மிகவும் பாதகமானதொரு நிலைமைக்குள் இப்போது கிழக்குமாகாணம் தளளப்பட்டிருக்கிறது. இலங்கைததீவு சுதந்திரமடைந்த பின்னர் ஏற்பட்;ட மிகப் பெரிய பின்னடைவும் பாதகமான நிலையும் இப்போது கிழக்குமாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. அதிலும் இந்தப்பாதகமான நிலைமையும் பின்னடைவும் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கே நேரடியாக அமைந்திருக்கிறது.
கிழக்கு மாகாணத்தை இப்போது அரசாங்கம் தன்னுடைய பிடிக்குள கொண்டு வந்துள்ளது. கிழக்கு அரசாங்கத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதன் பொருள் அது முற்று முழதான சிங்கள் மயவாக்கத்துக்குள்ளாகப் போகிறது என்பதேயாகும்.
கிழக்கை சிங்கள மயவாக்கம் செய்யும்; திட்டமும் கனவும் கடந்த அறுபது ஆண்டுகளாகவே சிங்களத்தரபபினருக்கு இருந்து வந்துள்ளது.
கிழக்கைத்துண்டாடும் இந்தக்கனவு மிக நீண்டகாலமாகவே சிங்களத்தரப்பினருக்கிருந்தது. இந்தக்கனவு இலஙகை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே அவர்களுக்கிருந்தது. இந்தக்கனவுக்கமைய அவர்கள் கிழக்கில் குடியேற்றத்திட்டங்களை அமைத்தார்கள். படைக்குவிப்பை நடத்தினார்கள். வடக்குக்கிழக்குப் பிரிப்புக்கேற்றமாதிரி நிர்வாக அதிகாரிகளை நியமித்தார்கள். கடைசியில் சட்;டபூர்வமாகவே வடக்கையும் கிழக்கையும் பிரித்துவிட்;டார்கள்.
வடக்குக்கிழக்குப்பரிப்புக்கான இந்த அணுகுமுறையை இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ. சேனநாயக்க முதல் பின் ஆட்சிக்குவந்த எல்லோரும் தொடர்ந்து செய்தே வந்திருக்கின்றனர். கிழக்கின் அம்பாறை மாவட்டம் முதல் வடக்கில் மணலாறுவரை இந்த குடியேற்ற விஸ்தரிப்பை தெளிவாகக் காணலாம்.
இதில் பல தமிழ்- முஸ்லிம் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு அங்கே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அதேவேளை தமிழ் மக்களும் சிங்கள் மக்களும் தங்களின் கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலையும் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது.
அப்படி அந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களிலிருந்து சூழ்நிலையின் நிமித்தமாக வெளியேறும்போது அந்ததப்பகுதிகளை மிகச் சுலுபமாக சிங்களக்குடியேற்றமாக மாற்றிவிடுகிறது அரசாங்கம்.
கிழக்கை சிங்கள மயவாக்கம் செய்வதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலப்பிரதேசத்தை பிரிக்கவும் அவர்களடைய தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கவும் குடிப்பரம்பலை மாற்றவும் வசதியாகும் என சிங்களத்தரப்பு மிக ஆழமாகவும் வலுவாகவும் நம்பிவந்துள்ளது.
அத்துடன் பாராளுமன்றப்பிரதிநித்துவத்திலும் மாற்றத்தைச் செய்யலாம் என்றும் அது கருதுகிறது. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் ஏற்கனவே இந்தமாதிரியான அணுகுமுறை மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிடி தளர்த்தப்பட்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக இப்போது மட்;டக்களப்பை படைத்தரப்பு தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்திருப்;பதன் மூலம் அந்த மாவட்டத்தையும் தமிழ் முஸ்லிம் செல்வாக்கு வலயத்திலிருந்து மெல்ல அகற்றித் தன்வசமாக்கும் முயற்சிக்கு அரசாங்கம் வந்துவிட்டது.
அதாவது திருகோணமலையிலும் அம்பாறையிலும் சிங்கள மக்களின் பரம்பல் தமிழ் முஸ்லிம் தரப்பை பெருமளவுக்கு நெருக்ககடிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இன்னும்அந்தமாதிரியான நிலைமை மட்டக்களப்பில் ஏற்படவில்லை. இதுவரையிலும் ஒரு சிங்கள்ப்பாராளுமன்ற உறுப்பினர் மட்க்களப்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த கட்டத்தில் இந்த நிலை மாறி சிங்களப்பிரதிநிதித்துவமும் இடம்பெறக்கூடிய வாய்ப்புகயே அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போதுள்ள சமூகநிலையை மாற்றுவதற்காக மட்டக்களப்பில் படுவான்கரையின் உட்பிரதேசங்களுக்குள்ளால் இந்தத்திட்டமிட்ட குடியேற்றத்தை அரசாங்கம் செய்வதற்குத்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது மொனறாகலை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலிருந்து இந்தக்குடியேற்றத்திடட்ங்கள் முன்னகர்த்தப்படுவதற்கான ஆலோசனைகள் நடப்பதாகவும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதெல்லாம் இந்தப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் பலத்தைச்சிதைக்கும் நடவடிக்கையின் முக்கிய நிகழ்ச்சித்திட்டங்களாகும்.
இந்த நிகழ்ச்சி நிரலுக்காக சிங்களத்தரப்பு கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக பெரும்பாடுபட்டது. அது தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தியது. இனமுரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி, தொடர்ந்து வளர்த்து வந்தது.சிறிலங்கா அரசினதும் சிங்களத்தரப்பினதும் இந்தச் சூழ்ச்சித்திட்டத்திற்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் வீழ்ந்து இப்போது முற்றுமுழுதாகப் பலியாகிப் போனார்கள்.
கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்னர் கிழக்கில் தமிழ்மக்களின் செல்வாக்கு மண்டலம் பெரியதாகவும் அசைக்க முடியாததாகவும் இருந்தது. ஆனால் அது பின்னர் படிப்படியாக நலிந்து இப்போது மட்டக்களப்பைத்தவிர திருகோணமலையிலும் அம்பாறையிலும் நன்றாக ஒடுங்கிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு தமிழ் முஸ்லிம் தரப்புகள் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டலாம். யாரும் நடந்த தவறுகளைப் பொறுப்பெடுக்காதிருக்லாம். ஆனால் இப்போது தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும் சிக்கலுக்குள் மாட்டுப்பட்;டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. இது சிக்கல் மட்டுமல்ல இனி எப்போதும் மீள முடியாத அளவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியும் பாதிப்பும் கூட. அதுவும் தலைமுறை தலைமுறையாகப் பீடிக்கப்போகிற பெரும் பிரச்சினை.
எனவே இப்பொது இந்தப்பிரச்சனை பற்றி தமிழ் முஸ்லிம் மக்கள் தெளிவாகவும் தூர நோக்குடனும் அவசரமாகச் சிந்திக்கவும் செய்ற்படவும் வேண்டிய கட்டம் உருவாகியுள்ளது. இப்போது தமிழ் முஸலிம் மக்கள் தங்களுக்குள் இருக்கும் பகைமைகளையெல்லாம் மறந்து விட்டு ஆக்க பூர்வமாக சிந்திக்கவில்லையென்றால் அடுத்தகட்டமாக அதோகதி என்ற மாதிரி எப்போதும் அகதியாகவும் ஒடுங்கியும் இருக்கவேண்டிய யதார்தத்துக்குள்ளாக வேண்டியதுதான்.
திருகோணமலை முதல் அம்பாறைவரையான பெரும்பகுதியை சிங்களப்பெரும்பான்மையாக்குவதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்கள் இரண்டாம் மூன்றாம் நிலைக்குத்தள்ளப்படுவார்கள். இதுதானே மட்டக்களப்புத் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களில் நடந்திருக்கின்றன.
ஏற்கனவே இந்தத்ரப்பினருக்கிடையில் கட்டிபத்திப் போயிருந்த இடைவெளிகளும் பிரச்சினைகளும் விட்டுக்கொடாதபோக்கும்தான் இப்போது இப்படி ஒரு கையறு நிலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளன. இதை இங்கே ஒரு அனுபவமாகப் பார்க்கக வேண்டும். அது மட்டுமல்ல சிங்களத்தரப்புக்கிருந்த பொறுமையும் தூர நோக்கமும் தமிழ் முஸ்லிம் தரப்புக்கு இல்லாமல் போய்விட்டது. ஆனால் தமிழ் முஸ்லிம் தரப்புக்குத்தான் இந்தப்பொறுமையும் அவதானமும் முயற்சியும் இருந்திருக்க வேணும். ஏனெனில் பாதிப்புக்குள்ளாகிய தரப்புகள் இவைதான். ஆனால் நடந்ததோ வேறு. அதுமட்டுமல்ல, இந்தத்தரப்புகள் இந்த நிலைக்கு எதிர்வளமாகவே இதுவரையிலும் இயங்கியிருக்கின்றன. அத்துடன் இப்போதும் இவை எதிர் நிலையிலதான் இயங்கிவருகின்றன.
இங்கே இன்னுமொரு முக்கியமான விசயத்iதையும் நாம் கவனிக்கவேணும். கிழக்கில் அரசாங்கமும் சிங்களத்தரப்பும் நினைத்தமாதிரி எதையும் செய்ய முடியாதிருந்ததற்கு விடுதலைப்புலிகளின் பலமே பிரதான காரணமாக இருந்தது. புலிகள் ஆயதம் தாங்கிய பலமான அமைப்பாக இருந்த படியால் சிங்களத்தரப்பு இதுவரையிலும் எதையும் நினைத்தமாத்திரத்தில் செய்ய முடியவில்லை. இந்த இடத்தில் புலிகளின் வரலாற்றுப்பாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் இந்தப்பலம் வாய்ந்த தன்மையை மேலும் வளர்த்துச் செல்வதில் பெரும் சிக்கல்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டமை என்பது உண்மையில் துரதிர்ஸ்டம் மிக்கதே.
இதில் முஸ்லிம் தேசியவாதம் திரட்சி பெற்றதும் அது பின்னர் பின்னடைவைச்சந்தித்ததும் இன்னொரு காரணமாகும். தமிழ்த் தேசியவாதமும் முஸ்லிம் தேசியவாதமும் தம்மைச் சூழ்ந்திருந்த அபாய வலையைக் காணாமலே இருந்துள்ளன என்பது பெரும் வரலாற்றுச் சோகமே. இவற்றையெல்லாம் இப்போது யாரும் மறுக்கலாம். அல்லது எதிர்வாதங்களுக்கு வரலாம். அல்லது கோபத்துடன் இந்தக்கருத்தை அணுகமுற்படலாம். ஆனால் இவை எல்லாம் யதார்த்தமும் உண்மையும் என்பதே இங்கே கவனிக்க வேண்டியதும் பரிசீலி;க்க வேண்டியதுமாகும்.
அதுமட்;டுமல்ல இப்போதே சிங்கள ஆக்கிரமிப்பவாதத்துக் கெதிராக முனைப்புடன் செயற்பட வேண்டிய ஒரு தளத்தை எவ்வழியிலேனும் நிர்மாணித்தே ஆகவேண்டும் என்ற அக்கறையோடும் இந்தவிசயம் இங்கே நோக்கப்படுகிறது. ஏனெனில் இப்போது அரசாங்கம் கிழக்கை துரிதமாக அபிவிருத்தி செய்யப்போவதாக பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பைக் கேட்டும் எதற்காக ஜே.வி.பியும் சிஹல உறுமயவும் இன்னும் பிற இனவாதக்கட்சிகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கின்றன என்பதையும் இங்கே அவதானிக்கலாம்.
சிஙகளப்பகுதிகளை அபிவிருத்தி செய்யாமல் முஸ்லிம் தமிழ் பகுதிகளை முன்னேற்றுவதை ஒரு போதும் இந்ததத்தரப்பகள் ஏற்றுக் கொள்ளாதவை. ஆனால் இப்போது மட்டும் இவர்கள் எல்லோரும் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன. அதிலும் கிழக்குக்கென்று விசேடமாக வெளியுலகம் தாராளமாகப் பொருளாதார உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளது. இது இனப்பிரச்சினைக்கான உறுதியான நிரந்தரத்தீர்வு கிட்டாத சூழலில் மேலும் பல பிரச்சினைகளை இன்னொரு பக்கத்தில் ஏற்படுத்தவே செய்யும். ஏறக்குறைய இந்த உதவியென்பது பலஸ்தீனத்தின் மேற்றுக்கரை விவகாரம் போல ஒரு நிலையை எதிர்காலத்தில் உருவாக்கும் என்பதை காலம் நிச்சயம் நிரூபித்தே தீரும். இதற்கு முன்னோட்டமாக இப்போது இந்த நிதியைப்பயன் படுததி அரசாங்கம் சிங்கள மயவாக்கம் செய்யப்போகிறது.
இப்போதே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் சம்பூர்ப்குதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சிகளும் உயர்பாது காப்பு வலயங்களாக்கும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்பது பலரும் அறிந்த விசயங்களாகும். சுனாமி நிதியைக்கூட இந்தப்பிரதேசத்தில் சரியாக மேற்கொள்ளத்தயாரில்லாத சிங்களத்தரப்பு எப்படி இப்போது கிழக்கின் அபிவிருத்திக்கு இடமளிக்கப்போகிறது என்ற கேள்வியும் உண்டு.
இதையெல்லாம் இப்போது கிழக்கில் இருக்கும் தரப்பினர் கணக்கிலெடுக்கககத்தவறினால் அடுத்த கட்டமாக இப்போதிருப்பதையம்விட பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். அதிலும் நிச்சயமாக முஸ்லிம் மக்களே இதில் கூடுதலான பாதிப்பைச் சந்திக்கப் போகிறார்கள். காரணம் முஸ்லிம் மக்களை தமிழர்களிடமிருந்து விரோதமாக்கி தனிமைப்படுத்தி விட்டு, பின்னர் தன்னுடைய தேவை முடிந்தவுடன் அவர்களைப்பலியிடவே சிங்களத்தரப்பு முனையும். இனிமேல் கூட்டரசாங்கத்துக்கே அதிகவாய்ப்பு எப்போதும் இருக்கும் என்பதால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு கட்டாயம் இடமிருந்தே ஆகும் என்றும் சிலர் வாதிடக்கூடும். ஆனால் அந்தப்பிரதிநிதித்துவத்தை சிதைக்கத்தானே இப்போது அரசாங்கம் இந்த சூழ்ச்சிகரமான திட்டத்தில் முனைப்போடு இயங்குகிறது.
இப்போது முஸ்லிம் மக்கள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றனர். முஸ்லிம்களும் தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் சேர்ந்திருக்கும்போதே அவர்கள் பலமான தரப்பாக இருக்க முடியும். பொதுவாகவே தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மைத்தேசிய இனங்கள் என்பதையும் பெரும்பான்மைச்சிங்களத்தரப்பே ஆட்சியிலிருக்கிறது என்பதையும் தமிழ் முஸ்லிம் மக்கள் நினைவிலெடுக்கத்தவறிவிட்டனர். அதன் விளைவுகளே இப்போது திரண்டு இப்படி ஒரு பெரும் நெருக்கடியாக உருவாகியுள்ளது. இந்த இரண்டு சமூகங்களும் தங்களுக்குள் பலமாகவும் கட்டிறுக்கமாகவும் இரந்திருந்தால் இப்போது கூட சிங்களத்தரப்பு இந்தமாதிரி கிழக்கை தங்களின் பிடிக்குள் கொண்டு வந்திருக்க முடியாது.
கிழக்கை படையினர் தமது பிடிக்குள் கொண்டு வந்திருப்பதை இப்போது ஆதரிக்கும் தரப்பினர் இப்போதே தங்களின் எதிரகாலத்தையம் அங்கே தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தையும் தாரைவார்த்துக் கொடுக்கிறார்கள். அத்துடன் பின்னர் பெரும் சிரமப்படவேண்டியதொரு இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்ளாமல் தமது குறகிய நலனுக்காக குருட்டுத்தனமா நடந்து கொள்கின்றனர். அபாயமும் நெருக்கடியும் வரும்போது அதை எதிர் கொள்வதற்கிருக்க வேண்டிய கூர்மையான சிந்தனையும் பலத்தைச் சேகரிக்க வேண்டிய அவசியமும் வேணும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாமலிருப்பதுதான் பெரும் துக்கமாக இருக்கிறது.
இப்போது முஸ்லிம் கட்சிகள் பொதுவாக கிழக்கில் பலவீனமான நிலையில் பிளவுபட்டே யிருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். அதிலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்டுவரும் அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டு அதனுடன் சேர்ந்து நிற்கவேண்டிய யதார்த்தத்தை சிங்களத்தரப்பு முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்படுத்தியுளள்து. இதில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அதனுடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை தொடர்ந்துமிருக்கப்போகிறது. எனவே இப்பொது கிழக்கைப்பாதுகாக்க வேண்டிய அவசியம் தவிர்க்கவே முடியாத ஒரு யதார்ததமாகி விட்டது. இதற்காகவே இப்போது உயர்ந்த பட்சச்சிந்தனையும் முயற்சியும் தேவையாக இருக்கிறது.
No comments:
Post a Comment