Tuesday, May 22, 2007

இனி


சவப்பெட்டியின் நிழலில் துளிர்த்த வேர்கள்
அதி பயங்கரமாகவும்
சாவகாசமாகவும்
வளர்ந்து செல்கின்றன
என் தூக்கத்தினூடும்
விழிப்பினூடும்

ஞபகங்கொள்ள முடியாத
பூச்செடிகளில்
யாரோ விட்டுச் சென்ற
புன் சிரிப்பின்மீது
இரத்தத்துளிகளின் நடனம் பாம்பின் நளினத்தோடு

காதருகில்
அச்சமூட்டும் ரகசியங்களைச்சொல்லும் எதிரி
அழைத்துச் சென்ற விருந்தில்
எதிர்பாராத விதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை

தலைகவிழ்ந்தபடியிருந்தார் கிறிஸ்து
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது காலம்

பன்னூறு ஆண்டுகால
தோல்வியின் நிழலைப்பிரதிபலிக்கும்
அந்தத விழிகளில்
சகிப்பிpன் கடைசிக்கணம்
முடிவடைவதைக் கண்டேன்

No comments: