மேலதிக புரிதல்களுக்காக சிறு குறிப்பு
பரதேசிகளின் பாடல்களுக்கு நான் எழுதிய விமர்சனம்.
வாசுதேவனால் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால் என்னுடைய விமர்சனம் பரதேசிகளையும் அவர்களுடைய பாடல்களையும் அதாவது பரதேசிகளின் கவிதைகளை தவறாகப்புரிந்திருப்பதாக வாசுதேவன் சொல்கிறார்.
வாசுதேவன் தவறான கோணத்திலிருந்தே அந்த விமரிசனத்தைப் பார்க்கிறார். புலம்பெயர்வாழ்வு சந்தித்துள்ள நெருக்கடிகளை நான் புரிந்துகொள்ளத்தவறுவதாகவும் அவற்றைப்பொருட்படுத்த நான் விரும்பவில்லை என்று குறறம்சாட்டமுனைகிறார். இது எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு.
புலம்பெயரிகளின் துயரம்பற்றியும் அவர்கள் தினமும் படுகின்ற அவலங்களைப்பற்றியும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறேன். அவறற்றை வாசுதெவன் அறியவேண்டும். தவிர பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னடைய விமரிசனத்திலும்கூட எந்தச்சந்தர்ப்பத்திலும் அப்படி புலம்பெயரிகளின துயரத்தைப் புறக்கணித்து எந்தக்குறப்பும் எழுதப்படவில்லை.
பதிலாக பரதேசிகளின் பாடல் என்றபெயரில் முன்வைக்கப்பட்டிருக்கும் படைப்புகளைக்குறித்த அபிப்பிராயங்களே பேசப்பட்டுள்ளன. அந்த அபிப்பிராயங்களை திரிவுபடுத்தி அதனை தசைதிருப்ப முனைவது அபத்தமானதும் மிகத்தவறானதும்கூட.
அது தேவையற்றவிதத்தில் புலத்துக்;கும் தாய்நிலத்துக்குமான இடைவெளியையும் முரண்வளையங்களையும் உருவாக்கிவிடும். அதனை நான் எந்தச்சந்தர்ப்பத்திலும் விரும்பவில்லை. அதுமட்டுமல்ல அது அடிப்படையில் தவறானதும்கூட. குறுகிய அரசியல் மனோபாவத்தின் வெளிப்பாடாகவே அதனை நான் காணுகிறேன். இந்தக்குறுகிய மனோபாவத்திற்கும் அதன் உருவாக்கத்துக்கும் பின்னணிகளும் காரணங்களும் உண்டு. ஏற்கனவே அப்படியான கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன சிலபோது சிலதரப்பினரால். நான் அப்போதும் அதனை எதிர்த்திருந்தேன். அது தவறானதுமட்டுமல்ல கண்டிக்கவேண்டியதும் கூட.
அதுதவிர புலத்திலிருந்தாலும் தாய்நிலத்தின்மீதான பிடிமானம் தமக்குண்டு என்ற எண்ணமும் ஒரு காரணம். தாய்நாட்டில் நடக்கின்ற போராட்டத்துக்கு தாமும் பங்களித்து வருகிறோம் என்பது இன்னொரு காரணம். அந்த உரித்தை யாரும் மறுக்கவில்லை. அது மறுக்கப்படமுடியாததும் கூட.
இத்தகைய புரிதலின் பின்னணியில் வைத்துத்தான் பரதேசிகளின் பாடல்களுக்கு என்னுடைய விமரிசனம் எழுதப்பட்டுள்ளது.
அந்த விமரிசனத்தை எழுதும்போதும் இப்பொழுது வாசுதேவனுக்கான இந்தப்பதிலை எழுதுகின்றபோதும் புலம்பெயரிகளுக்கும் தாயத்தில் உள்ளோருக்கும் இடையில் எந்தக்காயங்களோ தப்பபிப்பிராயங்களோ ஏற்படக்கூடாது என்ற ஆகக்கூடிய பொறுப்புணர்ச்சி மனங்கொள்;ளப்பட்டுள்ளது.
சூழ்நிலைகளின் நிமித்தம் வாழ்களம் இங்கும் அங்குமாக வேறுபட்டிருக்கிறதே என்ற உணர 'வு எல்லோருக்கும் வேண்டும். ஆனால் இத்தகைய புரிதல் பலருக்கும் இல்லை என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.
புலம்பெயர்தல மிகக்கடினமானதுதான். புலம்பெயரும்போது அனுபவிக்கின்ற அவமானங்களும் வலிகளும் மிக அதிகம்தான். புலம்பெயர்ந்து வாழ்கின்ற அந்த வாழ்களத்தில் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் சாதாரணமனவையல்லத்தான். வாசுதெவன் சொல்லியுள்ளதையும்விட மிக ஆழமானவை. அந்தபபுரிதல் நம்மிடம் உண்டு. இதையெல்லாம் கணக்கிலெடுத்;துக்கொண்டே பரதேசிகளின் பாடலுக்கு அந்த விமரிசனம் எழுதப்பட்டுள்ளது என்பதை ஏன் வாசுதேவனால் புரிந்துகொள்ளமுடியாமல்Nபுhனது.
ஆகவே இவற்றுக்கப்பால் அடிப்படையி;ல் எங்கோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றே கொள்ள முடியும். புரிந்து கொள்ளுதலில் நிகழ்கிறது ஏதோ ஒரு சறுக்கல். அல்லது தடை. அல்லது குறை. உண்மையி;ல் அதற்கான காரணமென்ன. அந்தக்காரணமோ அல்லது அந்தக்காரணங்களோ நியாயமானவைதானா.
மனிதனுக்கிருக்கிற பல பிரச்சினைகளில் முக்கியமானவை புரிதல் பற்றியதும் அங்கீகரித்தல் பற்றிதுமே. புரிந்து கொள்ளலில் ஏற்படுகின்ற தடைகளும் குறைபாடுகளும் தயக்கங்களும் சிக்கல்களும்தான் பல பிரச்சினைகளுக்குக் காரணம். அதேபோலத்தான் அங்கீகரித்தலில் நிகழ்கிற பிரச்சினைகளும் பல எதிர்விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன.
உலகில் பல பிரச்சினைகளும் சிக்கல்களும் இந்த மையத்தைச்சுற்றியே நடக்கின்றன. ஒன்றை அங்கீகரித்தல் என்பதற்குத்தான் எத்தனை பெரிய தயக்கங்கள். ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை ஆயிரம் பின்னடிப்புகளும் மறுப்புகளும்;. பெண்ணை அங்கீகரிக்காமல்தானே இந்;த உலகம் பல்லாயிரம் ஆண்டுகளைக் கழித்திருக்கின்றது. சாதியிலும் இதுதான்; நடக்கிறது. ஒருவரை அங்கீகரிக்கத்தவறுவதன் விளைவே எல்லாப்பிரிவினைகளும். வெள்ளையர் கறுப்பரையும் வசதியுள்ளோர் வசதியற்றோரையும் அங்கீகரிக்க மறுத்தே வருகின்றனர். எந்தப்பள்ளியிலும் எந்தப்பாடத்திலும் பிரிவினைகளை எவரும் சொல்லிக்கொடுக்கவில்லை. யாரையும் எந்தச்சந்தர்ப்பத்திலும் நிராகரிக்கும்படி எவரும் வெளிப்படையாகச்சொல்லத்துணியவில்லை. ஆனால் பிரிவினையும் பாரபட்சமும் தாராளமாக நடக்கிறது. குடும்பத்துக்குள்ளேயே அறுவைகள் தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றன. உறவுக்குள்ளேயே வன்முறை. அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகள் எல்லாம் நுட்பமாக வளர்ந்துள்ளன. ஆக இதுவே மனிதன் கடக்கமுடியாத இருண்ட பெரும் பரப்பாக விரிந்து கிடக்கிறது.
