தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது என்பார்களே அதுமாதிரி, யாழ்;ப்பாணத்திலிருந்து பலாலிக்குப்போய் பிறகு அங்கேயிருந்து கொழும்புக்குப்போய், பிறகு அங்கேயிருந்து வன்னிக்கு வந்திருக்கிறார் யாழ்;ப்பாண ஆயர். இவ்வளவுக்கும் தரைவழிப்பயணத்தின் மூலம் ஒரு மணித்தியாலயத்தில் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியில் நிற்பார். ஆனால் அதற்கு இப்போது வழியில்லை. ஏ9 பாதை மூடப்பட்டபிறகு இப்படி தலையைச் சுற்றி மூக்கைத்தொடும் காரியம்தான் நடக்குது. ஒரு 60 கிலோ மீற்றர் தூரப்பயணத்துக்கு விமானமேறி கொழும்புக்குப் போய், பிறகு அங்கேயிருந்து வன்னிக்கு 350 கிலோ மீற்றர் தூரம் திரும்பி வருவதென்பது எவ்வளவு அபத்தமானது.
இப்படி பெருந்துன்பப்பட்டு, அலைக்கழிந்து, தொலைதூரமெல்லாம் சுற்றி பக்கத்திலிருக்கும் இடத்துக்கு போகமுடியாது. இது சுத்த முட்டாள்தனமான வேலை. அதோடு சனங்கள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருட்களை விற்கவோ பிற இடத்துக்கு எடுத்துச் செல்லவோ முடியாத அலத்தையும அதனால் ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியைப்பற்றியும் அவர் தெளிவாக சகல தரப்பினரிடமும் பல தடவை விளக்கியிருந்தார்அத்துடன் இந்த நிலைமையை தெரிவித்து பகிரங்கமாகவும் நேரிலும் அரசாங்கத்தையம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவையும் கேட்டிருந்தார்.
ஆனால் அதுக்குரிய பதிலோ அவருடைய கோரிக்கைக்கான மதிப்போ இதுவரையில் எந்தத்தரப்பிலிருந்தும் கிடைக்கவில்லை. அவருடைய அந்தக் கோரிக்கைக்கான பதில் ஒருபோதும் அரசாங்கத்தால் கிடைக்கப்போவதுமில்லை. ஆயருடைய கோரிக்கையும் விருப்பமும் பல்லாயிரக்கணக்கான சனங்களின் தரப்பின் பாற்பட்டது. ஏ9 பாதையைத்திறக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்று கூட அவர் கடைசியாகக் கேட்டு;பபார்த்தார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்த வெளிநாட்டுப்பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா வின் பிரதிநிதிகள் வரையில் அவர் எல்லோரிடமும் கெஞ்சிக்கேடட்hரர். ஆனால் அவர்களின் செவிகள் மூடப்பட்டிருப்பதைப்போல அரசாங்கத்தின் இதயம் மூடப்பட்டிருப்பதைப்போல ஏ9 பாதையம் மூடப்பட்டேயிருக்கிறது.
இந்தமாதிரியான ஒரு விருப்பத்தையோ கோரிக்கையையோ பௌத்த பிக்குகள் முன்வைத்திருந்தால் அரசாங்கம் எப்போதோ அதை நிறைவேற்றியிருக்கும். இதுதான் இலங்கையின் அரசியலும் நீதியும். ஆட்சிப்பீடமேறும்போதும் பிறகு ஆட்சியை நடத்தும்போதும் சிங்கள ஆட்சியாளர்கள் தவறாமல் பௌத்த பீடத்தினரை மகிழ்வித்தே வருகின்றனர். பிக்குகள் சொல்கின்ற கருத்துகளை தவறாமல் செவிமடுக்கின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை எப்படியோ நிறைவேற்றி விடுகின்றனர். பிக்குகளின் மகிழ்வுக்காகவே அவர்கள் இன்னமும் தமிழ்மக்களின் உரிமைகளைக் கொடு;ககாமல் வைத்திருக்கின்றனர் என்று ஒரு நண்பர் சொன்னது இங்கே நினைவுக்கு வருகிறது.
ஆனால் மகா சங்கப் பிக்குகளுக்கு நிகரான கிறிஸ்தவ மதகுருவான ஆயர் இங்கே அவ்வாறு மதிக்கப்படவில்லை. அவர் அவ்வாறு மதிக்கப்பட்டிருந்தால் அவருடைய கோரிக்கைக்கு ஏதோ ஓர் பதில் கிடைத்திருக்கும். இவ்வளவுக்கும் ஆயரின் கோரிக்கை நியாயமான கோரிக்கை. அNதுவேளை பௌத்த பிக்குகளின் விருப்பமோ நீதிக்கும் மனச்சாட்சிக்கும் எதிரானது. அரசாங்கத்துக்கு நீதி நியாயம் பற்றிய பிரச்சினையெலல்hம் கிடையாது. அது சிங்களத்தரப்பை திருப்திப்பபடுத்pனால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. பாவம் ஆயர். அவர் பாவப்பட்ட சனங்களுக்காக இரக்கப்படுகிறார். அவர் அவர்களுக்காக தேவனிடம் முறையிடுகிறார். அதைத்தவிர வேறு என்னதான் இலங்கைத்தீவில் அவரால் செய்ய முடியும்.
2
பொருளாதாரத்தடையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் போசாக்கை பராமரித்து அவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் வன்னி கியூடெக் கரித்தாஸ் என்ற பொது அமைப்பொன்று இலைக்கஞ்சியை கடந்த பத்தாண்டுகளாக பள்ளிகளில் வழங்கிவருகிறது.
காலைச்சாப்பாட்டுக்கு கெதியில்லாமல் எத்தனையோ சிறுவர்கள் தங்களின் படிப்பை இடையில் விட்டுவிட்டு தொழில் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியபோது கியூடெக் கரித்தாஸ் நிறுவனம் இலைக்கஞ்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தின் பொருளாதாரத்தடையினால் வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் வருவாயின்மையும் பொதுமக்களை Nபெரும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அவர்களின் வாழ்க்கை மிகவும்நலிந்து போயுள்ளது. கியூடெக் நிறுவனம் இதுவரையில் ப்லலாயிரக்கணக்கான சிறுவர்களுககு கஞ்சி வாரர்த்திருக்கிறது. அந்த கஞ்சித்திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவுக்காகவே யாழ்ப்பாண ஆயர் வந்திருந்தார்.
அந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் சொன்னார், சிங்கள பௌத்த அரசாங்கதிடமிருந்து யாரும் சமமாக வாழக்கூடிய உரிரமகளைப் பெறமுடியாதென்று. எத்தனை சத்தியமான வார்த்தைகளிவை. ஆயரின் இந்த வார்த்தைகள் வெறுமனே அரசியல்வாதியினுடைய வார்த்தகளில்லை என்பதை சரிவதேச சமூகம் புரிந்து கொள்ள வேணும். சர்வ தேச சமூகம் மட்டுமல்ல சகலரும் புரிந்து கொள்ள வேண்டிய கருத்துகளும் உண்மையும் இதுதான்.
3
யாரும் எதிர்பாராதவிதமாகத் திடீரென்று நான்கு அமைச்சுப்பொறுப்புகளையுடைய இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து விலகியுள்ளது. இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் விலகியிருக்கிறார்கள். விலகிய கையோடு அவர்கள் இந்தியாவுக்குப் போய்விட்ட்டார்கள்.
இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அரசாங்கத்துடன் சேர்வதற்கு முன்னரும் இந்தியாவுக்குப் பொய்வந்திருந்தார். இப்போது பதவி விலகியவுடனும் அவர் இந்தியாவுக்குப் போயிருக்கிறார். ஆறுமுகன் தொண்டமானின் பதவி விலகலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதாக பலரும்; சொல்கிறார்கள். கடந்த வாரம் இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரியம் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் முன்னர் ஈடுபட்டவருமான திரு. பார்த்தசாரதி கொழும்புக்கு வந்திருந்தார். அவருடைய வருகையை அப்போது அநேகமாக சிங்களத்தரப்பினர் அதிகமும் விரும்பவில்லை. அவரை சந்திப்பதற்கும் அவருடைய வருகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்றும் அவர்கள் பின்னின்றனர்.
அவருடைய வருகையை சந்தேகித்து இலங்கையின் பல சிங்களத்தரப்புப் பத்திரிகைகளும் எழுதித்தள்ளின. சில ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. கொழும்புக்கு வந்த பார்த்தசாரதி தான் சந்திக்கக்கூடியதாக இருந்த தமிழ்க்கட்சிகளை சந்தித்துப் பேச்சுகளை நடத்திவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் அந்தப் பேச்சுகள் குறித்து எந்தவிதமான உததியோகபூர்வமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால் அவர் சந்தித்துச் சென்ற பின்னர் இப்போது ஒரு வாரத்துள் ஆறுமுகன் தொண்டமான் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு இந்தியாவுக்குப் போய்விட்டார். ஆறுமுகம் தொண்டமானின் பதவி விலகலையடுத்து இப்போது மலையக மக்கள் முன்னிணித்தலைவர் சந்திர சேகரனும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்ற தெரிவிக்கப்படுகிறது.
இதெல்லாம் நேரடியாக ரசாங்கத்தைப்hதிக்கும் விசயங்கள். மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் ஒரு தொங்குபறி அரசாங்கம் என்று ஒரு பத்திரிகையாளர் எழுதியது இப்போது மிகச்சரியாக இருக்கிறது. அவர் ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு இப்படித்தான் நித்திய கண்டமாக நிலைமையிருக்கிறது. அவரும் தன்னால் ஆனமட்டும் செய்யக்கூடியதை எல்லாம் செயதுபார்த்துவிட்டார். பலதையும் வெட்டியாடிப்பபார்த்தார். ஐ.தே.க விலிருந்து தனக்கு வேண்டிய ஆட்களைப் பிடுங்கியெடுத்தார். எல்லாக்கட்சிக்கும் பிச்சைமாதிரி அமைச்சுப் பொறுப்புகளை வாரி வழங்கினார்.
ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் 100க்கு மேற்பட்ட அமைச்சர்கள் என்றால் பாருங்களேன். இ;ப்படி அமைச்சுப்பொறுப்புகளைக் கொடுத்தம் இப்போது இப்படிக் காலைவாரி விட்டார்களே என்று மகிந்த ராஜபக்ஸ துக்கப்படக்கூடும். ஆனால் என்ன செய்ய முடியும். ஏற்கனவே அரசாங்கத்துக்குள்ளும் ஏகப்பட்ட பிரச்சினைகளிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அரசாங்கத்துக்குள்ளிருந்தும் அதிருப்தியாளர்கள் வெளியேறக்காத்திருப்பதாக செய்திகள் வெளியாகய படியே இரந்தன. இந்தச் சூழலில் அதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவேயுளளதாக தெரிகிறது.
இப்போது கொழும்பில் ரணில் விக்கிரமசிங்க அதிகம் சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டார். அவருக்குத் துணையாக மங்கள சமரவீரவும் செர்ந்து விட்டார். கொழும்பில் மங்கள ரணில் கூட்டணிக்கு ஏக்ப்பட்ட வரவேற்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்தவாரம் இந்தக் கூட்டணி கொழும்பில் நடத்திய பேரணி இதை இன்னும் நன்றாகப் புலப்படுத்தியது. அப்போதே மகிந்த ராஜபக்ஸ சற்று நிம்மதியிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதைவிட கடந்த வாரததில் இன்னொரு விசயமும் கொழும்பில் நடந்தது. இந்தியாவின் சிறப்புத்தூதுவராக ராஜீவ் காந்தியின் காலகட்டத்தில் செயற்பட்ட பார்த்தசாரதி கொழும்புக்கு வந்திருந்தார்.
பார்த்தசாரதியின் வருகை சாதாரணமான விசயமல்ல. இந்தியா மீண்டும் இலங்கைப்பிரச்சினையில் தீர்மானகரமான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது என்பதை உணர்த்துவதாகவே இந்த வருகை இருக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.பார்த்தசாரதி இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு சமிக்ஞையாகவே வந்து பொனார் என்றும் அவருடைய வருகையின் விளைவுகளே இப்போது ஆறுமுகம் தொண்டமானின் இ;ந்த வெளியேற்றமும் என்றும் சொல்லப்படுகின்றது.
பார்த்தசாரதியின் வருகையை சிங்களத்தரப்பு பொருட்படுத்தாததைப்போல விட்டதன் விளைவே இதெல்லாம் என்றும் கொழும்பில் ஒரு பெச்சு அடிபடுகிறது. சிங்களத்தரப்ப அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தவறியபோது அவர் தமிழ் தரப்பினரைச்சந்தித்து தாராளமாக உரையாடியிருந்தார். அத்துடன் வடக்கு கிழக்கு பிரிப்பு வேறு இந்தியாவுக்கு அதிக எரிச்சலை ஊட்டுவதாகவும் அது ஒரு வகையில் இந்தியாவை அவமதிப்பதாகவும் இருநதது. பார்த்தசாரதி இதனையும் மனதில் கொண்டிருந்தார். தவிர கிழக்கில் குடும்பிமலை ஆக்கிரமதிப்பையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்தது.
இnதெல்லாம் மகிந்த அரசாங்கத்தை முற்று முழுதாக இராணுவத்தீர்வை நோக்கியே சிந்திக்கத் தூண்டும் என்பதால் இவற்றைத் தணிக்கவே இந்தியா முனைந்தது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அதற்கு புலிகள் பலம் பெறவும் கூடாது. அதேபோல சிறிலங்கா அரசாங்கம் பலம் பெறவும் கூடாது. கிழக்கில் பலம் பெற்ற சிறிலங்கா அரசாங்கம் அடுத்த கட்டமாக வடக்கில் பெரும்போருக்குப் போகும். அப்படிப்பேரும் பொரை ஆது தொடங்கும்போது அது பெரும் மனித அவலத்தைத்தோற்றும் என்று இந்தியா ஊகிக்கிறது.
இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே பார்த்தசாரதியின் பயணம் அமைந்திருக்கிறது.
இந்தியா பார்த்தசாரதியை அனுப்பியதன் மூலம் உரு செய்தியை சொல்லியிருக்கிறது. அதாவது பரிச்சயமுள்ள ஒருவரை இந்த விவகாரத்தில் மீண்டும் களமிறக்கியிருப்பதாகவும் எனவே புதிய கட்டுக்கதைகளுக்கு அதிகம் இடமில்லை என்றும் இந்தச் செய்தி அமைந்திருக்கிறது.
இனி அடுத்ததாக என்னவெல்லாம் சிறிலங்கா அரசியலில் நடக்கப்போகிறதோ என்று ஆர்வமுடன் பலரும் பார்க்கிறார்கள். அதிலும் மேற்கு மிக உற்சாகமாக இந்த விசயத்தை வேடிக்கை பார்க்கிறது. கடந்த ஒன்றரை வருடத்திலும் மகிந்த ராஜபக்ஸ எல்லோரையம் பொருட்படுத்தாமல் அடித்த குத்துக்கரணங்களெல்லாம் இப்போது அவரையே பொறிக்குள் சிக்கவைத்துள்ளன.
அரசியலுக்குரிய கண்ணியம் பொறுப்புணர்வு சகிப்புத்தன்மை என் எதுவுமில்லாமலே அவர் ஒரு நாட்;டின் தலைவராக இருக்கவிரும்புகிறார். ஆனால் அப்படி ஒருவர் தாக்குப்பிடிப்பதென்பது இன்றைய நாளில் சாதாரணமானதல்ல. என்று ஆர்வமுடன் பலரும் பார்க்கிறார்கள். அதிலும் மேற்கு மிக உற்சாகமாக இந்த விசயத்தை வேடிக்கை பார்க்கிறது. கடந்த ஒன்றரை வருடத்திலும் மகிந்த ராஜபக்ஸ எல்லோரையம் பொருட்படுத்தாமல் அடித்த குத்துக்கரணங்களெல்லாம் இப்போது அவரையே பொறிக்குள் சிக்கவைத்துள்ளன.
அரசியலுக்குரிய கண்ணியம் பொறுப்புணர்வு சகிப்புத்தன்மை என் எதுவுமில்லாமலே அவர் ஒரு நாட்;டின் தலைவராக இருக்கவிரும்புகிறார். ஆனால் அப்படி ஒருவர் தாக்குப்பிடிப்பதென்பது இன்றைய நாளில் சாதாரணமானதல்ல.
4
வன்னியில் இப்போது மருந்துப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கிவிட்;டது. ஓமந்தைப்பாதையால் வாரத்தில் மூன்ற நாட்களுக்கு மட்டும்தான் போக்குவரத்து நடக்கிறது. முந்தி இரவுபகலாக கொழும்புக்கும் யாழ்;;பபாணததுக்குமாக வாகனங்கள் ஓடியபோதும் பொருட்கள் போதாமலேயிருந்த காலமம் இருந்தது.
அப்படியிருக்கும்போது இப்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும்;தான் பாதை திறந்திருக்குமென்றால் போதுமா. அதுவும் காலை எட்டுமணிக்குத்திறக்கப்படும் பாதை மாலை ஐந்து மணிக்கு மூடப்பட்டுவிடும். இந்த இடைப்பட்ட நெரத்தில்தான் நோயாளர் முதற்கொண்டு சகலரம் போவதும் வருவதும். இதற்கும் எத்தனை கெடுபிடிகளும் விசாரணைகளும் தெரியுமா.
அவ்வளவு விசாரணைகளையும் கடந்து ஒருவர் போய் வருவதென்பது நரகத்துக்குப்போய்வருவதற்குச்சமம். அப்படித்தான் போய் வந்தாலும் தேவையான பொருட்களை கொண்டு வரமுடியாது. குறிப்பாக ஒரு மோட்டாரச்சைக்கிள் ரயரைக்கூடக் கொண்டு வர முடியாது. ஒரு லீற்றர் பெற்றோலைக்கூடக் கொண்டு வர முடியாது. ஒரு சோடி பற்றியைக்கூடக் கொண்டுவர விடமாட்டார்கள்.
இந்த நிலைமையில் எப்படியிருக்கும் வாழ்க்கைஎன்று சற்று நினைத்துப்பாருங்கள். இன்னும் வரவர இறுக்கம் கூடித்தான் வருகிறது. போரில் வெல்ல வேண்டுமென்றால் அதுக்கு முதல்ல பொருளாதாரததடையைப் போடுங்கள் என்று யார்தான் சிங்களவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியாது. இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி வன்னியில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதைப்பற்றி கொஞ்சம் கூட சிங்களவர்கள் சிந்திப்பதாகவே இல்லை.
ஏன் யாழ்ப்பாணத்துக்கான பாதை மூடப்பட்டே இந்தமாதம் 11ம் திகதியுடன் ஒரு வருசமாகிறது. அங்கே ஆறலட்சம் மக்கள் பாதையில்லாமல் கிடக்கும்போதும் எந்தச்சிங்கள மனச்சாட்சியும் வேலை செய்யவும் இல்லை. அதைப்பற்றிச் சிந்திக்கவும் இல்லை. இதற்காகவெல்லாம் அவர்கள் வெட்கப்படவும் இல்லை. இதையெல்லாம் பொருட்படுத்தவும் இல்லை.
பதிலாக அவர்கள் குடும்பிமலைக்காட்டில் கொடியேற்றியதற்காக கொழும்பில் வெற்றிவிழாக் கொண்டாடுகிறார்கள். இன்னும் அதைப்போல தமிழ்மக்களின் கண்ணீரில் வெறறிவிழாவைக் கொண்டாடவெ வீரும்புகிறார்கள். குடும்பிமலை வெறறிவிழாவுக்குப்பிறகு இப்போது மட்டக்களப்பில் ஆயிரத்தெட்டுப்புதிய நடைமுறைகளையும் விதி முறைகளையும் அரசாங்கம் அறிமுகபப்டுத்pயிருக்கிறது. அதையெல்லாம் அடுத்தவாரம் சொல்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் அந்த விதிமுறையெல்லாம் அரசாங்கத்தின் பிரச்சாரத்துக்கும் வெளிநாட:டுக்காசை புனரமைப்பு என்ற பேரில் கறக்கிறதுக்குமாகத்தான் நடக்கிறது என்று கோவத்தோடு சொல்கிறார், வெல்லாவெளி தங்கராசா.
No comments:
Post a Comment