Monday, August 6, 2007

வெளிச்சக்திகள் விரும்பும் மங்கள - ரணில் கூட்டு

கொழும்பில் இப்போது விசித்திரமான சம்பவங்கள் நடக்கின்றன. இந்த விசித்திரமான சம்பவங்கள் உருவாக்குகின்ற நிலைமையும் சற்று வேடிக்கையானவைதான். ஆனால் இந்தச்சம்பவங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள், அசைவுகள் எல்லாம் இலங்கையின் இனப்பிரச்pசனையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்தே தீருகின்றன. அதனால் இவற்றை யாரும் புறக்கணிக்கவோ பொருட்படுத்தாமல் விடவோ முடியாது.



கடந்த வாரம் ரணிலும் மங்கள் சமரவீரவும் இணைந்து கொழும்பில் அரசாங்கத்துக்கெதிராக பெரும் கண்டனப்பேரணியை நடத்தியிருந்தனர். அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கெதிராக கொழும்பில் ஒன்றரை லட்சம் வரையான மக்களை திரண்டெழ வைத்தனர். இNது நாள் அரசாங்கம் ஏற்பாடு செய்த போட்டி ஊர்வலங்களில் இந்தளவுக்கு சனம் திரளவில்லை. அதிலம் கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கானவர்களே திரண்டிருந்தனர்.



கிழக்கின் உதயம் என்று ஒரு வெற்றிவிழாவை அரசாங்கம் மிகப்பிரமாண்டமாகக் கொண்டாடி, சரியாக ஒரு வாரத்துக்குள் நடந்த இந்த நிகழ்வுகள் அரசாங்கத்துக்கு பெரும் ஏமாற்றத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த இரண்டுவாரத்தில் இரண்டு நாட்கள் மகிந்த ராஜபக்ஸ தூக்கமில்லாமலிருந்தார் என்று கொழும்பில் பேசுகிறார்கள். கிழக்கின் உதயத்தை அவர் கொண்டாடியNபுhதும் ரணில் - மங்கள கூட்டணியின் பேரணியின்அன்றும் அஅவர் தூக்கமில்லாதிருந்தாராம்.



முதலாவது தூக்கமில்லாத நாள் அவருக்கு கிடைத்த அரசியல் ஆதாயத்தின் வழியானது. அடுத்தநாள் அவருடைய எதிர்காலத்துக்கான அச்சுறுத்தலான நிலையிலானது. முதல் மகிழ்ச்சியை அடுத்துவந்த துக்கம் தட்டிப்பறித்துக் கொண்டுபோய்விட்டது. அவரால்தான் இதையெல்லாம் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். அவர் ஒரு அடி முன்னகர இரண்டு அடியை பின்னுக்கு இழுக்கும் நிலைமைகளே ஆட்சிக்கு வந்த நாட்தொட்டு தொடருகின்றன. அவரும் இந்த நெருக்கடியையெல்லாம் கடப்பதற்காக எவ்வளவோ கார்யங்களையெல்லாம் செய்து கொண்டுதானிருக்கிறார். ஆனால் சற்று ஆறுதலாக இருப்பதற்கு சூழல் பொருத்தமாக அமையவில்லை.



அவர் ஆட்சியைப்பொறுப்பெடுத்த நாள் முகூர்த்தம் சரியில்லையா என்று கருதும் அளவுக்கே அவருக்கு தொடரும் நெருக்கடிகள் இருக்கின்றன. அவர் எதிரணியைப் பலவீனப்படுத்த முயன்றார். எதிரணிகளைப்பலவீனப்படுத்துவதன் மூலம் தனக்கான வெளியை பலமாக வைத்திருக்க முடியுமென்றும் கருதினார். அதன்படி இந்த உபாயத்தை அவர் வெற்றிகரமாக கையாளும்போது அவருடைய எதிர்பார்ப்புக்கு மாறாகவே நிலைமைகள் அமைந்து விடுகின்றன.



அப்படி நிலைமைகள் அமைந்து விடுகின்றன என்று சொல்வதைவிடவும் அவரது அணுகுமுறைகள் அவருக்கு எதிராகவே இயங்கிவிடுகின்றன. அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவராலேயே எதிரணி எப்படியோ பலம் பெற்று விடுகிறது. அவரே ஒரு வகையில் எதிரிகளைப்பலப்படுத்துகிறார் என்று ஒரு நண்பர் சொன்னது சரியாகவேயிருக்கிறது.
ரணில் - மங்கள கூட்டணிக்கு கிடைத்த ஆதரவு என்பது உள்@ர ஜே.வி.பி க்குக்கூட மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் கொழும்பில் பெசுகிறார்கள். ஜே.வி.பி உட்பட அரசாங்கத்தின் ஆதரவுக்கட்சிகளே கிழக்கின் உதயம் வெற்றி நிகழ்வைப் புறக்கணித்திருந்தன. அதேபோல ரணில் - மங்கள ஆதரவுப் பேரணிக் கெதிராக அரசாங்கம் நடத்திய பேரணிகளையும் கூட்டங்களையும் இந்த ஆதரவுக்கட்சிகள் புறக்கணித்திருந்தன.



