Friday, November 2, 2012


இந்தியாவின் கைகள் கத்தியும் பூச்செண்டும்



-     கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

இலங்கை அரசியல் மிகவும் கொந்தளிப்பான ஒரு நிலைக்கு மீண்டும் வந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல், அதைத் தொடர்ந்து அந்தத் தேர்தல் பற்றிய குற்றச்சாட்டுகள், இப்போது ஜெனரல் சரத் பொன்சேகாவின்; கைது, இந்தக் கைதுக்கு எதிரான ஆர்;ப்பாட்டங்கள் என அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்ச்சிகள்@ பரபரப்பான செய்திகள்.

யுத்தம் முடிந்தாலும் நாடு அமைதிக்கோ வழமைக்கோ திரும்பவில்லை. ஜனநாயகத்;தைச் சுற்றி ஆயிரக்கணக்கான கேள்விக்குறிகளே நிற்கின்றன. ஒரு மாதத்துக்;குள் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தகவல் இல்லாத நிலை. இன்னொரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசாங்கத்துக்கெதிரான குற்றச்சாட்டுகள், கண்டனங்களோடு தெருவில் இறங்கியிருக்கிறார்கள் சனங்களும் ஊடகவியலாளர்களும்.

வடக்கு கிழக்கிலிருந்த கொந்தளிப்பான நிலைமையும் பரபரப்புகளும் இப்போது தெற்குக்கும் மேற்குக்குமாக நகர்ந்திருக்கிறது. இது இப்படி இன்னும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகள் தெற்கிலும் மேற்கிலும் நீடிக்கக் கூடும். இந்தக் காலஎல்லை சிலவேளை கூடிக்குறையலாம். ஆனால், இந்த நிகழ்ச்சிப் போக்கில் மாற்றமிருக்காது. இதேவேளை இந்தக் கொந்தளிப்புப் பின்னர் மீண்டும் வடக்கு கிழக்குப் பகுதிக்கு மாறும். ஏனெனில் என்னதான் முயன்றாலும் தமிழர்களின் அடிப்படைப்பிரச்சினைகள் இப்போதைக்குத் தீர்;க்கப்படப்போவதில்லை. எனவே அங்கே பிரச்சினையின் தூண்கள் மேலும் பலமாகும். ஆகையால் வடக்குக் கிழக்கில் மீண்டும் கொந்தளிப்புகள் ஏற்படும். இதெல்லாம் இந்தப் பிராந்தியத்தினுடைய தொடர் நிகழ்ச்சியின் வெளிப்பாடாகும்.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் நிலைமையை அவதானிப்போருக்கு ஒரு அடிப்படையான விசயம் தெரியும். இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு பிராந்திய நாடான இந்தியாவும் சர்வதேச சமூகமும் அனுமதிக்கப் போவதில்லை என்பது. சுதந்திரம் கிடைத்த பின்வந்த கடந்த அறுபது ஆண்டுகளும் இலங்கை அமைதியில்லாமலே இருந்திருக்கிறது. இனியும் அது அப்படித்தான் இருக்கப் போகிறது. இதுதான் உண்மை. இப்போது நடந்து கொண்டிருக்கும் கொந்தளிப்புகளும் இனிமேல் தொடரப்போகின்ற கொந்தளிப்புகளும் மேலே குறிப்பிட்டதைப் போல ஒரு தொடர் நிகழ்ச்சியின் வெளிப்பாடுகளே. அது இந்திய பிராந்திய ஆதிபத்தியத்தின் விருப்பு வெறுப்புகள், நலன்கள் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடுகளாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலிருந்து முதல் பத்தாண்டுகளுக்குள்ளேயே மிக மோசமான இனவன்முறைக்குள் சிக்கியது. சிக்கியது என்பதைவிட சிக்க வைக்கப்பட்டது என்பதே சரியானது. அதாவது முதற்பத்தாண்டுகளுக்குள்ளேயே இலங்கையின் ஸ்திரத்தன்மை ஆடத் தொடங்கிவிட்டது.

அன்றைய இருதுருவ அரசியலில் டி.எஸ். சேனநாயக்காவின் ஐ.தே.க மேற்குக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்தபோது இந்தியா அதற்கெதிரான பொறிமுறையை உருவாக்கியது. அதன் விளைவு இனமுரண்பாட்டின் உச்ச வடிவமாகியது. பின்னர் இலங்கைத் தீவை இனமுரண்பாட்டின் அடிப்படையில் அது மிகத் தந்திரோபாயமாக இன்றுவரையில் கையாண்டு வருகிறது.

அதேவேளை இனமுரண்பாட்டரசியலில் ஒரு தணிவு நிலை, அல்லது ஓய்வு நிலை வரும்போது தெற்கில் கிளர்ச்சிகள், போராட்டங்கள், மாற்று அரசியல் என்றவாறாக இந்தியா தன்னுடைய கையை நீட்டிக்கொண்டேயிருக்கும். இங்கே தேவைக்கேற்ப களமும் திசையும் மாற்றப் படுகிறதே தவிர பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கும். பிரச்சினைகளைப் பராமரிப்பதே இந்த அரசியலின் முக்கிய நோக்கமும் உபாயமுமாகும்.

ஜே.வி.பியின் அரசியலில் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் இந்தியா அதற்கு ஆதரவளித்தையும் (ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.வி.பியின் இன்றைய தலைவர் சோமவன்ச அமரசிங்கவை இந்தியாதான் காப்பாற்றியிருந்தது) அதைப்போன்று தமிழ் அரசியலில் அது இன்னும் தன்னுடைய ஆதரவு – எதிர் என்ற இருவகை நிலைப்பாடுகளின் மூலம் தனக்கான சக்திகளையும் பொறிகளையும் வைத்திருப்பதையும் இங்கே மீட்டுப் பார்க்கலாம். (இன்னும் இந்திய ஆதரவுடன் தமிழ்ப் போராளி இயக்கத்தினரும் தமிழ் அரசியலாளர்களும் இந்தியாவின் ஆதரவில் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் இந்தியாவிலும் இருப்பதை அவதானிக்கலாம்).

எனவே இந்திய இராசதந்திரத்தின் விளைவாக, இந்த அறுபது ஆண்டுகளும் இலங்கைத் தீவு தொடர்ந்து வன்முறை, போராட்டங்கள், கிளர்ச்சிகள், இரத்தம் சிந்துதல்கள் என்ற கொந்தளிப்பான அரசியல் நிலைமைக்குள்தான் இருந்து வருகிறது. இலங்கை ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் போது அதனால் தனக்கேற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வே இதற்குக் காரணம். இந்தியாவை விடவும் இலங்கை என்ன பெரிய சக்தி வாய்ந்த நாடா? என்று யாரும் கேட்கலாம். இங்கே இலங்கை பெரிய நாடா சிறிய நாடா என்பதல்லப் பிரச்சினை. இலங்கையின் கேந்திர முக்கியத்துவமே இங்கே கவனத்துக்குரியது. இந்தக் கேந்திர முக்கியத்துவமே எப்போதும் இலங்கைக்கு அபாயமாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. இந்தக் கேந்திர முக்கியத்துவம் ஏறக்குறைய மேற்காசியாவில் பலஸ்தீனத்துக்கு நிகரானது. எனவேதான் இரண்டு மையங்களிலும் பிராந்திய – சர்வதேச சக்திகளின் ஆதிக்கமும் நெருக்குவாரங்களும் அளவுக்கதிகமாக இருக்கின்றன.

இலங்கையின் கொந்தளிப்பான நிலைமைகளுக்கு அதிகமான காரணம் இந்தியாதான். இந்தியாவைப் பொறுத்தளவில், அது இலங்கையில் ஒருபோதும் எந்தப் பிரச்சினையும் தீர அனுமதிக்கப் போவதில்லை. இதற்கான காரணங்கள் பலவுண்டு. சந்தை வாய்ப்புத் தொடக்கம் புவியியல் நலன்வரையில் ஏராளம் அம்சங்கள் இதில் தங்கியிருக்கின்றன. இலங்கை பலமான ஒரு நிலைக்கு தன்னை ஸ்தாபித்துக் கொள்ளுமெனில், அது தன்னிச்சையாக, தனக்குப் பொருத்தமான – விருப்பத்துக்குரிய வெளிச் சக்திகளைத் தேர்ந்து கொள்ளும். இலங்கையின் கேந்தர முக்கியத்துவம் மேற்குக்கும் தேவையானது. சீனாவுக்கும் தேவையானது. என்பதால் இந்தப் போட்டியில் அது தன்னை விரைவாக பலமாக ஸ்தாபித்துக் கொள்ள அதிக வாய்ப்புண்டு. இது ஏறக்குறைய இஸ்ரேலுக்கு நிகரான ஒரு பாத்திரத்தை இலங்கை வகிப்பதாகி விடும்.

அரபுலகத்தின் மத்தியில் அடங்காத் திமிரோடு இஸ்ரேல் இருப்பதை இங்கே ஒரு தடவை நாம் நினைவிற்குக் கொண்டு வந்தால் இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆகவேதான், இலங்கை விவகாரத்தில் எப்போதும் மிக விழிப்பாக இந்தியா இருக்கிறது. இலங்கைக்கான தூதுவர்களை இந்தியா நியமிக்கும் போதே மற்ற இடங்களுக்கான தூதுவர்களை விடவும் கூடிய ஆற்றலாளர்களையும் முக்கியமானவர்களையும் கவனத்திற்கொள்வது வழமை. ஜே.என்.டிக்ஸிற் தொடக்கம் அலோத் பிரசாத் வரையில் இதை அவதானிக்கலாம்.

இந்தியாவுக்கு சீனாவும் ஆபத்தான சக்தி. மேற்குலகமும் ஆபத்தானதே. இன்றைய அரசியல் பொருளாதார நிலைமைகளின் நிமித்தம் அது இந்த நாடுகளுடன் ஒரு சமரசத் தன்மையைக் கடைப்பிடித்தாலும் பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை இழப்பதற்கோ பிற சக்திகளுக்கு விட்டுக் கொடுப்பதற்கோ அது ஒரு போதும் விரும்பமாட்டாது. எனவேதான், ‘இந்தியாவை தமிழர்கள் கையாள்வதன் மூலம் தமிழ் மக்களின் நலனையும் பெறலாம். இந்திய நலனும் பாதுகாக்கப்படும்’ எனச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். (இது எவ்வளவுக்குச் சாத்தியமானது என்பது வேறு விசயம்).

இத்தகைய நிலைமைகளின் பின்னணியில், இலங்கையை கொந்தளிப்புக்குள்ளாக்கிப் பலவீனப்படுத்தித் தனது நிழலின் கீழ் வைத்திருக்க இந்தியா தொடர்ந்து முயல்கிறது. அது முடியாதபோது அது கொஞ்சம் கூடுதலான அழுத்தத்தைக் கொடுக்க முயற்சிக்கிறது. ராஜீவ் காலத்தில் இந்தியா அத்தகைய ஒரு நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. அப்போது ஜே.ஆர் ஜெயவர்த்தனா முற்றுமுழுதாக மேற்குமயப்பட்ட அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். நவீன இலங்கையின் வரலாற்றில் அந்தச் சந்தர்;ப்பமே ஆகக்கூடிய வெளிச் சக்தியின் அழுத்தத்தை இலங்கை பெற்றது. புலிகளுடனான இறுதிப்போரின்போது கூட அத்தகைய அழுத்தங்கள் இலங்கைக்கு நேரவில்லை. இந்தப் போரின்போது சிங்கள இராசதந்திரம் இந்தியாவைப் பகைமைக்குள்ளாக்காத ஒரு பொறியமைப்பைப் பின்பற்றியது. ராஜீவ் காலத்தில் பெற்றுக் கொண்ட அனுபவத்தை சிங்கள இராசதந்திரம் மறக்கவேயில்லை. (இதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம);.

அதிகம் ஏன், இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர், ஐ.தே.க இந்தியாவை ஆதரிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இதில் ரணில் இன்னும் இந்தியாவுடன் நெருக்கமானவராகவே தன்னைக் காட்டிக்கொள்கிறார். அப்படிக் காட்டாமல் அவரால் இலங்கையில் அரசியல் நடத்தமுடியாது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா கூட இந்தியாவை அனுசரித்தே பேசிவந்தார் என்பதையும் வாசகர்கள் நினைவிற் கொள்ளலாம்.

இதனால்தான், இலங்கைத் தேசியத்தை வலியுறுத்துவோர், மாற்று அரசியல் குறித்துச் சிந்திப்போர் எல்லாம் இந்திய ஆதிக்கத்தையும் இந்தியாவின் இத்தகைய தலையீட்டு முயற்சிகளையும் கண்டிக்கின்றனர். ஆனால், என்னதான் இருந்தாலும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தினரோ இப்போது இந்தியாவுடன் முரண்படாத ஒரு நெருக்க அரசியலைப் பின்பற்றுகின்றனர். இதனால், இந்தியாவை வேறு மார்க்கங்களில் திசை திருப்பவோ பதிலாக வேறு உபாயங்களைப் பற்றிச் சிந்திக்கவோ முடியாத நிலையிருக்கிறது.

தன்னுடைய திட்ட வரைபையும் மீறிப் புலிகளின் எழுச்சி அமைந்திருந்தபோது, இந்தியாவுடனான பகைமைச் சக்தியாக புலிகள் மாறியிருந்தபோது, அதை முறியடிப்பதற்காக நீண்டகாலம் பொறுத்திருந்தது இந்தியா. மிக நுட்பமாகக் காய்களை நகர்த்தி, இலங்கை அரசைப் பலப்படுத்தியே புலிகளைத் தோற்கடித்தது அது. தான் நேரடியாகக் களத்திலிறங்கும் போது அதன் விளைவுகள் தமிழகத்தில் எதிரொலித்து இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்ற உணர்ச்சிகரமான பகுதியைத் தீண்டாமல் இந்தக் காரியத்தை மிகக் கச்சிதமாக நடத்தி முடித்ததையும் இங்கே நாம் அவதானிக்கலாம்.

ஆக மொத்தத்தில், இந்தியாவின் ஆதிக்க நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே இலங்கையின் நிகழ்ச்சிகள் அமைகின்றன. சரத் பொன்சேகா கைதின் பின்னணியிலும் இந்தியாவின் கரங்கள் இருக்கின்றன. அதை எதிர்க்கும் நடவடிக்கைகளிலும் இந்தியாவின் கைகளிருக்கின்றன. இதுதான் இந்த உண்மையின் சுவாரஷ்யமான பகுதி. ‘பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி விடும்’ ஒரு வித உத்தி இது. ஆனால் ஒன்று, என்னதானிருந்தாலும் ஒரு போதும் இலங்கையில் ஆட்சியிலிருக்கும் அரசுக்கெதிராக ஒரு கிளர்ச்சிச் சக்தி தலை தூக்குவதற்கு – ஆட்சியைக் கைப்பற்றுமளவுக்குப் பலம் பெறுவதற்கு இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. அது இந்தியாவுக்குப் பாதகமான நிலைமைகளை – தன்னால் கையாள முடியாத நிலைமையை - உருவாக்கிவிடும். அதாவது அப்படியான நிலை ஏற்படுமானால் அது தனது கையை மீறயதாகி விடும் என்று இந்தியாவுக்குத் தெரியும்.

எனவே, இலங்கையின் அரசைத் தோற்கடித்து விடாதவாறு ஒரு சமனிலையில் இந்தக் கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் அரசியல் நெருக்கடிகளையும் அது ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். அந்த வகையில்தான் இப்போது தெற்கில் தொடங்கியிருக்கிறது கொந்தளிப்பும் நெருக்கடியும். இது சற்றுக் காலத்தின் பின்னர் வடக்குக் கிழக்குக்கு திசை மாறும். அதுவரை வடக்குக் கிழக்கு மக்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இங்கே சற்று விவேகமாக நடந்து கொண்டால் வருகின்ற நெருக்கடியில் பாதியைக்; குறைக்கலாம். அல்லது அவற்றிலிருந்து மீண்டு விடலாம். அல்லது அவற்றை விலக்கிவிடலாம். அவ்வளவுதான்.

இந்த அபாய அரசியலை, தீராத நெருக்கடி அரசியலை மாற்றவேண்டுமாயின் உள்ளரங்கில், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்துக்கான வழிகள் திறக்கப்படவேண்டும். ஆனால், இலங்கை அரசியலிலும் சமூகச் சூழலிலும் ஐக்கியத்துக்கான வழிகள் மூடப்பட்டேயிருக்கின்றன. இந்த ஐக்கியத்துக்கான வழிகள் திறக்கப்படாதவரையில் இலங்கையில் எந்தப் பெரும் பிரச்சினைகளையும் நம்மால் தீர்த்துக் கொள்ள முடியாது. ஆனால், நடைமுறையில், இனமுரணை வளர்க்கும் காரியங்கள்தானே நிகழ்கின்றன. இதில் எல்லாச் சமூகங்களின் அரசியல் தலைமைகளுக்கும் முக்கிய பங்குண்டு. அவற்றின் இருப்பே இந்த இனமுரண்பாட்டு அரசியலில்தான் இருக்கின்றன. எனவே கொந்தளிப்பும், நெருக்கடியும் நிம்மதியின்மையும் கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் இருந்தே தீரும்.

அதுமட்டுமல்ல, இந்த இனமுரண்பாட்டு அரசியலின் விளைவாக - இந்தியத் தலையீட்டரசியலின் விளைவாக - தனியே பொதுமக்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இதில், அரசியல் தலைவர்கள் முதல் படைத்தளபதிகள், உயர்மட்ட அதிகாரிகள் வரையில் பலியாகிவருகின்றனர். பாதிக்கப்பட்டும் வருகின்றனர். புலிகளின் தோற்றத்துக்கு முன்னரே எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க கொல்லப்பட்டார். பின்னர் பல சிங்களத் தலைவர்கள், படைத்தளபதிகள் கொல்லப்பட்டனர். மட்டுமல்ல, அ. அமிர்தலிங்கம், அஷ்ரப் போன்ற சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள் கொல்லப்பட்டமையையும் நாம் இந்தப் பின்புலத்தில்தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

12.02.2010

Friday, June 1, 2012






வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பல முக்கிய இடங்கள் இப்போது இராணுவப் பிரதேசங்களாகவும் இராணுவ வலயங்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில பிரதேசங்கள் மேலும் இராணுவ வலயங்களாக்கப்படவிருக்கின்றன.

ஒரு போராட்டம் தோற்கடிக்கப்படும்பொழுது இந்த மாதிரி அழுத்தங்களும் ஆக்கிரமிப்புகளும் அந்தப் போராட்டத்தை நடத்திய சமூகங்களின் மீது திணிக்கப்படுவது வழமை.

இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஈழுவிடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியாய முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டிருக்கும் பலவீனங்களும் தடுமாற்றங்களும் இந்த மாதிரி ஆக்கிரமிப்புக்கும் அழுத்தங்களுக்கும் இடமளித்திருக்கிறது.

அரசியல் ரீதியாக பலமான நிலையில் தமிழ் பேசும் இனங்கள் இருந்தால் இந்த மாதிரி நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அத்தகைய பலத்தை நோக்கி தமிழ் பேசும் இனங்களின் அரசியல் முன்னெடுப்புகள் நடப்பதாகத் தெரியவில்லை. ஆகவே பலவீனப்பட்ட அரசியற் சூழலில் தங்களுடைய கிராமங்களையும் வளங்களையும் இழந்து நிற்கும் மக்களின் தொகை வரவரக் கூடிக் கொண்டே போகிறது.

இந்தப் பின்னணியில், கிளிநொச்சி மாவட்டத்திலும் பல பிரதேசங்கள் படைநலன்களுக்காக இழக்கப்படுகின்றன. அல்லது பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்று,  பூநகரிப் பிரதேசத்தில் இருக்கும் இரணைதீவு. இந்தத் தீவின் மக்கள் இப்போது முழங்காவில் பகுதிக்கு இடம்பெயர்க்கப்பட்டு இரணைமாதா நகர் என்ற இடத்தில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

தங்களுடைய சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாத நிலையைப் பற்றி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் (அதிபர், இரணைதீவு தமிழ் வித்தியாலயம் -  தலைவர் மீனவர் சங்கம், இரணைதீவு) மகேந்திரராஜா (செயலாளர், இரணைதீவு மீனவர் சங்கம் - தலைவர், இரணைதீவு கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர்) ஆகியோரைச் சந்தித்து அவர்களுடைய கிராமத்துக்குப் போகமுடியாத நிலைமை குறித்து உரையாடினோம்.

இரணைதீவைப் பற்றிச் சொல்லுங்கள்?
ஜெயசீலன்:-

இது பூநகரி பிரதேச செயலர் பிரிவில் இருக்கிற ஒரு மீன்பிடிக் கிராமம். இந்தக் கிராமம் கடலால் சூழப்பட்டிருக்கு.  அழகான ரண்டு தீவுகள். ஆனால் இரட்டைப் பிள்ளைகளைப் போல ரண்டும் ஒண்டாச் சேர்ந்த மாதிரி அருகருகாக இருக்கின்றன. அழகான தீவுகள். எங்களுக்கு மன்னாரும் கிட்டத்தில் இருக்கு. யாழ்ப்பாணமும் கிட்டத்தில் இருக்கு. நெடுந்தீவும் கிட்டத்தில இருக்கு. ஆனால் நாங்கள்தான் இப்ப இந்தத் தீவுகளுக்கு எட்டத்தில இருக்கிறம். தொழிலுக்குப் போகும்போது தூர நின்று ஊரைப் பாக்கிறம்.

நல்ல மீன் பாடுள்ள கடல். எந்தக் காலத்திலயும் மீன் படும். வாடையில இன்னும் கூடப்படும். ஆனால், இப்ப நாங்கள் எங்கட தீவைச் சுற்றி தொழில் செய்யிறம். தீவில – ஊரில நேவி இருக்கு.

ஊரை விட்டு வந்து பத்து வருசத்துக்கு மேலாகீட்டுது. இன்னும் எத்தனைவருசம் செல்லுமோ தெரியேல்லை திரும்ப ஊருக்குப் போறதுக்கு?

ஊரில 276 குடும்பங்கள் இருந்தன. எல்லாரும் கடற்றொழில்தான் செய்தார்கள். அட்டை பிடித்தார்கள். தரமான அட்டை. நல்ல விலை விற்கும். ஆறு மாதம் அட்டை பிடிக்கலாம். அது ஒரு சீசனுக்குத்தான்.

எப்போது இரணை தீவை விட்டு வெளியேறினீங்கள்? ஏன் வெளியேறினீங்கள்?

மகேந்திரராஜா:-

1990 களின் முற்பகுதியில் வெளியேறினோம். கடற்படை புலிகளைக் கண்காணிப்பதற்காக இரணைதீவைப் பயன்படுத்த முனைந்தது. ஆனால், புலிகள் அதனை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றார்கள். இதால அங்க எப்பவும் சண்டை நடக்கும்.
இந்த நிலைமையில அங்க எப்பிடி இருக்க ஏலும்?

பேசாமல் சனங்கள் வெளிக்கிட்டுட்டுதுகள். அங்க இருந்து வெளியேறிய சனங்களுக்கு முழங்காவிலுக்கு மேற்குப்பக்கமாக இருந்த இடத்தை ஒதுக்கித் தந்தார்கள். அங்கயே குடியிருப்பும் போடப்பட்டுது. பள்ளிக்கூடம், தேவாலயம், ஆரம்பசுகாதார நிலையம் எண்டு எல்லாம் கட்டப்பட்டுது.
இரணைமாதா நகர் என்று பேரும் வைத்தார்கள். இப்ப இஞ்சதான் சனங்கள் இருக்கினம். மீள் குடியேற்றமும் இங்கேதான் நடந்திருக்கு.

போர் முடிஞ்சபிறகு, எங்கட பழைய இடத்துக்குப் போகலாம் எண்டுதான் நினைச்சிருந்தம். ஆனா, அதுக்கு வழியில்லாமக்கிடக்கு. அங்க போற கதையை எடுத்தாலே அதை விடுங்கள் என்று சொல்கிறார்கள்.

அங்க இப்ப நேவி இருக்கெண்டு சொன்னமே. அது நிரந்தரமாக ஆகிவிடுமோ எண்டுதான் யோசிக்கிறம்.

இரணைமாதா நகரில் எல்லோருக்கும் காணி, வீடு எல்லாம் இருக்கிறதா?

ஜெயசீலன்:-

இரணைதீவில இருந்து முந்தி வந்த ஆக்களுக்கு காணி இருக்கு. வீடும் இருந்துது. ஆனா இப்ப வீடொண்டும் இல்லை. புதிசா எல்லாரும் கொட்டில் போடுறம்.

இப்ப இந்தப் போர்க்காலத்தில நடந்த பிரச்சினைகளா கன கலியாணங்கள் நடந்திருக்கு. அதுகளுக்கு இப்ப காணியும் இல்லை. வீடும் இல்லை. இதொரு புதுப் பிரச்சினை. இதுக்குத் தீர்வு காணவேணும்.

இப்ப வீட்டுத் திட்டம் வந்திருக்கு. வீடு கட்டக் காசு தாறதெண்டால் காணி உறுதி வேணும் என்கிறார்கள். காணி இல்லை எண்டால் வீடில்லை. அருமையான வாய்ப்பு தவறிப் போகப் போகுது.

இதுக்கும் தீர்வு காணவேணும். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைப் பற்றிக் கதைக்கிறார்கள். ஆனால், இஞ்ச இருக்கிற ஆட்களுக்கு காணியை பெற்றுக் குடுக்கிறதைப் பற்றி, இருக்கிற காணியளுக்கு அத்தாட்சிக் கடிதங்களை வாங்கிக் குடுக்கிறதைப் பற்றி எந்த அக்கறையும் இவையளுக்கு இல்லை.

இப்படித்தான் நாங்கள் கெட்டுக் கொண்டு போறம்.

எங்கள எங்கட இடத்துக்குப் போகவிட்டால், எங்கட கோயிலுக்குப் போகவிட்டால் போதும். அங்கபோய்த் தொழிலைச் செய்து முன்னேறியிடுவம்.
எங்கட கவலையில முக்கால்வாசி குறைஞ்சு போயிடும்.

இதுக்கு என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறியள்?

மகேந்திரராஜா:-

இதுக்கு, முதல்ல எத்தினை பேருக்கு காணி வேணும் எண்ட விவரத்தைத் திரட்ட வேணும். அதுக்கு காணிக்கச்சேரி வைக்க வேணும். அதில
காணி இல்லாத ஆக்களுக்கு காணியும் அத்தாட்சிப் பத்திரம் இல்லாத ஆக்களுக்கு பத்திரமும் வழங்க வேணும். இதை காலந்தாழ்த்தாமல் செய்யவேணும்.

ஆனா, இதைப்பற்றி எத்தினையோ முறை எடுத்துச் சொல்லியிட்டம். அதுக்கு யாரும் காது குடுத்த மாதிரித் தெரியேல்ல. பொதுவாகவே எங்கட பக்கத்தை ஆரும் கவனிக்கிறது குறைவு. இப்ப முழுசாக் கைவிட்டிட்டார்கள்.

ஆனால், எங்கட மீனுக்கும் அட்டைக்கும் மட்டும் வாறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிட்டை எல்லாம் சொல்லியிருக்கிறம். இந்தா பார்க்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு பலனையும்
காணேல்ல.

இப்போது இரணைமாதாநகரில் மீளக் குடியமர்ந்திருக்கிற மக்கள் என்னசெய்கிறார்கள்?

ஜெயசீலன்:-

சிலபேர் தொழிலுக்குப் போகினம். சிலபேருக்குத்தான் வள்ளமும் வலையும் கிடைச்சிருக்கு. 19 பேருக்கு. கடற்றொழிலை நம்பிய சமூகம் தொழில் இல்லாமல் இருந்தா எப்பிடிச் சீவிக்கிறது?

இதால கல்வியில வீழ்ச்சி. வாழ்க்கை கெட்டுப் போய்க்கிடக்கு. கொஞ்ச உதவியாவது கிடைச்சால் இந்தச் சனங்கள் கொஞ்சம் நிமிர்ந்திடும்.
ஆட்டை பிடிப்பு நடக்குது. ஆனால், அதைக் கொள்வனவு செய்யிற ஆட்கள் கொள்ளை லாபம்  சம்பாதிக்கிறார்கள். அது வெளியூராக்கள்.
அட்டையை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அதுக்கிடையில ஆறு ஏழு கை மாறுது. ஆட்டை பிடிக்கிற ஆக்களுக்குக் கிடைக்கிற காசைவிட இiடையில நிக்கிற தரகர்களுக்குக் கிடைக்கிற லாபம் கூட. இது கொடுமை.

சங்கம் முந்தி கொள்வனவு செய்து வித்தது. இப்ப சங்கத்திட்ட காசில்ல. வளமில்லை. கடனுக்கும் ஏற்பாடில்ல.

சங்கம் கொள்வனவு செய்தால் தொழிலாளிக்கு லாபம் கூடக்கிடைக்கும். இப்ப பல கைகள் மாறிறதால பாதிக்கப்படுகிறது தொழிலாளர்கள்தான். இப்ப ஒரு கிலோ அட்டையை 13.500 ரூபாவுக்கு எடுக்கிறார்கள். ஆனால், சங்கம் இந்த அட்டையை எடுத்தால், 20.000 ஆயிரத்துக்கு மேல எடுக்கும். முதல் தர அட்டையின்ரை குறைஞ்ச விலை 25.000 ரூபாய்.

இப்பிடித்தான் மீன், றால் கொள்வனவுகளும் நடக்கு.

உங்களுடைய கிராமத்தில் போரினால் ஏற்பட்ட இழப்புகள் என்ன?

மகேந்திரராஜா:-

ஊரையே  இழந்திருக்கிறம். அதைவிட பெரிய இழப்பெது? உயிர் இழப்பெண்டு சொன்னால், 53 பேர் செத்திருக்கினம். ஒருதருக்கும் வீடில்லை. தொழில் இல்லை. வருமானம் கிடையாது. சேர்த்து வைச்சிருந்த பொருள் பண்டமெல்லாம் அழிஞ்சு போச்சு.

சுருக்கமாகச் சொன்னால் கடந்த காலம் எண்டதும் நிகழ்காலம் எண்டதும் எங்களுக்கில்லை. எதிர்காலம் எண்டதிலயும் அரைவாசி இல்லை.

இப்போது நீங்கள் எதிர் நோக்குகிற பிரச்சினைகள் என்ன? இதற்கெல்லாம் என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறியள்?

மகேந்திரராஜா:-

நாங்கள் முன்னமே சொல்லியிருக்கிறம். எங்கட ஊருக்குப் போகவேணும். எங்கட கோயிருக்குப் போய்க் கும்பிடவேணும் எண்டு. அதைவிடக் காணிப்பிரச்சினை, தொழிற்பிரச்சினை, வருமானப்பிரச்சினை, படிப்பு, அது இது எண்டு ஏராளம் பிரச்சினையிருக்கு. சுருக்கமாச் சொன்னால் எல்லாமே பிரச்சினைதான்.

நாங்கள் மீளக் குடியமர்ந்து எட்டுமாதங்களாகியிட்டுது. பிரதேச செயலரை ரண்டு தடவைதான் பாத்திருக்கிறம். அதுக்கு மேல அவர் வரக்கூடாதெண்டு ஆரும் சொல்லயில்லை. ஆனால், அவை வாறதில்லை. அரசாங்க அதிபர் எட்டிப்பாக்கவேயில்லை.

போரில பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இந்த மாதிரி பொறுப்பான அதிகாரிகள் அடிக்கடி வந்து பாத்து நிலைமைகளைச் சீராக்க வேணும்.

ஆனால், இவையளுக்கு நாங்கள் எங்கட பிரச்சினையளைச் சொல்லியிருக்கிறம். பதில் நடவடிக்கைகள் எதையும் காணயில்லை. என்னதான் செய்யிறார்கள் எண்டு தெரியேல்ல.

இதைவிட, எங்களுக்கு தொழில் செய்யப் படகு வேணும். வலை வேணும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொஞ்சக் காலத்துக்காவது உதவி தேவை. இதுக்கெல்லாம் நாங்கள் ஆரிட்டப் போய்க் கேட்கிறது?

உண்மையைச் சொன்னால் சனங்களுக்கு இப்ப ஆரும் உதவிக்கில்லை. அதுகள் தங்கட பாட்டில ஏதோ செய்யக் கூடியதைச் செய்து கொண்டு வாழுதுகுள். நாங்களும் அப்பிடித்தான்.

கடற்றொழிற் சமாசம், உங்களுடைய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் என்ன? அவை ஏதாவது உதவிகளைச் செய்ய முடியாதா?

மகேந்திரராஜா:-

சங்கங்களின் நிலைமை மிக மோசம். வைப்பில போட்ட காசை வங்கிகள் குடுக்குதில்லை. அதைவிடச் சங்களின் சொத்தெல்லாம் முள்ளிவாய்க்காலில் கைவிட்டாச்சு. சமாசம் இப்போதுதான் இயங்குது. ஆனால், விரைவில் ஏதோ நல்ல முன்னேறறம் ஏற்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், கடற்றொழில் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக பல தேவைகளுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறம். ஐஸ் தொழிற்சாலை ஒன்றை அமைத்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்ப வலைப்பாட்டில ஒரு ஐஸ் சேகரிப்பு நிலையம் ஒண்டைத் திறந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுது. அதைப்பற்றிய குழப்பமான செய்திகளும் வந்து கொண்டிக்கின்றன.

மீண்டும் நல்லதொரு வாழ்வை, இயல்பான வாழ்க்கைiயை, உங்களுடைய கிராமத்தில் வாழும் நிலையை எப்போது நீங்கள் பெற முடியும் என்று நீங்கள் கருதுறீங்கள்?

ஜெயசீலன்:-

அதுதான் பிரச்சினையே. இப்பிடி விரைவாக யுத்தம் முடியும். இப்பிடி நாங்கள் அகதியாக இருந்து மீள் குடியேற்றப்படுவம் எண்டெல்லாம் நாங்கள்
எதிர்பார்க்கயில்லை. நாம் எதிர்பார்க்காத நிலையில எல்லாம் நடந்து கொண்;டிருக்கு.

ஆனால், சில பிரச்சினைகளுக்கு இப்போதைக்கு தீர்வு கிடைக்கும் எண்டு நாங்கள் யோசிக்கவில்லை. ஆனால் அது கிடைக்க வேணும்.
இயல்பு நிலை எப்பதான் கிடைக்குமோ? ஆனால், ஒண்டு, புதிசு புதிசா ஆட்கள் வந்து சனங்களுக்குச் சின்னன் சின்னதாக உதவுகினம். சிறு துளி பெரு வெள்ளம். உதவட்டும்.

பிறரிடம் கையேந்திறதை விட எங்கட உறவுகளிட்டக் கேட்கலாம். அவையளும் இந்தச் சந்தர்ப்பத்தில தாராளமாய் உதவவேணும். இது கடமையல்ல. பணி. தேவையின் பாற்பட்ட பணி.

நாங்கள் நிமிந்திட்டம் எண்டால் எல்லோரையம் ஆதரிப்பம். எல்லாருக்கும் உதவுவம். இரணமாதா நகர்ச் சனங்கள் அப்படிப்பட்ட பண்பைக் கொண்டவர்கள். ஆனால் காலந்தான் பிழைச்சுப் போய்க்கிடக்கு.

00

ஒரு சிறுமியின் கவிதை


















‘அப்பாவை குண்டு வீச்சில் இழந்தோம்
அம்மாவின் கையை எறிகணை பறித்தது
அண்ணா எங்கே என்று தெரியவில்லை                                                               எங்களுக்கு வீடில்லை
மரங்களுக்குக் கீழே எப்படி வாழ்வது?
படிக்க மனசில்லை
விளையாடுவதற்கு நண்பர்களில்லை
பக்கத்து வீட்டுக்காரர்கள்
உயிரோடு இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது

அம்மா எதுவும் சொல்வதிலலை
சண்டை முடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள்
ஆனால்
இன்னும் துவக்கோடு ஆமிக்காரர்கள் திரிகிறார்கள்....’



Monday, May 28, 2012

கனவுகள் கலைந்து போன நிலை









இது ஒரு வேறு பட்ட நேர்காணல்.


கனவுகள் கலைந்து போன நிலைமையில் ஒரு போராளி – சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி(?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி(?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது.
அதிகம் பேச விரும்பாத – ஏன் பேசவே விரும்பாத – பேசி என்னதான் பயன் என்ற நிலையில் - இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.


குறிப்பாக, விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவு படுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன், என்று சொல்லும் ஒரு போராளியோடு உரையாடுகிறோம்.


இந்தப் பதிவு மிகவும் உணர்ச்சி புர்வமான நிலையில் பதிவு செய்யப்பட்டது.

00


00 எதிலிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. என்றாலும் நாம் பேச வேணும். நீங்கள் இப்போது எப்படி எல்லாவற்றையும் உணர்கிறீங்கள். அதாவது, கடந்த காலம் நிகழ்காலம் குறித்து....

ம். என்னத்தைச் சொல்ல. எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் சொல்ல வேணும் போல இருக்கு. ஆனால் அடுத்த கணமே ஒண்டும் முடியேல்லப் போலவும் இருக்கு. எல்லாமே குழப்பந்தான்.

இப்ப பிரச்சினைகள் கூடியிருக்கு. நாங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலைமை உருவாகியிருக்கு. ஆனால் இப்படியே காலம் உறைஞ்சு போயிருக்காது. நாளைக்கு இப்ப இருக்கிற நிலைமை இருக்காது. இன்னொரு மாதிரியான நிலைமை வரும். அது முந்தியைப் போலத்தான் இருக்கம் எண்டில்லை.

இப்ப இருக்கிற இந்த நிலைமையை யாராவது நினைச்சிருப்பமா? அப்பிடித்தான் நாளைக்கு இன்னொரு நிலைமை வரும் எண்டு நம்பிறன் வரலாறு எப்பவும் தேங்குவதில்லை. அது பின்னோக்கியும் பாய்வதில்லை எண்டு சொல்லுவார்கள்.

இது எனக்கு மட்டும் தெரியிற ஒரு பிரச்சினையெண்டு நான் நினைக்கேல்ல. அல்லது எங்களைப் போல ஒரு நிலைமையில இருக்கிற ஆக்களின்ர பிச்சினை எண்டும் நான் பாக்கேல்ல.

பொதுவாகச் சொல்லிறதெண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல எண்டுதான் எங்களின்ரை நிலைமையைச் சொல்ல வேணும். கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது எண்டு சொல்லுவினம். நாங்கள் காட்டில கைவிடப்படேல்லை. முள்ளுக்கு மேல நெருப்பைப் பரவி விட்டுஇ அதுக்கு மேல நிக்கச் சொன்னதைப் போல இப்ப இருக்கிறம்.

இதில கடந்த காலம் - நிகழ்காலம் எண்டு என்ன இருக்கு? ஆனா ஒண்டு மட்டும் உண்மைஇ நாங்கள் எங்களால முடிஞ்ச அளவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டிருக்கிறம். அதாவது போராட்டத்தில தவறுகள் பிழைகள் இருக்கலாம். போராளிகளிலயும் அந்தப் பலவீனங்கள் இருக்கலாம். அப்பிடி ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்.

இல்லையெண்டால் எப்பிடித் தோற்க முடியும். அதுவும் உயிரையே ஆயுதமாக்கிய ஒரு அமைப்புத் தோற்கிறது எண்டால் என்ன சாதாரண சங்கதியா? ஆகவே எங்கோ குறைபாடு இருக்கு.

நான் இப்ப அதைப் பற்றியெல்லாம் கதைக்க விரும்பேல்ல. அதைக் கதைக்கிறதால எனக்குத்தான் இப்ப பிரச்சினை. ஆனால்இ இப்ப எங்கட போராட்டத்தின்ர சரி பிழைகளைக் காணக்கூடியதாக இருக்கு. இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும்.

என்னைப் பொறுத்தவரை எல்லாம் ஒரு படிப்பினைதான். ஆனால்இ மனிசன் எவ்வளவைப் படிச்சாலும் திருந்தவே மாட்டான்.

நாங்கள் பட்ட கஸ்ரங்களுக்கான பயன் கிடைக்கயில்லை எண்டதும் சனங்களின்ரை சாவு அநியாயமாகப் போயிட்டுது எண்டுந்தான் எனக்குக் கவலை. மற்றப்படி நான் என்னைப் பற்றிக் கவலைப் பேடேல்ல. எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலயும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலயும் வளர்த்தெடுத்த அமைப்பின்ர தோல்வியைத் தாங்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில இருந்த வேறு பாட்டைச் சரியாகக் கணக்கெடுக்கத் தவறியிட்டம் எண்டுதான் சொல்லுவன்.


00 அப்படியென்றால், அதை விளக்க முடியுமா? வெற்றிக்கும் தோல்விக்கும் இடையி்ல் இருந்த வேறுபாட்டை எப்படிப் புரிந்திருக்க வேணும்?

தோல்வியில் கிடைக்கிற அனுபவங்கள் வேற. வெற்றியில கிடைக்கிற அனுபவங்கள் வேற. போராட்டத்தில ஒரு போதும் தோல்வி எண்ட சொல்லையே பாவிக்கக்கூடாது. அதைப் பின்னடைவு எண்டுதான் சொல்ல வேணும். அப்பஇ பின்னடைவில நாங்கள் ஒரு நெருக்கடியைச் சந்திப்பம். அந்த நெருக்கடியில இருந்து மீளுறதுக்காக எல்லாரும் ஒண்டாக நிற்பினம்.
ஆனால வெற்றியில ஆளாளுக்குப் போட்டி வந்திடும். பங்கைப் பகிர்வதில்இ சுகங்களையும் வசதிகளையும் அனுபவிக்கிறதில போட்டிகள் வரும். இந்தப் போட்டியில இடைவெளிகளும் பகைமையும் தானாகவே வரும்.
இதை என்ரை கண்ணால பார்த்திருக்கிறன்.

இது உள்ளுக்குள்ளை எண்டால்இ வெளியில வெற்றியின் போது வாற வாய்ப்புகளையும் தொடர்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாங்கள் சரிவரப்பயன்படுத்தியிருக்கலாம். இதுக்கு ஒரு நிதானம் இருந்திருக்க வேணும். ஆனால்இ இதெல்லாம் ஏன் இடையில பிழைச்சு கெட்டுப் போனதெண்டு தெரியேல்ல.


00 இறுப்போர் நடந்த போது என்ன செய்தீர்கள்? நீங்கள் இறுதி வரையிலும் முள்ளிவாய்க்காலில் இருந்தவர் என்ற வகையி்ல் அந்த நாட்களை – அந்தக் கணங்களை எப்படி உணர்ந்தீர்கள்?

இதைப் பற்றி நான் கதைக்க விரும்பேல்ல. ஏனெண்டால் இதைப் பற்றி நாங்கள் சரணடைந்த பிறகு எங்களை விசாரித்த படைத்தரப்பிடம் சொல்லியாச்சு. இனி நான் வேற இடங்களில கதைச்சு வேற பிரச்சினைகளை உருவாக்க விரும்பேல்ல. பொதுவாகச் சொல்லிறதெண்டால் இதைப் பற்றிக் கதைக்காமல் விடுறதுதான் நல்லது.

ஆனால் எங்கட தலைவிதியைப் பாத்தீங்களா? நாங்கள் ஆரிட்டை எதையெல்லாம் சொல்லக் கூடாது எண்டு நினைத்தமோ அதையெல்லாம் அவங்களிட்ட சொல்ல வேண்டிய நிலையொண்டு வந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனால் அதை ஏற்றுக் கொண்டுதான் வாழுறன்.

கடைசி நாட்களில் சாவதா சரணடைவதா எண்ட போராட்டம் எனக்கு வந்தது. என்னை மாதிரித்தான் பல ஆயிரக்கணக்கான போராளிகள் அந்த வெட்டையில – கொதிக்கிற மணற் குவியல்களுக்கு மேல நிண்டார்கள்.
ஒருவராலயும் ஒரு முடிவையும் எடுக்கேலாமல் இருந்திது. பிறகு நடக்கிறது நடக்கட்டும் எண்டு சனங்களோட ஆமியிட்ட போனதுதான். ஆனால்இ அப்பிடிப் போகேக்க இருந்த மன நிலைலையைச் சொல்லேலாது. அது பெரீய கொடுமை.

பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு, என்ன செய்யிறது, என்ன நடக்கப் போகுது எண்டு தெரியாமல் வெறுங்கையோட எதிர்த்தரப்பிட்டப் போறதை எப்பிடிச் சொல்ல முடியும்?

00 விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எதிரியை அழிப்பது அல்லது எதிரியிடம் சிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்வது என்ற மரபைக் கொண்டவர்கள். சயனைட் என்ற ஒரு விசயமே புலிகளினால்தான் தமிழ்ச் சூழலில் பிரபலமாக்கப்பட்டது. புலிகளின் சிறப்பு அடையாளங்களில் சயனைட் ஒன்று. இந்த நிலையில் நீங்கள் இறுதிக் கட்டத்தில் எதிர்த்தரப்பின் கைகளில் சிக்காமல் சரணடையும் முடிவை எப்படி எடுத்தீர்கள்?

இது தனியே நான் எடுத்த முடிவோ எனக்கு மட்டும் ஏற்பட்ட ஒரு பிரச்சினையோ இல்லை. அப்படி எண்டால்தான் நீங்கள் என்னை இப்பிடிக் கேட்க முடியும். இது பல ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்க வேண்டியிருந்த பிரச்சினை. அதிலும் முற்றிலும் வேறு பட்ட ஒரு சூழலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை.

என்னைப் பொறுத்தவரை இந்த நிலைமை யாரும் எதிர்பார்த்திருக்காத ஒரு பிரச்சினை எண்டுதான் சொல்லுவன். எதிரிகள் கூட இப்படியொரு நிலையில் புலிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

அதைப்போலவே இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கதைப்பதும் ஒரு எதிர்பாராத நிலைமைதான்.

நாங்கள் எதிர்பாராமல் சரணடைய வேண்டி வந்ததைப் போலவே சயனைற் கடிக்காமல் விட்டதும் ஒரு எதிர்பாராத விசயந்தான்.

ஆனால் இதே இடத்தில நான் ஒரு விசயத்தையும் சொல்ல வேணும். நாங்கள் ஏன் சயனைட் குடித்திருக்க வேணும் எண்டு எதிர்பார்க்கிறியள்? அல்லது அங்கே சயனைற் கடிக்காமல் விட்டதைத் தவறாகப் பாக்கிறீங்களா?

இயக்கத்தையும் தலைமைப்பீடத்தையும் இயக்கத்தின்ர ஆயுதங்களையும் பாதுகாக்க வேணும் – எதிரியிடம் இரகசியங்கள் எதுவும் போய்ச் சேரக்கூடாது.

ஆயுதங்களை எதிரி எடுக்கக் கூடாது எண்டதுக்காகத்தானே சயனைட் குடிக்க வேணும்? அப்படித்தானே இயக்கத்தின்ர விதியும் எதி்ர்பார்ப்பும் இருந்தன.
ஆனால்இ அந்த இயக்கமும் ஆயுதங்களும் தலைமையும் எதிரியிடம் சிக்கிய பிறகு – எல்லாமே முடிஞ்சிட்டுது எண்ட பிறகு நாங்கள் சயனைட் கடிக்கிறதால என்ன பிரயோசனம்?

ஒருக்கா நீங்கள் அந்தக் காட்சியை நினைச்சுப் பாருங்கள். இறுதிப் போரில சரணணடைந்த 13000 ஆயிரம் பேரும் சயனைற்றைக் கடித்துச் செத்திருந்தால் அந்தப் பிரதேசம் முழுக்கவும் பிணக்காடாகத்தான் இருந்திருக்கும்.  ஆனால்இ அதால ஆருக்குத்தான் என்ன லாபம். அப்பவும் எதிர்த்தரப்புத்தான் சந்தோசப்பட்டிருக்கும்.

ஆனால்இ பிறகு நான் பல தடவை அங்க அப்ப சயனைட்டைக் கடிக்காமல் விட்டதுக்காகக் கவலைப்பட்டிருக்கிறன்.

இருக்கும் வரையும் சரியாகவும் விசுவாசமாகவும் இயங்கினம். எல்லாம் கையை மீறிப் போனாப் பிறகு வீம்புக்கு செத்து மடியிறதால என்ன பலன்? நீங்கள் சொல்கிற படி பாத்தால்இ போர் முடியும் போது மிஞ்சியிருந்த அத்தனை போராளிகளும் செத்திருந்தாலும் என்ன நடந்திருக்கும்? சாவுதான். பிணக்குவியலாக அப்பிடியே செத்துத்தானிருப்பம்.

ஒரு சாவின் மூலம் மக்களுக்கும் தாய் மண்ணுக்கும் ஏதாவது கிடைக்கும் என்றால்இ நானோ அல்லது மற்றப் போராளிகளுமோ செத்திருக்கலாம். அது வீரச்சாவாகவும் கருதப்பட்டிருக்கும்.

ஆனால்இ அதுக்கெல்லாம் சந்தர்ப்பம் இல்லாமலே நாங்கள் சரணடைய வேண்டி வந்தது. பிறகென்னஇ கைதியாக்கினார்கள். கைதி எண்டால் அவர்களுடைய கட்டுப்பாட்டில்இ அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைச் செய்யும் நிலைதான் இருந்தது. இப்பவும் ஏறக்குறைய அதே நிலைமைதான்.
இப்ப வெளியாலே விடப்பட்டிருக்கிறம். இது பேரளவில தான். ஆனால் சுயாதீனமாக நாங்கள் வாழ முடியேல்ல. நாங்கள் முயன்றாலும் சூழல் அதுக்கு முழுக்க இடந்தராது. சிலவேளை சிலபேருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினை மாதிரித் தெரியாமலிருக்கலாம். அவையள் எந்தச் சூழலுக்கையும் வாழக்கூடியமாதிரி தங்களை மாத்தியுங் கொள்ளலாம்.

ஆனால் என்னால அங்காலயும் போக முடியவில்லை. இங்காலையும் போக முடியேல்ல. ஏதோ மனதுக்குள்ள கிடந்து உருட்டிக் கொண்டிருக்கு. நாங்கள் எங்கேயோ பிழைவிட்டிருக்கிறம். கனக்கப்ப பிழையள். அதுதான் இப்ப எனக்குப் பிரச்சினை.

நாங்கள் பிடிபட்டுக் காம்பில இருக்கேக்க இதை உணர்ந்திருக்கிறன். பலரிட்டயும் இந்த மாதிரியான ஒருஇ ஒரு நிலைமையைப் பாத்திருக்கிறன். பொதுவாகக் கனபேர் கவலைப்பட்டார்கள்.

நாங்கள் கன இடத்தில பிழை விட்டிட்டம் எண்டதை வாய்விட்டே சொன்னார்கள். ஆனால் இனிப் பழைய இடத்துக்குத் திரும்பிப் போக முடியாது. ஆனால் நாங்கள் இப்பிடியே இருக்கவும் ஏலாது. இதைத்தான் நான் திரும்பதிரும்பச் சொல்லுவன்.

சரணடைந்தபோதே எங்களுக்குத் தெரியும், நாங்கள் விரும்பாத ஒரு இடத்துக்குத்தான் கொண்டு போகப் போறாங்கள் எண்டு நினைச்சம். அப்பிடியே நடந்ததுஇ போராட்டத்தின்ர தோல்வியே நாங்கள் விரும்பாத ஒரு இடந்தானே. அதாவதுஇ அப்படியான நிலைமை எண்டது நாங்கள் விரும்பாத – நாங்கள் எதிர்பார்க்காதஇ நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைதானே.

பிறகு இடைக்கிடை விசாரணைகள். தேவையில்லாத சந்தேகங்கள். எப்பவும் என்னை யாரோ கண்காணிக்கிற மாதிரி ஒரு உணர்வு. இதுதான் அடுத்த பெரிய பிரச்சினை.

இப்பிடியே எல்லாப் பக்கத்தாலையும் வதைபடுகிறதை விட சாகலாம். அல்லது இந்த நாட்டை விட்டே எங்காவது தொலைஞ்சு போகலாம்.
பழைய இடங்களையும் தெரிஞ்ச சனங்களையும் பாக்க எப்பிடியிருக்கும் எண்டு சொல்லுங்கோ பாப்பம்.


00 சரி, என்ன மாதிரியான பிழைகள் நடந்திருக்கு? அதை எப்படிச் சீர்ப்படுத்தியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைப் பற்றி இஞ்ச இப்ப கதைக்க விரும்பேல்ல. அதுக்கு காலம் இருக்கு. அல்லது அதை நான் கதைக்க  விரும்பேல்ல. அதில கன பக்கங்களிருக்கு. பல காரணங்களும் அந்தக் காரணங்களோட தொடர்பான கன தரப்பும் இருக்கு. எல்லாத்தையும் சரியாக அறியாமல் கதைக்கவும் முடியாது.

ஆனால், ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்த பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?

இதையெல்லாம் ஆரோ ஒரு நாளைக்கு வெளியில சொல்லத்தான் போகினம். சிலர் – பல விசயங்களையும் அறிஞ்ச ஆட்கள் - இதையெல்லாம் எழுதக் கூடும்.

என்னைப் பொறுத்தவரையும் நான் விசுவாசமாக வேலை செய்திருக்கிறன். சனத்துக்காகப் பாடு பட்டிருக்கிறன். இயக்கத்துக்காகவும் பாடு பட்டிருக்கிறன். போராட்டத்துக்காக உழைச்சிருக்கிறன். சில சந்தர்ப்பங்களில என்ரை அறிவைக் கடந்தும் வேலை செய்திருக்கிறன். ஒரு அமைப்பில இருந்தால் அதின்ரை தலைமைக்குக் கட்டுப்படவேண்டி வரும். அது எங்க இருந்தாலும் அப்பிடித்தான்.

தமிழகத்தில கருணாநிதியின்ரை ஆட்சியையும் கதைகளையும் பாக்க எங்களுக்கு விசர்தான் வரும். ஆனால்இ அவற்றை கட்சிக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கட கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கிறார்கள். இது அமரிக்காவுக்கும் பொருந்தும். சீனாவுக்கும் பொருந்தும் எண்டுதான் நினைக்கிறன்.

நாங்கள் எல்லாத்தையும் பட்டுக் கழிச்சிட்டம். இறுதிவரையும் நிண்டு பாத்தாச்சு. என்னைப் போல ஆயிரக்கணக்கானவையள் இப்பிடிக் கடுமையாகக் கஸ்ரப்பட்டிருக்கிறார்கள். இதுக்கு மேல நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆனால் எங்களுக்குத்தான் இப்பவும் கஸ்ரம். எங்களால கண்டபடி அங்க இங்க திரிஞ்சு நிலைமைக்குத் தக்கமாதிரிப் பாடவும் முடியாது. காரியம் பாக்கவும் முடியாது.

இயக்கம் எண்டது பெரிய மரத்தைப் போல. அது சரிந்தால் சும்மா கயிற்றைப் போட்டுக் கட்டி நிற்பாட்டேலாது. அதைப் போல அந்த மரம் இல்லாட்டித்தான் அதின்ரை அருமையும் அது இருந்த இடமும் தெரியும். வெட்ட வெளியாக இருக்கிற இடத்தைப் பாத்தால் இனம் புரியாத ஒரு சோகம் மனசில வருகிது.


00 இந்த நிலைமை – அதாவது, புலிகளின் வீழ்ச்சியும் நீங்கள் சரணடைந்ததும் பிறகு இப்போது விடுதலையாகி குடும்பவாழ்க்கையில் ஈடுபடுவதைப் பற்றியும் என்ன நினைக்கிறீங்கள்?

இதைத் தானே நான் முன்னரே சொல்லிவிட்டன். நாங்கள் விரும்பாத ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறம் எண்டு. இப்பிடியான நிலைமைக்குப் பிறகு ஒரு காலகட்டம் வரையில நீரோட்டத்தில போக வேண்டியதுதான்.
நீந்தேக்க களைச்சுப் போனால்இ கொஞ்சநேரம் நீரோட்டத்தின்ர போக்கில போய்ப் பிறகு திரும்பிற விளையாட்டுத்தான்.


00 ஆனால், இது நிலைப்பாட்டின் வீழ்ச்சியாக மாறாதா?

அப்ப என்ன செய்யிறது? எதையும் சொல்லலாம். செய்து பாத்தாத்தான் தெரியும் எண்டு சொல்லுவார்கள். அதைமாதிரி, நாங்கள் இருக்கிற சூழ்நிலையில இப்ப பேசாமல் இருக்கிறதே மேல். தொழில், வருமானம், வீடு, பிள்ளைகளின்ர எதிர்காலம் எண்டு எங்களுக்கு முன்னாலே ஏராளம் பிரச்சினைகளிருக்கு.

இதையெல்லாம் இந்த வயதில எப்பிடிச் செய்து முடிக்கிறது எண்டு தெரியேல்ல. எல்லாத்தையும் தொடக்கத்தில இருந்து செய்ய வேணும் எண்டால் எவ்வளவு கஸ்ரம்?

22 வருசமாக பொது வாழ்வில இருந்திட்டு இப்ப இப்படித் திடீரெண்டு தனியாகக் குடும்ப வாழ்க்கைக்கு வாறதே சிரமம். உழைக்க வேண்டிய உற்சாகமான காலத்தை – இளமைக்காலத்தை இழந்திட்டு இப்ப புதிசா  என்ன செய்யலாம் எண்டால் என்ன செய்யிறது?

நானாவது பரவாயில்ல. கால் இல்லாதவங்கள்இ கையில்லாதவங்களின்ரை நிலைமையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.
இந்த நிலைமையில நாங்கள் என்ன செய்யிறது?

எங்க இருந்தாலும் இதயம் நல்லா இருந்தாச் சரி எண்டதுதான் என்ர நிலைப்பாடு.


00 அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள்இ புனர்வாழ்வு நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கு? விடுதலையாகிய போராளிகளின் பொதுவான நிலைமையைப் பற்றிச் சொல்லுங்கள்.

அரசாங்கம் கடன் தாறதாகச் சொல்லியிருக்கு. ஐ.ஓ.எம் எண்ட ஒரு தொண்டு நிறுவனம் தொழில் உபகரணங்களைத் தருகிது. அதுக்கு மேல நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. அப்படி எதிர்பார்க்கிறதில பிரயோசனமும் இல்ல.
புனர்வாழ்வில சிலபேருக்கு நல்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு. சிலருக்கு தொழில் வாய்ப்ப்பும் கிடைச்சிருக்கு. குறிப்பாக இளைய பெடியள். அல்லது பெண்போராளிகளுக்கு வேலை வாய்ப்புகளில் இடம் குடுக்கிறார்கள். அவர்களின்ர வயது அதுக்குத் தோதாக இருக்கு.

எங்களுக்கு வயதும் கூடீட்டுது. படிப்பும் போதாது. படிக்கிற ஆக்களுக்கும் பரவாயில்ல. ஆகப் பாதிக்கபபட்டது எங்களைப் போல இருக்கிற ஆக்கள்தான்.

00 இப்போதுள்ள உங்களின் மன நிலை என்ன?

இப்பிடியொரு கேள்வியை விசாரணையின்போதும் கேட்டார்கள். இப்ப நீங்களும் கேக்கிறியள்.
இதுக்கு நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்?


00 பொதுவாகவே போராளிகளின் இன்றைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்.

வசதி வாய்புள்ள ஆக்களுக்கு ஒரளவு பிரச்சினை இல்ல. சிலர் வெளியில போயிட்டினம். சிலர் இந்தியாவுக்குப் போட்டினம். மற்ற ஆக்கள் சிலர் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். சிலருக்கு சொந்தக்காரர் நண்பர்களின் உதவி இருக்கு.

ஆனால், பலருக்கும் வசதிகள் இல்லை. உதவிகள் இல்லை. சிலருக்கு சில இடங்களில் இருந்து உதவிகள் கிடைச்சிருக்கு. அவர்கள் அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஏதாவது செய்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான போராளிகள் வேதனையோட இருக்கிறார்கள். அரசாங்கத்தின்ர கடனைப் பெற்றாலும் அதை வைச்சுத் தொழில் செய்யக்கூடிய நிலைமை எல்லாருக்கும் இல்லை.
பொதுவாகச் சொன்னால் இதுக்கு ஒரு ஒழுங்கான திட்டம் இருந்தால்தான் எதுவும் செய்யலாம்.


00 பெண்போராளிகளின் நிலைமை எப்பிடி இருக்கிறது. குறிப்பாக திருமணம் முடித்திருக்கும் பெண்போராளிகளின் நிலைமை?

அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. பெரும்பாலும் இந்த மாதிரிப் பெண்போராளிகள் ஆண் போராளிகளையே திருமணம் செய்திருந்தினம். இப்ப அவர்களில் பலரும் இல்லை. பலர் ஏற்கனவே வீரச்சாவடைந்து விட்டார்கள். சிலரைப் பற்றிய தகவலே இல்லை. இந்த நிலையில இந்தப் பெண் போராளிகள் பிள்ளைகளோடு பெரிய கஸ்ரங்களைப் படுகுதுகள்.
அதுதான் சொன்னேனேஇ ஒர நல்ல திட்டம் இல்லை எண்டால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

00 முடிவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?

இவ்வளவு காலம் எங்களை ஒரு கொள்கையில அர்ப்பணிச்சு வாழ்ந்த நாங்கள் இப்ப இப்பிடி ஒண்டுஞ் செய்ய முடியாத ஒரு நிலையில இருக்கிறம். இதை எப்பிடி மாத்திறதெண்டு தெரியேல்ல. அதைப் பற்றித்தான் யோசிக்கிறன்.

இப்பிடி யோசிக்கேக்க இனி ஒரு சோலியும் வேண்டாம் எண்டுதான் முடிவெடுக்க முடியுது.

நல்லாக் களைச்சுப் போனா தண்ணியாவது தரவேணும். அதுக்கும் ஆளிருக்க வேணும். ஆனாஇ இப்ப அதுக்கெல்லாம் ஆருமே இல்ல.

00 ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?

முன்னாள் போராளி – இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.

போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது - இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.

மற்றும் படி வேறு என்ன சொல்ல முடியும். இதைத்தானே ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.


00

யார் தீர்ப்பார் இந்த மனக்குறையை?





00 நேர்காணல் - தர்சினி 

  விடுதலைப் புலிகள் அமைப்புப் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பில் இருந்த பல உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர். அவ்வாறு சரணடைந்தவர்களில் பதினோராயிரத்துக்கும் அதிகமானவர்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், சரணடைந்த இன்னும் ஒரு தொகுதியினரைப் பற்றிய தகவல்களே இல்லை. 


இவர்களில் சிலர் சித்திரவதையின் பின்னர் கொல்லபட்டனர் என்பதற்கான ஆதரங்களை சனல் 4, லங்கா கார்டியன் போன்ற ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. மிஞ்சியோரைப் பற்றிய தகவல்களே இல்லை. இதில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் எனப் பலர் சேர்த்தி.


ஆனால், எவரைப்பற்றிய தகவல்களுமே இல்லை. பொதுமக்களின் முன்னிலையில் - பட்டப்பகலில் சரணடைந்தவர்கள் இப்போது எங்கே? என்று தெரியாத நிலையில் அவர்களுடைய உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று படைத்தரப்பும் அரசாங்கமும் சொல்கின்றன. இந்த நிலையில், இவர்களைத் தேடிக் கொண்டேயிருக்கின்றனர் இவர்களுடைய உறவினர்கள். அவர்களில் ஒருவரை வன்னியில் சந்தித்தோம். 


இவருடைய கணவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் செயற்பட்டவர். ஒரு மூத்த போராளி. இவருடைய மனைவியும் ஒரு போராளியே. இரண்டு பிள்ளைகள். ஆனால், இவர்களுடைய இரண்டாவது பிள்ளை சற்றுச் சுகவீனமான நிலையில் இருந்ததால், ஒருவர் பிள்ளையைப் பராமரிப்பதற்காக வீட்டிலிருந்தார். இதற்கான அனுமதியை இயக்கம் வழங்கியிருந்தது. இறுதிப் போர்வரை இதுதான் நிலைமை. ஆனால், போரின் இறுதிக்கட்டத்தில், எல்லோரையும் போல இவர்களும் படையினரிடம் சரணடைந்திருந்தனர். ஓமந்தை வரை நான்கு பேருமாக இணைந்தே படையினரால் கொண்டு வரப்பட்ட இவர்களில் குறிப்பிடப்பட்ட போராளியை விசாரணைக்கு என்ற அழைத்துச் சென்றபின்னர் எந்தத் தகவலுமே இதுவரையில் இல்லை. 


இதுதொடர்பாகவும் தற்போதைய நிலையில் இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் வாழ்வைத்தொடர்வதைப் பற்றியும் எங்களுடன் உரையாடினார்.





00 உங்களைப் பற்றி..

என்னுடைய பெயர் தமிழ்விழி. 1989 இல் இந்திய இராணுவம் இருக்கும்போது இயக்கத்தில் இணைந்தேன். நான் இணையும்போது பத்தொன்பது வயது. ஏ. எல் (கல்விப் பொதுத்தராதரம் - உயர்தரம்) படித்துக்கொண்டிருந்தேன்.

அண்டைக்கு எங்களின் பள்ளிக்கூடத்தில் இருந்து என்னோட சேர்ந்து நான்குபேர் இயக்கத்தில் இணைந்தார்கள். நாங்கள் உள்ளுர்ப்பயிற்சி எடுத்தோம். காட்டிலதான் பயிற்சி. பிறகு காட்டிலேயே முகாம். அங்கேயே இயக்கத்தின் வேலைத்திட்டங்கள். இயக்கத்தின் வேலைத்திட்டம் என்றால், 1990 க்குப் பிறகு மாதிரி ஊருக்குள்ள நாங்கள் மக்களுக்கு நேரில நின்று செய்த வேலைத்திட்டங்களைப் போல இல்லை. காட்டில அப்ப நிலைமை வேறு. அங்கே பயிற்சி. சண்டைக்கு எப்பவும் தயாரான நிலை. ஏனென்றால், இந்திய இராணுவம் இருந்தாற் போல காட்டுக்குப் படையெடுத்து வரும். அதால எப்பவும் உஷார் நிலையிலேயே எல்லோரும் இருக்க வேணும். அடுத்தது, மருத்துவம் படிச்சம். இயக்கத்தின் வரலாறு. பயிற்சி நடைமுறைகள் என்று அந்தச் சூழலுக்குத் தேவையானவைகளையும் அங்கே படிக்கக் கூடியவைகளையும் பழகக் கூடியவைகளையும் கற்றுக் கொண்டோம்.

மிகக்குறைவான அளவிலேயே பெண்போராளிகள் இருந்தார்கள். ஆனால், காட்டுவாழ்க்கையும் அங்கே நாங்கள் இருந்த காலமும் மறக்கவே முடியாதவை. என்னைப் பொறுத்தவரையில், இயக்க வாழ்க்கையில் அதுவொரு மறக்கவே முடியாத காலகட்டம். பொதுவாகவே எங்கட சமூகத்தில் பெண்கள் காடுகளில் வாழ்கிறதில்லை. என்னதான் வன்னி போன்ற காடுகளை அண்டிய பிரதேசங்களில் வாழ்ந்தாலும் பெண்ணுக்குக் காடு புதிதே. ஆண்களைப் போலப் பெண்கள் காடுகளில் திரிவதும் இல்லை. காடுகளை அறிவதும் இல்லை. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். அதாவது எங்களின் அம்மா, அப்பா எல்லாம் யாழ்ப்பாணத்தவை.

ஆனால், நான் பிறந்து வளர்ந்தது வன்னியில். வன்னியிலும் நான் படித்ததும் வாழ்ந்ததும் ஒரு சிறிய நகரத்தில். இதனால், காடு என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது. என்றாலும் காடுகளுக்குப் போய் வருகிற ஆக்களைத் தெரியும். அவர்கள் வேட்டைக்குப் போய்வாறதைப் பற்றைத் தெரியும். தேனெடுத்துக் கொண்டு வாறதைப் பற்றித் தெரியும். காட்டுக்குத் தடி வெட்டப் போறதைப் பற்றி, மரங்கள் வெட்டப்போறதைப் பற்றியெல்லாம் தெரியும்.

அதாவது, இதுகளைப் பற்றி வந்து கதைப்பார்கள். சிலவேளை எங்களின் வீட்டிலிருந்தும் அண்ணாவோ, அப்பாவோ காட்டுக்குப் போவார்கள். எங்கட மாமா ஒருத்தர் இருந்தார். அவருக்குக் காடும் வீடும் ஒரே மாதிரித்தான். காட்டிலிருந்தே அவர் உழைத்தார். சிலர் வயலில் உழைப்பார்கள். சிலர் தோட்டங்களில் இருந்து உழைப்பார்கள். சிலர் கடலுக்குப் போய் உழைப்பார்கள். சிலபேர் உத்தியோகம் பார்த்து உழைப்பார்கள். ஆனால், எங்கட அந்த மாமா தன்னுடைய சிறிய வயதிலிருந்தே காட்டிலிருந்தே உழைக்கத்தொடங்கி விட்டார். அவருக்கு வேட்டை நல்லாப் போகும். அதைப்போல காட்டுத்தடி வெட்டுவார். பிறகு மரம் தறித்து விற்றிருக்கிறார். ஆனால், வன இலாகவின் அனுமதியைப் பெற்றுத்தான் தறிப்பார். இப்பிடியே இருந்ததால் அவருக்குக் காடுகள் எல்லாமே நல்ல பாடம். அதனால், எங்களுக்கும் காடுகளைப் பற்றிய தகவல்கள் எப்பவும் கிடைச்சுக் கொண்டேயிருக்கும்.

நான் பதினைந்து வயதில் ராமாயணத்தை வாசிக்கும்போது மாமா சொல்கிற காடுகளைப் பற்றிய கதைகளை வைத்து என்னுடைய மனதில் அந்தக் காட்சிகளை நினைத்துக் கொள்வேன். சீதைக்குக் காடு புதிய அனுபவமாக இருந்திருக்கும் என்பது, பிறகு நாங்கள் உண்மையிலேயே காட்டுக்குப் போனபோதுதான் தெரிந்தது. காட்டில் இருக்கும்போது ராமாயணத்தில் படித்த காட்டுக்காட்சிகள் அப்படியே மனதில் படமாக விரியும். காடுகள் எப்போதும் இனியவையே. காட்டில் என்னதான் இல்லை. அமைதி இருக்கிறது. அதேவேளை இனிய இசையும் அங்கேதான் இருக்கும். இருளும் அங்கே உண்டு. ஒளியும் ஒளியின் வினோதங்களும் அங்கேதான். விலங்குகள்... மான்குட்டிகள், முயல்கள், உடும்புகள், மர அணில், யானைக்கூட்டம், பன்றிக்கூட்டங்கள்... இப்படிக் காட்டில் ஏராளம் விசயங்கள். பழங்கள்...

காட்டில் எந்தக் காலத்திலும் பழங்கள் இருக்கும். ஒரு சீசனுக்குக் கரும்பைப் பழங்கள் என்றால், இன்னொரு சீசனுக்கு நாவற்பழங்கள். அடுத்த சீசனுக்கு நறுவிலிப் பழங்கள் என்றால், இன்னொரு சீசனுக்கு முரலிப் பழங்கள். இப்படியே எப்பவும் பழங்களுக்குக் குறைவில்லை. அத்தனையும் இயற்கையான பழங்கள். நாங்கள் கடைகளில் காசைக் கொடுத்து வாங்குகிற பழங்களில் இயற்கைத் தன்மைகள் வரவரக்குறைந்து கொண்டே போகிறது. லாபத்துக்காப் பயிரிடும்போதே இரசாயனக் கலவைகளைக் கலக்கிறார்கள்.

காட்டுப் பழங்களில் ஆரோக்கியத்துக்குக் குறைவேயில்லை. அதனால்தான் அந்தப் பழங்களைச் சாப்பிடுகின்ற பறவைகளும் ஆராக்கியமாகவே இருக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் வளர்க்கிற விலங்குகளுக்கும் நோய் வருகிறது. ஏனென்றால் தங்களைப் போலவே அவர்கள் தாங்கள் வளர்க்கிற விலங்குகளுக்கும் தீனைத் தெரிவு செய்கிறார்கள். காட்டில் இருக்கும்போது நாங்கள் போராளிகளாக இருந்தால், எப்பவும் ஒரு திகிலும் மெல்லிய பயமும் இருக்கும். பிறகு பிறகு காடும் பழகி, சண்டையும் பழகிய பின்னர், அங்கே இருப்பதே சந்தோசமாகத்தான் இருந்தது. எங்களைப் பலதுறைகளிலும் ஆண்போராளிகள் வளர்த்தெடுத்தார்கள்.

தலைவர் எங்களில் கூடிய அக்கறை எடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்திருந்தார். அதுவும் அந்த நெருக்கடியான நிலையிலும். இந்திய இராணுவம் வெளியேறினாற்பிறகு, ஊருக்கு வந்தம். முதலில் முல்லைத்தீவில் இரண்டு வாரம் நிற்க வேண்டி வந்தது. அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்குப் போனோம்.

யாழ்ப்பாண இடப்பெயர்வு வரையில் அங்கேயே இருந்தேன். ஆனால், யாழ்ப்பாணத்துச் சூழல் முற்றிலும் வேறானது. அங்கே ஒரு வித்தியாசமான வாழ்க்கையைப் பார்த்தேன். அந்த மக்கள் அமைதியானவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று லேசில் கண்டுபிடித்து விட முடியாது. ஆனால், எப்பவும் அவர்கள் தங்களுடைய தீர்மானங்களில் உறுதியாக நிற்பார்கள். ம்... இதையெல்லாம் நினைத்தால் இப்ப நித்திரையே கெட்டுப் போயிடும்.


அதற்குப் பிறகு, அதாவது யாழ்ப்பாணத்தில் நீங்கள் என்ன துறையில் - அல்லது என்ன பணியில் இருந்தீர்கள்?

யாழ்ப்பாணத்தில் அரசியல் வேலைகளை ஆரம்பத்தில் செய்தேன். பின்னர் மருத்துவத்துறைக்கு மாற்றப்பட்டேன். அது ஒரு கொஞ்சக் காலம்தான். அதற்குப் பிறகு புலனாய்வுத்துறைக்குப் போய் அங்கேயே நீண்டகாலம் இருந்தேன். அதிலும் நிர்வாகப் பிரிவிலிலேயே அதிக காலம் வேலை செய்தேன். புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டபோதே யாழ்ப்பாண இடப்பெயர்வும் வந்தது. அதோடு நாங்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தோம். பிறகு வன்னியில்தான் இறுதிப்போர் வரையில் இருந்தோம்.

 உங்களின் திருமணத்தைப் பற்றி...

எங்களின் திருமணம் இயக்கத்தின் நடைமுறைப்படியே நடந்தது. நாங்கள் விரும்பத்தொடங்கியபோதே இயக்கத்துக்கு அறிக்கை கொடுத்தோம்.

அறிக்கை என்பது எங்களின் காதலை இயக்குத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தெரியப்படுத்துவதாகும். அதற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் (இரண்டு வருசத்துக்குப் பிறகு) இயக்கம் திருமணத்துக்கான ஏற்பாட்டைச் செய்தது. என்னுடைய வீட்டாருக்கு (அப்பா, அம்மாவைக்கு என்னுடைய திருமணத்தில் - நான் விரும்பியவரில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை. ஆனால், அக்காவும் அத்தானும் முழுமையான ஆதரவு). அப்படித் திருமண ஏற்பாட்டைச் செய்து கொண்டிருக்கும்போதே – நாள் குறித்ததற்குப் பிறகு, ஜெயசிக்குறுச் சண்டை அமர்க்களமாகீட்டுது. அதனால், கொஞ்ச நாளைக்கு எல்லாத் திருமணங்களையும் இயக்கம் ஒத்தி வைச்சது.

பிறகு, சண்டை சற்று ஓய்த ஒரு சந்தர்ப்பத்தில் எங்களின் திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் போராளிகள் என்பதால், எங்களுடைய பிள்ளையைப் பராமரிப்பதற்காக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ‘தளிர்’ என்ற பராமரிப்பு நிலையத்தில் விட்டுவிட்டு எங்களின் பணிகளுக்குச் செல்வோம். பின்னர் மாலையில் நான் பிள்ளையைப் போய் வீட்டுக்குக் கொண்டு வருவேன்.

இரண்டாவது பிள்ளை கொஞ்சம் வருத்தக்காரப் பிள்ளை எண்டபடியால், நான் வீட்டிலேயே நிற்கவேண்டியிருந்தது. இதற்கான காரணங்களைச் சரியாக அறிந்து கொண்டதால், நான் வீட்டில் நிற்கக்கூடியதாக இருந்தது. ஆனாலும் நான் என்னால் முடிந்த பணிகளைச் செய்து கொண்டேயிருந்தேன். கணவர் சிலவேளை தினமும் வீட்டுக்கு வருவார். சிலவேளை மாதக்கணக்காக வரமாட்டார். அது அவருடைய வேலைகளைப் பொறுத்தது.

எனக்கு அவரின் நிலைமை விளங்கும். அவரைப் போல நானும் முன்னர் ஒரு காலம் இரவு பகல், காடு மேடு என்று வேறுபாடில்லாமல் ஓயாமல் இயக்கப்பணியைச் செய்தவள் அல்லவா. அதைவிட, இயக்கத்தைப் பொறுத்தவரை, அதனுடைய தேவைகள் ஏராளம். எப்பவும் எங்களுக்கு மூன்று முக்கியமான விசயங்கள் இருந்தன. ஒன்று எப்பவும் எதிரிக்கு எதிராக அவதானமாக இருக்கவேணும். அதோட எதிரிக்கு எதிராக, எதிரியை விட வேகமாக இயங்க வேணும். அடுத்தது, மக்களைக் காப்பாற்றும் பணிகள். மக்களுக்கான சேவைகள். மூண்டாவது, இயக்கத்தைப் பாதுகாப்பது, அதை மேலும் மேலும் வளர்த்தெடுப்பது. இந்த அடிப்படையில்தான் நாங்கள் செயற்பட்டு வந்தோம். இந்த மூன்று பணிகளும் ஒரு முக்கோணத்தின் பாகங்களைப் போல ஒன்றுக்கு ஒன்று நிகரானவை. ஆகையால், கணவரின் வேலைகளைப்பற்றியும் அதனுடைய தேவைகளைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும்.

சரி, அப்படியென்றால், இறுதிப்போரின்போது உங்களுடைய கணவரின் பணிகள் எப்படி இருந்தன? நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

2002 இல் சமாதானப் பேச்சுகள் வந்த பின்னர் சில போராளிக் குடும்பங்கள் வெளிமாவட்டங்களுக்குப் போய்வந்தனர். என்னுடைய கணவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆனால், நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகவில்லை. பிள்ளைகள் மட்டும் போய்வந்தனர். அப்பா, அம்மாவும் என்னுடைய கணவரின் பண்பைப் பார்த்து, அவருடைய செயற்பாடுகளைப் பார்த்துப் பிறகு நல்ல ஒற்றுமையாக வந்தார்கள். அதனால், அவையள் எங்களோடயே கொஞ்சக்காலம் வந்திருக்க விரும்பிச்சினம்.

இதுதான் கஸ்ரகாலம் என்று சொல்கிறது. அவையள் வந்து நிற்கும்போதே சண்டை மீண்டும் தொடங்கீட்டுது. இந்தத் தடவை இது இறுதிப் போராகவே இருக்கும் என்று இயக்கம் சொன்னது. அதனால், சண்டை நிச்சயமாக உக்கிரமாகவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருசம் வரையில், மன்னார்ப்பக்கத்திலேயே சண்டை நடந்தது. அப்ப நிலைமை அவ்வளவு நெருக்கடியாக இருக்கேல்லை. ஆனாலும் எல்லாத்துறைப் போராளிகளும் போர்தொடர்பான நடவடிக்கைகளில் குறைந்த அளவுக்கேனும் ஈடுபட்டுக்கொண்டுதானிருந்தனர். பிறகுதான் நிலைமை இறுகத் தொடங்கியது. 2008 ஐப்பசியில் போர் கிளிநொச்சிக்குக் கிட்டவாக வரத்தொடங்கியபோது எல்லாமே மாறத் தொடங்கியது. அம்மாவும் அப்பாவும் எங்களோட இருந்தது அப்ப ஒரு வகையில ஆறுதல். ஆனால், மற்றவகையில், அவையளும் தேவையில்லாமல் எங்களோட இருந்து கஸ்ரப்பட வேண்டியிருக்கே எண்ட கவலை. நான் அவர்களைப் போகச் சொன்னேன். நாளைக்கு மற்றச் சகோதரங்கள் எங்களைத்தான் குறை சொல்லுவினம். அப்பா, அம்மாவை வன்னியில் மறித்தபடியாற்தான் அவர்களுக்கு ஏதோ நடந்தது, அவர்கள் தேவையில்லாமற் கஸ்ரப்படுகினம் எண்டு சொல்வார்கள். இதையெல்லாம் யோசித்துவிட்டு நானும் கணவருமாக ஒரு முடிவுக்கு வந்தம்.

எப்படியும் ஏதாவது சொல்லி அவர்களைத் தயார்ப்படுத்தி, இயக்கத்திடம் அனுமதியை எடுத்து அவர்களை வெளியே அனுப்புவது என்று. வெளியே என்றால், வன்னிக்கு வெளியே. அறுபது வயதுக்கு மேல் வயதுக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, குடும்பத்தில் ஒருவருக்குப் (பாஸ்) அனுமதி கொடுக்கிற முறைமை இயக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகவே, அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு நாங்கள் இரண்டு பேருக்குமே அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தீர்மானித்தோம். ஆனால், எங்களுடைய தீர்மானத்தை அம்மாவோ அப்பாவோ ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஒரேயடியாக எங்கள் தீர்மானத்தை மறுத்து விட்டார்கள். என்ன நடந்தாலும் அவர்கள் எங்களை விட்டுப் போவதில்லை என்று சொல்லி விட்டார்கள். பெத்த பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் விட்டுவிட்டுத் தாங்கள் போகப் போவதில்லை என்று அம்மா சொல்லி விட்டா. அப்பாவுக்கு தன்னுடைய மருமகனை விட்டிட்டுப் போகப் பிரியமில்லை. ஆகவே அவர்களையும் கொண்டு நாங்கள் இடம்பெயரத் தொடங்கினம். இடம்பெயர்வு என்றால், பிறகு சொல்லவா வேணும். யுத்தம் நடக்கிற நாட்டில இடம்பெயர்வு என்பது சாதாரணம்.

ஆனால், இந்தத் தடவை சனங்கள் இடம்பெயரப் பெயர யுத்தம் அவர்களை நோக்கித் துரத்திக் கொண்டு வந்தது. அதுவும் 2009 ஜனவரிக்குப் பிறகு அதைப் பற்றிச் சொல்ல முடியாத அளவுக்கு அது வேற மாதிரியே இருந்தது. என்னுடைய போராட்ட அனுபவத்தில் அப்படியான ஒரு நிலையை – அப்படியான ஒரு கட்டத்தை நான் சந்திச்சதேயில்லை. முந்திச் சண்டை நடக்கும்போது ஏதோ ஒரு கட்டத்தில் எதிரியைச் சிதைத்து, அவனை நகர விடாமல் இயக்கம் தடுத்துப் போடும். ஆனால், இந்தத் தடவை அப்பிடியில்லை. இராணுவம் மிக வேகமாகவே வந்து கொண்டிருந்தது.

நாங்கள் கிளிநொச்சியில் இருந்து வட்டக்கச்சிக்குப் போயிருந்தம். அங்கே ஒரு மாதம் இருந்திருப்பம். அப்ப கணவரும் அடிக்கடி வீட்டுக்கு வாறதில்லை. அவருடைய பிரிவைச் சேர்ந்தவர்கள் வந்து நிலைமையைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அங்கே இருக்கும்போது கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றினார்கள். அப்ப நாங்கள் அங்கேயிருந்து வள்ளிபுனத்துக்குப் போனோம்.

ஆனால், அப்ப புதுக்குடியிருப்புப் பக்கத்திலேயும் பிரச்சினை. அங்கே போறதும் பாதுகாப்பில்லை என்ற உணர்வு எனக்கு உள்ளுக்குள்ளே இருந்தது. ஆனால். அங்கே எங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தபடியால், அவர்களோட போயிருந்தம். இனி வீட்டைத் தனியாக அமைக்க முடியாது. அதனால் பயனில்லை என்று என்னுடைய மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆனால், இயக்கத்தின் நடவடிக்கைளில் ஒரு மாற்றம் அல்லது திருப்பம் ஏற்படும் என்றே எண்ணினேன். இடையில் வீட்டுக்கு வந்திருந்த கணவர் போரின் போக்கைப் பற்றியும் களநிலைமைகளைப் பற்றியும் சொன்னார்.

அவருடன் நின்ற போராளிகளிற் பலரும் வீரச்சாவடைந்திருந்தனர். பலர் காயப்பட்டிருந்தனர். எங்களுக்குத் தெரிந்த ஏராளம் போராளிகள் அப்படி வீரச்சாவடைந்திருந்தனர். ஆனாலும் கணவரோ நானோ மனந்தளரவில்லை. அப்படித் தளர்ந்தால் எங்களால் எங்களையே நிலைப்படுத்திக் கொள்ள முடியாது. நிலைமை வரவர மோசமாகிக் கொண்டிருந்தது. எப்படியாவது அம்மாவையும் அப்பாவையும் வன்னிக்கு வெளியே அனுப்ப முயற்சியும் என்று கணவர் சொல்லி விட்டுப் போய் விட்டார். நானும் அவர்களுக்கு அதைச் சொன்னேன். நிலைமையைச் சொல்லி நீங்கள் போகும்போது முடிந்தால் எங்களின் பிள்ளைகளையும் கொண்டு போகலாம் என்று கூறினேன். இறுதியில் ஒரு வழியாக அம்மா மட்டும் வெளியே போவதற்குச் சம்மதித்தா.

அவவோட ஒரு பிள்ளையை அனுப்பினோம். அப்பா போக மறுத்து விட்டார். அவருக்கு எங்கட கவலையையும் விட மருமகனைப் பற்றிய யோசினை. நாங்கள் வள்ளிபுனத்தில் இருக்கும்போது அங்கே கடுமையான ஷெல்லடி தொடங்கியது. அதனால், அங்கேயிருந்து சுதந்திரபுரத்துக்குப் போனோம். ஆனால், வள்ளிபுனத்தையும் விடச் சுதந்திரபுரத்திற்கே பிறகு போட்டுத் தள்ளினார்கள். அகோர அடி. ஆங்கே நூற்றுக்கணக்கான சனங்கள் செத்ததுகள். அதோடு அங்கேயிருந்து வெளிக்கிட்டு, இரணைப்பாலைக்குப் போனம். இரணைப்பாலையில் இருக்கும்போது இவர் - கணவர் - வந்து பார்த்தார். நிலைமை வரவர மோசமாகிக் கொண்டே போனது. சனங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், அப்பவும் இயக்கம் வேகமாகத்தான் செயற்பட்டுக் கொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பக்கத்தால் ஒரு தாக்குதல், தேவிபுரம் பக்கத்தால் ஒரு தாக்குதல் என்று இந்தக் காலப்பகுதியில் நடந்தது. ஆனால், இந்தத் தாக்குதல்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை.


இந்தச் சூழலில் நீங்கள் அடுத்ததாக என்ன செய்தீர்கள்? எப்படியான மனநிலைக்கு வந்தீர்கள்? என்ன முடிவெடுத்தீர்கள்?

அந்தக் கட்டத்தில் நான் சனங்கள் என்ன செய்கிறார்களோ, அதன்படியே செய்தேன். அதுதான் சரியாகவும் இருந்தது. அதாவது சனங்கள் எங்கே இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்களோ, நாங்களும் அங்கேயே போகவேண்டியிருந்தது. அவர்கள் மாத்தளனுக்கும் பொக்கணைக்குமாகப் போனார்கள். நாங்களும் பொக்கணைக்குப் போனோம்.

ஆனால், சனங்கள் மெல்ல மெல்ல படையினரிடம் போகத் தொடங்கினார்கள். அப்படி எங்களால் போக முடியவில்லை. இதுதான் போராளி குடும்பங்களாக இருந்த எங்களுடைய பிரச்சினையாக இருந்தது. மற்றவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது போர்ச் சூழலை விட்டுப் போனார்கள். நாங்கள் தொடர்ந்தும் போர்ச்சூழலிலேயே இருந்தோம். கணவரையும் காணவில்லை.

தொடர்பெடுத்து அவரைக் குழப்பவும் நான் விரும்பவில்லை. அதேவேளை அவரைத் தொடர்பு கொள்ளாமல் எங்களால் இருக்கவும் முடியவில்லை. அவரும் எங்களிடம் வராததற்குக் காரணம், தான் வந்தால், தன்னைப் போல மற்ற ஆக்களும் வெளிக்கிட்டு... நிலைமை பழுதாகிப் போயிடும் என்று யோசித்திருக்கிறார். இப்பிடியே நாங்கள் தவிச்சுக் கொண்டிருந்தம். கடையில் ஏப்ரல் மாதம் பதினைந்தாம் திகதி இவர் (கணவர்) வந்து நிலைமையைச் சொன்னார். ஆனந்தபுரம் சண்டையும் தோல்வியில் முடிந்த பிறகு இருந்த நம்பிக்கை எல்லாம் ஏறக்குறைய இறங்கீட்டுது.

அந்தத் தோல்வி தந்த துக்கத்தை என்னால் இப்பவும் தாங்கவே முடியவில்லை. நாங்கள் எத்தனையோ தோல்விகளைச் சந்திச்சிருக்கிறம். ஆனால், அதெல்லாம் நிரந்தரத் தோல்வியாகவோ நிரந்தரத் தோல்விக்கு வாய்ப்புக் கொடுத்ததாகவோ இருந்ததில்லை. ஆனந்தபுரம் தோல்வி எங்களை நிலைகுலைய வைச்சது. அதுக்குப் பிறகு நான் நித்திரையே கொள்ளவில்லை. வரப்போகிற நிலைமை என்னை நல்லாப் பாதித்தது.

ஆனால், நான் கணவரிடம் இதைப் பற்றிக் கதைக்கவேயில்லை. அவருக்கும் நிலைமையைப் பற்றி நன்றாக விளங்கிவிட்டது. அவரும் எதைப்பற்றியும் கதைக்கவேயில்லை. ஆனால், அவர் அடிக்கடி நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்துபோவார். அவர்களும் பக்கத்தில்தான் நின்றார்கள். அப்ப நாங்கள் இரட்டை வாய்க்காலில் இருந்தோம்.

அதுக்குப் பிறகு?

அதுக்குப் பிறகுதான் நாங்கள் அப்பாவை இழந்தம். இரட்டை வாய்க்காலில் இருக்கும்போது ஒரு இரவு அப்பா தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்தார். அப்ப கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது. எல்லாப் பக்கத்தாலும் ரவுண்ஸ் வந்து கொண்டிருந்தது. அதில ஒரு ரவுண்ஸ் அப்பாவைக் கொண்டு போட்டுது.

காயம் பட்ட இடத்திலேயே அப்பா விழுந்திட்டார். அது இரவு. அப்பா விழுந்தவுடனே பக்கத்தில இருந்த ஆட்கள் அவரைத் தூக்கியிருக்கினம். ஆனால், அவர் யார், யாரோடு இருக்கிறார் என்று ஒருவருக்கும் தெரியாது. எல்லாரும் அகதியாக ஓடிக்கொண்டிருக்கிற சூழலில், அதைவிடச் சண்டை பக்கத்தில் அகோரமாக நடந்து கொண்டிருக்கும்போது, யார்தான் நிதானமாக எல்லாத்தைப் பற்றியும் யோசிப்பினம். அப்பிடியிருந்தும் ஒரு ஐந்து நிமிசம் வரையில், அப்பா இருந்திருக்கிறார்.

அதுக்குப் பிறகுதான் அவரின் உயிர் பிரிஞ்சிருக்கு. அப்பாவைக் காணவில்லை என்று நாங்கள் தேடிக்கொண்டு போகும்போதுதான் என்ன நடந்தது எண்டது தெரிஞ்சது. எங்களுக்காக நின்ற அப்பாவை இப்ப நாங்கள் இழந்திட்டம். தன்னாலை முடிஞ்ச அளவுக்கு எங்களுக்குத்தான் துணையாக இருப்பேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆனால்...

அதுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகீட்டுது. அதோட கணவரும் வந்திட்டார். ஒரு நாள் நின்றார். மே 15. திடீரெனத் தான் வெளிக்கிட்டுப் போகவேணும் என்றார். எனக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. என்ன செய்யிறது என்றே தெரியேல்ல. எங்களைப் போலக் கனபேர் இருந்தது மட்டுந்தான் ஒரே ஆறுதல். போனவர் இரவு வந்தார். தான் வரவில்லை என்றும் எங்களைச் சனங்களோட போகும்படியும் சொன்னார். அதை நான் மறுத்திட்டன். அதுவரையும் அவருடைய தீர்மானங்களுக்கு எதிராகவோ குறுக்காகவோ நான் நின்றதில்லை. நானும் ஒரு போராளி என்றபடியால், அவருடைய நிலைப்பாடுகளையும் நிலைமைகளையும் நான் விளங்கிக் கொள்வேன்.

ஆனால், இந்தக் கட்டத்தில் நான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். அதுமட்டுமில்லை. இனி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. எங்களுடைய போராட்டத்தின் தோல்வியை நாங்கள் கண்ணின் முன்னேயே பார்த்துக் கொண்டிருந்தோம். பல போராளிகளே படையினரிடம் சனங்களோட சனங்களாகக் குடும்பம் குடும்பமாகச் சரணடைந்து கொண்டிருந்தார்கள்.

பிறகு?

கடைசியாக நாங்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து வட்டுவாகலுக்குள்ளால் முல்லைத்தீவுக்குப் போனோம். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. முல்லைத்தீவுச் சமரில் 1996 இல் வெற்றியோட உள்ளுக்குள்ளே போனபோராளிகளும் அப்ப தலையைக் கவிழ்ந்து கொண்டுதான் வந்தார்கள். என்னகொடுமை?

வட்டுவாகலில் ஒருநாள் முழுவதும் வைச்சிருந்தார்கள். பிறகு அங்க இருந்து ஓமந்தைக்குக் கொண்டு போனார்கள். ஓமந்தையில் வைத்தே கணவர் படையினரிடம் சரணடைந்தார். அவரோடு இன்னும் பலர் அன்று, அப்படிச் சரணடைந்தார்கள். நாங்கள் அன்று பட்டபாடிருக்கே, அதை என்றைக்கும் மறக்கவே முடியாது. விடுதலைக்காகப் போராடிய நாங்கள், தோற்றுப்போய், எதிரிகளிடம் சரணடைவதை நான் என்வாழ்வில் அன்றுதான் பார்த்தேன்.

  அதற்குப் பிறகு?


அதுக்குப்பிறகு, எங்களை முகாமுக்குக் கொண்டு போனார்கள். அது கதிர்காமர் முகாம். முகாம் வாழ்க்கை எல்லாம் நீங்கள் அறிந்ததுதானே. ஆனால், நான் அதுக்குப் பிறகு, இரண்டு வருசமாகக் கணவரைத் தேடாத இடமேயில்லை. ஐ.ஸி.ஆர்.ஸி, பாதுகாப்பு அமைச்சு, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, மனித உரிமைகள் ஆணைக்குழு, நல்லிணக்க ஆணைக்குழு என்று எல்லா இடங்களுக்கும் கடிதங்களும் கொடுத்திருக்கிறேன். என்னைப்போல பலபேர் இப்படி ஒரு முடிவும் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள், தளபதிகள் போன்றோர் ஒரு மதகுருவோடு – பிரான்ஸிஸ் யோசப் பாதரோடு – சரணடைந்தனர் என்றும் அவர்களில் ஒருவரைப் பற்றிய தகவல்களும் இல்லை என்று சொல்லப்படுகிறதே. அதைப்போலத்தான் உங்களுடைய கணவரின் நிலையும் இருக்கிறது போலிருக்கு?

அப்படித்தான் நானும் நினைக்கிறன். முக்கியமான போராளிகளைப் பற்றிய ஒரு தகவல்களும் இன்னும் வெளிவரவேயில்லை. அவர்கள் எல்லாரும் இறுதிப் போருக்குப் பின்னர் வெளிப்படையாகவே தங்களின் குடும்பங்களோடு வந்து பiடையினரிடம் சரணடைந்திருந்தனர். ஆனால், இப்போது இதைப் படைத்தரப்பு அடியோடு மறுக்கிறது. அப்படியென்றால், அவர்களுக்கு என்ன நடந்தது? இதைப் பற்றி அரசாங்கம் நிச்சமாகப் பொறுப்புச் சொல்ல வேணும். அரசாங்கத்திடம் சரணடைந்தவர்களுக்கு அரசாங்கம்தானே பொறுப்பு. ஆனால், இதைப்பற்றி நாங்கள் யாரிடம் முறையிடுவது?


ஏன் வெளியுலகத்துக்கு இதை நீங்கள் கொண்டு செல்ல முடியாதா?

என்னைப் பொறுத்தவரை எல்லாமே நாடகந்தான். எங்களுடைய போராட்டத்தை இந்த வெளியுலகமே அழித்தது. வெளியுலகத்தின் ஆதரவில்லாமல் இலங்கை அரசாங்கத்தினால் வெற்றியடைந்திருக்கவே முடியாது. போரில் இலங்கை அரசாங்கத்துக்கு உதவிகளைச் செய்த இந்த வெளியுலகம், தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வைக் கொடுக்க வேணும் என்று சொல்லவே இல்லை. அதுமட்டுமல்ல, போரின் இறுதியில் நிச்சயமாக ஒரு சரணடைவு இருக்கும். அதில் ஏராளம் போராளிகள் சரணடைவார்கள். அதைப் பாதுகாக்க வேண்டும். ஆகவே அதற்கான பொறுப்போ பாதுகாப்போ எப்படி அமையவேண்டும் என்பதைப் பற்றிக்கூட இந்த வெளியுலகம் சிந்தித்ததாக இல்லை. இதையெல்லாம் அது சிந்திக்காமல் விடவில்லை.

வெளியுலகத்தைப் பொறுத்தவரையில் புலிகளின் சிந்தனையோ, அதனுடைய செயற்பாடுகளோ இனிமேல் இருக்கக் கூடாது என்பதே முக்கியமான தீர்மானமாக இருந்திருக்க வேணும். அதனால்தான் அது முக்கிய தலைவர்களின் சரணடைவைக் காணாமலே இருந்தது. புலிகளின் முக்கிய தலைவர்களை இல்லாமற் செய்து விட்டால், பிறகு அந்தப் போராட்டமே, இயக்கத்தின் சிந்தனையே இல்லாமற்போய்விடும் என்று சிந்தித்திருப்பார்கள். இந்த நிலைமையில் நானும்போய் வெளியுலகத்தை எப்படி நம்பிக்கை வைத்துக் கேட்பது?


அப்படியென்றால், இதுக்கு என்னதான் தீர்வு?

என்னைப் பொறுத்தவரையில் எப்போதும் ஒரே மாதிரியாக நிலைமைகள் இருப்பதில்லை. ஒரு நெருக்கடியான சந்தர்ப்பமோ அல்லது அரசியல் மாற்றமோ வரும்போது இந்த மாதிரியான பிரச்சினைகள் ஒரு தீர்வுக்கு வரும். ஆனால், அது வரும் என்று நாங்கள் இருக்க முடியுமா? முதலில் எப்படியாவது, கணவரைக் கண்டு பிடித்து விடவேணும். குறைந்த பட்சம் அவருடைய தகவலாவது கிடைத்தாற் போதும்.


இப்போது உங்களுடைய நிலைமை எப்படியிருக்கிறது?

எல்லாமே பிரச்சினையாகத்தான் இருக்கு. நாங்கள் இருந்த காணியை நாங்கள் விலைகொடுத்தே வாங்கினோம். ஆனால், இப்போது அந்தக் காணிக்காக மீண்டும் எங்களுக்குக் காணியை விற்றவர்களே வந்து நிற்கிறார்கள். இதைவிடக் கணவரைத் தேட வேணும். பிள்ளையின் உடல் நிலையைப் பார்க்க வேணும். அப்பாவின் உதவியும் இல்ல. வருமானமும் இல்லை. ஏறக்குறைய நான் இப்ப தனித்து விட்டேன். முந்தி நாங்கள் பலமாக இருந்தம். நிறைய ஆக்களாக இருந்தம். அணி அணியாக இருந்தம்.

பத்தொன்பது வயதில் இருந்தே நான் ஒரு பெரிய அணியுடன் இணைந்தே இருந்தேன். அதுதான் எங்களின் மனோபலமாக இருந்தது. முகாமில்கூட ஒரு ஒற்றுமை இருந்தது. ஆனால், முகாமுக்கு வெளியில் வந்ததற்குப் பிறகு, அவரவர் தங்கட தங்கட பாடுகளைப் பார்த்துக் கொண்டு போகினம். வரவர நிலைமை நல்லாகவே மாறிக் கொண்டு போகுது....

 00

Sunday, May 27, 2012

நேர்காணல் - சங்கர கம்பர் கதிர்வேலு

யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Phழவழபசயில) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு. எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே ‘கமெரா’வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்கு மிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு. இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. . ஆனால், கதிர்வேலு மாறவேயில்லை. அவருடைய கையில் இன்னும் கமெரா இருக்கிறது. இந்த வயதிலும் களைத்து விடாமல், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் பதிவு செய்து கொண்டும் இருக்கிறார் கதிர்வேலு. கொந்தளிக்கும் அரசியற் சூழலில் கழிந்த அறுபது ஆண்டுகால யாழ்ப்பாண நிகழ்ச்சிகளின் பதிவுகளை கதிர்வேலு செம்மையாகப் பதிவாக்கியிருக்கிறார். இதில் அவருக்கு ஏராளம் அனுபவங்கள் உண்டு. முக்கியமாக 1961 இல் யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது ஏற்பட்ட கலவரத்தினால் கதிர்வேலுவின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது. பின்னர், மிஞ்சிய ஒற்றைக் கண்ணோடுதான் அவருடைய ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பணியும் படப்பிடிப்புப் பணியும் கழிந்திருக்கிறது. இப்போது கதிர்வேலுவுக்கு எழுபத்தி ஏழு (1933.08.16) வயது. ஆனால், சைக்கிளில் திரிந்தே எல்லா இடங்களுக்கும் போகிறார். சைக்கிளில் திரிந்தே படப்பிடிப்புகளைச் செய்கிறார். நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் இருக்கும் கதிர்வேலு இப்போதும் படு பிஸியான ஆள்தான். ஆனால், முதுமை அவருடைய ஞாபகப்பரப்பைச் சிதைக்கத் தொடங்கி விட்டது. பல விசயங்களை நீண் நேரம் நினைவு கூர்ந்த பிறகே சொல்கிறார். இன்னும் ‘பறந்து திரியும்’ கதிர்வேலுவைச் சந்தித்து உரையாடியபோது.... 1. அன்றைய சூழலில் எப்படி நீங்கள் பத்திரிகைத் துறையிலும் படப்பிடிப்பிலும் ஈடுபட்டீர்கள்? (சிரிக்கிறார்) நாங்கள் தமிழ் நாட்டில் திருச்செங்கோட்டுக்காரர். பாளையங்கோட்டைக்கு அருகே இருக்கிறது இந்த ஊர். சிறிய வயதில் நான் கட்டபொம்மன் இருந்த இடத்துக்குப் போய் பார்த்திருக்கிறேன். அப்பா இளைஞராக இருந்தபோது சுபாஸ் சந்திரபேரின் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். இதற்குத் தண்டனையாக அவருக்கு அப்போதைய ஆங்கில நிர்வாகம் அபராதம் விதித்தது. அதைக் கட்ட முடியாமல் அப்பா இன்னொரு கூட்டாளியோடு கொழும்புக்குத் தப்பி வந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து கொழும்பு முகத்துவாரத்துக்கு சிறிய ‘டிங்கி’ படகுகள் போய்வரும். அப்படி ஒரு படகில் எங்கள் குடும்பமும் முகத்துவாரத்துக்கு வந்தது. பிறகு கொஞ்சக் காலம் நாங்கள் கொழும்பில் இருந்தோம். பிறகு யாழ்ப்பாணத்துக்கு வந்து விட்டோம். நான் யாழ்ப்பாணத்தில்தான் படித்தேன். பெருமாள் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த கன்னாதிட்ட சைவ ததுதிவிசாகப் பாடசாலையில் ஆரம்ப வகுப்பைப் படித்தேன். பிறகு வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் படித்தேன். ஆனால், முழுமையாகப் படிப்பை முடித்துக் கொள்ளவில்லை. நாங்கள் தவில் வாசிக்கும் குடும்பத்தில் இருந்தாலும் நகை செய்யும் தொழிலையே செய்தோம். அப்பா அந்தத் தொழிலில்தான் ஈடுபட்டார். நான் அதற்காக கொழும்புக்குப் போனேன். அங்கே செட்டியார் தெருவில் இருந்தபோது ஐந்து லாம்படிச் சந்தியில் ‘டொனால்ட் ஸ்ரூடியோ’ என்ற புகைப்பட நிலையத்தோடு தொடர்பேற்பட்டது. அந்த ஸ்ரூடியோவில் படங்களைக் கழுவிக் காயவைத்து உதவிசெய்தேன். அப்படிச் செய்யும்போது புகைப்படங்களைப் பிடிப்பதில் விருப்பம் வந்தது. அங்கேயே தொழிலைப் பழகினேன். அந்த நாட்களில் சில புகைப்படக்காரர்கள் பத்திரிகைகளிலும் வேலைபார்த்தார்கள். அதில் ஒருவர் கிங்ஸ்லி செல்லையா. அவர் வீரகேசரியில் இருந்தார். அவரோடு தொடர்பேற்பட்டது. அவருக்கு முன்னர் ராஜப்பா என்றொருவர் இருந்தார். அவர் பெரிய கெட்டிக்காரர். இந்த ரண்டு பேரும் இந்திய வம்சாவழி வந்தவர்கள். இவர்களுக்குப் பல பத்திரிகைக்காரருடன் தொடர்பெல்லாம் இருந்தது. ராஜப்பா லேக்கவுஸில் என்னை இணைத்தார். பிறகு அப்படியே வேறு ஆட்களின் தொடர்பு கிடைத்தது. நான் மெல்ல மெல்ல புகைப்படக்காரனாகி, பத்திரிகைகளுக்கான புகைப்படமெடுக்கத் தொடங்கினேன். பின்னர் இந்தத் தொடர்பு அதிகமாக லேக்கவுஸ் பத்திரிகை நிலையத்தின் யாழ்ப்பாணத்துக்கான படப்பிடிப்பாளராகினேன். யாழ்ப்பாணத்தை நாடு முழுவதும் என்னுடைய படங்களுக்கு ஊடாக வெளிப்படுத்தி வந்தேன். 2. யாழ்ப்பாணத்தில் நீங்கள் வேலை செய்யத்தொடங்கிய காலத்தில் எப்ப நிலைமைகள் இருந்தன? அப்போது யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகளுக்குப் பெரிய அறிமுகங்கள் கிடையாது. மிகக் குறைவான ஆட்கள் மட்டுமே பத்திரிகையைப் படிப்பார்கள். யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகத்தோடுதான் பத்திரிகை படிக்கும் வழக்கம் ஊரெல்லாம் ஏற்பட்டது. நான் யாழ்ப்பாணத்துக் காட்சிகளை எடுத்து புகையிரதத்தின் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் காட்சிகள் சுடச் சுட வந்தன. இது மக்களுக்கு ஒரு ஆர்வத்தைக் கொடுத்தது. அவர்கள் தங்கள் ஊர்களைப் பார்க்கவும் தங்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் விரும்பினார்கள். 3. சத்தியாக்கிரகக் போராட்டத்தின் பொழுது நீங்கள் படமெடுத்தீர்களா? அப்போதைய அனுபவங்கள் என்ன? சத்தியாக்கிரகப் போராட்டம் இராணுவத்தின் அடக்குமுறையோடு முடிவுக்கு வந்தது. தொடக்கத்திலிருந்தே நான் படமெடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் உடுகம ( இவர்தான் அப்போது யாழ்ப்பாணத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார்) வெளியே வந்தார். அப்போது கலவரம் முற்றியது. இராணுவத்தினர் எதிர்பாராத விதமாகத் தாக்குதல்களைத் தொடுத்தார்கள். தடியடிதான். சனங்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். நான் ஓடியோடிப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் இளைஞனல்லவா! இதைப்பார்த்த உடுகம கமெராவைத் தரும்படி கேட்டார். நான் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உடுகம என்னுடைய கமெராவைப் பறிக்கும்படி படையினருக்கு உத்தரவிட்டார். அவர்கள் கமெராவைப் பறிக்க முயற்சித்தார்கள். நான் விடவில்லை. அந்த இழுபறியின்போது ஒரு கட்டத்தில் நான் கீழே விழுந்து விட்டேன். அவர்கள் கமெராவைப் பறித்துவிட்டார்கள். கீழே விழுந்த என்னைச் சப்பாத்துக்காலால் உழக்கினார்கள். என்னுடைய முகத்தில் சப்பாத்துக்காலை வைத்து நசுக்கினார்கள். இதனால் என்னுடைய ஒரு கண் வெளியே வந்து விட்டது. பின்னர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு என்னைக் கொண்டு போய்ப் போட்டார்கள். அங்கே வைத்தியம் செய்து கண்ணை உள்ளே தள்ளினார்கள். ஆனால் பார்வை போய்விட்டது. அதற்குப் பிறது இந்த ஐம்பது வருசமாக ஒற்றைக் கண்ணோடுதான் படம் பிடிக்கிறேன். தொழில் செய்கிறேன். என்னுடைய கல்யாணம்கூட ஒற்றைக் கண்ணோடுதான் நடந்தது. ஆனால், சத்தியாக்கிரகம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியது. அப்போது யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களும் இருந்தார்கள். அவர்களும் தமிழர்களைப் போலவே எல்லாவிசயத்திலும் ஆர்வமாக இருந்தார்கள். பத்திரிகைகளை வாசிக்கிற பழக்கம் வந்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்தே ஈழநாடு பத்திரிகையும் வரத் தொடங்கியது. 4. அப்படியென்றால், நீங்கள் அரச சார்பு பத்திரிகை நிறுவனமான லேக்கவுஸில் வேலை பார்த்தீர்கள். அவர்கள் இந்தப் பாதிப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? நான் என்னுடைய முறைப்பாட்டைக் கொடுத்தேன். அவர்கள் விசாரித்தார்கள். பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய கமெராவை உடைந்த நிலையில் காட்டினார்கள். கமெராவுக்கான நட்ட ஈட்டைத்தந்தார்கள். வழக்கு நடந்தது. பிறகு சைக்கிளை சேதமடைந்த நிலையில் நீதிமன்றத்திலிருந்து மீட்டெடுத்தேன். 5. அப்போது என்ன கமெராவைப் பயன் படுத்தினீர்கள்? ஆரம்பத்தில் ஜேர்மன் தயாரிப்புக் கமெராக்கள்தான் அதிகமாகப்புழக்கத்தில் இருந்தன. நான் றொலி கோட் என்ற கமெராவைப் பயன்படுத்தினேன். அந்த வகைக் கமெராவை இப்போதும் நான் வைத்திருக்கிறேன். பிறகு றொலி பிளாக்ஸ் என்றொரு கமெராவை வைத்திருந்தேன். அதுவும் ஜேர்மன் கமெராவே. ஆனால் பாவனையில் இப்பொழுது அதெல்லாம் கிடையாது. அதற்கு இப்போது அதிக செலவுமாகும். இந்தக் கமெராக்களினால் எத்தனையோ ஆயிரக்கணக்கான படங்களைப் பிடித்திருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகள், எத்தனையோ கூட்டங்கள், எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ மனிதர்கள், எத்தனையோ இடங்கள், எத்தனையோ மறக்கமுடியாத சம்பவங்கள்... (எல்லாவற்றையும் நினைவு கூர்வதாக எங்கோ வெறித்துப் பார்க்கிறார்). 6. சரி, உங்கள் இளமைக்கால யாழ்ப்பாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள். எல்லோமே நினைவில் இல்லை. எனக்கு இப்பொழுது கொஞ்சம் மறதி அதிகம். அப்பா கொழும்புக்கு வந்தபோதும் அம்மா தமிழ் நாட்டில்தான் இருந்தா. நான் பிறந்த சேதியை கடிதம் மூலமாகவே அப்பாவுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது இந்த மாதிரி தொலைபேசி வசதிகள் எல்லாம் கிடையாது. பிறகுதான் அம்மா கொழும்புக்கு ‘டிங்கி’யில் வந்திருக்கிறா. கொழும்பில் இருந்த எங்கள் குடும்பம் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. அதுக்குக் காரணம் யுத்தம்தான். அப்பொழுது இரண்டாம் உலகப் போர் நடந்தது. யப்பான்காரன் கொழும்புக்குக் குண்டு போடுவான் என்ற பயத்தில் அப்பா குடும்பத்தை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அப்போது சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தன. நாங்கள் நகரத்தில் இருந்ததால் இந்தப் பிரச்சினைகளில் அதிகமாக மாட்டிக் கொள்ளவில்லை. அத்துடன், நாங்கள் நகை செய்யும் தொழிலோடு இருந்ததால் அதிகமாகப் பிரச்சினைகள் வரவில்லை. என்னுடைய திருமணம் கூட சாதிப்பிரச்சினையால் நின்றது. அதாவது நான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்யவில்லை. அதற்குச் சாதி தடையாக இருந்து விட்டது. ஆனால், அந்த நாளில் யாழ்ப்பாணத்தில் பல சண்டியர்கள் இருந்தார்கள். அதிலும் நகரத்தில் அவர்களின் சண்டித்தனங்கள் அதிகமாக இருந்தது. இனப்பிரச்சினை போர் என்று வந்த பிறகு சண்டியர்கள் இல்லாமற் போய் விட்டது. யாழ்ப்பாணத்து மக்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் படிப்பாளிகளாவும் இருந்தார்கள். நான் பானை சட்டி செய்வோர், நகை செய்வோர், புடவை நெசவு செய்வோர் போன்றோருடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அப்பொழுது மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உள்ளுரிலேயே செய்தார்கள். வெளியூரிலிருந்து பொருட்கள் வருவது குறைவு. ஆனால் சாதிப்பிரச்சினை அதிகமாக இருந்தது. இதனால் பல கெட்டிக்காரர்கள் படிக்க முடியாமல் தவறிப் போனார்கள். இதைவிட திருவிழாக்களைப் பற்றிச் சொல்ல வேணும். அப்போது சின்னமேளம் என்ற சதுர்க்கச்சேரி இருக்கும். மேளச்சமா இருக்கும். வில்லுப்பாட்டு, கதைப்பிரசங்கம் எல்லாம் இருக்கும். இந்தியாவிலிருந்து கூட ஆட்கள் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் அப்போது கொடிகட்டிப்பறந்த நடிகர் தியாகராஜ பாகவதர்தான். அவர் யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். யாழ்ப்பாணத்துக்கு எம். ஜீ. ஆரும் சரோஜாதேவியும் வந்தபோது நான் படமெடுத்தேன. 7. தமிழராய்ச்சி மாநாட்டினை நீங்கள் எப்படிப் பதிவு செய்தீர்கள்? நான் முறையாகப் பதிவு செய்து செய்தியையும் படங்களையும் அனுப்பிக் கொண்டிருந்தேன். இறுதிநாள் நிகழ்வின்போதுதான், பிரச்சினை நடந்தது. அப்போது நானும் இன்னொரு நண்பருமாக தேநீர் குடிப்பதற்காக கடைக்குப் போயிருந்தோன். அந்த நண்பருக்குப் புகைபிடிக்கும் வழக்கம் இருந்தது. அதனால் சற்று நேரம் கடையில் நின்றோம். அந்த நேரத்தில்தான் கலவரம் நடந்தது. சம்பவ இடத்தில் நாங்கள் நிற்கவில்லை என்றாலும் அதற்கு அருகில் நின்றதால் பல படங்களைப் பதிவு செய்தோம். ஆனால், சிக்கலுக்குள் நான் மாட்டிக்கொள்ளவிலலை. அதனால் பெரும்பாதிப்புகள் எனக்கு ஏற்படவில்லை. 8. வேறு என்னமாதிரியான நிகழ்வுகளில் நீங்கள் முக்கியமான பங்கை ஏற்றிருக்கிறீங்கள்? பிறகு வந்த காலங்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தில் பிரச்சினைதான். படத்தைப் பிடித்தாலும் பிரச்சினை. பிடிக்காவிட்டாலும் பிரச்சினை. தேர்தற்காலங்களில் பல அரசியல் தலைவர்களையும் படம் பிடித்திருக்கிறேன். நான் சந்திக்காத தலைவர்களே இல்லை. தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயத்தை, ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் கார்த்திகேசன் மாஸ்டரை, வி. பொன்னம்பலத்தை, எழுத்தாளர்களான டானியலை, டொமினிக் ஜீவாவை என்று நான் படம் பிடிக்காத பிரபலங்களே யாழ்ப்பாணத்தில் இல்லை. இதைவிட யாழ்ப்பாணத்தில் 1958 இல் தாக்கிய சூறாவளியின் அழிவுகளை, பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளை... இப்படி எல்லாவற்றையும் படமாக்கியுள்ளேன். கடந்த 2008 இல் வீசிய சூறாவளி அழிவைக்கூட படம் பிடித்திருக்கிறேன். பிறகு போர்க்காலம். யாழ்ப்பாணத்துக் கடைகள் எரிந்தன. ஈழநாடு காரியாலயம் எரிந்தது. யாழ்ப்பாண நூலகம் எரிந்தது. எல்லாவற்றையும் படமாக்கினேன். பிரச்சினைகளைப் படம் பிடிப்பது என்றாலே பிரச்சினைதான். விடுதலைப் புலிகளை, வேறு இயக்கங்களின் நிகழ்ச்சிகளை என்று நான் எப்போதும் மக்களுக்குரியதை வெளிப்படுத்த படமாக்கியிருக்கிறேன். ஆனால் நான் தொழிலைச் செய்து கொண்டேயிருந்தேன். சில சம்பவங்கள் முக்கியமாக இருக்கின்றன. அவை பல. ஆனால் எனக்கு எல்லாம் இப்போது உடனடியாக ஞாபகத்துக்கு வரவில்லை. ஒருமுறை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர் இரும்பு மனிதன் என்ற நாகநாதனுக்கும் எனக்கும் பிரச்சினை வந்தது. அவர் கட்சியில் உள்ள யாருடனோ வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கை கலக்கும் நிலைக்கு வந்தது. அப்போது அந்தக் காட்சியை நான் படமாக்கிக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்த நாகநாதன் என்னுடைய கமெராவைப் பிடுங்கினார். நான் கொடுக்க மறுத்தபோது பிரச்சினை வந்தது. கடைசியில் அவர் அதைப் பறித்து விட்டார். உடனே நான் என்னுடன் வைத்திருந்த அடுத்த கமெராவினால் படம் பிடித்தேன். இது நடந்தது உடுவிலில். 9. நீண்டகாலமாகவே பத்திரிகைப் படப்பிடிப்பாளராக இயங்கி வந்திருக்கிறீங்கள். ஆனால், பத்திரிகை அலுவலகத்தில் எதற்காகப் பணியாற்ற முயற்சிக்கவில்லை? எனக்குப் படிப்புக்குறைவு. ஆனால், படம் பிடிக்கும் திறமை இருந்தது. படிப்புக் குறைவு என்றபடியால் அலுவலகத்துக்குப் போக நான் விரும்பவில்லை. என்னுடைய திறமையை இனங்கண்டு படப்பிடிப்புக்குச் சந்தர்ப்பம் தந்தார்கள். நாற்பது ஆண்டுக்கு மேலாக யாழ்ப்பாணத்தின் முதற்தரப் படப்பிடிப்பாளராக என்னை லேக்கவுஸ் வைத்திருக்கிறது. இடையில் சிலகாலம் உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளுக்கும் படங்களைப் பிடித்திருக்கிறேன். அதற்கு முன்னர் ஈழநாடு பத்திரிகைகூட என்னிடம் முக்கியமான சில படங்களைக் கேட்டுப் பிரசுரித்திருக்கிறது. அலுவலகத்தில் வேலை செய்வதற்கு அந்த நாளில் 180 ரூபாய்தான் மாதச் சம்பளமாகக் கொடுப்பார்கள். ஆனால், நான் வெளியே படப்பிடிப்பிலும் செய்தி சேகரிப்பிலுமாக 500 ரூபாய்க்கு மேல் உழைப்பேன். அப்போது நான் சொந்தமாக ஒரு கார்கூட வைத்திருந்தேன். பலர் தங்கள் படங்களைத் தேடி என்னிடம் வந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து கூட கேட்டு எழுதியிருக்கிறார்கள். நான் பிடித்த படங்கள் இன்று வரலாற்று ஆவணங்களாகியிருக்கின்றன. இதுவரையில் லட்சத்துக்கும் அதிகமான படங்களைப் பிடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். பெரும்பாலன படங்கள் பத்திரிகைகளின் வாயிலாக பல ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைக்குப் போயிருக்கிறது. ஆனால் எண்ணிக்கையை நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. அப்பொழுது திறமைக்கு இடமளித்தார்கள். திறமையானவர்களை ஊக்கப்படுத்தினார்கள். 10. யாழ்ப்பாண இடப்பெயர்வின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்தப் பதிவு உங்களிடம் இல்லையா? நானும் இடம்பெயர்ந்தேன். அப்போதுகூடப் படங்களைப் பிடித்தேன். ஆனால், பின்னர் உருவாகிய தொடர்பில்லாத நிலைமைகளால், படங்களை கொழும்புக்கு அனுப்ப முடியவிலலை. யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளுக்கு மட்டும கொடுக்க முடிந்தது. பிறகு அப்படியே வன்னிக்குப் போய் விட்டேன். வன்னியிலிருந்தும் கொழும்புக்கு படங்களை அனுப்ப முடியவில்லை. ஆனால் வன்னி நிலைமைகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது அங்கே இருந்த முக்கியமான பலர் என்னைத் தங்கள் நிகழ்வுகளுக்கு அழைத்துப் படம் பிடித்துக் கொள்வார்கள். முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் பிடித்திருக்கிறேன். பிறகு புரிந்துணர்வு உடன்படிக்கை வந்தவுடன் நான் மறுபடியும் யாழ்ப்பாணத்துக்கு வந்து விட்டேன். அப்படியெ மீண்டும் லேக்கவுஸ_டன் தொடர்பும் கிடைத்து விட்டது. நானும் இன்னொருவரும் தான் பழைய மூத்த ஆட்களாக லேக்கவுஸில் வேலை பார்க்கிறோம். ஆனால் நான் ஒரு சுதந்திரப் படப்பிடிப்பாளர். கமெராதான் எனக்கு வாழ்க்கை. 11. இப்பொழுது என்னமாதிரியான கமெராவைப் பயன்படுத்துகிறீங்கள்? இப்போது நான் வைத்திருக்கிற கமெரா யப்பான் சொனி ரகம். இதை என்னுடைய மகள் கொடுத்து அனுப்பியிருக்கிறாள். அவள் வெளிநாட்டில் இருக்கிறாள். ஆனால் அந்தப் பழைய ஜேர்மன் கமெராக்களையும் வைத்திருக்கிறேன். டீஜிற்றல் கமெரா என்றால் பத்திரிகைத் தொழிலுக்குச் சுலபம். ஆனால், முன்னைய கமெராவைப் போல படங்களைத் தரமாக எடுக்க முடியாது. இந்த டிஜிற்றலில் லாபமும் வசதிகளும் கூடுதலாக இருப்பதால் அதையே பயன்படுத்துகிறேன். 12. உங்களின் கடந்த காலப் பதிவுகளை ஒரு அல்பமாகச் செய்து வெளியிடலாம் அல்லவா? இதைத் தவிர, இவ்வளவு நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் உங்களுக்கு ஏதாவது விருதுகள் கிடைத்திருக்கின்றனவா? நான் பதிவு செய்யாத சம்பவங்களே இல்லை. ஆனால், அதெல்லவற்றையும் தேடி எடுக்க வேணும். அதுக்கு இப்போது என்னால் முடியாது. முன்னர் நாட்டு நிலைமைகள் இடந்தரவில்லை. இப்போது நான் இப்படி இயங்கிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதை யாராவது பொறுப்பானவர்கள் செய்யலாம். அவர்கள் யாராவது முயற்சித்தால் நான் தகவல்களைத் தரமுடியும். அதாவது அவர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் முடியும். நீங்கள் சொன்னமாதிரி இந்தப் படங்களை எல்லாம் தொகுத்தால் நிச்சயமாக வடபகுதியின் 60 ஆண்டுக்கால வரலாற்றையும மக்களின் வாழ்க்கையையும் முக்கியமான தலைவர்களையும் பார்க்கலாம். புகைப்படங்கள் காலத்தின் சாட்சி என்று சொல்லுவார் ராஜப்பா. நான் காலத்தின் சாட்சியான ஒரு பணியைச் செய்திருக்கிறேன். இதில் பொய்யுக்கு இடமேயில்லை. உண்மைக்காக நான் நிறைய விலைகளையும் கொடுக்க வேண்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்தபடியால் எனக்கு விருதுகள் கிடைக்கவில்லை. இதுக்குக் காரணம், யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் ஒரு தொடர்ச்சியையோ தொடர்புகளையோ கொடுக்கவில்லை. ஆனால், வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் பாராட்டியிருக்கிறது. அவர்களுக்குத்தான் என்னுடைய பங்களிப்பைப் பற்றியும் தெரியம். இங்குள்ள நிலைமைகளையும் தெரியும். எனக்கு எப்போதுமே சந்தோசம் தருகிற விசயம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய படங்களை மக்கள் பார்த்து வருகிறார்கள். அறுபது ஆண்டுகளாக நான் பத்திரிகைத் துறையில் தொடர்ந்தும் இருக்கிறென். எல்லா நெருக்கடிக் காலங்களிலும் நான் புகைப்படக்காரனாக நின்று எல்லாவற்றையும் பதிவாக்கி ஒரு சாட்சியத்தைத் தந்திருக்கிறேன். இது போதாதா சந்தோசமாக இருப்பதற்கு? எல்லாத்தையும் விட போட்டோ ஜேர்ணலிஸ்ற்றாக நானே இருந்திருக்கிறேன். என்னுடைய படங்கள் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழி ஊடகங்களிலும் வந்திருக்கின்றன. 13. லேக்கவுஸில் வேலை செய்திருக்கிறீர்கள். அது இலங்கை அரசின் சார்பு ஊடக மையம். ஆனால், கடந்த கால நடவடிக்கைகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக - இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக நடந்தவை. மஇதை எப்படி லேக்கவுஸ் பத்திரிகைகளில் வெளிப்படுத்தினீர்கள்? நான் புகைப்படக்காரன். எரிந்தால் எரிந்தது என்று படம் பிடித்து அனுப்புவேன். விழுந்தால் விழுந்தது என்று படத்தைப் பிடித்துக் கொடுப்பேன். புகைப்படம் என்பது பதிவு. அது ஒரு சாட்சி. ஆகவே நான் படத்தைப் பிடித்து அனுப்பி விடுவேன். அவர்களும் அதை எப்படியோ பிரசுரித்துத்தான் ஆகவேணும். ஆனால், அந்தப் புகைப்படத்துக்குச் செய்தியை எழுதுகிறவர் சிக்கல் பட்டிருக்கிறார். இதை அவர்களே எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். நீ படத்தைப் பிடிச்சு அனுப்பிப் போடுவாய். நாங்கள் அதுக்குச் செய்தி எழுதேலாமல் கஸ்ரப்படுகிறம் என்று. ஒரு புகைப்படக்காரன் பொய் சொல்லவேண்டியதில்லை என்பதே என்னுடைய கருத்து, இது என்னுடைய அனுபவம். 00

Monday, December 26, 2011

பாடிப்பறை - அவதானிப்பும் அனுபவமும்





00

கடந்த வாரத்தில் மகிழ்ச்சியான விசயம், கொழும்பில் ‘பாடிப்பறை’ நிகழ்ச்சியில் இளைய நண்பர்களைச் சந்தித்தது. ஆச்சரியமும் நம்பிக்கையும் தருகிற விதத்தில் துடிப்பாக இயங்கும் இளைஞர்கள். ‘சமூக விஞ்ஞானக் கற்கை வட்ட’த்தைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமை பின்னேரங்களிலும் முக்கிய கருப்பொருளில் பலரையும் அழைத்துக் கலந்துரையாடல்களையும் நடத்துகிறார்கள். ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் ‘பாடிப்பறை’ என்ற கவிதைத்துறை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

பாடிப்பறையில் ‘கவிதைகளை வாசிப்பது, கவிதைகளை விமர்சனம் செய்வது, கவிதைப் போக்குகளைப் பற்றி ஆராய்வது, கவிஞர்களை நினைவு கொள்வது அல்லது அவர்களுடைய கவிதைகளையும் அவர்களையும் மதிப்பீடு செய்வது என கவிதை சார்ந்ததாகவே நடக்கிறது ‘பாடிப்பறை’.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி இணைத்தளத்தில் பார்த்த நண்பர் பௌசர், ‘அது என்ன பாடிப்பறை?’ என்று கேட்டார்.

‘பாடிப் பறைதல். கவிதைகளைப் பாடி, கவிதைகளைப் பற்றிப் பறைதல்’ என்று சொன்னேன்.

ஆனால், ஆண்டாள் கவிதையில் பாடிப்பறை என்று இதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார், பாடிப்பறை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மு. மயூரன். இந்தப் பெயரைத் தெரிந்தது விமலாதித்தன். விமலாதித்தனால், ஆழிமழை, பாடிப்பறை என இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டு, சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத் தோழர்களின் வாக்கெடுப்பில் ‘பாடிப்பறை’ என்ற தலைப்புத் தெரிவு செய்யப்பட்டது. பாட்டின் (கவியின்) மூலம் சமூகத்துக்குச் செய்தியைப் பறைதல் என்ற அர்த்தம் தோழர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

‘பாடிப்பறை’ நிகழ்ச்சிக்கான கருத்தாக்கத்தை உருவாக்கியவரும் அந்த நிகழ்ச்சியையும் அதற்கான அழைப்பிதழ்களையும் வடிவமைப்பவரும் விமலாதித்தன்தான். சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தில் அவர் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு இது. எப்பொழுதும் மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடிருப்பது விமலாதித்தனின் அடையாளம்.
நிகழ்ச்சிக்குப் பொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்து அழைத்துக் கலந்து கொள்ள வைக்கிறார்கள்.

10.12.2011 அன்று, கவிஞர் சு.வில்வரத்தினத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவையொட்டி, அவரை நினைவு கூர்வதாகவும் அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசுவதாகவும் அமைந்த நிகழ்வைப் ‘பாடிப்பறை’யில் ஒழுங்கு படுத்தியிருந்தனர்.

இதன்படி, ‘சு.வியைக் கண்டடைதல்’ என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக என்னை அழைத்திருந்தனர். மேடைப் பேச்சில் முதல் வரிசைக்குப் போக முடியாத ஆள் நான். (இடைவரிசையிற்கூட உன்னுடைய இடம் சந்தேகமே என்பார்கள் நண்பர்கள்) இதை வலியுறுத்திச் சொன்னபோதும் அவர்கள் அதை ஏற்கவில்லை. நானே சு.வியைப் பற்றிப் பேசவேண்டியதாயிற்று. சு.வியுடன் நட்பாக இருந்தவர்களில் ஒருவன் என்பதால், அவரைப் பற்றிப் பேசுவது, அவருடைய நினைவுகளைப் பொது அரங்கொன்றில் மீட்பது அவருக்கான மதிப்பைப் பேணுவதாகும் என்று நினைத்துச் சம்மதித்தேன்.

நிகழ்ச்சிக்காகப் போனபோது, அதிகாலையில், நண்பர் மு. மயூரன் வரவேற்றுத் தன்னுடைய அறைக்குக் கூட்டிச் சென்றார். புத்தகங்களும் இசைக்கருவிகளும் கணினியும் நிரம்பியிருந்த அறையில் இன்னொரு விசயமும் இருந்தது, ஒழுங்கு.

மு. மயூரன் கணிப்பொறித்துறையில் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறார். கணிப்பொறி தொடக்கம், இணைய அரசியல், சமூக அரசியல், மாற்றுச் சிந்தனை, பண்பாடு எனப் பலவற்றைப் பற்றியும் அறிவுபூர்மாக உரையாடக் கூடியவர். ஆனால், மிக எளிமையான விளக்கங்கள். நல்ல வாசிப்பாளர். இளைய தலைமுறையில் ஆச்சரியங்கொள்ள வைக்கும் அணியில் முக்கியமானவர். நான் பார்த்த, பழகிய இளைஞர்களில் ஆழமாகவும் சமூக அக்கறையுடனும் விசயங்களைப் பார்க்கும் ஒருவர். மட்டுமல்ல, செயற்பாட்டாளர். பாடிப்பறை, சமூக விஞ்ஞான வட்டம் போன்றவற்றை மயூனைப்போன்ற – அவருடைய நண்பர்களே இயக்கி வருகிறார்கள்.

பேசிக்கொண்டே நிகழ்ச்சிக்குத் தயாரானோம். நிகழ்ச்சிக்கான ஒலி அமைப்புக்கான ஏற்பாட்டைத் தானே கவனிக்க வேண்டும் என்பதால், வேளையோடு செல்ல வேண்டும் என்றார் மு. மயூரன.; ஒலிபெருக்கி வசதிகளைச் செய்வதற்கான கருவி மயூரனின் பொறுப்பிலிருந்தாலும் ஒலி ஒழுங்குகளுக்கும் இணைய வழியான வலைபரப்புக்கும் பொறுப்பானவர் தி. அனோஜன். அவரே வழமையாக அந்த வேலைகளைக் கவனிப்பவர். ஏறக்குறைய 20 வயதுக்கு மேலாகவோ கீழாகவோ ஒன்றிரண்டு வயதுடைய பருவம். ஆனால், இந்தத் துறையில் கெட்டிக்காரர். அன்று காலையில் அனோஜனுக்கு தவிர்க்க முடியாத வேறு பணிகள் இருந்தால், மயூரனே அந்தப் பணிகளை வேளையோடு சென்று சரிபார்க்க வேண்டியிருந்தது.
ஆகவே புறப்பட்டோம்.

‘பாடிப்பறை’ யைப் பற்றி இணையத்தின் வழியாக அறிந்த நளாயினி தாமரைச்செல்வன் என்பவர் இந்தச் சாதனத்தை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். அது பாடிப்பறை வட்டத்தினருக்கு மிகப் பெரிய உற்சாகத்தையும் பயனையும் கொடுத்திருக்கிறது. இவ்வளவு நாட்களும் ஒலி அமைப்புக்காக பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறார்கள். ஆகவே, அந்தச் சாதனத்தை எடுத்துச் சென்றோம்.

நாங்கள் ‘தேசிய கலை இலக்கியப் பேரவை’க்குச் சென்றபோது, அங்கே ரெஷாங்கன் தயாபரன் வரவேற்றார்.

பாடிப்பறையின் தொடர்பாளரும், ஒழுங்கு படுத்துனரும் ரொஷாங்கன்தான். மிக உற்சாகமானவர். என்னை இந்த நிகழ்ச்சிக்கு தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு வரவைத்தவர் இவரே. இப்போதுதான் ரொஷாங்கனை நேரிற் பார்க்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து, ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகிய நண்பர்கள் சிலரும் அங்கே இருந்தனர். முக்கியமாக, தனுஜன் நிகழ்வுக்கான அடிப்படை ஒழுங்குகளைச்செய்து கொண்டிருந்தார். மிகப் பொறுப்பான பேர்வழி. இவருடன் நான் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகியிருந்தேன். இவரே, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவோரை உபசரிப்பதில் முக்கிய பொறுப்பேற்கும் ஆள்.

துடிப்பான இளைஞர்கள் எப்பொழுதும் ஈர்ப்பைத் தருவர். அதிலும் பொது விசயங்களில் அவர்கள் முனைப்பாக இருந்தால், இந்த ஈர்ப்பு இன்னும் அதிகம். அதிலும் அவர்கள், அறிவார்ந்த விசயங்களில் ஆர்வத்தோடிருந்தால் இந்த ஈர்ப்பில் எல்லை பெரும்பரப்புக்கு விரிந்து விடும். அவர்கள் அறிவாளிகளாகவே இருந்து விட்டால், அதைச் சொல்லவே தேவையில்லை@ எதிர்காலம் குறித்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பிறக்கும் இடம் இதுதான்.

இந்த விசயத்தில் நான் கொடுத்து வைத்த பேர்வழி என்றே சொல்லவேணும். என்னுடைய வாழ்க்கை முழுதும் நான் இளைஞர்களுடன் இடையறாது பழகக் கிடைத்திருக்கிறது. அப்படிப் பழகும் வாய்ப்பு அதிகமுள்ள துறையும் தொழிலும் எனக்கு வாய்த்தது மகிழ்ச்சி. இலக்கியமும் ஊடகத்துறையும் இளைய தலைமுறையுடன் பழகுவதற்கான – அவர்களுடன் சேர்ந்தியங்குவதற்கான களவெளியை அதிகமாகக் கொண்டவை. அதிக சாத்தியங்களையும் உடையவை.

இளைய தலைமுறையினரோடு பழகும்போது அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள்? எப்படிச் சிந்திக்கிறார்கள்? என்ன செய்ய விரும்புகிறார்கள்? அவற்றை எப்படிச் செய்கிறார்கள்? எங்களுடைய இளைமைப்பிராயத்திலிருந்து அவர்கள் என்ன விதமாகவெல்லாம் வேறுபடுகிறார்கள்? எதைச் சேகரமாக்குகிறார்கள்? என்ற விசயமெல்லாம் தெரியவரும்.

எண்ண ஓட்டங்கள் தலைமுறைக்குத் தலைமுறை வேறுபடுகிறது. அனுபவங்களும் அறிவும் வேறுபடுகிறது. கூர்ப்பின் விதி புதிய தலைமுறையை மேலும் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, அதைத் தொடர்ந்து அவர்கள் பயணிக்கிறார்கள். ஒரு புதிய செய்மதியின் ஆய்வியக்கத்தைப் ஆர்வத்தோடு பார்ப்பது போன்ற ஒரு ஈர்ப்பு இது.

இந்த இளைஞர்கள், சமூக விடுதலையைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கிறார்கள். இலங்கையின் இனச்சிக்கல், பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் இயக்கங்களின் போக்குகள், மக்களின் நிலை, சர்வதேச அரசியல் மற்றும் அறிவியல் செல்வழிகள், தொழிநுட்பத்தின் விரிவாக்கம், கலை, இலக்கியம் பண்பாடு போன்ற தளங்களின் செயற்பாடுகள், அவற்றை எவ்வாறு மக்களுக்கான பண்பாடாக இயக்கமுற வைக்க வேண்டும் என்ற சிந்தனை என்றவாறாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றுக்கான அடித்தளமாகவே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் மூலமாக கருத்தமர்வுகளையும் கலந்துரையாடல்களையும் நடத்துகின்றனர். இந்த அமர்வில் கலந்து கொள்வது நல்லது, நிச்சமாக வாருங்கள் என்று தெரிவித்திருக்கும் அழைப்பைப் பார்க்கிற போதும் அதில் கலந்து கொள்ள முடியாதிருப்பது இழப்பே. நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கும் நாங்கள் இருக்கும் இடத்துக்கும் இடையிலான தூரமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்குக் காரணம்.

பாடிப்பறை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மயூரன் சில விளக்கங்களைச் சொன்னார்.

‘பாடிப்பறை’ என்பது, சமூக விஞ்ஞான வட்டத்தின் கவித்துறை சார்ந்த நிகழ்வாகும். கவிதை இலக்கியம் என்பதை வெறுமனே நயப்புக்கும் விருதுகளுக்கும் உரியதாக மட்டும் பார்க்காமல், அதன் கலைப் பெறுமதியோடு சேர்த்து, அதன் சமூக அரசில் பெறுமதிகளை உணர்ந்து கொண்டு மக்களது விடுதலைக்கான கருவியாகவும் மக்கள் மத்தியில் செல்வதற்கான பாதையாகவும் நாம் பார்க்க விரும்புகிறோம். அந்த வகையில், சமூக விஞ்ஞான வட்டமானது கற்றல், கற்பித்தல் என்பதைத் தாண்டி, சமூகத்தில் இறங்கி சமூக அசைவியக்கங்களில் பங்கு பற்ற விரும்பும் ஓர் அமைப்பாக இருக்கிறது.

மு.தளையசிங்கத்தின் மருமகளும் சு.வியின் துணைவியாரின் தங்கையும் இங்கே வந்திருக்க, தளையசிங்கத்தின் முகாமில் உருவாகி வளர்ந்த சு.வியின் உறவினர்கள் கலந்து கொள்ள, தேசிய கலை, இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில், ஒரு புதிய இளந்தலைமுறையினரான சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தினரால், அந்தக் கவிஞனின் நினைவாக, ஒரு நிகழ்வு நடக்கும் இத்தருணம், பல வழிகளில் முக்கித்துவம் உடையதாகும்.
இருக்கவே செய்கின்ற அரசியல், கருத்து நிலை வேறுபாடுகளுக்கும் அப்பால், போற்ற வேண்டிய – உற்சாகப் படுத்தப்பட வேண்டிய கூறுகளைப் போற்றுவதும் உற்சாகப்படுத்துவதும் எமது கடமையென்றே நாம் கருதுகிறோம்’ என்றார் மு.மயூரன்.

மாறியிருக்கின்ற இலங்கையின் அரசியல் நிலவரங்களின் பின்னணியில், எல்லோருக்கும் கிடைத்திருக்கின்ற புதிய வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் இத்தகைய ஒரு சிந்தனையும் அதை முன்மாதிரியாக்கும் செயற்பாடும் வரவேற்கத்தக்கதே. புதிய சிந்தனைகளுக்கும் அனுபவங்களின் வழியாகக் கண்ட உண்மைகளுக்கும் மதிப்பளிக்கும் எந்தச் செயலும் பெறுமதியானது.

தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவிதைகளை நல்ல முறையில் வாசித்தளித்தனர். அதிகமாகச் சு.வியின் கவிதைகள்.

திரு. சோ.முரளி சு.வியின் "யாருடைய கால்கள்" எனும் கவிதை மீதான நயவுரையைச் செய்தபின்னர், சு.வியின் "விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்" எனும் கவிதையை, கவிஞர் சடாகோபன் வாசித்தார்.

கவிஞர் ஒட்டோ ரெனெ கஸ்ட்டிலோ அவர்கள் எழுதிய ஸ்பானிய மொழிக்கவிதையின் தமிழ்மொழிபெயர்ப்பான, "அரசியல் சாராப் புத்திஜீவிகள்" திரு.மிதுன் ராகுல் அவர்களால் வாசித்தளிக்கப்பட்டது. தொடர்ந்து ந.காண்டிபன் தலைமையில், சு. வில்வரத்தினத்தின் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்புகளிலான கவிதைகளைக் கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. "மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்" எனும் தலைப்பில் செல்வி.ரா.வைஷ்ணவியும் நீண்டெரிந்த கோடையில் எனும் தலைப்பில் திரு.பவித்திரனும், "உயிர்த்தெழும் காலத்திற்காக" எனும் தலைப்பில் திரு. மார்க்ஸ் பிரபாகர் அவர்களும் தத்தம் கவிதைகளை வெளிப்படுத்தினர்.

சு.வியைப் பற்றிய நினைவுரையை அடுத்து, கவிஞர் சி. சிவசேகரம், டொமினிக் ஜீவா, சோ.தேவராஜா உட்பட வேறும் சிலர் கருத்துரைத்தனர். (மன்னிக்கவும் அதில் இருவர் முக்கியமானவர்கள் - அவர்களின் பெயர்களை மறந்து விட்டேன்).

சு.வியின் சமனிலையை மையப்படுத்தியே எல்லோருடைய பேச்சுகளும் இருந்தன. குறிப்பாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, சாதி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை போன்றவற்றில் சு.வியின் எதிர்வினைகளும் நிலைப்பாடுகளும் அவரை ஒரு சமனிலையாளராக அடையாளம் காட்டுகின்றன என்று சொன்னார்கள். அவர் தமிழ்த்தேசியவாதியாக இருந்தபோதும் ஒடுங்கிய ஒற்றைப் பரிமாணத்துடன் தன்னை வைத்துக்கொள்ளாமையே சு.வியின் சிறப்பு என்பதை பொதுவாக எல்லோருமே வலியுறுத்தினர். சு.வியின் கவிதைகளில் காணப்பட்ட குறுந்தேசியப் பண்பைச் சுட்டிக்காட்டி 80 களில் தான் எழுதிய விமர்சனத்தைச் சுட்டிக்காட்டினார் கவிஞர் சி. சிவசேகரம்.

நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு அம்சம், சு.வியின் உறவினர்கள் வந்திருந்தமை. அதிலும் அவருடைய சகோதரர்களில் ஒருவரான திரு. சு. கருணாகரன் சு.வியைப் பற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினார். சு.வியின் உருவாக்கத்தில் அவருடைய தாயார் அடிப்படையாக இருந்ததைப்பற்றி அவர் சொன்னார். மேலும், சு.வி சார்ந்திருந்த சர்வமத ஆசிரமம், மு.த ஆகிய தரப்பின் பங்களிப்புகளைப் பற்றியும் அவர் கூறினார். சு.வியின் சகி, மேகலா கண்ணில் சிகிக்சை செய்திருந்த காரணத்தினால், நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் உறவினர்களை அனுப்பிவைத்திருந்தார். அந்த நிகழ்வுக்கு வந்திருக்க வேண்டிய ஒருவர், மு.பொ. ஆனால், அவர் வரவில்லை.

தவிர, நீண்ட காலத்துக்குப் பிறகு, நண்பர்கள் கேதாரநாதன், மாவை நித்தியானந்தன், சி.கா. செந்தில்வேல், அந்தனி ஜீவா போன்றோரைச் சந்திக்கக் கிடைத்தது.

மேலும் சிலரைக் குறிப்பிட வேண்டும். மாளவிகா. நுpகழ்ச்சியை ஒழுங்காக – அமைதியோடு சிறப்புறத் தொகுத்து வழங்கினார். சமூக விஞ்ஞானக் கற்கை வட்டத்தின் உற்சாகமான உறுப்பினர் இவர் என அறிமுகப்படுத்தினார்கள்.

இன்னொருவர் மௌ. மதுவர்மன். இந்தக் கற்கை வட்டத்தின் பின்னணியில் நினறு தொடர்ச்சியாக நீண்டகாலமாக இயங்கி வருகிறார். மேலிரிந்த கீழான அமைப்பொழுங்க இல்லாத இவ்வட்டத்தின் கட்டுக்கோப்பினைத் தொடர்ச்சியாக காத்துவருபவர்களில் இவர் ஒருவர் என்றார்கள்.

இந்த நிகழ்வு எனக்கு இரண்டு விசயங்களில் மகிழ்ச்சியைத் தந்தது. ஒன்று சு.வியைப்பற்றிக் கதைத்தது. மற்றது, இளைய நண்பர்கள் பலரின் புதிய தொடர்பும் உறவும். மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்பிக்கையும் பொங்கிய இளைய முகங்கள்.

இப்படி ஆற்றல் மிக்க ஆயிரக்கணக்கான இளையோரைத்தானே சுதந்திர இலங்கை தின்று பசியாறியிருக்கு? எண்பதுகளில் இப்படித்தானே நாங்கள் நெஞ்சு நிரம்பிய கனவுகளுடன் ஊர்கள்தோறும் திரிந்து... சனங்களிடையே இறங்கினோம்.

ஆனால், இந்த இளைய தலைமுறை எல்லாவற்றையும் தன்னுள் நிதானப்படுத்துகிறது. ஏனென்றால், இது நெருப்புக்குள்ளே முளைத்து, இரத்தத்தில் வளர்ந்த பயிர்களல்லவா!

மறுநாள், விடைபெற்று வரும்போது மு.மயூரன் ஒரு பரிசைத் தந்திருந்தார் - ‘காலம் மாறுது’ என்ற பாடல் இறுவெட்டு அது. மலையக நிலைவரத்தைப் பற்றிய அருமையான வெளிப்பாட்டைக் கொண்ட பாடல்கள். உண்மையிலேயே அது பெரும் பரிசுதான்.

மறக்கவே முடியாத எதுவும் ஏதோவகையில் பரிசாகத்தான் இருக்கிறது.
00