இந்த மையத்தை வைத்துத்தான் மனிதன் ஏகப்பட்ட படைப்புகளையும் தத்துவத்தையும் உருவாக்கியிருக்கிறான். ஒருபக்கத்தில் பிரபஞ்சத்தின் புதிரும் அதில் மனிதனின் இடம் என்ன என்பதும் இன்னும் தீராத புதிராகவே உள்ளது. அதுபோல மனிதனிடத்தில் மனிதனுக்கு எத்தகைய இடமுண்டு என்பது இன்னுமொரு தீராப்பிரச்சினை. உண்மையில் இதுதான் தீராப்பெரும் பிரச்சினையும் தீர்க்கமுடியாப் பிரச்சினையும். இதைச்சுற்றியே மனிதனின் ஒழுக்கவிதிகள், சட்டம், அன்;பு, பண்பாடு, அறம், அதிகாரம், மொழி, மதம் என எல்லாமே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் புரிந்து கொள்ளுதலிலும் அங்கீகரித்தலிலும் இன்னும் இன்னும் பல சிக்கல்கள் கிளைபிரிந்து கொண்டேயிருக்கின்றன. அது முடிவில்லாதது. முடிவேயில்லாதது. எத்தனை தத்துவங்களின் ஒளியின் பின்னும் இருளடைந்த பகுதியாகவே இந்தப்பிரச்சினை இருக்கிறது. இதுவொரு அடிப்படை நியதி என்றாகி விட்டது. இது மாறா விதி. மனிதனின் இத்தனை ஆண்டுகால உழைப்பும் அடைய முடியாத தோல்வி இது. மனித உழைப்பென்பது அது இதுவரையில் கண்ட அறிவுதான். மனிதன் சேகரித்திருக்கிற அறிவுதான் அவனது அடையாளம். அதுதான் அவனுடைய வரலாறு. அதுதான் மனிதனின் பயணம். அதுதான் அவனுடைய பாதை. அதுதான் அவனின் தேட்டம். இந்தத் தேட்டத்தை வைத்துத்தான் மனித வாழ்க்கையும் வரலாறும் நகர்கிறது.
ஆனால் இத்தனை ஆற்றல் நிரம்பிய அறிவினால் புதிய உலகத்தை மறு படைப்பாக்கம் செய்யுமளவுக்கு வளர்ச்சியும் வல்லாண்மையும் உடைய அறிவினால் மிக இலகுவான புரிந்து கொள்ளல் என்ற சிறிய பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியவில்லை. இதுதான் வேடிக்கை. இதை என்னவென்பது. இத்தகைய சிக்கல் குறித்த அடிப்படைப்புரிதல்களோடும் சிக்கல்களோடும்தான் வாசுதேவனின் விமர்சனமும் அணுகப்பட வேண்டியுள்ளது.
கோணங்கள், தளங்கள், வியூகங்கள், தரப்புகள் எல்லாவற்றையும் விலக்கிவிட்டு உண்மையைக்காணவேண்டும். அப்படியொரு உண்மை நடைமுறையில் இல்லையென்று யாரும் வாதிடலாம். அந்த வாதம்பற்றி நாம் பொருட்படுத்த முடியாது. அதற்காக உண்மையைகாணாமலிருக்கவும் முடியாது. முதலில் நாம் உண்மையை அறியவேண்டும். அது கசப்பானதாக இருந்தாலும் இருக்காவிட்டாலும். அதுவே அடிப்படையானது.
பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமர்சனத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான புள்ளி புலம்பெயர் இலக்கியம் அதன் அடுத்த நிலையைக்காண வேண்டும் என்பதும் ஏற்கனவே வெளிவந்த புலம்பெயரிலக்கியத்தின் சாயலைக்கடந்து இந்தப் பரதேசிகளின் பாடல்கள் வரவில்லை என்பதுமே. அதாவது பரதேசிகள் என்ற அடையாளத்துக்கு ஏற்றமாதிரி நவீன தமிழ்ப்பரப்பு இதுவரை அறிந்திராத புதிய பொருட்பரப்பு என்ன என்பதுமே. ஏனெனில் பரதேசி என்ற சொல்லுணர்த்தும் பொருள் அந்தளவுக்கு ஆழமானது. இயல்பு வாழ்வை இழந்த அவலத்தின் கொதிநிலையும் வேரிழந்த மனிதரின் கொந்தளிப்பும் குமுறிவெளிப்படும் ஆழ்பரப்பையும் நிலைகொள்ளா வாழ்வில் பெறுகின்ற அனுபவ முதிர்ச்சியின் திரட்சியையும் பரதேசிகளில் காணவிளைந்தேன்.
ஆனால் ஏற்கனவே புலம்பெயர் இலக்கியம் காட்டிய அவலப்பரப்பிற்குள் அதே சாயல்களுடன்தான் பரதேசிகளின் பாடல்களும்; இருக்கின்றன. அதற்காக இந்த அவலம் சாதாரணமானது என்றோ பொருட்படுத்தத்தக்கதல்ல என்றோ அல்ல. அவலம் தொடரும்வரையில் அதனுடைய முறையீடும் கொந்தளிப்பும் இருந்தே தீரும். ஆனாலும் அதை உணரும் முறையிலும் உணர்த்;தும் அல்லது வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றங்களும் வேறுபாடுகளும் இருக்கும். அப்படி இருக்க வேண்டும். அது அவசியமானது. படைப்பின் அடிப்படை அதுதானே. புதிது புதுமை வேறுபாடு வித்தியாசம் என்பதாக.
பரதேசிகளின் பாடல்கள் என்ற அர்த்தப்படுத்தலை ஏன் இந்தத்தொகுதிக்கு பதிப்பாளர்கள் வழங்க வேண்டியிருந்தது என்பதிலிருந்தே இதனை விளங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே வெளிவந்த புலம்பெயர் இலக்கியத்தொகுப்புகளிலிருந்து இதை வேறுபடுத்தி அழுத்தம் பெறவைக்கும் அக்கறைதானே அது. அதேவேளை இதற்குள் இதுரை வெளிவந்திராத புதிய பொருட்பரப்பு உண்டென்றும்தானே அர்த்தம். அந்தப்புதிய பொருட்பரப்பு என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.
இப்போது மீண்டும் மரணத்துள் வாழ்வோம் காலகட்டகவிதைகளை யாராவது எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும். ஏனெனில் அந்தக்கவிதைகள் தமிழ்ச்சூழலில் ஏற்கனவே எழுதப்பட்டாயிற்று. அ தற்காக மரணத்துள் வாழும்; சூழல் மாறிவிட்டதாக அர்த்தமில்லை. அது மாறிவிடவும் இல்லை. இந்த மாறாச்சூழலின் யதார்த்தத்தை எழுதவும் வேண்டும். அதேவேளையில் அது முந்திய படைப்புகளின் மறுபிரதியாகவும் இருக்கக்கூடாது. இதுதான் படைப்புச்சவால். இல்லையெனில் திரும்பத்திரும்ப ஒவ்வொருவரும் சக்கரத்தைக் கண்டுபிடித்தால் எப்படி இருக்குமோ அப்படியே இதன் பெறுமதியும் அமைந்து விடும்.
பரதேசிகளின் பாடல்கள் இதற்குமுன் வந்த புலம்பெயர் இலக்கியத்திலிருந்தும் அதன் மரபிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் எந்த வகையில் வேறுபடுகின்றது. இருபதாண்டுகாலத்துக்கும் அதிகமான புலம்பெயரிலக்கியத்தின் வளப்பாரம்பரியத்திலிருந்து பரதேசிகளின் பாடல்கள் வேறுபடுகின்ற இடமென்ன என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது. பரதேசிகளின் பாடல்கள் என்ற அடையாளம் அப்படியொரு நிலையில்தானே உருவாகியிருக்கவும் முடியும்.
குறிப்பாக புலம்பெயரிகள் தொடக்கநிலையில் தனிமனிதர்களாக இருந்து பட்ட அவலமும் அனுபவமும் ஒருவகை. பின்னர் குடும்பம் என்ற வகையில் புதிய பண்பாட்டுச்சூழலிலும் நிலப்பரப்பிலும் வாழ்வை நகர்த்துவது இன்னொரு வகை. அதில் பிள்ளைகள் என்ற அடுத்த தலைமுறையை எந்த நிலையிலும் அமைப்பிலும் ஒழுங்கு படுத்துவது என்பது வேறொரு வகை.
இதன்படி பரதேசிகள் என்ற வகையில் இந்தப்படைப்பாளிகளின் வாழ்க்கை அமைந்திருக்கிறதா
புலம்பெயர் ஈழத்தமிழர்களின்முதல்தiலைமுறை தாய்நிலத்திலிருந்து தான் பிடுங்கியெறியப்பட்ட கொடுமையில் துவழ்கிறது. இது உண்மையில் கொடுமையானதே. அதேவேளை அதன் இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள் அல்லது அதன்பின்வரும் தலைமுறைகள் இந்த உணர்வலைகளிலிருந்தும் யதார்த்தத்திலிருந்தும் மெல்லமெல்;;;;;ல கழன்று விலகிச்செல்கின்;றன.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் ஒரு நண்பர பிள்ளைகளின் விடுமுறைக்காலத்தில் தன்னுடைய ஊர்க்கோவில் திருவிழாவிற்கு வருவதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் பயணம் செய்ய ஆயத்தப்படுத்தினார். அப்போது அவருடைய பிள்ளைகள் கேட்டார்களாம் அப்பா நீங்கள் எதற்காக ஊருக்குப்போக விரும்புகிறீர்கள்என்று.
ஊரில் எப்படி திருவிழா நடக்கிறது என்று நீங்களும் பார்க்வேணும். அங்கே திருவிழாவின்போது எல்லோரும் ஒன்று கூடுவார்கள். பிற இடங்களில் இருக்கிற ஆட்கள்கூட திருவிழாவின்போது ஒன்றாகச்சேருவார்கள். அங்கே எல்லோரையும் சந்திக்கலாம். அந்தப்பண்பாட்டு நிகழ்வை நீங்;கள் கட்டாயம் பார்ப்பது தேவை என்று தன்னுடைய பிள்ளைகளிடம் அவர் சொல்லியிருக்கிறார்.
ஊரில் தன்னுடன் படித்த நண்பர்கள் பழகியவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரையும் ஒன்றாகப்பார்க்கலாம். தான் படித்த பள்ளியிலிருந்து வாழ்ந்த இடங்கள் வரையிலும் மீண்டும் அவற்றை காணலாம் என்றெல்லாம் அந்த நண்பர் தன்னடைய பிள்ளைகளுக்கு விளக்கியிருக்கிறார்.
அதற்கு அந்தப்பிள்ளைகள் சொன்ன பதில்; என்ன தெரியுமா.
நீங்களும் அம்மாவும் ஊருக்குப் போய் வாருங்கள். நாங்கள் ஜேர்மனிக்குப் போகிறோம் என்று.
அந்தப்பிள்ளைகள் ஜேர்மனியில்தான் பிறந்து வளர்ந்தன. பின்னரே அவை லண்டனுக்குச் சென்றிருந்தன. ஜேர்மனியில் அவர்கள் சிறுவயதுக்கல்வியைப்படித்தார்கள். அதனால் அவர்களுக்கு இளவயதின் ஞாபகங்களும் இளவயதுத் தோழர் தோழியரும் ஜேர்மனியில்தான் உண்டு. எனவே அவர்கள் தங்களின் விடுமுறைக்காலத்தில் தாஙகள் முன்னர் வாழ்ந்த இடத்துக்கும் தங்களின் பால்ய நண்பர்களிடமும்தான் போக விரும்புகிறார்கள். இதொன்றும் ஆச்சரியமான சங்கதியல்ல.
அடையாளம் என்பது ஒருவகையில் நினைவுகளின் தொகுப்புத்தான். பண்பாடும் ஒருவகையில் அப்படித்தான் தொழிற்படுகிறது. இந்த நினைவுகளைக்கடப்பதுதான்;; சவால்.
பரதேசிகளின் அடையாளம் தமிழ்ச்சூழலிலும் தமிழ் வரலாற்றிலும் பதியப்பெற்றுள்ள முறையையும் அது எந்தெந்தத்தளங்களினூடாக ஊற்றெடுத்துள்ளது என்று நான் குறிப்பிட்டுள்தையும் புரியத்தவறி ஏன் பரதேசிகளைச் சித்தர்களுடன் இணைத்து நான் பார்ப்பதாக வாசுதேவன் தொடர்பு படுத்துகிறார் என்று தெரியவில்லை.
பரதேசிகளுக்கு வாசுதேவன் சொல்கிற அதே விளக்கத்தையே என்னுடைய விமரிசனமும் குறிப்பிடுகிறது. காலமும் இடமும் வௌ;வேறு தன்மைகளை ஏற்படுத்துகிறதே தவிர அடிப்படை ஒன்றுதான்.
பரதேசிகள் முதிர்நிலையொன்றில் பெறுகின்ற அனுபவம் சித்தர்கள் பெறுகின்ற அனுபவத்துக்கு ஒத்ததாக வருகின்றது. வேர்;களை இழந்த நிலை இருவருக்கும் ஓன்று. ஆனால் அவற்றை இழந்த விதம் இருவருக்கும் வேறானது. பரதேசியை நிர்ப்பந்தம் உருவாக்குகிறது. அதுதான் சித்தர்களிலிருந்து பரதேசியை வேறாக்கிக் காட்டுகிறது. சித்தர்கள் வேர்களை தீர்மானமாக கழற்றி விடுகிறார்கள்.
இங்கே புலம்பெயரிகள் படுகின்ற அவலத்தையும் அந்தரிப்பையும் மனங்கொண்டே இந்தக்குறிப்பு எழுதப்படுகிறது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. உள்ளுரில் இடம்பெயர்கிறவர்களக்கும் துயரமுண்டு. புலம் பெயர்ந்து போகிறவர்களுக்கும் துயரமுண்டு. இரு துயரங்களும் வேறுவேறாக இருந்தாலும் அடிப்படையில் ஒன்றே. இரண்;டிலும் வேர்கள் பிடுங்கப்படுகின்றன. அல்லது வேர்கள் இல்லை. இன்னும் சரியாகச்சொன்னால் ஒன்றில் வேர்கள் கழற்றப்படுகின்றன. மற்றதில் வேர்கள் பிடுங்;கப்படுகின்றன.
தாய்நாட்டிற்குள் அகதியாக்கப்படுவோர் சந்திக்கின்ற அவலம் புலம்பெயரி சந்திக்கினற அவலத்திற்கு நிகரானது. அதேபோல புலம்பெயரிகள் சந்திக்கின்ற அவலத்திற்கும் அந்தரிப்புக்கும் சமமானது உள்நாட்டகதி சந்திப்பதும். இதில் நாம் வேறுபாட்டைக் காணுவதும் அப்படிக்காட்ட முற்படுவதும் அபத்தமானது. அதேவேளையில் அது எதிர்விளைவுகளுக்கும் வழியேற்படுத்திவிடும். தாயகத்தில் வாழ்வோரைவிடவும் புலம்பெர்ந்தோர் குறைந்தவர்களென்று ஒருபோதும் அர்த்தம் கொள்ளமுடியாது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் யாருடைய துயரம் பெரிது என்று விவாதத்தை எழுப்புவது அபத்தமானது.
உண்மையில் தாய்நாட்டில் இருந்தாலும் சரி புலம்பெயர்ந்திருந்தாலும்சரி பொதுவாக ஈழத்தமிழர்கள் அவலத்திலதான் வாழ்கிறார்கள். தாய்நாட்டில் வீட்டைவிட்டு வெளியேறி மரநிழல்களின் கீழே அகதியாக வாழும் மனிதனும் வேர்பிடுங்கப்பட்டேயிருக்ககிறான். காணி உறுதியை பெட்டிக்குள்வைத்துக்கொண்டு மரங்களின் கீழும் பள்ளிக்கூடத்தாழ்வாரங்களிலும் அலைந்து கொண்டிருப்பவனுக்கு அவன் உழைத்துக்கட்டிய வீடு ஒன்றில் படையினரால் இடிக்கப்பட்டிருக்கும். அல்லது படை அதை பிடித்துவைத்துக்கொண்டு அவனை வெளியேற்றியிருக்கும். பக்கத்திலிருக்கும் தன்னுடைய வீட்டுக்கோ அருகிலிருக்கும் ஊருக்கோ போகமுடியாமற்தானிருக்கிறான். ஆக இதில் நிலப்பரப்பு மட்டும்தான் பழகியது. மற்றும்படி வாழ்க்கையின் நெருக்கடியும் உத்தரவாதமின்மையும் மிகக் கொடியதே.
இந்தநிலைமையென்பது எவ்வளவு துயரத்துக்குரியது. இதேபொன்றே புலம்பெயர்ந்து போவோரின் பாடுகளுமிருக்கின்றன. இவற்றை ஒற்றை வரிகளில் விவரித்துவிட முடியாது. இந்தத் துயரங்களையும் அவலங்களையும் புரிந்து கொள்ளவே முடியும்.
இவ்வாறே இருதரப்பும் தங்களின் சுதந்திரத்துக்காக பாடுபடுகின்றன. இதில் யாருடைய பங்களிப்பு பெரியது எவருடைய பங்கேற்பு உயர்வானது என்று விவாதத்தைக் கிளப்புவது பெரும் மனநெருக்கடிகளுக்கே வழியேற்படுத்தும்.
வாசுதேவன் ஒன்றாக உணரவேண்டிய பிரச்சினைகளை பிரித்து இடைவெளிகளை ஏற்படுத்த முனைகிறார். இதனை அவர் புரியமலே செய்யலாம். ஆனால் இவ்வாறு செய்யப்படுவதன் விளைவுகள் எதிர்நிலை அம்சங்களையே ஏற்படுத்திவிடும் என்பதைப்புரிந்து கொள்ளவேண்டும்.
புலம்பெயரிகளின் பிரச்;சினை என்பதும் புலம் பெயராதோரின் பிரச்சினைகள் என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். தன்மைகளில்தான்; வேறுபாடு.
வேரிழத்தலின் கொடுமை சாதாரணமானதல்ல. அந்நியச்சூழலில் தன்னைத்தினமும் இழக்கவேண்டியேற்படும் அவலத்தையும் இரண்டாம் மூன்றாம் நிலை மனதராக மற்றவர்கள் கருதி நடத்தப்படும் போது ஏற்படுகின்ற மனநிலையையும் புரிந்துகொள்ளப்பட்டே என்னுடைய விமரிசனம் எழுதப்பட்டிருக்கிறது. இதைப்புரிந்து கொள்ளாமல் கன்னைபிரித்;து அரசியலாக்க முனைவது வருத்;தத்துக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்.
பரதேசிகளின் பாடல்கள் ஏற்கனவே நமக்குப்பழக்கப்பட்டுப்போன புலம்பெயரிகளின் ஆதங்கம் கவலைகளுக்கப்பால் புதிய அனுபவங்களைத்தரவில்லை என்ற என்னுடைய அவதானம் ஏன் திசைதிருப்பப்படுகின்றது என்று புரியவில்லை. வாசுதேவனின் தொலைவில் என்ற தொகுப்பிலுள்ள சில கவிதைகள் எழுப்புகின்ற அதிர்வுகளளவுக்கு பரதேசிகளின் பாடல்கள் இருக்கவில்லை என்பதே என்னுடைய அனுபவம். இது ஒன்றும் குற்றமல்ல. தவறுமல்ல. அவததானத்துக்குரியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அடுத்த கட்டச்செயற்பாட்டை சரியாக ஒழுங்கமைப்பதற்குரிய கவனத்தை உருவாக்கவேண்டும் என்ற அக்கறையே இதன் அடிப்படை. பரதேசிகள் எனப்படுவோரின் பாடல்களை புறக்கணிப்பதோ அலட்சியப்படுத்துவதோ நோக்கமல்ல. இதனை என்னுடைய விமரிசனத்தை ஆழ்ந்து படிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.
இந்தப்பரதேசிகளின் பாடல்கள் தொகுப்பில் பரதேசிகளாகக்காட்டப்பட்டிருக்கும் விதம்குறித்து எழுந்த கேள்விகளுக்கு அந்தத்தொகுப்பில் எழுதப்பட்டிருக்கும் பதிப்புரையை ஆதாரப்படுத்தியிருந்தேன்.
வாசுதேவன் புலம்பெயர் இலக்கியத்துக்கான நியாயத்தை உயர்த்தி எழுப்பப்பார்க்கிறார். புலம்பெயரிகள் புலம்பெயரும்போது படுகின்ற பாடுகள் வரையில்அவர் அவலங்களைச்சொல்கிறார். அவர் சொல்வது உண்மைதான். புலம்பெயர்ந்த இடங்களில் சநந்திக்கின்ற அவலங்களும் கொடுமைகளும் உண்மையே.
இவ்வளவு அவலங்கள் துயரங்கள் கொடுமைகள் நிறைந்ததுதான் புலம்பெயர் வாழ்வென்று தெரிந்தபோதும் இன்னும் சனங்கள் புலம்பெயரத்தான் காத்திருக்கிறார்களே தவிர யாரும் புலத்திலிருந்து அதாவது அந்தக்கொடுமைகளிலிருந்து மீண்டு பரதேசித்தனத்திலிருந்து விடுபட்டு தாய்நாடு திரும்பத்தயாரில்லையே. ஏனென்றால் அவல வாழ்க்கைதான் அது என்றாலும் அதற்கு உத்தரவாதமுண்டு. உயிருக்கு உத்தரவாதம். பொருளாதாரத்துக்கு உத்தரவாதம். சிரமங்கள் அவமானங்கள்தான் என்றாலும் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் என அதற்கு நிலைத்தன்மை இருக்கிறது. இது போர் நடக்கும் தாய்நாட்டில் இல்லை. எவ்வளவுதான் தாய்மண்ணின் சுவை அதிகம் என்றாலும் யதார்த்தத்தில் அந்தச்சுவையை அனுபவிகக்க எத்தனை பேருக்கு விருப்பம். எத்தனை பேர் அதற்காக மீண்டும் இப்போது விரும்பிவரத்தயார். இப்படி யாரும் வரவேண்டும் என்று இங்கே கேட்கவில்லை. அப்படிக்கேட்பது சுத்த அபத்தமானது. இதை யாரும் தவறாக விளங்கி விடவேண்டாம். அது பல எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். நான் சொல்லவருவது யதார்த்;தத்தை நாம் கணக்கிலெடுக்காமல் வெறும் கற்பனாவாதத்தில் சிலிர்க்கக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டுவிடவும் கூடாது.
புலத்திலிருந்து வருகிற காசு தேவை. ஆனால் அவர்கள் புலத்தில் அதற்காகப் படுகிற சுமைகளையும் வலிகளையும் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லையா என்று வாசுதேவன் வருந்துகிறார். அவருடைய வருத்தம் நியாயமானதே. பரதேசிகளின் சோகங்களை புரிந்துகொள்ள மறுக்கும் மனநிலையுடன் என்னுடைய விமரிசனம் எழுதப்படவில்லை என்பதை வாசுதேவன் அறியவேண்டும். போனவர்களைப்புறக்கணிக்கும் போக்கு வளர்வதாகவும் அவர்கவலைப்படுகிறார். இதெல்லாம் அதீதமான கற்பனை. இவ்வாறு கருதுவதும் அச்சமடைவதும் குறகிய மன வெளிப்பாடுகளே. போனவர்கள் இருப்பவர்கள் என்ற வேறுபாட்டையோ பிரிப்பையோ தேவையற்றவகையில் வாசுதேவன் கிளப்புகிறார். என்னுடைய கட்டுரை அத்தகைய தொனியை எந்தச்சந்தர்ப்பத்திலும் கொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது ஏன் அப்படியொரு வியாக்கியானத்தை வாசுதேவன் முன்வைக்கமுனைகிறார் என்று தெரியவில்லை.
பரதேசிகளின் பாடல்கள் குறித்து புலத்திலுள்ள ஒருவர் நான்வைத்த விமரிசனத்தைப்போல முன்வைத்திருந்தால் அது எப்படி அணுகப்பட்டிருக்கும் என்றொரு நண்பர் கேட்டது இங்கே குறிப்படத்தக்கது. ஆக விமரிசனத்தில் என்ன கருத்;து முன்;வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கப்பால் யாரால் அது சொல்லப்படுகிறது எந்தத்தரப்பால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது. இது அடிப்படையில் தவறானதுடன் வீணான அர்ர்த்தமற்ற விளைவுகளுக்குமே இட்டுச்செல்லும்.
ஒருவருடைய துயரத்தைக் கண்டுகொள்ளாதிருக்கும் உரிமை யாருக்கும்; இல்லை. ஒருவருடைய துயரத்தையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ள மறுத்ததன் விளைவுகள்தான் மனிதகுலம் சந்தித்திருக்கிற ஆகப்பெரிய பிரச்சினையாகவும் இருக்கிறது என்ற புரிதல் என்னிடமுண்டு. பரதேசிகள் தங்களின் தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன எனக்குறிப்பிடப்படுவது புலத்திலுள்ளோரின்துயரத்தை தாய்நிலத்திலுள்ளோர் புரிந்துகொள்ளத்தயாராக இல்லை எனவிளங்கிக்கொள்வதன் அபத்தத்தை என்னவென்பது. நம்மீது என்பது வாசகன் மீது என்றே பொருள் கொள்ளப்படவேண்டும். அந்த வாசகன் ஓர் பொதுத்தளத்துக்குரியவன். அது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராகவும் இருக்கக்கூடும். ஏன் இதனை வாசுதேவனால் புரிந்து கொள்ளமுடியாமற் போனது. தேவையற்ற விதத்ததில் அதிகமாக வாசுதேவன் கலவரமடைகிறார் என்றே தோன்றுகிறது.
இனி என்னுடைய முதற் கட்டுரையிலிருந்து தேவை கருதி சில பகுதிகள் மீளவும் இங்கே இணைக்கப்படுகின்றன. இது மேலதிக புரிதல்களுக்காகவே. வாசகர்கள் இந்தச்சிரமத்துக்கு மன்னிக்கவும்.
No comments:
Post a Comment