ஒரு திடீர்த்திருப்பமாக இந்தியாவின் முன்னாள் சிறப்புத்தூதுவரும் இலங்கை விவகாரங்களில் ஒரு கால கட்டத்தில் முக்கிய நபராகவுமிருந்த பார்த்தசாரதி மீண்டும் கொழும்புக்கு வந்துபோயுள்ளார்.இவருடைய வருகை தொடர்பாக இலங்கையில் இப்போது முக்கியமாக இரண்டு வகையில் பேசப்படுகிறது. பார்த்தசாரதியின் வருகையை சிங்களத்தரப்பு சற்று எரிச்சலோடும் உள்@ர அச்சத்தோடும் பார்க்கிறது.
தமிழர் தரப்பின் ஊடகங்கள் பார்த்தசாரதியின் வருகையை வேறு விதமாகப்பார்க்கின்றன. அவை மீண்டும இந்தியா முந்திய அணுகுமுறையை கடைப்பிடிக்கப்பார்க்கிறதோ என்று சிந்திக்கின்றன. பொதுவாக இந்தமாதிரி ராஜதந்திர நகர்வுகளில் இந்தமாதிரியான கையாள்கை அல்லது அணுகுமுறை முதலில் அழுத்தமான சில சேதிகளைச் சொல்லும். அதில் முக்கியமானது மூத்த ராஜதந்திரியும் ஏற்கனவே இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரங்களில் பரிச்சயமுள்ளவருமான பார்த்தசாரதியை மீண்டும் இந்தியா களத்தில் இறக்கியிருப்பது ஒரு தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறது.
இந்தியா இப்போது மீண்டும் இலங்கை விவகாரத்தில் குறிப்பாக இனப்பிரச்சினை விவகாரத்தில் சற்று நெருங்கிவந்துள்ளதா அல்லது நெருங்க முயற்சிக்கிறதா என்று சிந்திக்க வைக்கிறது. அப்படி அது மீண்டும் நெருங்குவதற்கான ஒரு குறியீடாகத்தான் இப்போது பார்த்தசாரதியை களத்தில் இறக்கியுள்ளது என்று சொல்கிறார்கள் சிலர். பார்த்தசாரதி எண்பதுகளில் இலங்கை விவகாரங்களில் முக்கியமான பொறுப்பிலிருந்து செயற்பட்டவர். அப்போது ஒரு நெருங்கிய ஆளைப்போல பார்த்;தசாரதியின் பெயர் அடிபட்டது. புழக்கமாகியுமிரந்தது.
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக பார்த்தசாரதிக்கு மிக ஆழமான புரிதலுண்டு. ஆனால் அவரால் அப்போது முழு அளவில் செயற்பட முடியவில்லை என்று சிலர் சொல்கிறாhர்கள். அவர் தீர்மானகரமாகச் செயற்படுவதற்குரிய வெளியை அப்போது இலங்கைக்கான இந்தியத்தூதுவராக இருந்த திரு.ஜே.என். டிக்ஸிற் விட்டுக்கொடு;க்கவில்லை என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி பார்த்தசாரதி ஓரளவுக்கு தமிழர்களின் பாதிப்பையும் பிரச்சினையையும் நியாயபூர்வமாக அறிந்து கொண்டவர் என்ற அபிப்பிராயம் பொதுவாக எல்லோரிடமும் உண்டு. அதனால்தான் அவர் இப்போது கொழும்புக்கு வந்தபோது சிங்களத்தரப்பு கொதிக்கிறது. பார்த்த்சாரதியின் இந்தப்பயணம் குறித்து தமிழில் விவாதிப்பதைவிடவும் சிங்களத்தரப்பில் விவாதிக்கப்படுவதே அதிகமாகியுள்ளதற்கும் அவருடைய இந்தப்புரிதலே காரணமாகும்.
பார்த்தசாரதி இலங்கையின் இனப்பிரச்சினையின் போக்கையும் அதன் தன்மைகளையும் சிங்களத்தரப்பின் மனோபாவத்தையுமம் நன்றாக அறிந்தவர். அதுமட்டுமல்ல தமமிழ்மக்கள் எப்படியெல்லாம் தங்களுடைய உரிமைகளுக்காக பலவகையிலும் போராடினார்கள் என்றும் தெரிந்தவர். யாருடைய பக்கத்தில் அதிகம் நியாயமுண்டு என்றும் நன்றாகத் தெரிந்தவர். என்ன காரணங்களால் இந்தப்பிரச்சினை இன்னம் தீராமலிருக்கிறது என்பதையும் விளங்கிக் கொண்டவர். அத்துடன் சிங்களத்தரப்பின் கடும்போக்கையும் அதன் மாறா நிலைப்பாடுகளையும் தெரிந்தவர். இ;தியாவுக்கும் தமிழர் தரப்புக்கும் எப்படி இடைவெளி உருவாகியது அந்த இடைவெளி உருவாகக் காரணம் என்ற விசயங்களையும் அவர் முழதாகப்புரிந்து கொண்டவர்.
பார்த்தசாரதியை விட்டு இப்போது இந்த விவகாரத்ததில் ஒரு புதியவர் வந்தால் அதை தாம் சுலபமாக கையாளலாம் என்று சிங்களத்தரப்பு சிந்திக்கிறது. அதாவது தமிழர் தரப்பு இந்தியாவுக்கும் இடைவெளி வந்தபின்னர் புதியதாக இந்த விசயத்தைக் கையாள யாரும் வந்தால் அவர்கள் அந்த இடைவெளியை அடிப்டையாக வைத்தே பிரச்சினையை கையாளுவார்கள் என்றும அப்படி அவர்கள் பிரச்சனையை கையாளவரும்போது அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம்; என்றும் சிங்களத்தரப்பு எண்ணுகிறது.அதனால் புதியவர்களின் பிரசன்னத்தையே அது கூடுதலாக விரும்புகிறது. இதிலும் ராஜீவின் கொலைக்குப்பிறகான இந்திய மனோபாவத்தைக் கொண்டவர்களே புதியவர்களாக இருப்பதால் அவர்களையே சிங்களத்தரப்பினர் விருமபுகின்றனர்.
அவ்வாறுவரும் புதிய ராஜதந்திரிகளை தமக்குச்சாதகமாகப் பயன்படுத்தலாம்; என்பதே சிங்களத்தரப்பின் திட்டம். அப்படியே இதுவரையிலும் அது பயன்படுத்தியும் வந்துள்ளது. இந்த நிலைமையில் இப்போது திடீரென இந்தியா மீண்டும் பார்த்தசாரதியை களமிறக்கியிருப்பது நிச்சயமாக சிங்களத்தரப்புக்கு அச்சத்தையும் சினத்தையும் ஊட்டுவதாகவே இரக்கும்.
இந்தியா ஏன் பார்த்தசாரதியை களமிறக்கியிருக்கிறது என்பது தொடர்பாகவும் நாம் இங்கே சிந்திக்க வேண்டும். மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திக்கவேயில்லை என்ற அபிப்பிராயம் பொதுவாக இப்போது பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. அரசியல் தீ;வுக்குப்பதிலாக அரசாங்கம் இராணுவத்தீர்விலேயே முனைப்புக்காட்டுவது இனப்பிரச்சினை விவகாரத்தை மேலும் சிக்கலாக்குமென்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இராணுவத்தீர்வை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் செல்வதை இந்தியா விரும்பவில்லை. இராணுவத் தீர்வை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் செல்லும்போது அது ஒரு கட்டத்தில் இலங்கைத்தீவை முழு அளவிலான இரத்தக்களரிக்கே கொண்டுபொகும் என்றும் இந்தியா நம்புகிறது. அப்படி இரத்தக்களரிக்கு இலங்கைத்தீவு உள்ளாகும்போது அது இந்தியாவுக்கே பெரும் நெருக்கடியாகவும் இந்தப்பிரதிபலிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையை இந்தியாவுக்கு உண்டு பண்ணுவதாகவும் இருக்கும்.எனவே இப்போதே அத்தகைய நெருக்கடி நிலையொன்று ஏற்படாமலிருக்க இந்தியா முனைகிறது. ஒரு வகையில் இது வருமுன் காப்பது என்றவகையிலான முயற்சிதான்.
அத்துடன் மகிந்தவின் அரசாங்கம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முற்றாக மதிபபிறக்கும் வகையில் வடக்குக்கிழக்குப்பிரிப்பையும் மேற்கொண்டது. இது இந்தியாவை வெகு தொலைவுக்குத் தள்ளும் முயற்சியாகவும் இந்தியாவினால் உணரப்பட்டுள்ளது. அதேவெளை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவைக் கடந்து சீனாவுடன் கதொடர்புகளைப்பலப்படுத்தி வருகிறது. இதுவும்இந்தியாவுக்கு திருப்தியற்ற நிலையே. இந்தக்காலப்பகுதியில் இந்திய அதிகாரிகளும் அமைச்சர்களும் இலங்கைக்கு அதிகப்படியான அறிவுறுத்தல்களையும் சமிக்ஞைகளையும் விடுத்துமிருந்தனர். ஆனால் அவறறுக்கெல்லாம் பல சந்தர்ப்பத்திலும் சிறிலங்காவின் அமைச்சரிகளும் அதிகாரிகளும் பதிலடியாகவும் பொறுபபற்ற விதத்திலும் அலட்சியமாகவுமே பதிலளித்தனர். இதில் இந்தியா செய்யமுன்வந்த ஆயத ஊதவியை சிறிலங்கா புற்கணித்தது முக்கியமானது.
இந்தியா ஆயத உதவி செய்யும் போது அதை சம்மதித்து வாங்கினால் பின்னர் இந்தியாவின்; நிபந்தனைகள், அறிவுறுத்தல்களுக்கமைய செயற்பட வேண்டுமென்சிறிலங்கா கருதியது. அத்துடன் அப்படி இந்தியாவின் கோரிக்கைக்கமைய ஆயதங்களை வாங்குவதைவிடவும் அதற்கப்பால் சீனாவுடன் தொடர்பை வைத்pதருப்பதன் மூலம் இந்தியாவை ஒரு வகையான நெருக்கடிக்குள்ளாக்கி வைத்திருக்கலாம் என்றும் சிறிலங்கா நம்பியது. இந்தியாவை இத்தகைய தந்திரோபாய ரீதியாகத்தான் கையாளமுடியுமென சிறிலங்கா கருதுகிறது. ஏனெனில் மற்றும்படி இந்தியாவைக் கையாளக்கூடிய தகுதியோ பலமோ சிறிலங்காவிடம் இல்லை.
சிறிலங்காவின் இந்தச்சறுக்கல்களையும் பொறிவைப்புகளையும் இப்போது இந்தியா மெல்ல மெல்லப் புரிந்துள்ளதாகவே படுகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் இருபதாண்டு நிறைவையொட்டி இந்தியாவில் பல்வேறு ஆய்வரங்குகளும் மறுமதிப்பீட்டரங்குகளும் கடந்தமாதம் இந்தியாவில் நடந்துள்ளன. இந்த அரங்குகளில் இந்திய இலங்கை உடன்படிக்கை பற்றிய பல்வேறு பார்வைகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி இப்போது ஒரு புதிய அணுகுமுறைக்கு இந்தியா போகவேண்டுமென்ற செய்தி பரிமாறப்பட்டிருப்பதாக இவற்றை அவதானிப்போர் சொலிகிறார்கள்.
இந்திய உடன்படிக்கையின் நிமித்தமாக இலங்கையில் உயிர் நீத்த இந்தியப்படையினருக்கு சிறிலங்கா அரசாங்கம் மதிப்பளிக்கத்தவறிவிட்டதென்று இந்தியப்படையின் முன்னாள் தளபதி கல்கட் தெரிவிததிருப்பதும் இங்கே இதனுடன் இணைத்துப்பார்க்கப்பட வேண்டியதே. அதேபோல இந்தியாவின் முன்னாள் ……….. ஹரிகரன் தெரிவித்துவரும் கருத்துகளம் தவிர்க்க முடியாதவை.
இலங்கை அரசாங்கமோ விடுதலைப்புலிகளொ மேலாதிக்கம் பெறுவதை இந்தியா விரும்பவில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். எந்தத்தரப்பு வெற்றி பெற்றாலும் அந்தத்தரப்பை பின்னர் இலகுவில் கையாள முடியாத ஒரு நிலை ஏற்படும் என்ற இந்தியா எpர்பார்;க்கிறது. ஆனால், இந்தியாவுடன் தாம் இடைவெளியை வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றதொனியில் ஏற்கனவே விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் இந்தியா இந்தப்பிரச்சினையில் ஒரு நியாயமான பங்களிப்பை நியாயமான முறையில் ஆற்றவேண்டுமெனவும் தமிழர் தரப்பு விரும்புகிறது. கடந்த கால அனுபவங்களும் தவறுகளும் சரியாக இனங்காணப்பட்ட ஒரு சூழ்நிலையில் இந்த ஆதரவு அமையுமெனில் அது ஒரு மாற்றத்iயும் பிராந்திய அமைதியையும் கொண்டுவரலாம். ஆனால் அதற்கு இந்தியாதான் துணிந்து சில காரியங்களை ஆற்ற வேண்டும்.
இதற்கு இந்தியாவின் மனப்பாங்கிலும் சிந்தனையிலும் முற்றிலுமான மாற்றங்களும் புதிய அணுகுமுறையும் தேவை. அது கபாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்கு அமைவாக வருரும்போது இந்த அமைதிச்சூழல் தானாக ஏற்படும். இப்போது மீண்டும் பார்த்தசாரதியும் ஜெனரல் கல்கட்டும் இன்னும் பல மூத்த முன்னாள் பிரமுகர்களும் மீண்டும் இலங்கை விவகாரத்தில் ஈடுபடத் தொடங்கியிருப்பது இதையெல்லாம் பற்;றி நாமும் சிந்திக்க வைக்கிறது.
எதுவோ இந்;தியாவை மையப்படுத்தியெ சர்வதேச சமூகமும் இலங்கை விரவகாரங்களில் செயற்பட்டுவருகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் அல்லது அதற்கான முயற்சிகளில் நோர்வே ஈடுபட்டடபோது கூட அது தவறாமல் இந்தியாவுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டபடியே இருந்தது. கொழும்புக்கு வரும் பல சந்திர்ப்பங்களிலும் எரிக் சொல்கெய்ம் தவறாமல் இந்தியாவுக்கும் செல்வார். பேச்சுவார்த்தையின் போக்குகளை அவர் அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டார்.
இனிவரும் போரிலும் மறைமுகமாகவோ அல்லது அதற்கும் அப்பாலோ இப்பாலோ இந்தியாவின் நிழலும் நிஜமும் இருக்கததான் போகிறது போலுள்ளது. இப்போது ஏறக்குறைய இந்தியா இலங்கைப்பிரச்சனையில் ஒரு விமர்சன நிலையில்தானிருக்கிறது. இந்தியாவின் அதிகாரிகளும் பொறுப்புமிக்க பிரமுகர்களும் இலங்கை இனப்பிரச்சினையையும் அதற்கான அரசியல் அணுகுமுறையையும் இராணுவ முனைப்பையும் விமர்சித்தே வருகின்றனர். இது இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை ஓரளவு வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment