாரும் வேறு தேவையான பொருட்களைக் கொண்டு வர விடுகிறார்களில்லை. போன கிழமை கிருஸ்ணானந்தன் தன்னுடைய தோட்டத்துக்கு மருந்தடிப்பதற்காக ஒரு மருந்துப் பம்மை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். ஆனால் அந்தப்பம்மை வனன்pக்குக் கொண்டு வர படைத்தரப்பு அனுமதிக்கவில்லை. கிருஸ்ணானந்தன் எவ்வளவோ கெஞ்சிப்பார்தான். அவனுடைய கெஞ்சுதலுக்கு துளி மதிப்பும் ஏற்படவில்லை.



பிறகு அவன் அந்தப்பம்மை திருப்பிக் கொண்டுபொய் வவுனியாவில் தனக்குத் தெரிந்த ஒருவருடைய வீட்டில் வைத்துவிட்டு வந்திருக்கிறான். இனி அந்தப்பம்மை வன்னிக்கு கொண்டு வருவதாக இருந்தால் அவன் அரசாங்க அதிபரூடாக வன்னிப்பிராந்திய சிறிலங்கா படைத்தளபதிக்கு விண்ணப்பித்து அவர் அதற்கு அனுமதித்தால் மட்டுமே அவனுடைய அந்தப்பம் வன்னிக்கு கொண்டு வரக்கூடியதாக இருக்கும். ஆனால்

அவன் இப்படியெல்லாம் அலுவற்பார்த்து பம்மைக் கொண்டு வருதற்கிடையில் ஒரு போகப்பயிர்ச்செய்கை முடிந்து விடும்.



இதைப்பற்றியெல்லாம் யாருக்க என்ன கவலை. பயிரழிந்தாலென்ன, உயிரழிந்தாலென்ன.



2



மடுக்கோவில் திருவிழா இந்தமுறை போருக்குள்ளே நடக்கிறது. மடு இப்போது ஏறக்குறைய அகதி முகாம் மாதிரி ஆகிவிட்டது. மன்னாரிலும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களிலும் இருந்து இடம் பெயர்ந்த சனங்கள் மாதாவின் நிழலில் தஞ்;சமடைந்திருக்கிறார்கள். போன முறை மடுப்பெருநாளுக்கு வந்திருந்த சனங்கள் திரும்பிப்போக முடியாமல் பெரும் அந்தரப்பட்டார்கள். மடுப்பெருநாள் முடிந்தகையோடு சனங்கள் திரும்பிப்போக முடியாமல் முகமாலையில் சண்டை தொடங்கியிருந்தது.



யாழ்ப்பாணத்திலிருந்து மடுவுக்கு வந்த சனங்கள் அங்கேயே அகதிகளாகி விட்;டனர். அவர்கள் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிப் போகப்பட்டபாடு மாதாவுக்குத்தான் தெரியும். அவர்கள் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் மடுவிலேயே தங்கியிருந்தார்கள். பிறகு பெருங்கஸ்ரப்பட்டுத்தான் அவர்கள் வீடுகளுக்குத்திரும்பினார்கள். அதற்கிடையில் அவர்கள் பட்;டபாடெல்லாம் சொல்லிமாளாது.



இந்தமுறை மாதாவிடம் யாழ்ப்பாணச்சனங்கள் வருவதற்கு வழியில்லை. அவர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களையெல்லாம் யாழ்ப்பாணம் பெரியகோவிலிலோ அல்லது பக்கத்தில் இருக்கிற ஏதோ ஒரு தேவாலயத்திலோ மாதாவை நினைத்து நிறைவேற்றிக் கொள்வார்கள். அதைத்தவிர வேற வழிதானென்ன. மன்னாரிலிருந்து மாதாவிடம் வருவதற்கும் பெருங்கஸ்ரமாகத்தானிருக்கும்போலுள்ளது என்று பள்ளிமுனை மரியதாஸ் சொல்கிறார்.



இப்போது மன்னார் மடுப்பக்கமாகத்தான் யுத்த முனை கூரடைந்திருப்பதாகவும் பலரும் சொல்கிறார்கள். அப்படியென்றால் மாதாவின் பெருநாளும் யுத்தத்துக்குள்தான் நடக்கப்போகிறதோ. மாதாவிடம் வருவதற்காக கொழும்பு மற்றும் சிங்கள ஊர்களிலிருந்தும் ஏராளம் பக்தர்கள் ஆவலோடிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் வந்து போவதற்கான ஒழுங்குகள், வழிகள் எல்லாம் சிக்கலடைந்து போயிருக்கிறது. எல்லாம் தேவையில்லாத இந்தப்போரால்தான் உருவாகியிருக்கிறது.



இல்லையென்றால் இப்படியா முன்பு இருந்தது. முந்தி மடுப்பெருநாள் என்றால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை , நீர்கொழும்பு, கண்டி, கொழும்பு என்ற இலங்கைத்தீவு முழதிலிருந்தும் லட்சக்கணக்கான சனங்கள் மடுவுக்கு வருவார்கள். அப்படி வந்தால் கிழமைக்கணக்காக மாதாவின் நிழலில் இருந்து பெருநாள் கொண்டாடி, எல்லாரும் சேரந்;து சமைத்து சேர்ந்து சாப்பிட்டு.அதெல்லாம் ஒரு அற்புதமான வாழ்க்கை. மடுமாதா அத்தனை பேரையும் எந்தப்பேதமும் இல்லாமல் அரவணைத்தாள். அவள் தாயல்லவா. அவளிடம் அடைக்கலம் தேடிவந்தோரை தன் மடியில் வைத்து ஆறுதற் படுத்தியவள் அவளல்லவா.



சிங்களவர் தமிழர் என்ற பேதமெல்லாம் மாதாவிடம் கிடையாது. மாதாவிடம் முஸ்லிம்களும் பெருவாரியாக வருவார்கள். கதிர்காமத்தைப்போல மடுமாதா திருத்தலமும் எல்லோருக்கும் பொதுவானதென்ற நிலையிலேயே இருக்கிறது. எந்தச்சமயத்தைச் சேர்ந்தவர்களும் மாதாவைத்தங்கள் தெய்வமாகவே பார்க்கிறார்கள். அப்படித்தான் அவளை அவர்கள் உணர்கிறார்கள். அதனால் அவளிடம் தங்கள் துக்கங்களைக் கொட்டித்தீர்க்கவும் தங்களின் அன்பைப் பொழியவும் தங்கள் விசுவாசத்தைக்காட்டவும் அவர்கள் ஓடோடி வருகிறார்கள்.



அப்படி அவர்கள் அவளிடம் வந்து அவளுடைய பெருநாளில் கலந்து கொண்டாடி அவளுக்கு ஆராதனை செய்து அவளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபட இப்பொது வழியில்லாமற் போய்விட்டது, இதைத்தான், இந்த நிலைமையைத்தான் நிலாந்தன் தன்னுடைய மடுவுக்குப் போதல் என்ற நீண்ட மெய்யுளில் இப்படிச் சொல்லுகின்றார்.




மடுமாதாவின் பூர்வீகம் மாந்தை. கோட்டைகள் கட்டிய ஒல்லாந்தர் மன்னாரில் கத்தோலிக்கர்கi வேட்டையாடிய நாளில் மாதா மாந்தையிலிருந்து மடுக்காட்டுக்கு தலைமறைவாக வந்மாள். தொடக்கமே தலைவறைவும் இடப்பெயர்வும் என்றானது. அன்றிலிருந்து அகதிகளுக்கும் புகலிடம்தேடிகளுக்கும் மாதா அபயமளிக்கலானாள். அவளமர்ந்த காட்டில் பிறகெவரையும் விசம் தீண்டவில்லை. வேறெய்காவது விசந்தீண்டியாலும் அவளது காலடி மண் மருந்தாயானது.



மூன்றாவது ஈழப்போர் அவளை அநேகமாக அகதிகளின் மூர்த்தம் என்றாக்கியது. குறிப்பாக மடுவையம் அதன் காட்டுப்புறங்களையும் சுறற்pவளை;;த படை நடவடிக்கை அவளைத் தெர்தற்கால யுத்த வியூகமொன்றிற் சிக்கவைத்தது.


பீரங்கிகள் அவளது காலடியில் வெடித்தன. வெடிமருந்து நெடிகிளம்பி அவளது மேனியெங்கும் படிந்தது.வியூகத்துடட் சிக்கினாள் மாதா. புலம்பும் அகதிகளின் நடுவே தனிததிருந்மாள் இரா முழுதும்.



ஒல்ல்hந்தர் காலத்துக்கு பின் அவள் அதிகமும் உத்தரித்த காலமாக ரணகோச காலமும் அதன் பின்வந்த காலமும் அமைந்தன.

ஆனால் அவள் முகம் வாடியதில்லை. விழிகளில் புதிரான பேரமைதியோடு பிறகும் பிறகுமவள் மரித்தோரின் மததியிலிருந்து எழுந்தாள்.எல்;லாக்காயங்களும் எல்லாப்பாடுகளும் அவளது பெருமைகளை நிரூபிப்பதிற்தான் முடிந்தன.



காடுகளின் இதயத்தில் மூன்று நூற்றாணடுகளாய் அவளது பிரசன்னம் யாருக்கும் உறு;தலாய் இருந்தமதில்லை. அவளை அகிதயாக்கித்துரத்pய ஒல்லாந்தருக்கும் அவளைச ' ; சந்தேகித்த ஆங்கிலேயருக்கும் அவளை வியூகத்துள் வீழ்த்திய சிங்களவருக்கும் அவள் உறுத்தலாய் இருந்ததில்லை.











மடு முடிய யாழ்ப்பாணம் திரும்புகிற சனங்கள் இயக்கச்சியில் தங்கிவிடுவார்கள். அங்கே தங்கி, அங்கிருந்து காட்டுவழியால் புல்லாவெளிக்குப்போவார்கள். புல்லாவெளியில் ஏழநாட் திருவிழா. அது அந்தோனியார் கோவில். அந்தக் கோவிலில் தங்கி அந்தப் பெருநாளையும் கொண்டாடி வி;ட்டுத்தான் பிறகு எல்லாரும் யாழ்;ப்பாணம் திரும்புவார்கள்.



அந்;த ஏழநாளும் இயக்கச்சியைப்பார்த்தால் ஏதோ பெரியதொரு பட்டினம்போலத்தான் தெரியம். அடைபட்டுக்கிடக்கிற யாழ்ப்;பாண வாழ்க்கையில் இப்படிக் கோவில் குளம் என்றால்தான் அதைச் சாட்டாக வைச்சுக்கோண்டு வெளியே போக வாய்க்கிறது. இப்படித்தான் கதிர்காமம்; போகிறதும் வற்றாப்பளை, புதூர், புளியம் பொக்கணை,திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முன்னேஸ்வரம் என்று கோயிலைச்சாட்டாக வைத்து உலாப்போவதும் நடந்து வந்திருக்கிறது.

ஆனால் இப்ப இந்த இடத்தில் பாதிக்கு மேல் யாரும் போக முடியாது. புல்லாவெளியில் 1990 ஆம் ஆண்டு ஆனையிறவு யுத்தத்தில் பெரும் சமர்; நடந்தது. அப்போது ஆனையிறவு புலிகளிடம் விழவில்லை. பதிலாக வெற்றிலைக் கேணியில் தரையிறங்கிய சிறிலங்காப்படையினர் புல்லாவெளியூடாக ஆனையிறவுக்கு பெரும் நகர்வை மேற்கொண்டு அதைக்கைப்பற்றினார்கள்.



அதன்பிறகு புல்லாவெளி ஒரு பததாண்டுகள் படையின் பகட்டுப்பாட்டிலேயே இருந்தது. பிறகு சமாதான காலத்pல் திரும்பவும் அது உயிர்ததது. ஆனால் இப்போது மீண்டும் அது தனித்து விட்டது. இப்போது புல்லாவெளி அந்தோனியார் யாருமில்லாத வகையில் தனித்து விட்டார். அங்கே எப்போதும் படையினரின் செல்தான் போகிறது. அதனதால் அங்கே இப்போது யாரும் போகமுடியாது. இப்ப மடுவுக்கு எலலார் வர முடியாத நிலையைப் போலத்தான் எல்லா இடத்துக்கும் எல்லாரும் போகமுடியாத நிலை.



மாதா எல்லாத்தையும் பொறுத்துக் கொள்வாள். அவள் எப்போதும் பாவப்பட்ட மக்களின் பக்கமே இருப்பாள். அவர்களையே அவள் ரட்சிப்பாள். அவர்களுக்காகவே அவளுடைய அருளும் கீர்;தியம் இருக்கும். அவள் எல்லாவற்றையும் அறிவாள். அவள் பல பேரிடர்களைக்கணடவள். தன்னுடைய புதல்வனைச் சிலுவையிலறையப்பட்டதைப்போல அவளுடைய முன்றலில் 1999 ம் ஆண்டு பீரங்கிகளை முழக்கி பத்தொன்பது உயிர்களi பலியிட்;டார்கள். அவள் அப்போது இதயம் நொந்தாள். கலங்கினாள.



பதறிய மனிதருக்காக அவள் பரிதவித்தாள். தன்னிடம் தஞ்சமடைந்திருந்த அகதிகளை காப்பாற்ற முடியாமல் போனதையிட்டு அவள் பெருந்துக்கமடைந்தாள். அவளடைய கண்ணீர் பேராறாய் மடுக்காட்டால் ஓடியது.. இப்போதம் அதேமாதிரி ஒரு தீங்கான காலம் மடுவைச்சுற்றி வளயைமிடுகிறது. ஆனால் மாதா எந்த வியூகத்தினுள்ளும் சிக்காதவள். அவள் முற்றுகைக் கெதிpரான் கலகக்காரி. வீரி. அபயம் கnhடுக்கக்ககொடுக்கத்தன்னை விரிக்கும் பேரிசயம் கொண்டவள். அவளிடம் யாரும் கோழைமையோடு நெருங்க முடியாது. அவள் பாவப்பட்ட மக்களின் ஆறதலாகவும் நிழலாகவும் அவர்களுக்குத் துணையாகவும் அவர்களுக்கு வழியாகவும் இருப்பிடமாகவும் இருக்கிறாள். அதுவே அவளுடைய பலம். அதுவே அவளைச்சனங்கள் நாடிச்ச செல்லுகின்றன. அவள் போக்கிடமற்றோருக்கும் பாமதிக்கப்பட்டோருக்கும் ஆதரவற்றோருக்குமாhக நூற்;றாண்டுகளாக தன்னை நெகிழவிட்டிருக்கிறாள்.



அவளுடைய நெகிழ்ச்pயே அவளை எல்லோரும் நெருங்க வைத்தது. அந்த நெருக்கமே அவளுடைய பலமாகியது. அம்மா, எங்கள் மரியாவே, தாயே, உந்தன மடியினில் தலைவைக்க விரும்புகிறேன்.



வாழ்விலும் இனியது வேறுண்டோ

No comments: