மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறார்கள் சிலர். இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த சர்வதேச சமூகத்தின் அறிக்கைகளையும் அறிவிப்புகளையும் அதீத அக்கறைகளையும் அவதானிப்போருக்கு இவ்வாறான கேள்விகள் எழும். இவற்றை வைத்துக்கொண்டே அவர்கள் இப்படிக்கேட்கிறார்கள்.
சர்வதேச சமூகத்தின் அதிகரித்த கரிசனைகள் இனப்பிரச்சினை விவகாரத்தில் ஏதாவது அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அப்படி அவர்கள் எதிர்பார்;ப்பதில் முழுத்தவறிருப்பதாகவும் சொலல்;முடியாது. ஆனால் இலங்கையின் இனப்பிரச்சினையை சரியாக விளங்கிக் கொண்டவர்களுக்கு இதெல்லாம் எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று தாராளமாகவே தெரியும்.
இதில் இரண்டு முக்க்pயமான விசயங்களிருக்கின்றன. ஒன்று இவர்கள் கருதுவதைப் போலவே சர்வதேச சமூகமும் கருதுகிறது. அதாவது தமது கண்டனங்களையும் அறிவுறுத்தல்களையும் கண்டு சிறிலங்கா அரசாங்கம் மிரண்டுவிடும், போரை நடத்த அஞ்சும், இனவாதத்தைத் தொடராமல் அடங்கிவிடும் என்றெல்லாம் சர்வதெச சமூகம்; கனவு காணுகிறது.
ஆனால் இந்த வெருட்டுதல்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் எந்த மதிப்பையும் சிறிலங்கா அரசாங்கம் கொடுக்கப் போவதில்லை. இதையெல்லாம் கண்டு சிங்களச்சமூகம் என்றைக்கும் பயந்து விடப்போவதுமில்லை.
அவர்கள் இந்தமாதிரிச் சந்தர்ப்பங்களையும் நெருக்குவாரங்களையும் பல முறை கண்டு வந்தவர்கள். அத்துடன் அந்த நெருக்கடிகளையெல்லாம் மிக நுட்;பமாகக் கையாண்டு அதில் வெறறியும் பெற்றவர்கள்.
அதானால்தானே இப்போதும் இனப்பபிரச்;சினையைத்தீர்க்காமல் அவர்களால் வைத்திருக்கவும் தொடரவும் முடிகிறது. இன்னும் தயக்கமில்லாமல் போரைத் தொடரவும் இயலுகிறது. அதுவும் சர்வதேச சமூகத்தின் விருப்பத்தையும் மீறி அதனுடைய எதிர்பாரர்ப்புக்கு மாறாகப் போரைச் செய்ய் முடிகிறது. அத்துடன் ஐம்பது ஆண்டுகட்கும் மேலாக வெளிப்படையாகவே இனவாதத்தையும் படுகொலைகளையும் செய்யவும் முடிகிறது. அதேவேளையில் இவ்வளவையும் சர்வதேச அபிப்பிராயத்துக் கெதிராகச் செய்து கொண்டே அது அதே சர்வதேச சமூகத்தின் உதவிகளையும் பெறுகிறது. இதெல்லாம் சாதாரணமான விசயங்களல்ல.
அடுத்தது சர்வதேச சமூகம் நடைமுறையில் இனப்பிரச்சினையைத்தீர்க்கும் மெய்யான கரிசனையொடும் யதார்த்தத்தோடும் இயங்கவில்லை என்பது. அப்படி அது இயங்குமாக இருந்தால் இப்படி சிறிலங்கா அரசாங்கம் வாலாட்ட முடியாது.
இனி இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் சற்றுப் பார்ப்போம்.
முதலில் சிங்கள சமூகத்தினதும் சிறிலங்கா அரசினதும் இயல்பையும் Nபுhக்கையும் அவற்றின் கடந்தகால, சமகால நடத்தைகளுக்கூடாகப் பார்க்கலாம்.
தமிழர்களுக்கெதிராக இயங்கும் ஒரு பொறிமுறை சிங்களவரிடம் எப்போதுமுண்டு. அரசாங்கம் தவிர்க்க முடியாத ஒரு கட்டத்தில் அல்லது ஒரு சூழ்நிலையில் இனப்பிரச்சினை விடயத்தில் தீர்வுகுறித்து ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டுக்குப் போகத்தான் வேணுமென்ற நிலை வரம்போது அதற்கெதிராக இன்னொரு தரப்பு வலுவான எதிர்ப்பைக் காட்டும் மரபை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
பண்டாரநாயக்கா செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் செய்த போது ஜே.ஆர.;ஜெயவர்த்தனா அதை எதிர்த்து கண்டிக்குப் பாத யாத்திரை போனார். ஜே.ஆர். ஜெயவர்த்தனா இந்தியாவுடன் உடன்படிக்கை செய்தபோது அதை ஜே.வி.பி நேரடியாக எதிர்த்தது. அNதுவேளை அரசாங்கத்துக்குள்ளிருந்த பிரேமதாசா அணியினர் அதற்கெதிராக நின்றனர்.
அப்படி ஒரு பொறிமுறையை வைத்திருந்த படியால்தான் பின்னர் பிரேமதாச ஆட்சிக்கு வந்தவுடன் அவர் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கு இலகுவாக முடிந்தது. ஏற்கனவே இந்திய இராணுவத்தின் வருகையை விரும்பாதவர் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் போது தொடர்ந்து ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படவிருக்கும் பிரச்சினகைள் பெரும் சிக்கலாகி விடும் என்ற நிலையில் இந்தியப்படை வெளியேறுவதே அதிக நன்மையாகும் என்று அப்போது இந்தியத்தரப்பில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் புலிகளுடனான போரில் ஒரு தீராத சிக்கலுக்குள் மாட்டியிருந்த இந்தியப்படை வெளியேறவும் முடியாமல் உள்ளே நிற்கவும் முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தபோது பிரேமதாசவின் வருகையும் அவருடைய அணுகுமுறையும் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தை சாத்தியமாக்கியிருந்தது.
தவிர, இந்தியாவின் நெருக்குவாரத்தை இத்தகைய இரட்டை அணுகுமுறையின் மூலம் சிங்களவர்கள் வெற்றிகரமாகக் கடந்தார்கள்.
அத்துடன் இந்தியா கொடுத்த அழுத்தத்தை அவர்கள் தமிழர்மீதே திருப்பியும் விட்டார்கள். அத்துடன் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பகைமைப் பொறியையும் பொருத்தி விட்டார்கள்.
பதிலாக இப்போது தமிழருக்கெதிரான போருக்கு இந்தியாவிடமிருந்து ஆயத உதவியையும் பெறுகிறார்கள். அது மட்டுமல்ல, தன்னிடமே சிறிலங்கா அரசு ஆயத உதவிகளைப் பெறவேணும் என்று இந்தியா கேட்குமளவுக்கு சிங்களவர்கள் நுட்பமான ராஜதந்திரத்தைக் கையாள்கிறார்கள்.
இந்திய நெருக்கடியை வெல்வதற்காக இந்தியாவுடன் நேரடியாக மோதாமல் அதனுடன் ஒத்துப்போவதாகக் காட்டி பின்னர் அதனை முறியடித்து தமது நிலைப்பாட்டைப் பேணியுள்ளது சிங்களத்தரப்பு. இறுதியில் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வரையப்பட்டிருந்த வடக்குக்கிழக்கு மாகாணத்தை பிரித்தும் விட்டது.
அதாவது இந்தியாவை நேரடியாக எதிர்க்காமல் அதை கையாளும் விதத்தாலும் நுட்பத்தாலும் எதிர்கொண்டு இருபது ஆண்டுகளில் அதனைத் தோற்கடித்து விட்டது சிறிலங்கா.
இதேபோலவே பின்னர் இப்பொழுது மேற்குலகத்தையும் சிறிலங்கா அரசு கையாண்டு வருகிறது. அதாவது இப்போது மேற்குலகம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை சிங்களத்தரப்பு தனது நுட்பமான ரராஜதந்திரப் பொறிமுறைக்கூடாகத் தோற்கடித்து வருகிறது.
இந்த உண்மையை இப்போது ஏற்றுக் கொள்வதற்கு யாருக்கும் உடன்பாடில்லாதிருக்கலாம். ஆனால், இதை மிக அவதானமாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தமாகும்.
மேற்குலகத்தின் கரிசனை இலங்கைத்தீவில் தீவிரமாகத் தொடங்கியபோது அதை கூடியவரையில் விலக்கவே சிறிலங்கா முயற்சித்தது. நோர்வேயின் மத்தியஸ்த முயற்சியை தொடக்கத்தில் முடிந்தவரையில் தவிர்க்க முற்பட்டவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க.
வெளித்தலையீடு ஒன்று இனப்பிரச்சினை விடயத்தில் ஏற்படும்போது அதில் கூடுதலான நெருக்கடிகளையும் சங்கடங்களையும் எதிர்கொள்ள வேண்டியது ஒடுக்கும் தரப்பான தம்மையே சாரும் என்று அவர் புரிந்திருந்தார்.
குற்றம் செய்பவர்களுக்குத்தானே நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். அதனால் இந்தத்தலையீட்டை சநதிரிகா முடிந்தவரையில் தவிர்க்க முயன்றார்.
ஆனால் சந்திரிகாவின் விருப்பத்தையும் மீறி அதற்குரிய களத்தை புலிகளின் போர்த்திறன் திறந்தது. புலிகள் ஆனையிறவைக்கைப்பற்றியதும் தீச்சுவாலை நடவடிக்கையில் படைத்தரப்புக்கு ஏற்படுத்திய பேரழிவும் கட்டுநாயக்க விமானத்தளத்தின்மீது நடத்திய பேரழிவுத்தாக்குதலும் சந்திரிகாவுக்கு மாற்று வழிகளை இல்லாமற் செய்து விட்டது.
சந்திரிகா குமாரதுங்க வேறுவழியில்லாமல் நோர்வேயுடன் இணங்க வேண்டிய நிலைக்குத்தள்ளப் பட்;டார். இப்படித்தான் ஜே.ஆரும் இந்தியாவிடம் மடங்குவதற்கு புலிகள் வடமராட்சியில் நடத்திய முதலாவது கரும்புலித்தாக்குதல் வழிவகுத்தது என்பதை இங்கே கவனிக்கலாம்.
நோர்வேயின் பிரசன்னத்துக்கு அரசாங்கம் சம்மதித்தபோதும் அதை தொடர்ந்து சிங்களத்தரப்பில் பல அணிகளும் எதிர்த்து வந்தன. ஜே.வி.பி நோர்வேக்கு எதிராகவும் சமாதான அனுசரணைப்பணிகளில் முக்கியமானவராக இருந்த எரிக் சொல்கெய்ம் க்கு எதிராகவும் வலுவானதொரு மனப்பாங்கை உருவாக்கியது. இதில் ஜே.வி.பி யுடனிணைந்து சிங்கள ஊடகங்களும் ஹெல உறுமய மற்றும் பிற தரப்புகளும் தொழிற்பட்டிருக்கின்றன.
இந்த இரட்டை அணுகுமுறை இந்தத்தடவையும் பலமாகவே இருந்தது.
இது தொடர்ந்து வளர்ச்சி பெற்று போர் நிறுத்த உடன் படிக்கைக்கும் போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழுவுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் எதிராக சிங்களச்சமூகத்தைத் திரட்டியிருக்கிறது.
அதாவது சர்வதேச சமூகத்தின் விருப்பங்களுக்கும் அணுகுமுறைக்கும் எதிராக சிங்களத்தரப்பு வலுவாக நிற்கின்ற ஒரு நிலையை அவர்கள் இப்போது உருவாக்கி விட்டார்கள்.
பேச்சுவார்த்தையையும் தீர்வையும் அவர்கள் கிடப்பில் போட்டுவிட்டார்கள். அல்லது பின்தள்ளி விட்டார்கள். மீண்டும் தமக்கு நெருக்கடி ஒன்று வரும்போது அதைச்சசமாளிப்பதற்காக மெல்ல இறங்கி வருவார்கள். அதுவரையிலும்இப்ப்டித்தண்ணி காட்டிக்கொண்டு தங்களின் காரியத்தை பல விதங்களிpலும் பார்க்கிறாhர்கள்.
அதேவேளையில் சர்வதேச சமூகத்தை அரசாங்கம் நேரடியாகப்பகைத்துக் கொள்ளவில்லை என்ற தோற்றப்பாட்டையும் அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்கள்.
இந்த அணுகுமுறை அரசாங்கத்துக்கான நேரடியான அழுத்தங்களைத்தவிர்ப்பதோடு கிடைக்கின்ற உதவிகளிலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதற்கேற்றது.
இதற்கு அரசாங்கத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும்; கடும்போக்காளர்களை தயாரித்து வைத்திருக்கிறது சிங்;களத்தரப்பு. இவர்களே நிலைமையை பலன்ஸ் பண்ணுகிறார்கள். இந்தக்கடும் போக்காளர்களுக்கு அரசாங்கத்தரப்பினருக்கிருக்கும் மதிப்பும் செல்வாக்கு மண்டலமும் எப்போதும் சிங்கள அரசிடமும் சிங்களச்சமூகத்திடமும் உண்டு.
குறிப்பாக இந்தக்கடும்போக்காளர்களை சிங்கள அதிகார மையமும் பௌத்த பீடங்களும் சிங்கள ஊடகங்களுமே உருவாக்கிவருகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இனப்பிரச்சினையை புதிய நெருக்கடியை நோக்கி தள்ளுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் இந்தப் பின்தளம் தீவிரமாகவேயிருக்கிறது.
பெரும் இனவாதிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் அளவுக்கு இன்று வரையில் இனப்பிரச்சினையை அமைதி வழியில் தீர்க்க வேண்டும் என்று யோசித்தவர்களுக்கு சிங்களத்தரப்பு இடமளித்ததில்லை.
ஆகவே அவர்கள் தமக்கு பிற நெருக்கடிகள் ஏற்படாத வண்ணம் ராஜதந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள். அதையும் மீறி நெருக்கடிகள் மிக இறுக்கமாக வந்தால் அதை இந்த இரட்டை அணுகுமுறை மூலம் கடக்க முயற்சிக்கிறார்கள்.
இதற்காக சிஙகளத்தரப்பு மிக நீண்டகாலம்வரையில் பொறுமைகாக்கவும் சலிப்பில்லாமல் தொடர்ந்து தனது தந்திரோபாயத்தைக் கையாளவதற்கும் தயாராகவேயிருக்கிறது.
இதில் வரும் உடனடியான பின்னடைவுகளையிட்டு அது அதிகம் வருந்துவதில்லை. போர்நிறுத்த உடன்படிக்கை செய்தே ஆக வேண்டும், புலிகளுடன் பேசியே ஆகவேண்டும், நோர்வேயை அனுசரித்தே தீர வேண்டும் என்ற போதெல்லாம் சிங்களத்தரப்பு விருப்பமில்லாமலே அதற்கு இணங்கியது.
இப்போது நான்கு வருடங்களின் பின்னர் இதையெல்லாம் அது தூக்கியெறிந்து விட்டது. இறுதியில் போர் நிறுத்த உடனபடிக்கையை நிராகரிக்க வேண்டுமென்ற கட்டத்துக்கு சிங்களத்தரப்பு வந்துவிட்டது. ஆக உடனடி நெருக்;கடிகளைவிடவும் இறுதிவிளைவுகளைப்பற்றியே அது சிந்திக்கிறது.
இப்போது பிரித்தானியா இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்வு நோக்கிய பணிகளில் உதவப்போவதாக செய்திகளும் அறிவிப்புகளும் வெளியாகியபடி இருக்கின்றன. இதை வழமையைப் போல சிங்களத்தரப்பு எதிர்க்கத் தொடங்கி விட்டது.
கடும்போக்காளாகத் தெரியும் சிறிலங்கா அரசின் பாதுகாப்புச் செயலர் கோஅபய ராஜபக்ஸ பிரித்தானியா உள்ளிட்ட வெளிச்சமூகத்தின் கண்டனங்களை பகிரங்கமாகவே மறுத்து கடுந்தொனியில் எதிர்த்திருக்கிறார்.
உண்மையில் இந்த எதிர்ப்புத்தான் சிங்கள சமூகத்தின் நிலைப்பாடு. ஆனால்; இந்த எதிர்ப்பு வெளியே பெரும் விவகாரமாகி விட்டால் அதை அரசாங்கம் வேறுவழிகளில்; சரிக்கட்டிவிடுகிறது.
அதாவது தமது நிலைப்பாட்டையும் போக்கையும் மாற்றாமல் விட்டுக்கொடுப்பதுபோல நடந்து தன்மை நிலைப்படுத்திக் கொள்வது.
கடந்தவாரம் கொழும்பிலிருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு அந்த நடவடிக்கைக் கெதிரான குரல்கள் எழத்தொடங்கியபோது அதை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மூலம் சமாளிக்க முற்பட்டது சிறிலங்கா அரசு.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி எந்த அபிப்பிராயத்தையும் வெளிப்படையாகத்; தெரிவிக்கவில்லை. அதற்கு அவர் தயாராகவும்இல்லை.
பதிலாக எந்தவிதமான அதிகாரரமுமில்லாத வெறும் பெயரளவிலேயே இருக்கிற பிரதமரைக் கொண்டு அந்த நெருக்கடியைத் தணிக்க முயலப்பட்டுள்ளது.
இதில் ஒரு பிரதமரே மன்னிப்புக் கேட்டிருக்கிறார் என்ற தொனிதான் தெரியுமே தவிர வேறெதுவும் நடந்து விடவில்லை.
ஆகவே சிறிலங்க அரசும் சரி சிங்களத்தரப்பும் சரி பேச்சுவார்த்தைக்கோ தீர்வு முயற்சிகளுக்கோ வரப்போவதில்லை இப்போதைக்கு.
பதிலாக இந்தியாவை ஏமாற்றியதைப்போல, நோர்வேயை ஓரங்கட்டியiதைப் போல இன்னும் எவiரையும் தின்று ஏப்பம் விடவே காத்திருக்கிறது சிறிலங்கா அரசும் சிங்களத்தரப்பும்.
அது இப்போதும் சர்வதேச சமூகத்தை அப்;படித்தான் பயன்படுத்தி வருகிறது. சர்வNதுச சமூகம் தன்னை அறியாமலேயோ அறிந்தோ சிறிலங்காவுக்குப் பலியாகியே வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் என்று யாரும் எதிர்பார்கக்கத்தேவையில்லை.
குறிப்பாக சர்வதேச சமூகம் இநதக்கனவை முற்றாக விட்டுவிடலாம். இன்னும் உத்தியோக பூர்வமாக போர்நிறுத்த உடன்படிக்கை விலக்கப்படவில்லை என்ற படியால் அதற்கு இன்னும் பெறுதி இருக்கிறது என்று ஒரு வெளிநாட்டு ராஜதநதிரி பெருமையோடு கடந்தவாரம் கொழும்பில் பேசியிருக்கிறாhர்.
அவருக்கு இலங்கையின் அண்மைய வரலாற்றில் நிகழ்ந்திருக்க்pற இந்தச்சிறு உதாரணங்களெ போதும். அவருக்கு மட்டுமல்ல அவரைப்போல கனவு காணுகிற எல்லோருக்கும்தான்.
No comments:
Post a Comment