மகிந்தவைப் பொறுத்தவரையில் இதெல்லாம் நல்ல சகுனத்துக்குரியதல்ல என்று அவருடைய நெருங்கிய சகாக்களே அவரிடம் சொல்கிறார்கள். ரணில்-மங்கள கூட்டுக்கு கிடைத்;த ஆதரவை வெளிச்சக்திகள் அதிகமாக விரும்பியிருக்கின்றன. அதிலும் மேற்குலகம் இதைக்கூடுதலாக விரும்பியிருக்கிறது.



எதையும் பொருட்படுத்தாத, யாரையும் எடுத்தெறியும் ஒரு வகையான திமிர்த்தனத்தோடும் பேதமைத்தனத்தோடும் நடந்துகொள்ளும் மகிந்தவுக்கு இந்தமாதிரியான ஒரு நெருக்கடிநிலை கடட்டாயம் வேண்டுமென அவர்கள் எதிர்hர்க்கிறார்கள். அப்படி வந்தால்தான் அவர் தணிந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களைப்பொறுத்த வரையிலும் இப்போது மகிந்த நெருக்கடிக்குள்ளாவதையே அவர்கள் விரும்புகிறார்கள.



அப்படி அவர் நெருக்கடிக்குள்ளாகினால்தான் அவரை இலகுவில் தோற்கடிக்கமுடியும். இல்லையென்றால் அவர் தொடர்ந்தும் போர் முனைப்பிலேயே ஈடுபடுவார். அpலும் இந்தப் போர் முனைப்பை அவர் பலமான நிலையிலிருந்து கொண்டு செய்தால் அதை எதிர்கொள்வதற்கு அதிகமான விலையைக் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படும். ஆகவே மகிந்தவின் ஆட்சி பலவீனமாகியிருக்கும்போது அவரை வெலவது சுலபமாக இருக்கம். அத்துடன் அதற்கான விலையும் குறைவாகவே அமையும்.



இதன்படி பொதுவாக பல்வேறு தரப்பினரும் இப்போது மகிந்த பலவீனமாக இருப்பதையே விரும்புகின்றனர். இதன் பொருள் என்னவென்றால் மகிந்தவைத் தோhற்கடிப்படுவதையே பலரும் விரும்புகின்றனர். அவரைத் தோற்கடிக்கவே எல்லோரும் விரும்புகின்றனர். இநத விருப்பம் மலைகக் கடசிகள் முதல், முஸ்லிம் கட்சிகள்வரையிலும் இருக்கிறது. அரசாங்கத்தின் போர் பற்றியும் அது கிழக்கில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் பல முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம் கொங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்படப்பலரும் எதிர்ப்பையம் கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.



இதேபோலவே மலையகக்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களுடன்தான் அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றன. பொதுவாக எல்லோரும் அரசாங்கத்துக்கு எதிரான மனோபாவத்துடன்தானிருக்கிறார்கள். எப்போது ஒரு மாற்று நிலை ஏற்படும் என எதிர்பார்த்திருக்கிறார்கள். இதேவேளை, அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களை தொழிற்சங்கங்களும் பொது அமைப்புகளும் நடத்தத்தொடங்கிவிட்டன. மகிந்தவின் ஆட்சித் தொடக்கத்தில் மலையகத்தில் இதேமாதிரி தொழிற்சங்கப்போராட்டங்கள் நடந்தன. மிக நீண்டதாக தொடர்ந்த போராட்டத்தை மிகக் கஸ்ரப்பட்டு ஒருவாறு அவர் அப்போது தீர்த்துவதை;தார்.



ஆனாலும் அப்போதைய தீர்வு ஒரு தற்காலிகத்தீர்வாகவே இருந்தது. அதாவது அப்போது பெரும் நெருக்கடிக்குள்ளாகிக்கொண்டிருந்த அந்த வேலை நிறு;தப்போராட்டத்தை அவர் தற்காலிகமாக ஒத்திவைத்தார். அவர் ஆட்சிக்கு வந்த புதிதாக இருந்த படியால் அந்த ஒத்திவைப்புக்கும் அந்தச் சமரசத்துக்கும் அப்போது சாத்தியமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமைகள் அப்படியல்ல. இப்போது நாட்டின் பல தரப்பினரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்து வருகின்றனர்.



விலைவாசி உயர்வு பெரும் பிரச்சினையாகிக் கோண்டுவருகிறது. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ ஆட்சிப் பொறப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்துக்குள் பலதடவைசகள் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது இந்த விலையேற்றம் இரண்டு மடங்குக்கும் அதிகமாகிவிட்டது.
மகிந்த ஆட்சிக்கு வந்தபோது ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 28 ரூபாயாக இருந்தது. இப்போது அது 63 ரூபாயாகி விட்டது. அப்போது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 77 ரூபாயாக இருந்தது. இப்போது அது 107 ருபாயாகி விட்டது. அப்போது 63 ரூபாயாக இருந்த டீசலின் விலை இப்போது 94 ரூபாயாகியுள்ளது.



இந்த விலையேற்றம் நேடியாக விவசாயிகளையும் கடற்றொழிலாளர்களையும் பாதித்துள்ளது. அத்துடன் போக்குவரத்து மற்றும் உற்பத்திகளிலும் பாரியளவிலான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள பொதுமக்கள் மெல்ல மெல்ல தமது போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்தவாரத்தில் தபால் தந்தி ஊழியர்கள் அரசாங்கத்தின் ஊழல்களுக் கெதிராக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை செய்துள்ளனர். இதேவேளை தென்பகுதி மீனவர்கள் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து பெரும் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.



இந்த அடையாளப்போராட்டங்களுக்கு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் இந்தப்போராட்டங்களை மேலும் வலுவாகத் தொடரப்போவதாக இந்தத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தப்போராட்டங்களும் இந்த அறிவிப்புகளும் இப்போதைய நிலையில் சாதாரணமானவையாக எடுத்துக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனெனில் அரசாங்கத்துக்கெதிரான தரப்புகள் பலம் பெற்று வரும் நிலையில் அவை மக்களிடமிருக்கும் எதிர்ப்புணர்வை தமக்குச் சாதகமாகப் பணன்படுத்திக் கொள்ளும்.



மக்களிடமிருக்கும் அதிருப்தியையும் எதிர்ப்புணர்வையும் பயன்படுத்தி; அவை அரசாங்கத்தை கவிழ்க்கவும் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவும் முயற்சிக்கும். ஏற்கனவே தன்னையறியாமலே எதிர்த்தரப்பை பலப்படுத்தும் காரியங்களில் ஈடுபட்டு வரும் மகிந்த ராஜபக்ஸ இந்தப்பிரச்சினைகளிலும் அத்தகைய விளைவுகளையே தருவார் எனறெ படுகிறது.



அதாவது அவருடைய அணுகுமுறையிலும் சிந்தனை அமைப்பிலும் இந்தக்குறைபாடு இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இந்தக்குறைபாட்டைத்தான் விடுதலைப்புலிகள் மற்றும் சர்வதேச நாடுகள் தொடர்பான அணுகுமுறையிலும் இனப்பிpரச்சினையிலும் மகிந்த ராஜபக்ஸ விடுகின்றார்.புலிகளை அவர் பலவீனப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டே இன்னொரு விதத்தில் புலிகளின் பலத்தை அவர் திரளச் செய்கிறார். கிழக்கிலிருந்து வெளியேறிய புலிகள் வடக்கில் பெரும் பலமாகத் திரள்கின்றார்கள் என்பதை அரசாங்கத்தரப்பே சொல்கிறது. புலிகளின் இந்தத்திரட்சி அடுத்த கட்டத்தில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கும் மகிந்தவுpன் விருபத்துக்கும் மாறான விளைவுகளையே உருவாக்கப்போகின்றன.



சர்வதேச சமூகத்தையும் அவர் இப்படியான அணுகுமுறையினால் எதிர் நிலைக்குக் கொண்டுபொயுள்ளார். இப்போது சிறிலங்காவுக்கு உதவியளித்து வரும் நாடுகள் கூட அதன் உள்வட்த்துக்கு வெளியிலேயே நிற்கின்றன. இதில் நீண்டகால நட்புறவு நாடுகள் கூட பட்டு;ம்பாடாமலே சிறிலங்காவுடன் உறவை வைத்திருக்கின்றன. இந்த நாடுகளின் இந்த பட்டும் படாத தன்மைக்கு இவை முன்வைக்கும் மனித உரிமைகள் விவகாரம் நல்ல ஆதாரம். அரசாங்கத்;தி;ன் மீதான விருப்பக்குறைவு ஏற்படும்போதே சர்வதேச நாடுகள் மனித உரிமைகள் விவகாரத்தை கையில் எடுப்பதும் அதை அதிகம் தூக்கிப்பிடிப்பதும் நடக்கிறது.



இது அரசாங்கத்துக்கு மட்டுமல்ல தமக்கு விரும்பாத எந்தத்தரப்பிலும் இந்த மனித உரிமைகள் விவகாரத்தை இவை முன்னிலைப்படுத்துவதையம் இங்கே நாம் கவனிக்கலாம்.இப்படி உள்ளுக்கும் வெளியிலுமாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மகிந்த ராஜபக்ஸவுக்கம் நெருக்கடிகள் அதிகரித்துச் செல்கின்றன. இப்போதுள்ள நிலையில் முன்னேற்றகரமான நிலைமையைவிடவும் அதற்கெதிரான சூழலே திரண்டு வருகிறது. அரசாங்கத்துக்குள்ளேயே அதிருப்தியான தரப்பினரின் எண்ணிக்கை கூடிவருவதும் இதற்கு நல்ல உதாரணம்.



கொழும்பில் இன்னும் சில நிகழ்ச்சிகள் நடக்கவேயுள்ளன. அதுவும் நடந்தால் சொல்லவே தேவையில்லை. அதாவது புலிகள் தெரிவித்திருப்பதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளின் மீதான தாக்குதல் நடந்தால் இந்த நிலைமைகள் இன்னும் வேகமெடுக்கும். அதாவது பெற்றோலில் பற்றிய நெருப்பாக.

No comments: