யாழ்ப்பாணத்திலிருந்து நிலைமைகளைச்சமாளிக்க முடியாதென்று வன்ன்pக்கு வந்திருந்த புகலவனின் அம்மா போன கிழமை கிளிநொச்சி மருத்துவ மனையில் பிறசர் கூடீட்டுது என்ற சேரக்;கப்பட்டிருந்தா.
யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வருவதற்கே மனுசி பெரும்பாடுபட்டுத்தான் வந்தது. முந்தி வெளிநாடு போறதுக்க எங்கட ஆக்கள் படும் பாட்டைவிடவும் இப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிக்கிடுவதற்கு பெரும் பாடுபடவேண்டியிருக்கிறது. அவவின் இரண்டு பிள்ளைகள் வெளிநாடுகளில். இரண்டு வன்னியில். அவமட்டும் யாழப்பாணத்தில் மருமகளுடன் இருந்தா. ஆனால் அங்கே தொடர்ந்து இருக்க முடியவில்லை. போனவருசம் ஓகஸ்ற்றில் சண்டை தொடங்கியவுடன் அவவும் மருமகளும் நல்லாகக் கஸ்ரப்பட்டுப்போச்சினம்.
பொருடகளின் விலை, பொருட்கள் கிடையாது, வெளியே போக முடியாது, தொடர்பில்லை என்று ஏகப்பட்ட பிரச்சினைகளுக்குள்ளே சிக்கி படாத பாடெல்லாம் பட்டதற்குப்பிறகு நிலைமை கொஞ்சம் தணிந்து சீர்மாதிரி தெரியத் தொடங்க அவர்ககள் வன்னிக்கு வெளிக்கிட்டார்கள்.
ஆனால் வன்னிக்குப்போகும் திட்டமென்பது சாதாரணமாக இருக்கவில்லை. அதற்காக அவர்கள் பட்ட கஸ்ரத்தைப்பார்த்தால் பேசாமல் நடக்கிறது நடக்கட்டுமென்று யாழ்ப்பாணத்திலேயே இருந்திருக்கலாம்.
முதல்ல ஏன் யாழ்ப்பாணத்தை விட்டுப்போகிறீர்கள் என்று விளக்கம் சொல்ல வேணும். அதுக்கு முதலில், யாழ்ப்பாணத்துக்கு வெளியே போவதற்கான படிவத்துக்காக அலைய வேணும். அப்படி அலைந்து அந்தப்படிவத்தை வாங்கி அந்தப்பிரதேச கிராம சேவகரிடம் உறுதிப்படுத்தி கையெழுத்து வாங்கி பிறகு அந்தப்பிரதேச செயலரிடம் உறுதிப்படுத்த வேணும். அப்படி உறுதிப்படுத்திய படிவத்தை பிறகு இராணுவத்தின் சிவில் சேவைப்பகுதியிடம் கொடுக்க வேணும். அது உண்மையில் சிவில் சேவைப்பகுpயே இல்லை என்கிறார்கள் அங்கே போய்வந்த ஆட்கள்.
அங்கே அந்தப்படிவத்தைக் கொடுத்தால் அவர்கள்,பிறகு விண்ணப்பதாரரின் விவரத்தை அந்தப்பகுதிக்குரிய பொலிஸ் மற்றும் இராணுவப்புலனாய்வுப்பிரிவு விசாரிக்கும்.
இந்தக் கதையெல்லாம் எங்களுக்கு ஏன் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்தமாதிரி அல்லற்பட்டு அவலப்பட்டுத்தான் எங்களுடைய சொந்தங்களும் அயலும் வாழ வேண்டியிருக்கிறது. நீங்களெலல்hம் இப்போது பல நாட்டுக்கும் பொயிருப்பீர்கள். அங்கெல்லாம் இந்தமாதிரி கெடுபிடிகளும் ஆய்க்கினைகளும் இருக்குமென்று நான் நம்ப வில்லை.
இந்த இடத்pல் காந்தி சொன்ன ஒரு வார்த்தைதான நினைவுக்கு வருகிறது.
" அடிமையாக இருப்பதொன்றும் கேவலமானதில்லை. சொந்த நாட்டில் அவர்களுடைய மண்ணில் அடிமையாக இருப்பதுதான் கேவலமானதும் வேதனையானதும் " என்று.
இப்படி இராணுவப்புலனாய்வுப்பிரிவும் பொலி}_ம் விசாரித்த பிறகு திரும்பவும் சிவில் சேவைப்பகுதிக்குப்போக வேணும். இதெல்லாம் இங்கே சொல்லப்டுகிறமாதிரி வலு சுலபமாக நடக்கிற காரியமில்லை. ஒவ்வொரு இடத்திலும் மணித்தியாலக்கணக்காக நின்று தூங்க வெணும். அப்படி நாள்முழக்க நின்ற தூங்கினாலும் அன்றே காரியம் நடந்தாற் பரவாயில்லை. எத்தனைபேர் திட்டிக்கொண்டு ஏமாற்றத்தோடு திரும்பிப்போயிருக்கிறார்கள். ஆனால் அப்படிப்போயததான் என்ன செய்வது. இன்று போய் நாளை வா என்ற மாதிரி மறுநாள் அங்கே வரத்தானே வேணும். வேறு வழியில்லை. வந்து கியூவில் கால் கடுக்க, மனம் கடுக்க நின்று கெஞ்சி, மன்றாடி, சண்டை பிடித்து கஸ்ரப்பட்டு ஒருவாறு பாஸ் எடுத்தாற்தான் பயணம்.
இதற்குள் ஆயிரம் கேள்விகள். " எப்போது போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள், எங்கே போகிறீர்கள், யாரிடம் போகிறீர்கள், எதற்காகப்போகிறீர்கள் என்று ஏகப்பட்ட விசாரிப்புகள்.
இதற்கெல்லாம் பதில் சொல்லி அவர்கள் அதற்குத்திருப்திப்பட்டு அதற்குப்பிறகுதான் கருணைக்கடாட்சமாக பா}_க்கு அனுமதிப்பார்கள். முதலில் பாஸ் கிடைத்தாலும் பிறகு கப்பலுக்குப்பதிவதென்றால் அது இதெல்லாத்தையும் விடப் படு மோசமானது. கப்பலுக்குப்பதியவே தனியாக ஏஜென்ஸி இருக்கிறது. தவிக்கிற சனங்களில் கயிறு விடுமட்டும் விடக்கூடியமாதிரி சனங்களைப் போட்டுச்சிப்பிலியாட்டி விடுகிறார்கள்.
கபப்லுக்குப்பதிவதற்காக சனங்கள் ஊரடங்குசச்ட்டத்தையம் பொருட்;படுத்தாமல் அதிகாலையே வந்து கியூவில் நின்று விடுவார்கள். அப்படி நின்றும் அன்று பதியாமல் திரும்பிப்போக வேணும். அப்படி புகலவனின் அம்மாவும் அண்ணியும் மூன்று நாள் திரும்பிப் போயிருக்கிறார்கள்.
அவர்களால் அதிகாலை நேரத்துக்கு வந்து நிற்க முடியவில்லை. அப்படி வந்தவர்களுக்கே ரிக்கெற் கிடைக்காமற் போகும்போது இவர்களுக்கு மட்டும் எப்படி அவ்வளவு சுலபமாக ரிக்கெற் கிடைக்கப்போகிறது.
மூ ன்று நாள் அலைச்சலுக்குப்பிறகு இனிக்கப்பற் பயணம் சரிப்பட்டு வராது. அதைவிடவம் வேறு வழிதான் பார்க்க வேணும் என்று முடிவெடுத்தார்கள். இந்த மூன்று நாளிலும் பிறசர் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அப்படி வராமல் என்ன செய்யும். இரவிரவாக தங்ககளுடைய விதியையும் கதியையும் எண்ணிஎண்ணி மாமியாரும் மருமகளும் அழுது நொந்தார்கள். இப்போது ஆஅதரவுக்கும் அங்கே பெரிதாக யாரும் இல்லை. அதிலும் தான் பிறந்து வளர்ந்த வாழ்நத மண்ணில் கடைசிவரைக்கும் நிம்மதியாக இருந்து வாழ முடியவில்லையே என்ற துக்கம் ஒரு பகக்ம். சரி அதுதான் போகட்டுமென்றால் இந்தத்துன்பத்துக்குள்ளிருந்து வெளியே போவமென்றாலும் அதற்கும் வழியில்லாமல் இருக்கிறதே என்று அவர்கள் இரவிரவாக அழுது தீர்த்தார்கள்.
அழுதாற்போல் எந்தப்பிரச்சினையும் தீருமா. வேண்டுமானால் மனசுக்?கு கொஞ்சம் பாரம் குறைஞ்சமாதிரி இருக்கும். அதற்குப்பிறகுதான் அவர்கள் விமானத்தில் பயணிப்பதாக முடிவெடுத்தார்கள். விமானத்தில் பயணிப்பதற்கும் பதிவு nசெய்ய வேணும். அதற்கும் கியூதான். வேற வழி கிடையாது. கியூவில் நிற்கத்தான் வேணும். நின்றார்கள்.
அதற்காக இரண்டு நாள் நின்றார்கள். ஒருவாறு ரிக்கெற் கிடைத்தது. ஆனால் பயணிப்பதற்காக இன்னும் ஒரு மாதம் வரையில காத்திருக்க வேணும்.கடவுளே இதென்ன சோதனை. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே என்ற நிலை. இவ்வளவுக்கும் பக்கத்தில் இருக்கும் வன்னிக்குப்போவதற்கு பாலாலிக்குப்போய் பிறகு அங்கிருந்து சாட்டுப்போக்குகளைச் சொல்லி பிறகுதான் வன்னிக்கு வரவேணும்.
அதற்கிடையில் என்ன நடக்குமோ. எந்தப்பகுதியில் சண்டை மூழுமொ. அரசாங்கம் விடாக்கண்டன் கொடாக் கண்டனைப்போல போர் வெறி கொண்டிருக்கும்போது எப்போதும் எதுவும் நடக்கலாம்.
இப்போது விமானப்பயணத்துக்காக காசையும் கட்டியாச்சு. இனின என்ன செய்வது. நாட்களை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அப்படியெ இருந்து இரண்டு கைப்பைகளுகக்குள் கொண்டு வரக்கூடிய அளவு பொருட்களையே தங்கள் வாழiவின் திரட்டிய சொத்தாகவும் தேடிய தேட்டமாகவும் கொண்டு ஏறினார்கள்.
அவர்கள் கொண்டு வந்த அந்தப்பையையும் விட அவர்களையும் விடவும் அவர்களுடைய நெஞ்சம் கனத்தபடியிருந்தது என்று புகலவனின் அம்மா சொல்லி அழுதா. உண்மைதான் அந்த லட்கேஜ்ஜை யார்தான் கணக்கெடுப்பார்கள்.இப்படி வந்த மனுசிக்கு வன்னியில் சந்தோசம் தாங்க முடியேல்ல. இரண்டு கிழமையாக யாழ்ப்பாணத்து நிலைவரத்தைப்பற்றியே வாற போற ஆட்;களுக் கெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தா. சண்டை தொடங்கியபோது சனங்களுக்கிருந்த பெரும் சந்தோசத்தையும் புலிகள் யாழப்பாணத்துக்குள் வந்து விடுவார்கள் என்ற எதில்பார்ப்போடு எல்லாரும் எதிர்பார்த்திருந்ததும் என்று ஏராளம் கதைகள். பிறகு சண்டையினன்ர போக்கு சற்று மாறியவுடன் பொருட்களுக்கு வந்த தட்டுப்பாட்டையும் அதனால் தாங்கள் பட்டபாட்டையும் அவ சொல்லிக் கொண்டேயிருந்தா. தன்ர அறுபது வருச வாழ்க்கையில் அதுபோல ஒரு கொடுமையான காலத்தை காணவில்லை என்று அவ சொல்லும்போது கண்களால் நீர் சொரிந்தது. அப்போது அஅங்கே பசியாலும் பொருட் தட்டுப்பாட்;டாலும் ஏற்பட்ட ஏராளம் கதைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தா.
பயணக்களையும் அலைச்சலுமாக்கும் இரண்டு கிழமையில் பிறசரும் டயபற்றீசம் கூடீட்டுது. கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு அவவைக் கூட்டிக்கொண்டு போனபோது அங்கே மறித்து விட்டார்கள்.
நான் அவவைப்பார்க்கப்போயிருந்தேன். ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு நோயாளியைப்போல அவவைத் தெரியவில்லை. ஆள் படு குஷியாக இருந்தா. அக்கம் பக்கத்திலிருந்த ஆட்;களுடன் சின்னச்சிநேகிதம் கூட முளைச்சிருந்தது. யாழ்ப்பாண நிலவரம் பற்றிய செய்திகள் ஓரளவுக்கு அங்கே பரிமாறப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டேன்.
ஆஸ்பத்திரி மணத்தையே பிடிக்காத மனுஷி இப்படி இருக்குதே என்று ஆச்சரியமாக இருந்தது.
" என்ன இருந்தாலும் வன்னியில் ஒரு சந்தோசம் இருக்குது, எப்பவும் வரலாம் போகலாம். வசதியள் குறைஞ்சிருந்தாலுமு; மனசில ஆறதலிருக்கிறது " என்றா.
" அதில்ல ஆஸ்பத்திரியிலேயே வலு சந்தோசமாக இருக்கிறீங்களே" என்றேன்.
" இதென்ன ஆஸ்பத்திரிமாதிரியா இருக்கு. மருந்து மணமோ ஆஸ்பத்திரியில் இருக்கிற அந்த நெடில் மணமோயில்லை. அதைவிட இங்க வலு துப்பரவாக இருக்கு " என்றா அவ.
அவ சொன்னதில் உண்மையுண்டு. கிளிநொச்சி ஆஸ்பத்திரி இப்போது நல்ல துப்புரவாக இருக்கிறது. அதிலும் அந்தப்புதிய கட்டிடம் வன்னியிலேயே ஒரு புதுமைதான். பெரிய காணியில் நல்ல விஸ்தீரணமாக அதைக்கட்டியிருக்கிறார்கள்.
அப்படிக்கட்டப்பட்ட அந்த மருத்துவமனைக்குத்தான் கடந்த வருசம் சிறிலங்கா விமானப்படை குண்டுகளை வீசியது. அப்பொது தெய்வாதீனமாக ஆஸ்பத்திரி முழதாகத் தாக்கப்படவில்லை. சில பகுதிகள் மட்டும் சேதமடைந்திருந்தன. குண்டுகள் பக்கத்திலிருந்த வீட்டில் வீழுந்து அந்த வீட்டிலிருந்த ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஆறுபேர் கொல்லப்பட்டடிருந்தார்கள்.
அவர்கள் தங்களை நோக்கி குண்டு வீசப்படும் என்று சிறிதும் எதிர்பார்க்க வில்லை. பக்கத்தில் மருத்துவமனை இருக்கிறது என்ற படியாலும் போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழு அபபோது கிளிநொசசியில் இருக்கிறது என்ற படியாலும் அவர்கள் அப்படியொரு மோசமான குண்டு வீச்சு அங்கே நடக்குமென்று எதிர்பார்த்திருக்கவயில்லை.
அதனால் அவர்கள் பங்கருக்குள்ளேயும் போகவில்லை. அதனால் அப்படியே அங்கே கொல்லப்பட்டிருந்தார்கள். வீடு தரை மட்டமாகியிருந்தது.
பள்ளிக்கூடத்துக்கே குண்டு போட்ட சிங்களபப்டையினர் ஏன் ஆஸ்பத்திரிக்குள்ளேயே வைத்து தாக்குதல் நடத்pய பல சம்பவங்களிருக்கும்போது அங்கே இப்படியொரு குண்டுத்தாக்குதலை கட்டாயம் எதிர்பார்த்திருக்கவே வேணும். ஆனால் அதற்கு அந்தப் பாழாய்ப்போன போர் நிறுத்த ஒப்பந்தமும் போர் நிறுத்ததக்கண்காணிப்புக்குழுவும் இருந்து கண்ணை மறைத்துப்போட்டுதே என்று அவர்களுடைய சா வீட்டில் யாரோ அழுததுதான் இப்பவும் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சரி அதெல்லாம் பழைய கதை. அதைவிடுவம்.இப்ப புகலவனின் அம்மா சொன்ன ஆஸ்பத்திரியிலே மருந்து மணமே இல்லை என்ற கதைக்கு வருவோம். மருந்து அங்கே இருந்தால் தானே மருந்து மணம் வருவதற்கு.
ஆஸ்பத்திரியில் இருக்கிற நோயாருக்கு தேவையான மருந்து வகைகளுக்கு அங்கே பெருந்தட்டுப்பாடு. மருந்துப் போருட்டகளைள எடுத்து வருவதற்கும் ஆமியிடம் (படைத்தரப்பிடம்) அனுமதி வாங்க வேணும். அதுவும் வரையறுக்கப்பட்ட அளவில்தான் வன்னிக்கு மருந்தை எடுத்து வரலாம் என்ற அறிவுறுத்தல் வேறு.
இந்த அறிவுறு;ததலின் படியா நோய் வரும். அல்லது அனுப்பப்படும் மருந்துகளுக்கு கண்க்காகவா வருத்தம் வரும். இதைப்பற்றியெல்லாம் அவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். போதிய மருந்து இல்லாமல், ஒருவாறு தினமும் வருகிற நோயாளிகளை சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கே இருக்கிற டொக்ரர்மார். உண்மையில் இதுவொரு பெரிய கெட்டித்தனம்தான்.
அதெப்படி நோயாளிக்குரிய மருந்து இல்லாமல் அவரை குணப்படுத்த முடியும் என்ற நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் நோய் வருவதை முன்கூட்டியே தடுப்பது, நோய் வந்தால் அதற்கு முறைப்படி என்ன சேய்வது என்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக இந்தப்pரச்சினையை டொக்ரர்மார் கணிசமாக கட்டுப்பாட்டடுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், முன்னர் ஆண்டொன்றுக்கு முப்பத்தையாயிரம்பேர் வரையில் மலேரியாவவினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது நூறு பேருக்குக்கூட மலேரியா இல்லை. இப்படித்தான் வாந்தி பேதி வந்தபோதும் பெரிய அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடந்தது. இதையெல்லாம் தமிழுழ சுகாதார சேவையும் திலீபன் மருத்துவ மனையம் ஊர் ஊராகப் போய் களத்தில் நின்றே செய்கிறது.
இதனால்தான் இந்த மருத்துவக்குழவை இலக்கு வைதது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்துகிறது. மருத்துவமனைக்கு குண்டு வீசுவதற்கும் ஆஸ்பத்திரிக்கு மருந்துப்பொருட்;களை அனுப்பாது தடுப்பதற்கும் மருத்துவக்குழக்களின் மீது தாக்குதல் நடத்தி அவற்றைச் சிதைப்பதற்கும் தயங்காத அரசாங்கம் இப்போது சிறிலங்காவில் இருக்கிறது.
இந்த அரசாங்கத்துடன் இன்னும் தமிழ்கள் பேசவேண்டும் என்று கேட்கப்படுகிறது. அதைவிடவும் வேடிக்கை இந்த அரசாங்கத்துக்கு யார் தடுத்தாலும் தாங்கள் கட்டாயம் உதவியளித்தே தீருவோம் என்று யப்பான் பெருமையுடன் கூறுவதும்தான்.
அதிலும் இதுபற்றி யாப்பானின் சிறப்புத்தூதுவர் யசூஷி அகாஷி சொன்ன காரணத்தைக் கேட்டக சிரிப்புத்தான் வருகிறது.
அவர் சொன்னார், "சிறிலங்கா அரசாங்கம் என்ன செய்கிற என்பது எங்களுக்கு முக்கியமல்ல. ஆனால் அங்குள்ள மக்கள், சிங்கள் மக்கள் பாதிக்கப்படக்கூடாது. அவர்களுக்காகவே நாங்கள் உதவுகிறோம் " என்று.
அவர் தாங்கள் செய்கிற உதவிகளையெல்லாம் யாருக்கூடாக செய்கிறார்கள் என்பதையும் அந்த உதவிகளெல்லாம் எங்கே போகிறது என்கதெல்லாம் தெரியாமலிருப்பதற்க அகாஷி சின்னப்பிள்ளையுமல்ல. யப்பான் ஒன்றும் அறியாக்குழந்தையுமல்ல.
இதைமாதிரித்தான் சிறிலங்காவுக்கு இப்பொது வேறு பல நாடுகளும் நிதியுதவியைச் செய்து வருகின்றன. அவை சொல்கிற காரணங்ககளும் ஏறக்குறைய அகாஷி சொல்வதைப்போலவே இருதக்கின்றன. ஒரு நண்பர் சொன்னதைப்பொல தமிழரைச் சமாளிப்பதற்கு அறிக்கைகளையும் சிங்களவருக்கு நிதி மற்றும் ஆயத உதவிகளையும் செய்கிறார்கள் என்பதாகவே இருக்கிறது நிலைமை. இல்லையென்றால் கிழக்கின் மறுமலர்ச்சிக்கென்றும் மீள் குடியேற்றத்துக்கென்றும் எதற்காக இவ்வளவு நிதியை அள்ளிக கொடுக்க வேண்டும் சர்வதேச சமூகம்.
கிழக்கில் இருந்து எதற்காக மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் எதற்காக இப்பொது மீள் குடியேற்றம் செய்யப்படுகிறது. அவர்கள் இருந்ததைப்போலவே அங்கே இருந்திருக்கலாமே. ஆனால் அங்கிருந்து புலிகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே அங்கே படை நடவடிக்கi மேற்கொள்ளப்பட்டது. அதனாலேயே சனங்கள் இடம் பெயர்ந்தாhர்கள். இதெல்லாம் போர் நிறுதத உடன்படிக்கை கிழிக்கப்படாமலே நடந்திருக்கிறது. அடிப்படையில் இப்படி நடப்பதற்கு போர் நிறுதத உடன்படிக்கையி; எந்த முகாந்திரமும் இல்லை.
இதெல்லாவற்றையம் சர்வதேச சமூகம் தெரியாததைப்பொல இருப்பதுதான் பாதிக்கப்பட் மக்களுக்கு வியப்பாக இருக்கும் சங்கதிகள். அதிகம் ஏன் கிளிநொசசி மருத்துவமனையைக்கட்டியதே உலக வங்கிதான். ஆனால் அந்த வங்கி கட்டிய அந்த மருத்துவமனையை அது திறக்கப்பட்டு ஓராண்டுக்குள்ளேயே அதை குண்டுபொட்டளிக்க முற்பட்ட இந்த அரசாங்கமும் சர்வ தேச சமூகமும் ஒன்றுதான் போலுள்ளது.
இவற்றோடு இறுதியாக இன்னொரு சிறிய தகவலையும் தரலாம். ஐ.நா.வின் மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் விவகார பிரதிச் செயலர் திரு. ஜோன் ஹோம்ஸ் கடந்த வாரம் இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம்; மட்டக்களப்பு பகுதிகளுக்கெல்லாம்போய் வந்தபிறகு அரசாங்கத்தரப்பையும் சந்தித்திருந்தார். அதுக்குப்பிறகு அவர் கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினார்.
அப்பொது அவர் சொன்னார். இலங்கi இப்பொது மனிதாபிமானப்பணிகளைச் செய்வோருக்கு ஆபத்தான நாடாக இருக்கிறது என்று.
இதை அவர் சிறிலங்காவில் அண்மைக்காலங்களில் கொல்லப்பட்ட தொண்டு நிறுவனபப்ணியாளர்களின் கொலைகளை ஆதாரமாக வைத்தே சொல்லியிருந்தார்.
ஆனால் அவருடைய இந்த அறிவிப்பைக்கேட்ட ரசாங்கத்தின் விசுவாமிக்க அமைச்சர்கள் ஜோன் ஹோம்ஸ்ஸை திட்டத் தொடங்கி விட்டார்கள்.
இதைப்பொலத்தான் முன்பும் ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான செயலரான அலன் றொக் உண்மை நிமையை சொன்னபோதும் இந்தச்சிங்கள அமைச்சர்கள் கெம்பிப் பாய்ந்தார்கள்.
ஆனால் ஐ.நா.தொடர்ந்தும் சிறிலங்காவைக் குற்றம் சாட்டடியே வருகிறது. அதேவேளை சமாதான விரும்பிகளாக தம்மைக்காட்டிக் கொள்ளும் தரப்பினர் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும ஆட்டிவிடுகிறர்கள். அல்லது புனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்ற மாதிரியெ இருக்கிறார்கள். அதுவுமல்லது டபிள் ஏஜென்ற் போலவும் தெரிகிறர்கள்.
யாரைத்தான் நம்புவதோ எதைத்தான் எடுப்பதோ.
No comments:
Post a Comment